1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வினோதமானவளே-7 :

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jun 29, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/137905-a.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138127-2.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138396-3.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138651-4.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138995-5.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139079-6.html#post1854864


    "நீ அவசர படர மா!"

    என்ற பேச்சை கேட்டதும் ஆணி அடித்தார் போல் நின்றான் வினய்!

    "என்ன ஆச்சு டா? வா!" என்ற நண்பனை அடக்கி அங்கேயே நின்றான்!

    "எதை பா அவசர படறதா சொல்றீங்க?? இது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல! அது மட்டும் இல்லாம நீங்க நினைக்கறதும் கண்டிப்பா நடக்காது!"

    "அவங்க கிட்ட பேசி பாக்கலாமே!"

    "என்ன பேச போறீங்க?? உங்கள பொறுத்த வர வேணா இது பொம்ம கல்யாணமா... நாடகமா இருக்கலாம் ஆனா நாங்க தாலிய புனிதமா நினைக்குறோம்! ஒரு பொண்ணு கழுத்துல மொத மொதல்ல தாலி கட்டினவன தான் அவ புருஷனா நெனைப்பா அவன் தான் புருஷனும் கூட நீ என்ன எடுத்துகிட்டாலும் பரவாஇல்ல ஆனா எனக்காக என் பொண்ண ஏத்துகோங்கனு அவங்க கால்ல விழ போறீங்க அதானே!"

    "ஏம்மா இப்படி எல்லாம் பேசுற?? ஒரு தடவ பேசி தான் பாப்போமே!"

    "போங்க பா! போய் பேசுங்க! ஆனா நீங்க பேசிட்டு திரும்ப வரும் போது நான் இங்க இருக்க மாட்டேன்!"

    "அம்மா வினோ! அப்படி சொல்லாத மா! நான் போகல! நான் போகல!" என்று உடைந்து போனார் அந்த அன்பு தந்தை!

    அவரது வேதனையை காண பொறுக்காமல் அருகில் வந்தவள் அவர் காலடியில் அமர்ந்து
    "உங்க கிட்ட நான் இவ்வளவு கடுமையா இது வரை பேசினது இல்லை! ஆனா இன்னைக்கு இருக்க சூழ்நிலை அப்படி இல்ல பா!"

    "அதுக்குன்னு உன் வாழ்க்கை??"

    "வாழ்க்கை! அப்படி ஒன்னு எனக்கு இருக்க பா?"

    "ஏம்மா அப்படி சொல்ற வேற ஒரு நல்ல பையனா.."

    "பையனா பார்த்து கல்யாணம் பண்ணுவீங்களா?? எந்த மாதிரி?? இது வரை வந்து என்ன பாத்துட்டு நிறம் கம்மின்னு விட்டுட்டு ஓடினாங்களே அந்த மாதிரி நல்ல பசங்களா?"

    "இப்ப நான் என்ன தான் மா பண்றது??"

    "எதுவும் பண்ண வேண்டாம்! நான் இப்படியே இருந்துடறேன்!"

    "பைத்தியம் மாதிரி பேசாத வினோதா!"

    "இல்ல பா! நல்லா தெரிஞ்சி தான் பேசுறேன்! நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு வினோதானு பேர் வெச்சீங்க அதனால தானோ என்னமோ அழகுலையும் சரி குணத்துலேயும் சரி நான் இப்ப இருக்க பொண்ணுங்க மாதிரி இல்ல! இது வரைக்கும் வந்த மாப்பிளைங்க கேட்டதெல்லாம் ஒன்னு அழகு இல்ல பணம் உங்க துரதிஷ்டமோ என்னமோ அது ரெண்டுமே என் கிட்ட இல்ல! உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கோவில், கணக்கு, இந்த வீடு, நான்! அவ்வளவு தான்! இன்னைக்கு ரிக்க்ஷா ஓட்றவன் கூட தனக்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி பொண்டாட்டி வேணும்னு தான் கேக்குறான் அப்படி இருக்கும் போது பணம் காசும் இல்லாம அதே நேரம் அழகுன்ற பெரிய வசீகரமும் இல்லாத என்ன யாரு பா கட்டிப்பா?? நாலு வேலை கஞ்சு குடிக்கறவனே கட்டிக்க மாட்டான் இதுல நீங்க சினிமா ஸ்டார் கிட்ட போய் இதோ என் கருப்பான பொண்ண ஏத்துகோங்கனு கெஞ்ச போறேன்னு சொல்றீங்க! வேடிக்கையா இருக்கு பா!"

