1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வினோதமானவளே-5 :

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jun 24, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/137905-a.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138127-2.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138396-3.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138651-4.html



    ஷூட்டிங் அன்று!

    "வணக்கம் கேமரா மேன் சார்!" என்று சிரிப்புடன் வந்திறங்கிய வினயின் புன்னகை அவனையும் தொத்தி கொண்டது!
    அஜய்!
    கேமரா மேன் வினயின் வயதை ஒட்டிய ஆண்மகன் தான்! இருவருக்குமே ஏற்கனவே படங்களில் ஒன்றாய் வேலை பார்த்த பழக்கம் அப்போதப்போது கிண்டல் கேலியில் இறங்குவார்கள்!

    "வணக்கம் ஹீரோ சார்! என்ன நலமா?"

    " நலமோ நலம்! அப்பறம் என்ன எல்லாம் தயாரா?"

    "எல்லாம் தயார் தான்! ஆனா ஒரு சின்ன பிரச்சனை!"

    "ஆரம்பத்துலயே வா?"

    "சின்ன பிரச்சனை தான் பா!"

    "பிரச்சனைல ஏது சின்ன பிரச்சனை? பெரிய பிரச்சனை?"

    "நீயுமா?? ஏற்கனவே மண்ட காயுது பா!"

    "சரி சரி! என்ன ஆச்சு சொல்லு!"

    "பெருசா ஒன்னும் இல்ல டைரக்டர் வரலையாம்!"

    "என்னது?? ஏன் டா இது தான் சின்ன பிரச்சனையா? இதுக்கு நீ ஷூட்டிங் கான்செல்னே சொல்லி இருக்கலாம்!"

    "அதெல்லாம் ஒன்னும் கான்செல் ஆகல!"

    "ஐயையோ கொழப்பறானே!"

    "ஹே இரு இரு! தெளிவாவே சொல்றேன்! நம்ம டைரக்டர் இந்த கோவில புடிக்க பட்ட கஷ்டம் உனக்கு ஏற்கனவே தெரியும் அவ்வளவு கஷ்ட பட்டு இந்த கோவில்ல ஷூட்டிங் எடுக்க அனுமதி வாங்கினாரு! ஆனா காலைல திடீர்னு அவரோட மாமனார் இறந்துட்டாரு! அப்பா எறந்துட்டா கூட ஷூட்டிங் வந்துடுவாரு! மனைவியோட அப்பாவாச்சே! பொண்டாட்டிய பகைச்சிக்க முடியுமா?? ஒரு வாட்டி போன் பண்ணி ஷூட்டிங் இன்னொரு நாள் வைக்க கேட்டாராம் முடியாதுனு மருத்துடாங்கலாம்! அதனால அவர் அச்சிச்டன்ட் கிட்ட சொல்லி புது ஹீரோயின கூட்டிட்டு வர சொல்லி இருகாரு! எப்படியாவது தாலி கட்ற சீன் மட்டுமாவது எடுத்து முடிசுடுனு என் கிட்ட கேட்டாரு! அதான் இன்னைக்கு நீ நான் ஹீரோயின் அவர் அசிஸ்டன்ட் மட்டும் தான் ஷூட்டிங் எடுக்க போறோம்! தாலி கட்ற சீன் மட்டும் தான் வேற ஏதும் இல்ல! ஒரு ரெண்டு மணி நேரத்துல எல்லாம் முடிச்சுடலாம்!"

    "இருந்தாலும் மனுஷனுக்கு இத்தன தொந்தரவு வர கூடாது பா! பாவம் அவர்!"

    "அதுக்கு என்ன! நமக்கு புடுச்ச மாதிரி ஒரு நாலஞ்சு ஷாட் எடுக்க சொன்னாரு! எது அவருக்கு புடுச்சிருக்கோ அத போற்றுலாம்னு சொல்லிடாரு! பாவம் மனுஷம் ஒடம்பு தான் அங்க இருக்கு! மனசு பூர இங்க தான்!"

    "சரி சரி! நேரம் ஆகுது பார்! ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்!"

    "எங்க ஆரம்பிக்கறது? இன்னும் ஹீரோயின் வரல!"

    "வெளங்குச்சு போ! எப்ப தான் டா இந்த ஹீரோயின்க டைமுக்கு வருவாங்க!"

    "இல்ல டா! என்ன மோ டிராபிக் ஆம்!இப்ப தான் அசிஸ்டன்ட் கோபால் சார் போன் பண்ணாரு! டைரக்டர் வராததால எல்லா வேலையும் அவர் தலைல தான் பாவம்!"

    "அது சரி அசிஸ்டன்ட் டைரக்டர் னா சும்மாவா?? ஆமா உன் அசிஸ்டன்ட் எங்க??"

