1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வெயில் தின்ற மழையும் இரவை தின்ற கவிதையும

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Jan 12, 2011.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    நன்றி: அடலேறு: வெயில௠தினà¯à®± மழையà¯à®®à¯ இரவை தினà¯à®± கவிதையà¯à®®à¯ « "அடலேறà¯" பகà¯à®•à®®à¯


    புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன* கவிதை தொகுப்பும் தந்தது.


    நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்*தை எழுதிய*வ*ர் என்ப*து ஆச்ச*ர்ய*மாக*த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறார் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.


    நல்ல குளிர் அன்று இரவு ப*தினொன்று ம*ணியிருக்கும் அப்போது தான் நிலாவிட*ம் க*விதை தொகுப்பை வாங்கி வ*ந்தேன். குளிருடன் சேர்ந்த* இர*வு அறையில் அனைவ*ரையும் உற*ங்க* வைத்திருந்தது. கால்கள் தரையில் பட்டவுடன் சில்லிட்டது. வழக்கமாக புத்தகம் படிக்கும் ஜன்னலருகே இருக்கையை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டேன். வெளியே இருள் என்னை பார்த்துக்கொண்டிருப்பதாய் இருந்தது.


    வெயில் தின்ற மழை தொகுப்பை வாசிக்க தொடங்கினேன். முதல் பக்க அட்டை , பின் பக்க மனுஷ்யபுத்திரன் வார்த்தைகள் என அனைத்தும் கடந்து உள்சென்றதும் , நிலாவின் அறிமுகம். கவிதைக்கு வந்தேன் முதல் கவிதையே புதுக்கவிதை போல எளிதில் கடந்து போக முடியாது என முரண்டு பண்ணியது. இரண்டு முறை வாசித்தேன் ஒரு அர்த்தத்தை தந்தது. அடுத்த முறையும் வாசித்தேன் இன்னொரு அர்த்தத்தை தந்தது.புதுக்கவிதையில் நமக்கான அர்த்தங்களை கவிதையோடு நாம் தான் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது அலாதியாக இருந்தது. இப்போது குளிர் ஜன்னல் வழி உள்ளேறி கைகளையும் சில்லிட வைத்திருந்தது. எனக்கு ஒரு கவிதையின் வரி பிடித்துவிட்டால் அதன் தாக்கமே இரண்டு நாள் இருக்கும். எப்போதும் அதன் வரிகளையே முணுமுணுத்துக்கொண்டிருப்பேன்.


    அடிக்கொருமுறை அந்த பக்கத்தை திருப்பி திருப்பி பார்த்தும் சிரித்துகொண்டுமிருப்பதை வித்தியாசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லுவதுண்டு.கவிதையை இதைவிட வேறு எதாவது முறையில் கொண்டாட முடியாதா என யோசித்திருக்கிறேன். கைகள் சில்லிட மனதுக்கு நெருக்கமான கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பே சந்தோஷத்தை கொடுத்தது. நிலாவின் பல கவிதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும் போது அது தரும் பரிமாண மாற்றங்கள் புதுமையான* வேறொரு மனநிலையில் வைத்திருந்ததாக உணர்ந்தேன்.


    வார்த்தைகளற்ற மென் இசையை எனக்கு மட்டும் கேட்கும் அளவு வைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. மென் இசையுடன் வாசிக்கப்படும் கவிதை அதன் நிர்வாணம் கடந்து ரசிக்கப்படுகிறது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இசையை மெல்ல சுழலவிடேன்.இன்னும் அதிக தீரத்துடன் ஜன்னல் வழியே குளிர் அறைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.சில கவிதை பக்கங்கள் பல நிமிடங்களுக்கு என்னை கட்டிப்போட்டது. மெல்ல ஒவ்வொரு கவிதைகளுக்குள் இருந்து வெளிவந்து அடுத்த கவிதைக்குள் மாட்டிகொண்டேன். வெளியெங்கும் இருட்டு, சில்லிட வைக்கும் குளிர், அறையெங்கும் மென் இசை, கையில் கவிதை என இரவு அத்தனை அழகாகியிருந்தது