    மகளது சரமாரியான கேள்விகளுக்கு பதிலும் சொல்ல முடியாமல் அதே சமயம் அவளது வாழ்கையை பற்றிய பயமுமாக மகளை பார்த்தார்!
    அவளது கண்களிலும் கலக்கம் நன்றாகவே தெரிவதாய்! இருந்தும் தந்தைக்காக அதை மறைக்க முயன்றாள்!

    "நீ எனக்கு ஆறுதல் சொல்றியா மா??"

    "ஆமா நான் சொல்லாமா என் அப்பாக்கு எல்லாமே நான் தானே இல்லையா பா?" என்று சிறுபிள்ளையாய் கொஞ்சும் மகள் அவருக்கு சிறுமியாய் தோன்றவில்லை!

    வெளியில் நின்றிருந்தவனின் கண்கள் கலங்கி இருந்தன!
    ஏற்கனவே தான் செய்தது பிழை என்று வருந்தி வந்தவனுக்கு இப்போது தான் அந்த பிழையின் அளவு புரிந்தது! சாதாரண தவறா செய்திருக்கிறேன்! ஒரு பெண்ணின் வாழ்வையே பாழாக்கி விட்டேனே!
    அப்போது தான் இன்னொரு குரல் கேட்டது!

    "ஏன் வினய் பாழாக போது?? நீ நெனச்சா அத மீட்டு தரலாமே!"

    "எப்படி?"

    "பொய்யான நாடகத்த நெஜமா ஆக்கிடு! அப்ப எல்லாமே சரியாயிடும்!"

    பதில் கிடைத்த நொடி அவன் முகத்தில் தெளிவு பிறந்தது!
    உள்ளே நடந்தவற்றையும் தோழனது முகபாவத்தையும் பார்த்தவனது அவனது முடிவை யூகிப்பது ஒன்றும் சிரமமாய் இல்லை!

    கண்ணீரை துடைத்து முன்னேரியவனின் கரத்தை பிடித்து நிறுத்தினான் அருண்!

    "வினய்! கொஞ்சம் பொறு இது ஒன்னும் சின்ன விஷயம் இல்ல கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணு!"

    "இனி யோசிக்க எதுவும் இல்ல அருண்! முடிவெடுத்தாச்சு!"

    "டேய்! நீ ஒரு சினிமா ஸ்டார் டா! அவசர பட்டு முடிவெடுத்து உன்னோட வாழ்கைய பாழக்கிக்காத! நாளைக்கு வெளில தெரிஞ்சா உன்னோட சினிமா வாழ்க்கையும் சேத்து பாதிக்கும்!"

    "இல்லைனா மட்டும்! நல்லாவே இருந்தாலும் இந்த துறைல சேத்த வாரி இரைபாங்க டா! ஒரு பொண்ணு கிட்ட பேசினாலே நாலு வரி அவ கூட சேத்தே பேசுவாங்க எழுதுவாங்க! அதுக்காக நம்ம மனசுக்கு புடிச்ச மாதிரி வாழாம இருக்க முடியுமா?? இல்ல வீடுக்குள்லேயே அடஞ்சுக்க தான் முடியுமா! இனி இவ தான் என் மனைவி! அதுல எந்த மாற்றமும் இல்ல!"

    சொன்னவனின் குரலில் இருந்த உறுதி அவன் அறிந்ததே!
    இது போன்று வினய் உணர்ச்சியாய் பேசும் தருணங்கள் மிக குறைவு ஆனால் பேசும் போது அதில் எந்த மாற்றமும் இருக்காது! எனவே அமைதியாக நண்பனை தொடர்ந்தான் அருண்!

    தந்தையின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்த முகத்தில் வினயின் பார்வை சென்றது! விழிகளின் ஓரம் வந்த கண்ணீர் துளிகள் தந்தைக்காய் மறைக்க படுவதும் தெரிந்தது!

    ஒரு நிமிடம் அவளை இமைக்காமல் பார்த்தவன் "யார் பா நீங்க??" என்ற குரலில் களைந்தான்!"

    தந்தையின் குரலை கேட்டு நிமிர்ந்தவள் வினயை அங்கே சற்றும் எதிர் பார்க்கவில்லை! சேலை தலைப்பால் கழுத்தை மூடியவள் உள்ளே ஓடினாள்!
    மகளின் இந்த செய்கையையும் வினயின் பார்வை அவளை தொடர்வதையும் பார்த்தவருக்கு அவன் யார் என்று சொல்லாமலே தெரிவதாய்!
    அதற்குள் அருண் முன் வந்து

    "வணக்கம்! சார் நாங்க.... வந்து....!"