    "என் அசிஸ்டன்ட் தானே கல்யாணத்துக்கு லோகேஷன் ரெடி பண்றாரு ஹீரோயின் வந்ததும் ஷாட் சொல்ல சொல்லியிருக்கேன் !"

    "எல்லாருக்கும் ஒரு அசிஸ்டன்ட் இருக்காங்க பா! ஹீரோக்கும் ஒரு அசிஸ்டன்ட் இருந்தா எவ்வளவு நல்ல இருக்கும்?? எங்களுக்கு சோர்வா இருக்கும் போது அவங்க நடிப்பாங்க! இது எப்படி இருக்கு? நல்ல ஐடியா இல்ல?"

    "அட பாவி இந்த மாதிரி எல்லாம் எப்படி தான் யோசிகிறியோ??"

    "என்ன பண்றது மூளை பா! நான் லாம்...!"

    "சார் எல்லாம் தயாரா இருக்கு சார்! ஹீரோயின் கூட வந்துட்டாங்க! சொல்லி கொண்டே வந்தான் அஜயின் அசிஸ்டன்ட் மனோஜ்!

    "அப்பாடா ஹீரோயின் வந்து இந்த மொக்க ஹீரோ கிட்ட இருந்து என்ன காப்பாத்திட்டா!"

    "சார் அசிஸ்டன்ட் டைரக்டர் அஹ காணும் சார் நான் போய் அவர கூட்டிட்டு வரேன்!"

    "சரி சரி!"

    லொகேஷனில்!

    "என்னப்பா உன்னையும் என்னையும் தவிர யாரையும் காணும் ஹீரோயின் எங்க?"

    "அதோ ரெட் சாரி போட்டுட்டு சாமி சன்னிதானத்துல நிக்குறாங்கலே அவங்க தான்!"

    "என்ன ஷாட்?"

    "டேய் ஏன் டா என் உசுர எடுக்குற?? வெறும் தாலி கற்ற சீன் தான்! போய் கட்டு போ!"

    "எத்தனை முடுச்சு டா போடணும்?"

    "ஐயோ படுத்துறானே! மூணு முடிச்சு தான்! இதுக்கு தான் கல்யாணம் பண்ணவனா பாத்து ஹீரோவா போடுங்கனு அந்த டைரக்டர் கிட்ட சொன்னேன்! தாலி முடுச்சு பின்னாடி போடணும் அதுவாவது தெரியுமா??"

    "ஹலோ இந்த வினய் குமாரோட நடிப்ப பத்தி என்ன நெனச்சீங்க? இப்ப பாருங்க சார் தூள் கெளப்பறேன் ! அப்பறம் இன்னொரு சந்தேகம்! "

    "அப்பா சாமி போதும் உன் சந்தேகம் போய் நடி!"

    ஒரு வேலை அந்த சந்தேகத்தை கேட்டிருந்தால் வினயின் வாழ்வில் அந்த திருப்பம் நிகழ்ந்திருக்காது!
    அவன் கேட்க வந்ததோ என்னை போலவே ஹீரோயின் இடம் எல்லாம் சொல்லி விட்டாயா?? அதற்குள்ளேயே அவள் ஏன் அங்கே கண் மூடி நிற்கிறாள் என்று தான் வினை கேட்க வந்தது!
    சரி ஒரு வேலை முதல் படம் என்பதால் பல முறை நடித்து பார்கிறார்கள் போல! இருக்கும்! இது என்ன பெரிய கம்ப சூத்திரம்? கண் மூடி நிற்க வேண்டும் அவள் எதிர் பார்க்காத போது நான் தாலி கட்ட போகிறேன்! பின்னாடி இருந்து காற்றில் மலர் மழை தூவும்! கோவில் மணி பலமாக அடிக்கும் நிறைய படங்களில் பார்த்தது தானே! தன்னை போல் முதல் படத்திலேயே பக்கம் பக்கமாய் வசனம் படிக்கும் கஷ்டம் இல்லை! அந்த விதத்தில் குடுத்து தான் வைத்திருக்கிறாள்! என்று நினைத்தபடியே சென்றான்!

