1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வினோதமானவளே-4

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jun 21, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/137905-a.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138127-2.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138396-3.html


    சரியாக ஒரு மாதம் கழித்து!

    வினயின் இல்லம்!

    பால்கனியில் நின்றபடி இருந்த வினய்குமார் வெள்ளி நிலவின் அழகை ரசித்தபடி நின்றிருந்தான்!

    வழக்கத்திற்கு மாறாய் அன்று நிலவின் அழகு பல மடங்காய் ஜொலிப்பதாக பட்டது அவனுக்கு! அப்படி ஒன்றும் இன்று பௌர்ணமி கூட இல்லையே?! என்று நினைக்கும் போது தான் அதை கவனித்தான்!

    சுற்றி கருப்பு நிற போர்வையில் வெள்ளி நிலவு அதிகமாய் பிரகாசித்து கொண்டிருந்தது!

    உண்மை தானே! இந்த கருப்பு வானமே நிலவின் அழகிற்கு காரணம்! எத்தனை அமைதியாய் தன் அழகை குறைத்து கொண்டு அதில் வசிக்கும் நிலவின் அழகை பன்மடங்காக்கி காட்டுகிறது?? அவனது கவனம் முழுதும் கருப்பாய் விரிந்து பரந்திருந்த வான்வெளியை அளவிட்டது!
    இப்போதோ நிலவை விட அதன் அழகு தான் அவனுக்கு அமைதி அளிப்பதாய்!
    மக்களில் எத்தனை பேர் இப்படி இருகிறார்கள்??
    எல்லாரும் விரும்புவது நிலவாய் தான் பிரகாசிக்க வேண்டும் என்று தான்!
    ஒருவரும் தன்னால் கோடி கோடி நட்சத்திரங்களாய் மற்றவர்கள் பிராகாசிக்க வேண்டும் என்று விரும்புவதில்லையே!
    கற்பனை குதிரை எங்கெங்கோ செல்ல கதவு திறக்கும் ஓசையில் அதற்கு கடிவாளம் இட்டான்!

    திரும்பி பார்க்க உள்ளே நுழைவது தன் தாய் தான் என்று தெரிந்ததும் ஒரு மென்னகை பூத்தான்!
    தன்னுடைய அறைக்குள் இப்படி நுழையும் உரிமை கொண்ட ஒரே ஜீவன்!
    அப்பா மிகவும் எதார்த்தவாதி! எதுவாக இருந்தாலும் பிள்ளைகள் தோள் மேல் வளரும் வரை தான்! அதன் பிறகு அவர்கள் சுதந்திரத்தில் நாம் தலையிட கூடாது என்று சட்டம் பேசுபவர்! ஆமாம் அது அம்மாவை பொறுத்தவரை சட்டம் தான்! வினயுக்கோ என்றுமே அந்த விதத்தில் அப்பாவை நினைத்து பெருமை தான்!
    உள்ளே நுழையும் போது கூட பிள்ளையாய் இருப்பினும் கதவை தட்டி விட்டு வரும் போது ஒரு விதத்தில் என்ன இது? என்பதாய் தோன்றினாலும் அவர் பக்க நியாயமும் புரிய தான் செய்தது பிள்ளைக்கு!

    அம்மாவோ அப்பாவுக்கு நேர் மார்! அவர் எதார்த்தவாதி என்றால் அம்மா பாசபோர்வைக்குள் குடும்பம் நடத்தும் ஜீவன்!
    அவரது ஜீவனமே பிள்ளைகாகவும் கட்டிய கணவருக்காகவும் தான்! அவர்களுக்கு சின்ன அடி என்றால் கூட பொறுக்க மாட்டார்! சட்டென்று அழுதுவிடும் அம்மாவின் மேல் பாசம் அதிகமாய் இருந்தாலும் சற்று அசுசையும் தோன்ற தான் செய்யும்!
    தாயே குழந்தையாய் மாறுவர்! தன் பிள்ளை மடி சேரும் போது என்பது சரியாகவே தோன்றியது வினய்க்கு!

    "என்ன பா? அங்க பனில நிக்குற? உள்ள வா உனக்கு பனி ஒத்துக்காது!"