    என்னை க*வ*ர்ந்த* சில* க*விதைக*ள்


    குழ*ந்தையாத*லின் சாத்திய*ங்க*ள் ஏதும*ற்ற*
    இர*வொன்றில் உன*க்கொரு
    உடைந்த* பொம்மையை ப*ரிச*ளித்து
    சிரிக்கிற*து கால*ம்.
    மென்காற்றில் சித*றும் சார*லில்
    ந*னைந்த*ப*டி த*னித்த*ழுகிறாய்
    நீ.
    (வெறுமையின் அழ*கான* வ*ர்ண*னை இது )
    ****
    வீழ்ந்து கிட*த்த*லை விட*
    ப*றந்து சாத*லே பெரிதென*
    உண*ர்த்தின*
    ச*வ*ப்பெட்டிக்கு காத்திருக்கும்
    துருப்பிடித்த* ஆணிக*ள்
    *******
    உதிர்ந்த* முத்தங்க*ளை பொறுக்கும்
    ந*ட்ச*த்திரா த*ன் க*ன்ன*த்தின் சுருக்க*ங்க*ளை
    வ*ருடிக்கொடுக்கிறாள்.
    சித*றிக்கிட*க்கும் முத்த*ங்க*ளின் ந*டுவே
    கால*ம் க*ண்சிமிட்டிக்கொண்டிருப்ப*தை
    வ*லியுட*ன் நோக்குகிற*து அவ*ள*து க*ண்க*ள்.
    தீராப்ப*சியுட*ன் வான*ம் பார்த்துக்
    க*த*றுகின்ற*ன* வீழ்ந்த* இலைக*ள்.
    மெல்ல வழுக்கிறது
    நிறமற்ற மழை
    ******
    இந்த கடைசி கவிதையை என்னால் அத்தனை சீக்கிரம் கடந்து போக முடியவில்லை. வலிகளை வார்த்தைபடுத்துவது கடினம் என்று சொல்லிவிட்டு அனாசயமாக நட்சத்திராவின் வலிகளை வார்த்தைபடுத்தியுள்ளார். கவிதையில் வரும் நட்சத்திரா பற்றியே நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.


    வார்த்தைக*ளையெல்லாம் பின்னிப்போட்டு கிற*ங்க*டிக்கும் க*விதை த*ருவ*தில் நிலா எப்போதும் தனக்கான இடத்தை தெரிந்தே வைத்திருக்கிறார் என்று தோன்றியது. இரவுகளுக்கு கைநீளுவதும், உலகின் மிகப்பெரிய தவறை துளியாக்குவதும் என மாயவித்தைகளை கண் முன்னே கடைபரப்பிக்கொண்டிருந்தது வெயில் தின்ற மழை. சில* க*விதைகளில் ஆரம்பங்களிலேயே உச்ச*த்தை தொடுகிறார்.


    க*டைசிவ*ரிக*ளில் வ*சிய*ம் த*ட*வியே க*விதைவ*டிக்கிறார் நிலா. கடைசி கவிதையை உணர்ந்து முடித்ததும் தான் தான் தெரிந்தது வெயில் தின்ற மழை என்னுடைய பாதி இரவை முழுதாக தின்று முடித்திருந்தது என்று. நாற்காலியை விட்டு எழுந்தேன். மணி நான்கு என கடிகாரம் காட்டிய*து.


    புத்த*க*த்தை மூடிவைத்துவிட்டு அத*ன் நினைவிலேயே இருந்தேன். தேனீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. எங்காவ*து வெளியில் செல்ல* வேண்டும் என்று தோன்றிய*து. டிச*ம்ப*ரில் மாதங்களின் அதிகாலை அழ*கான*து அவ*ற்றை ர*சிக்க* வேண்டும் போல* இருந்த*து. கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். உட*லை ந*டுங்க*வைக்கும் டிசம்பர் மாத குளிர் என்னை உள்ளிழுத்துக்கொண்ட*து


    சோடியம் ஒளி மெல்ல கசிந்து கொண்டிருந்தது. பின்னிரவில் சோடியம் விளக்கை சுற்றிய விட்டில் பூச்சிகள் விள*க்கின் அடியில் விழுந்திருந்தன*.சாலையில் நான், குளிர்,க*விதை என* மூன்று பேர் ம*ட்டும் இருப்ப*தாய் தோன்றிய*து.