    அங்கு போய் நிற்கும் வரை தான் அந்த குறும்பெல்லாம் அந்த பெண்ணின் மூடிய இமைகளையும் சற்றே மாநிறத்திற்கு கம்மியாய் இருந்த போதிலும் நேற்று பார்த்த இருள் வானமாய் அவளது முகம் ஜொலிப்பதாகவே தோன்றியது! அந்த ரம்மியமான அழகும் முகத்தில் இருந்த சாந்தமும் அவனை அசைக்க அவளை பார்த்தவாறே நின்றான்! பின்னிருந்து கேமரா மேன் நடிக்கும் படி சைகை செய்யவே தன்னையும் அறியாமல் அவனது கரங்கள் தாலியை அவள் கழுத்தில் மாலையாய் சூடின! ஒவ்வொரு முடிச்சு போடும்போதும் அவனது உடலில் மின்சாரம் பாய்ந்ததை அவனால் நன்றாகவே உணர முடிந்தது! இறுதி முடுச்சு போடும் சமயம் கண் திறந்தவள் அப்படியே அதிர்ச்சியில் விழித்தாள்! அதை காண்பவர்களுக்கு நடிப்பென்று சொல்ல முடியாத வண்ணம்! ஒரு முறை அவளது இமைகள் கீழே அவளது தாலியை வருடி பின்பு அதிர்ச்சியோடு வினயின் முகத்தில் வந்து நின்றது!
    விழிகள் நீரை மலை மலையாய் சொரிய அப்படியே அதை தாங்கி அவள் விழி நீரை துடைத்து!

    "என்ன மன்னிச்சுடு பிரியா! உன் மேல இருந்த காதல நான் எவ்வளவோ புரிய வைக்க முயற்சி செய்தேன் ஆனா நீ சம்மதிக்கல! அதான் இப்படி!" என்று வசனம் பேசி முடிக்க பலமாக கை தட்டினான் அந்த படத்தின் கேமரா மேன் அஜய்!

    "ஹே வினய் முதல் ஷாட்டே ரொம்ப தத்துரூபாமா வந்திருக்குடா! பிரமாதம்! என இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உணரும் முன்பே மயங்கி சரிந்தாள் கதாநாயகி!

    அப்படியே அவளை தாங்கியவன் மடியில் வைத்து பலமாக கன்னத்தில் தட்டினான்!

    "ஹே அஜய் சீக்கிரம் வாடா இந்த பொண்ணு மயங்கிடுச்சு!"

    "இரு இரு வரேன்! ஷூட்டிங் வரும் போது சாப்டு வர வேண்டியது தானே!" என்று புலம்பியவாறே வந்தான்!

    வருவதற்குள் பின்னாடி ஏதோ சலசலப்பு கேட்க திரும்பி பார்த்தவன் வேறொரு பெண்ணோடு அசிஸ்டன்ட் டைரக்டர் வருவதை பார்க்க அவர்களுக்கே மயக்கம் வராத குறை தான்!
    காரணம் அந்த பெண்ணும் சிகப்பு கலர் புடவை அணிந்திருந்தாள்!

    "அஜய் சார்! என்ன சார்?? யார் இந்த பொண்ணு?? என்ன ஆச்சு?"

    "உங்க கூட இருக்க பொண்ணு யாரு மொதல்ல அத சொல்லுங்க!"

    "இவங்க தான் நம்ம படத்தோட ஹீரோயின் மது!"

    சொல்லி முடிக்க பேய் அறைந்தார் போல் முழித்தார்கள் அஜயும்! வினயும் !

    பி. கு. அன்பு வாசகர்களே! சினிமா துறையில் ஒரு படம் எடுக்க நிறையவே சிரம படுவார்கள் அதில் பல மடங்கு கவனத்தோடே எடுப்பார்கள்! இந்த கதை சற்று கற்பனை அதிகம் நிறைந்த ரசிக்க மட்டுமே படைக்கபட்டது என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்! படியுங்கள்! மகிழுங்கள்!
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hey ena ithu... apa intha padathoda heroine namma heroine ilaya???
    ipadi oru twist ah... aana na itha than ethir pathen... ;-)
     
  3. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Yamini,

    Super update!!!!!
    ennathu assistant hero va????:biglaugh
    namm herovirku lollu jasti....
    sami kumbida vandhu ponnuku thali kattitan....:)
    Waiting for next!!!!!!!!!!
     
  4. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    hi yamini,

    sudden suspence. thrilling also. did the hero agian put knot in heroines neck? waiting for the next episode.
     
  5. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Yams,
    Read all updates.
    Mayangi vizhunthaval Vinayku mattum kathaanayakiyaa ?
    Illaipadathukkum nayakiyaaga maaruvalaa?
    Vinay already avalidam mayangittaan,
    Heroinum avanai parthu mayangittaal,
    Nalla porutham intha porutham.
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nesam pudhidhu paducha effect illaya vaishu?? keep reading and commenting!
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    en kadhaila herokku kurumbillama eppadi??
    thodarndhu pakkavum!
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    knot pottachu padhmu! aduththu enna namma hero life la kadhai thodarum!
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    poruththamaai padaikka pattavargal dhaan inai aavargal!
    thodarndhu padikkavum meena!
     
  10. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi yams,
    Ethir paratha thiruppam.. Nice......
     

Share This Page