    இதோ ஆரம்பித்து விட்டது அம்மாவின் அன்பு அர்ச்சனை இனி சட்டென்று உள்ளே நுழையா விட்டால் தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கும்! அதற்கு உள்ளே சென்று விடுவதே மேல் என்று பட்டது வினய்க்கு!

    "ஒன்னும் இல்ல மா! சும்மா இப்ப தான் போனேன்!"

    "சரி சரி சீக்கிரம்! நாளைல இருந்து அந்த ரவி சார் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்குது ல?? சீக்கிரம் போக வேண்டாமா? போய் படு போ! படுக்கறதுக்கு முன்னாடி இந்த பால் சாபிட்டு படு!"

    "இல்ல மா நாளைக்கு மதியம் தான் ஷூட்டிங்!"

    "என்ன வெட்ட வெயில்லையா ஷூட்டிங் வெப்பாரு?? வெயில்ல நடுச்சா ஒடம்பு என்னத்துக்கு ஆகும்!"

    "ஐயோ அம்மா! இந்த துறைல அதெல்லாம் பாக்க முடியாது! அது மட்டும் இல்லாம இது வேற ஒரு காரணத்துனால!"

    "அது என்ன டா அது வேற ஒரு காரணம்?"

    "விட மாடீங்களே! அம்மா! இது எப்பவும் நடிக்கிற கதை மாதிரி இல்ல! ஒரு வித்தியாசமான கதை மா! எப்பவும் மக்கள் ஒரு அழகான ஹீரோ ஹீரோயின் சேந்து நடிக்கிற படத்த தான் பாப்பாங்க! ஆனா இந்த படத்தோட கதையே வேற! ஒரு அழகில்லாத கருப்பா இருக்கற பொண்ண ஒரு அழகான வாலிபன் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்காக தன் வாழ்கைய அற்பணிகிற கதை!"

    "இரு இரு நிறுத்து! என்னமோ பெரிய டைரக்டர்ன்னு சொன்னாங்க இப்படி எல்லாமா கதை எடுப்பாங்க?? கருப்பா இருக்க பொண்ண யாரு டா ஹீரோயினா ஏத்துபாங்க?"

    "இந்த எண்ணம் தான் மா எல்லா டைரக்டர்களையும் புதுசா வித்தியாசமான படம் எடுக்க விடாம தடுக்குது! யார் சொன்னா ஒரு கருப்பான பொண்ணு ஹீரோயினா நடுச்சா மக்கள் ஏத்துக்க மாட்டங்கன்னு?? அவளுக்கு உண்டான கதா பாத்திரத்துல எந்த விதத்துல அவளுக்கு நடிப்பிருக்குன்றதை பொறுத்து தான் படதோட ரசிப்பு தன்மை இருக்கு மா! வெள்ளையா இருந்து நடிக்க வந்து காணாம போன ஹீரோயின்களும் இருக்காங்க! அதே சமயம் கொஞ்சம் கருப்பா இருந்தாலும் தங்களோட நடிப்பு திறமையாள தங்களோட எடத்த தக்க வெச்சுகிட்டவங்களும் இருக்காங்க!"

    "சரி சரி விடு! நீ தான் எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்வியே உங்க அப்பா மாதிரியே! நாளைக்கு ஏன் காலைல ஷூட்டிங் இல்ல மொதல்ல அத சொல்லு!"

    "அதான் மா! கதை படி ஆரம்பமே எனக்கும் அந்த ஹீரோயின்கும் கல்யாணம் நடக்குற சீன் தான்! அதுக்கு டைரக்டர் ஒரு கோவில் தேர்ந்தெடுத்து வெச்சிருந்தாரு! அந்த கோவில்ல ஏதோ கும்பாபிஷேகம் அது இதுனு ஷூட்டிங் எடுக்க அனுமதி தர மறுத்துட்டாங்கலாம்!
    இருந்தாலும் இவர் விடாம கேட்கவே "சரி சார் யாருக்கும் தெரியாம வேணா ஷூட்டிங் எடுத்துகோங்க கோவில் நட மதியத்துல சாத்தினா பிறகு சாயந்திரம் வரை திறக்காது அதுக்குள்ள எடுத்து முடிசுடுங்கனு!" சொல்லிடாங்கலாம்! குறிப்பா கூட்டம் சேர்க்க கூடாதுன்னு சொல்லிட்டதால நாங்க கேமரா மேன், அவர் அச்சிஸ்டன்ட், டைரக்டர் சார், அவரோட அச்சிச்டன்ட், ஹீரோயின்னு மொத்தமே ஆறு பேர் தான் போறோம்! அதான் காலைல ஷூட்டிங் இல்லன்னு சொன்னேன்!"