    சோடிய*ம் விள*க்கில் இன்னும் சில* க*விதைக*ளை ப*டித்தேன். முன்பு ப*டித்த*தை விட* இன்னும் அழ*காக* தோன்றிய*து. சூழ்நிலைகளும் கவிதையின் அழகியலை தீர்மானிக்கின்றன என்று உணர்ந்தேன். நிலாவின் க*விதைக*ளில் வ*ரும் ந*ட்ச*த்திராவும் என்னுடைய* க*விதைக*ளில் வ*ரும் தூரிகாவும் ஒருவ*ரே என்று நிலா சொன்னது நியாபகம் வந்தது. ந*ட்ச*த்திராவை பார்க்க* வேண்டும் போல* இருந்தது.


    குளிரில் நடுங்கியபடியே சைக்கிள் தள்ளிக்கொண்டு வந்த ஒருவர் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டுப்போனார்.அறைக்கு வந்து மீண்டும் பிடித்த கவிதைளை படித்தேன் புத்த*க*த்தை நெஞ்சில் சாய்த்த*ப*டி எப்போது உற*ங்கிப்போனேன் என நினைவில்லை. காலை எழுந்ததும் ஒரு வரி பிசகாமல் நிறைய* க*விதைக*ள் நியாப*க*த்திற்கு வ*ந்தது.இதே போல் என்னுடைய* ஒன்றாம் வ*குப்பு த*மிழின் முத*ல் பாட*லும் , பக்கத்தின் வண்ணம் என மாறாமல் சில* ச*ம*ய*ம் நியாப*க*த்திற்கு வ*ரும், சில நேரங்களில் அந்த புத்தகத்தின் வாசம் கூட உணர்ந்திருக்கிறேன். சிரித்துக்கொண்டேன். ப*டுக்கையில் இருந்து கொண்டே சில* கவிதைக*ள் வாசித்தேன். அன்று மாலை வ*ரை வெயில் தின்ற மழையுடன் பேசிக்கொண்டிருந்தததாக நியாபகம்.


    ம*ழையுட*ன் க*ழியும் இர*வும்,ம*ன*திற்கு பிடித்த* க*விதைகளுடன் தொடங்கும் காலையும் எப்போதுமே வ*சீக*ர*மான*வைகள்.


    புத்த*க*த்தின் பெய*ர்: வெயில் தின்ற* ம*ழை ஆசிரிய*ர் : நிலார*சிக*ன் * ( உயிர்மை பதிப்பகம் ) விலை : 50 ரூபாய் * இணையத்தில் பெற*: http://tinyurl.com/2uqqkta
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Re: வெயில் தின்ற மழையும் இரவை தின்ற கவிதையு&#2

    உங்கள் கவிதைத் தொகுப்புக்குத் தக்கவாறு, மிக உயரிய மதிப்பீட்டைக் காண்கிறேன் நிலாரசிகன். எழுதியவர், உணர்ந்து, உண்மையாய் எழுதியிருக்கிறார். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். -ஸ்ரீ
     
  3. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: வெயில் தின்ற மழையும் இரவை தின்ற கவிதையு&#2

    பகிர்ந்தமைக்கு நன்றி nr!

    இப்படித்தான் இருக்கிறது நீங்கள் நேற்று பகிர்ந்த பொம்மைகள் குவித்திருக்கும் அறை...படித்ததிலிருந்து. மனதிற்குள்ளேயே இன்னும் விசும்பல் தொடர்கிறது.


    எப்படியேனும் வெயில் தின்ற மழை சீக்கிரம் படிக்க விழைகிறது மனம். சிங்கை நூலகத்தில் கிடைக்குமா தெரியவில்லை. இந்தவாரம் சென்று தேடுகிறேன்.

    வாழ்த்துக்கள் nr!
     
  4. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    Re: வெயில் தின்ற மழையும் இரவை தின்ற கவிதையு

    You can buy online also thozhi... :)
     
  5. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    Re: வெயில் தின்ற மழையும் இரவை தின்ற கவிதையு

    Mikka Nandri Sri :)
     

Share This Page