1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வினோதமானவளே-17 :

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jul 15, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/137905-a.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138127-2.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138396-3.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138651-4.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138995-5.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139079-6.html#post1854864
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139375-7.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139593-8.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139721-9.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139890-10.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139968-11.html#post1866196
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140086-12.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140241-13.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140339-14.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140536-15.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140637-16.html



    மேலே ஒரு துள்ளலுடன் சென்றவன் வினோதா அழுது கொண்டிருப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை!
    கால்களில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவளை நெருங்கியவன்
    "ஹே வினோ என்ன டா? ரொம்ப வலிக்குதா மா?? சே! நான் சும்மா விளையாட்டுக்கு பண்ண போய்! என்னை சொல்லணும் நான் ஒரு முட்டாள்!" என்றவன் தன்னையே நொந்து கொண்டு அவளை கைகளில் அப்படியே அள்ளினான்!
    அவன் ஏன் தூக்குகிறான் என்று புரியாதவள் விழிக்க!
    "வாடா மா டாக்டர் கிட்ட போலாம்!" என்றவனை பார்க்காமல் முகத்தை திருப்பியவள் தன்னை இறக்கி விடும்படி கூறினாள்!
    "டாக்டர் கிட்ட....!" என்று இழுத்தவனை தடுத்து "கீழ விடுங்க!" என்று அழுத்தமாய் கூற! அதை மறுக்காமல் மீண்டும் அவளை கட்டிலில் படுக்க வைத்தான்!

    "சரி தைலமாவது தடவவா??" என்றவனை தடுத்து
    "இல்ல வேண்டாம்! எனக்கு வலி இல்ல!" என்றவளை கூர்ந்து கவனித்தான்!
    "உன் வாய் தான் அப்படி சொல்லுது! ஆனா கண்ணு கண்ணீராய் வேற சொல்லுதே!" என்றவனை கண் சிமிட்டாமல் பார்த்தாள்!
    "நான் அதுக்காக அழல!"
    "பின்ன வேறென்ன??" என்றவனுக்கு மௌனத்தையே பதிலாய் அளிக்க அவள் முகத்தை கைகளில் தாங்கினான்!
    "சொல்லு வினோ! என்ன? எதுக்கு அழற?" என்றவனது கைகளை விளக்கி!
    "அம்மா தான் ஏதோ புரியாம தேனிலவு அது இதுன்னு சொல்றாங்கனா நீங்களுமா?? நான் இப்ப இருக்க நிலைல அது ஒன்னு தான் கொறைச்சல்!" என்றவளது கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது!

    "ஏன் உன் நிலைக்கு என்ன?"
    "ஓ! அதுக்குள்ள மறந்துடுச்சா?? எப்படி நியாபகம் இருக்கும்?? சாகபோறது என் அப்பா தானே!" என்று முகம் கசந்தவலை பார்த்தவாறே
    "அவர் எனக்கும் அப்பா மாதிரி தான் வினோ!" என
    "அப்படி நெனச்சிருந்தா உங்களால இப்படி சிரிச்சு விளையாட தான் முடியுமா?? இல்ல குஷியா தேன்நிலவுக்கு தான் கிளம்ப முடியுமா??" என்றவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை அவனுக்கு!
    அவன் கண்களோ "அடி முட்டாள் பெண்ணே! உன்னை விட இரு மடங்கு துயரத்தில் உருண்டு கொண்டிருக்கிறேன்! உன் தந்தையின் மரணத்தை எப்படி தாங்குவாயோ? என்று ஒவ்வொரு நிமிடமும் உன் நிலையை நினைத்தே வருந்துகிறேன்! அதற்குள் உனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தவே போராடுகிறேன்! என்று சொல்லாமல் சொல்வதாய்!
    ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் தான் வினோ இல்லை!

    "இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க வினோ!" என்றவனை எரிப்பது போல் பார்த்து
    "ஆமாம் என்னைக்குமே அவங்கவங்க அப்பா அம்மாக்கு அவங்கவங்க பிள்ளைங்க குழந்தைங்க தான்! அப்பா அம்மா இல்லாம இருக்க உலகம் எவ்வளவு பெரிய நரகமா இருக்கும் தெரியுமா?? வெளிய இருந்து பாக்குறவங்களுக்கு அது புரியாது!"
    "இதுக்கு பதில் உனக்கு நான் ஒரு கதை சொல்லலாம்னு இருக்கேன்!" என்றவனை முறைக்க
    "முறைக்காத மா நீ தான சொன்ன? இன்னும் குழந்தை தான்னு! இந்த பாப்பா ஒரே ஒரு கதை மட்டும் கேட்குமாம்!" என்று கொஞ்சியவன் கதை கூற ஆரம்பிச்சான்!