    "மொதல்ல உட்காருங்க!"

    "அம்மா வினோதா கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா மா! மன்னிச்சுகோங்க தம்பி என் வீட்ல உட்கார சேர் எல்லாம் இல்ல! பாய் தான் என்று அவர்கள் அமர பாயை விரித்தார்!

    "அவசியம் இல்ல மாமா!"

    மாமா! என்ற வார்த்தையை கேட்டதும் அவர் முகத்தில் ஆயிரம் வெளிச்சம்! ஆனால் அதற்கு நேர்மாறாய் தண்ணீர் எடுத்து வந்தவளின் முகத்தில் அதிர்ச்சியும் அந்த அதிர்ச்சியில் அவளது கைகள் தண்ணீர் செம்பை தவறவிட்டன!
    பதட்டத்தோடு அதை வாரி எடுத்தவள் மீண்டும் உள்ளே செல்ல! அவளை கண்டு மெல்ல புன்னகைத்தான் வினய்!
    அவனது புன்னகையை கண்டவளுக்கு மின்சாரம் தாக்காத குறை தான்! உள்ளே ஓடியே போனாள்!


    உணர்ச்சியின் உச்சத்தில் இருந்த வினோதாவின் தந்தை ஓடி வந்து வினயின் கைகளை இறுக பிடித்து கொண்டார்!

    " தம்பி நீங்க....நீங்க...சொன்ன விஷயம்!" என்று தடுமாறியவரை அணைத்து

    "ஆமா மாமா! இனி உங்க பொண்ணு என் மனைவி!"

    "ரொம்ப நன்றி பா! ரொம்ப நன்றி!"

    "பாரு டா! மருமகனுக்கு வெறும் நன்றி மட்டும் தானா?? விருந்தெல்லாம் இல்லையா?" என்று அவன் கேலி செய்ய அதற்கு இருவரும் சேர்ந்து நகைதாரார்கள்!

    ஆனால் உள்ளே ஒரே ஒரு முகம் மட்டும் சிரிப்பை தொலைத்து நின்றது!
    இது வரை அவன் தன்னை ஏற்று கொள்ள மாட்டான் என்ற காரணத்தை சொல்லி தந்தையை தடுத்தாயிற்று இப்போது என்ன காரணம் சொல்வது??
    இவனுக்கு என்ன வந்தது நல்ல மூக்கும் முழியுமாக தானே இருக்கிறான் தாலி கட்டியதற்காகவா தன்னை ஏத்து கொள்கிறான்? அதுவும் இந்த காலத்தில் போய்! கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்?? இப்போது நான் என்ன செய்வது?? என்று மனதிற்குள் புலம்பும் போதே தந்தையின் குரல் அவளை கலைத்தது!

    "அம்மா வினோதா!"

    "ஆஹ... சொல்லுங்க பா!"

    "மாப்பிள்ளைக்கு விருந்து தயார் பண்ணு மா!"

    "ஆஹ சரி பா!"

    சொல்லி விட்டு சமையல் அறை சென்றவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது!

    "விருந்தாம் விருந்து வீட்ல அப்படியே எல்லா மலிக சாமானும் கொட்டி கெடக்குது விருந்து சமைக்க! இவங்களுகெல்லாம் வெறும் உப்புமா போதும்!"

    என்று வானலியை வைத்து உப்புமா செய்ய தொடங்கினாள்!

    வெளியில் தந்தை அவர்களிடம் சிரித்து பேசுவது கேட்டது! கோவத்தில் கைகள் தானாகவே மிளகாயையும் உப்பையும் அதிகமாக்கின!
    வாயில் வைத்து ருசி பார்த்தவளுக்கு சகிக்கவில்லை!
    இருந்தாலும் வேறு செய்யவும் தோன்றவில்லை! ஒரு வேலை இந்த சமையலை சாப்பிட்டு விட்டு இப்படியே ஓடினாலும் சந்தோஷம் தான் என்று அதையே எடுத்து வந்து வைத்தாள்!

    அவளது உப்புமாவை பார்த்து அதிர்ந்த தந்தை என்ன இது? என்று கண்களாலேயே அவளுக்கு சைகை செய்தாலும்

    "என் பொண்ணு உப்புமா ரொம்ப சூப்பர் அஹ செய்வா அதான் உங்களுக்கும் அதே பண்ணிட்டா போல! வேண்டாம்னா வேற செய்ய சொல்றேன் பா!"