    "ஏன் டா அவ்வளவு கஷ்ட பட்டு எடுக்கணும்?? தமிழ்நாட்டுல வேற கோவிலா இல்ல??"

    "இருக்கே! ஆனா டைரக்டர் கற்பனைல உதிச்ச கோவில் அதுதானாம்! அதான் விடாபிடியா இருக்காரு!"

    "என்னமோ போ! இந்த படமும் உனக்கு வெற்றியா அமையனும்னு நான் கடவுள் கிட்ட பிரத்தனை பண்ணிக்கிறேன்!"

    "இந்த படம் கண்டிப்பா எனக்கு வெற்றி தான் மா! அதுல எந்த விதமான மாற்றமும் இல்லை!"

    "ஹ்ம்ம் பொய்யா ஆயிரம் கல்யாணம் பண்ற! ஆனா நெஜத்துல உனக்கு ஒரு கல்யாணம் எப்ப தான் பண்ணிக்க போறியோ??"
    புலம்பி கொண்டே திரும்பி பார்த்த தாய் தூங்குவது போல் நடிக்கும் தன் மகனின் செல்ல குரும்பை ரசித்தபடியே வெளியேறினார்!

    அவருக்கு தெரியாது அவரது புலம்பல் இனி தேவை படாது என்று!
    முகத்தில் தோன்றிய சன்ன சிரிப்புடனே நித்திரைக்கு சென்றார் அந்த அன்பு தாய்!


     
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    varthaiku varthai en heroine ah karupu karupu solra... :rant
    maaniram sollalame...

    aduthu kalyana scene ah... hmm ini interesting than...
    ama padathoda per ena pa??? :confused2:

    Going good yams... This is 4 u... :kiss
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    maaniramna adhu nammalaam dhaan vaishu!

    heroine karuppu dhaan!

    padathoda paera?? adhaan ovvoru vaattiyum kotta ezhuththula podraenae!:bonk:bonk thanks for the kisses!
     
  4. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Yamini,

    nice updates!!!!!
    ammavoda nacharippu ini irrukatha???????
    kudiya sekiram heroine vandhutuva....
    waiting for next!!!!!!!
     
  5. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    hi yamini,

    dialogues between amma and son is natural. eager to see the black heroine. waiting.
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Yes dear!
    keep reading!
    thanks for the posts!:)
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    seekiramae varuvaal!
    keep reading!
     
  8. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,330
    Likes Received:
    2,723
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Yamini...

    Sikram heroinea vinay paakatum,apa than kalyana saapadu poduvan avan..

    waiting for next episode
     
  9. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Yams,
    The dialogues between vinay and his mom is very nice. Remba iyalba irunthathu.Traffic jam ponnu than director roda film heroine and vinay yoda real life herione na aka pokutha? Eagerly waiting.....

    Regards,
    S.Uma
     
  10. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    அருமையான துவக்கம், இயல்பான நடை.


    எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் நாயகியின் தேர்வு. ஐ.எல் லில் என் முதல் கதையிலும் (ரத்த நிலா) நாயகி கருப்பு தான். அதனால் உங்கள் நாயகியைக் காணவும் ஆவலாய் இருக்கிறது. சீக்கிரம் கண்ணில் காட்டுங்கள்.

    எல்லாரும் விரும்புவது நிலவாய் தான் பிரகாசிக்க வேண்டும் என்று தான்!
    ஒருவரும் தன்னால் கோடி கோடி நட்சத்திரங்களாய் மற்றவர்கள் பிராகாசிக்க வேண்டும் என்று விரும்புவதில்லையே!


    அருமையான வாசகம். மிகவும் ரசித்தேன்.
    இந்த பகுதியின் முடிவில் அடுத்து நிகழ இருப்பதை உறுதி செய்தாலும் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.

    விரைவில் வாருங்கள்.:thumbsup
     

Share This Page