    "ஒரு காலத்துல ஒரு அம்மா இருந்தாங்களாம்! அவங்களுக்கு ஒரே ஒரு மகன்! அவன விட்டா அந்த அம்மாவுக்கு யாருமே இல்லை!
    ஒரு நாள் துரதிஷ்ட வசமா அந்த பையன் நோய் வாய்பட்டு இறந்துட்டான்! மகனோட இழப்பை தாங்க முடியாத அந்த அம்மா கடவுளான புத்தர் கிட்ட போய்! "என் வாழ்க்கைல எனக்குன்னு இருந்த ஒரே பிடிப்பே என் மகன் தான் அவனையும் என் கிட்ட இருந்து பறிச்சிட்டீங்களே! எனக்கு இனி வாழ்க்கை வேண்டாம்!" என்று அழுதாங்க! இத எல்லாம் பொறுமையா கவனிச்ச புத்தர் அந்த அம்மா கிட்ட !"உங்கள் வேதனைக்கு வறுத்த படறேன்! உங்க மகனை நான் திருப்பி உயிர்பிக்கிறேன் அதுக்கு நீங்க ஒரு வேலை செய்யணும்னு!" கேட்க அந்த அம்மாவும் சம்மதிச்சாங்க! புத்தர் என்ன சொன்னார் தெரியுமா?? இந்த ஊர்ல சாவே ஏற்படாத ஒரு வீட்ல போய் ஒரு படி அரிசி வாங்கி வர சொன்னார்! அந்த அம்மாவும் மகனை காப்பாத்த வேண்டி ஒவ்வொரு வீடா ஏறி இறங்கினாங்க! ஆனா ஒரு வீட்ல கூட சாவு என்பது இல்லாம இல்லவே இல்லை! தன்னை போல் எல்லாரும் தனக்கு நெருக்கமானவங்களை இழந்தாலும் இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்காங்கன்னு அந்த அம்மா புரிஞ்சிக்கிடாங்க! ஆனா என் வினோதாவிற்கு புரிய வைக்க புத்தர் வர மாட்டாருன்றதாள என்னை அவளுக்கு புருஷனா அனுப்பி இருக்காரு!" என்றவனை விழி விரித்து பார்த்தாள் வினோதா!

    "என்ன மேடம் அப்படி பாக்குறீங்க? மத்தவங்கள பத்தி சொல்ல வேண்டாம்! நானே ஒரு உதாரணம்! எனக்கு ஒரு தங்கை இருந்தா! ரொம்ப சூடிகை! அவள மாதிரி அழகும் அறிவுமா ஒரு குழந்தை கிடைச்சதுக்கு என் அப்பா அம்மா பெரும பாடாத நாளே இல்லை! இப்ப தான் இந்த பேரு, புகழ், பணம், காசு எல்லாம்! சின்ன வயசுல ஒரு சின்ன ஒட்டு வீட்டுல ரொம்ப சந்தோஷமா இருந்தோம்! ஒரு நாள் கண் கட்டி விளையாடிட்டு இருந்த போது நான் கிணத்து பக்கத்துல போனத பாத்து என் கிட்ட ஓடி வந்தா அது தரையோட இருக்க கெணறு யார் திறந்து போட்டானு தெரியல! என்ன காப்பாத்த வந்தவ என்னை புடிச்சு இழுக்கும் போது அதுல தவறி விழுந்துட்டா! நான் கத்தி கூப்பாடு போட எல்லாம் உடனே வந்துட்டாங்க! ஆனா திடீர் அதிர்ச்சில அவளோட இதயம் துடிப்ப நிறுத்திடுச்சு! எங்கள விட்டு போய்டா! என்றவனது கண்களின் சோகம் அவனது இதழில் இருந்த புன்னகைக்கு எதிர் மறையாய் இருந்தது! ஏனோ அவனை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றியதை என்னவென்று வினோதாவால் புரிந்து கொள்ள முடியவில்லை!

