1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொம்மைகள் குவித்திருக்கும் அறை

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Jan 10, 2011.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    [font=&quot]1.பொம்மைகள் குவித்திருக்கும் அறை

    பொம்மைகள் குவித்திருக்கும்
    அறைக்குள் அனுமதியின்றி நுழைகிறது
    மெளனம்.
    ஒவ்வொரு பொம்மையிடமும் ஏதோவொன்றை
    தேடுகிறது.
    அறையின் மூலையில் அமர்ந்து
    சிறிதுநேரம் விசும்புகிறது.
    பின்,
    பெண்ணாகி வெளியேறுகிறது.
    மரித்த குழந்தையின் பொம்மைகளை
    வேறெப்படி அணுகுவாள் அவள்?


    2.கல்பொம்மைகள்
    என் தனிமைக்குள் வந்துவிழுந்த
    கற்களை பத்திரப்படுத்தியிருக்கிறேன்.
    அவை வெவ்வேறு நிறத்திலும் அளவிலும்
    இருக்கின்றன.
    ஒவ்வொரு கற்களிலும் எறிந்தவரின்
    பெயரை வெகு சிரத்தையுடன் எழுதுகிறேன்.
    நீ எறிந்த கற்களில் மட்டும்
    சிறு சிறு பொம்மைகள் வடித்திருக்கிறேன்.
    ப்ரியங்களால் நிறைந்திருக்கும்
    பொம்மைகளில்
    உன் பிரிவு நாளை குறித்துவிட்டு
    தனிமைக்குள் நுழைந்து
    கதவடைத்துக்கொள்கிறேன்.
    என் தனிமையுடன் உரையாடிக்கொண்டே
    இருக்கின்றன கல்பொம்மைகள்.

    - நிலாரசிகன்.[/font]
     
    Loading...

  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    விசும்பலையே பின்னூட்டமாய்த் தரமுடிகிறது...வார்த்தைகளின் கனத்தால்.
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வார்த்தைகள் மனத்தை அழுத்திவிட்டது.மௌனம பெண்ணாகி விசும்பியது.நாங்கள் மௌனமாகி விட்டோம்.
     

Share This Page