    "இல்ல மாமா! நான் வெரைட்டியா நெறைய சாப்ட்ருகேன் ஆனா உப்புமா சாப்டதில்லை! இதுவே எனக்கு டபுள் ஓகே!"

    சொல்லி விட்டு அவசர அவசரமாய் சாப்பிட உட்கார்ந்தான்!

    அனைத்தும் வாயில் வைக்கும் வரை தான்!

    அவனது முகம் அஷ்ட கோணலாய் போவதை கண்ட வினோதாவின் தந்தை என்ன தம்பி நல்லா இல்லையா?

    "நல்ல இல்லையாவா?? சூப்பர் மாமா நான் இது வரை இந்த மாதிரி சாப்பிட்டதே இல்லை!"
    என்று விநோதாவை பார்த்து கண் அடித்தான்

    இந்த பக்கம் காரம் தாங்காமல் அருண் கண் கலங்க

    "என்ன தம்பி நீங்க ஏன் கண் கலங்குறீங்க?? காரமா இருக்கா??"

    "அது வந்து.. அது ஒன்னும் இல்ல மாமா எனக்கு மனைவி இவனுக்கு தங்கை தானே! மொத மொதல்ல தங்கச்சி கையாள சாப்பிடறான்ல அதான் ஆனந்த கண்ணீர் இல்ல டா அருண்?"

    "ஹ்ம்ம்! ஆமாம் ஆமாம்!" என்று மறுவாயை வைப்பதா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தான் அருண்!

    மெதுவாக நண்பன் அருகில் வந்து "அட பாவி நான் உங்களுக்கு என்ன டா துரோகம் பண்னேன் இந்த மாதிரி எல்லாம் என்ன கொடுமை படுத்துற?? உடனே நான் வேற எடம் பாக்கணும் போல இனி உன் வீட்ல நான் சாப்புட மாட்டேன் பா!"

    "மவன வாய மூடிட்டு சாப்புடு இல்ல கொன்னுடுவேன்!"

    என்று ஒரு வழியாய் நாலு வில்லை எடுத்து போட்டு கொண்டு எழுந்தார்கள்! அப்பறம் மாமா கெளம்புறேன் நாளைக்கு வந்து வினோதாவ அழச்சுட்டு போறேன்!

    "ரொம்ப சந்தோஷம் தம்பி!"
    "அப்பா ஒரு நிமிஷம்! நான் உங்களோட கொஞ்சம் பேசனும்!"
     
  2. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Yamini,

    Nice updates..
    Vinotha..namma heroine peyar super!!!!
    aval avanga appa kita pesum scene romba etharthama irunthathu..
    kaara upmaku vinai sollum super..supero super..
    vinai-vinotha voda veetula poi nina avanga ammaoda reaction yenna??
    waiting for that?
     
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hi Yamini,

    Vinotha' is good and different name. she is talking so practical. what she is going to talk to vinay. eager to read the next.
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    super unga vaazhththum dhaan! nandri sumathi!
    reaction varum paagangalil!
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    wait and watch! interesting episodes are coming up which makes to laugh, cry, feel and enjoy!
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    super pa......
    i think vinodha wont agree immediately to go with vinay..
    but vinay wil manage...
    waiting for their joining............:cheers
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hey vinay... vinotha... per selection valakam pola superb...
    vino pesinathellam super pa... touching ah irunthathu...
    vinay is great... avanoda mudivu theliva irunthathu...
    athoda thaan karama sapitalum nanbanukkum vaari kuduthutan... :rotfl
    very funny ending... seekiram aduthathu podu... ila... :rant
     
  8. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi yams,
    Vinay- Vino... nalla peyar porutham....
    Vinay ... mudivu... remba correct....
    Vino- va vinay kuda serthu anupidunga pa.. appuram antha ponnu poka matten appadi ippadi nu dialog vitu, namma hero va thavika vituda pokuthu......
    Story is very interesting..... Waiting for next episode!!!
    Regards,
    S.Uma
     
  9. supriyamini

    supriyamini Senior IL'ite

    Messages:
    142
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    hey vino-vinay kuda povalla mattala. ana viney oda vino character than ennaku romba pidichi eruku da. Thalli kattita pothum ma udaney avan kuda poidanum ma enna?......... waiting for the vino's decision d
     
  10. supriyamini

    supriyamini Senior IL'ite

    Messages:
    142
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    arun romba pavam, viney avan alukaga antha uppuma va sappitan ana avan friend pavam d. entha lovers lam avanga friends oru comedy piece ah than use panringa. chinna pulla thanama ella.
     
    Last edited: Jun 30, 2011

Share This Page