    ஒரு முறை அவள் தலையை வருடி!
    "நம்மளால நெருங்கினவங்க இறந்துட்டாங்கன்ற நினைப்பு இருக்கே அது ரொம்ப கொடுமை வினோதா! அதோட வாழ்ந்துட்ருக்கேன்! இருந்தும் நானும் என் பெற்றோரும் சிரிக்காம இல்லை சந்தோஷமா இல்லாம இல்லை! ஏன் தெரியுமா? எங்களை விட்டு எங்க சந்தியா இன்னும் போகல! அவ எங்க கூட தான் இருக்கா! எப்பவும் இருப்பா! அவல நெனச்சு நாங்க கஷ்டப்படும் போது எங்க பக்கத்துல இருக்க அவளோட உருவமும் அவ இருக்கறதா நினைக்குற எங்க நினைப்பும் வருந்தும்! சே! நம்மளால கஷ்டபட்ராங்கலேனு! ஆனா அதுவே சந்தோஷமா இருந்தா கண்டிப்பா அவளும் எங்க சந்தோஷத்துல இருப்பா! சந்தோஷமா இரு டா! அதை தான் உங்க அப்பா அம்மா யாருமே விரும்புவாங்க! ஏன் நாளைக்கு என்னக்கே ஒரு விபத்துன்னா...!"

    என்றவனது இதழ்களை தன்னியல்பாய் அவள் கரங்கள் மூடின!
    சற்று அமைதியானவன் அவளை அணைக்க அப்போது அது இருவருக்குமே தேவை படுவதாய்!
    மனைவியை விளக்காமல் சற்று நேரம் அவளுக்கு அறுதல் அளித்தவன்! அவள் அதை அள்ளிக்காத போதும் தானாகவே அவளிடம் இருந்து அதை எடுத்து கொண்டிருந்தான்!
    சிறிது நேரம் கழித்து விலகியவன்


    "என்ன மன்னிச்சுடு வினோ!" என்று மன்னிப்பு கேட்டான்! "நான் சொன்ன மாதிரி உனக்கு இந்த கல்யாண வாழ்க்கைல ஈடுபாடு வர வரைக்கும் நமக்குள்ள....உடல் உறவுன்றது இறக்காது! ஆனா அதுக்குன்னு நான் உன்னை முழுசா விளக்கவும் முடியாது!" என்றவன் எழுந்து சென்றான்!
    வெளி வாயிலை தாண்டும் போது!

    "ஆனா அதுக்காக நான் இந்த தேன் நிலவ வேண்டாம்னு சொல்லிடுவேன்னு நினைக்காத! இது பெரியவங்களா பொறுத்த வரை தேன் நிலவா இருக்கட்டும்! நம்மள பொறுத்த வரைக்கும் இது ஒரு இன்ப சுற்றுலா! போய் ஊட்டி சுத்தி பாத்துட்டு வருவோம்! என்ன சரியா??"
    என்றவனுக்கு பதிலாய் சரி! என்று அவள் தலை தானாகவே அசைந்தது!
    ஒரு மெல்லிய புன்னகையை அவளிடம் செலுத்தியவன் வெளியில் நடந்தான்!
    ஒரு புறம் வெளியில் சென்றவன் மெதுவாய் அவள் உள்ளத்திலும் நுழைய தொடங்கி இருந்தான்!
     
    2 people like this.
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hey vinai oda speech romba touching ah irunthathu da...
    nice part... kandipa he will win her heart... erkanave win pana arambichutan... :)
     
  3. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi yams
    update was sooo touching.....vinay chanceless pa....superbbbbbb character:thumbsup:thumbsup....aaha madam manathil kadhal seed vizhuindhu vittadhu:whistle...vinay sonna kutti story nice....waiting for 2morrows update
     
  4. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hi Yamini,

    todays part is very good. vinys story about buddha and personal tragdey in his life are touching. hope vino will understand him slowly.
     
  5. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    nice ma.... the story said by vinay and also about his sister was touching....
    happy that vino started liking vinay...
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    yes da! thanks for the comment!
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    wonderful feedback love to read it!
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks usha! sure !:)
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks suganya! do post daily!
     
  10. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Yamini,

    nice updates!!!!!
    vinaiku ippadi oru sogama..unexpected!!!!
    vinai-vino vai convince seivathu ..nice!!!!!!!!!
    episododa..last line superra irunthathu.......alaga sollirikeenga!!!!
     

Share This Page