1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ...

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Sep 4, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அன்னையும் பிதாவும் முன் வர
    தெய்வத்தை பின் தள்ளிய என் ஆசானே
    தூரத்து புள்ளியாய் காலங்கள் கடந்தாலும்
    தூறலாய் என் நெஞ்சில் உங்களின் சாரல் என் அகல் விளக்கே

    என் அகக் கண் திறந்து
    இடம் சுட்டி காட்டினீர்கள் என் அறிவை,.. தமிழை

    என் குரலில் திருக்குறளை
    அவையில் ஒலிக்கச் செய்த என் அம்மையே

    உங்கள் கிரணம் பரப்பி அதில் என்னை
    மினுங்கச் செய்த ஆதவமே
    உங்கள் பெயருக்குள் என்னை பொதிந்து நிற்கிறேன்
    உங்கள் பெருமை கண்டு உருகி நிற்கிறேன்.


    உங்களுக்காய்
    உள்ளொளி கொடுக்கும் உலகை காக்கும் ஆசிரியர்களுக்காய்
    வாழ்த்த வருகிறது என் தமிழ்

    அன்பினை வழக்கும் அட்சய பாத்திரங்களே
    அறிவுச் சுடர் ஏத்தும் அணையா தீபங்களே
    அறிவுப் பசி தீர்க்கும் கற்பக விருட்சங்களே
    அன்பின் வழி நடத்தும் முன் மாதிரிகளே
    பின்தங்கிய சமுதாயம் உயர்த்தும் உன்னத உள்ளங்களே
    பிறர்க்காய் மெழுகென உருகி ஒளி தரும் தியாக துருவங்களே


    சக்தியுள்ள சமுதாயம் படைத்து
    நற்குணங்களை என்றும் காத்து
    தீயசக்திகள் அழித்து..
    முத்தொழில் செய்து மூவுலகை ஆளும் பரம் பொருள் சக்திகளே!!!!

    அறிவுச் சுடர் தந்து அறம் தழைக்க
    அச்சாணியாய் விளங்கும் ஆசான்களே -உங்கள்
    அடிமலர் பணிகிறேன்
    உங்கள் ஆத்தமார்த்த அறிவுப் பணிக்கு
    என் ஆசிரியப்பா வாழ்த்துக்கள் ......Bow.Bow.Bow.
     
    Last edited: Sep 4, 2010
    Loading...

  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஆசிரியர் தின வாழ்த்து,
    அவசியம் சொல்ல வேண்டிய ஒன்று,
    எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்,
    கல்லாமை என்ற,அறியாமை இருளை நீக்கி,
    கல்வி கண் தரும் இறைவன் நம் ஆசிரிய பெருமக்கள்.
    அவர்களின் அரிய பணிக்கு தலை வணங்குவோம்!
     
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    thannalamatra panikku endrum talai vanaguvom....
    good one..saroj.
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Saroj

    Excellent poem on Teacher's day by our talented Saroj. I am so proud of you that you are making good use of your talent. You are an allrounder

    love
    viji
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அவர்கள் இல்லையேல் நானும் இல்லை நீங்களும் இல்லை
    ஆயிரம் ஆயிரம் மா மேதைகளை
    இந்த மண்ணிற்கு ஈந்த
    அந்த மனித தெய்வங்களை போற்றிப் பணிவோம்.
    நன்றி தோழியே.
    முதல் பின்னூட்டம் அதுவும் சுடரேற்றும் ஆசானிடம் இருந்து .
    என் வாழ்த்து உங்கள் கைகளில் தவழ்ந்து
    மனதை நிறைத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் Bow.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    கூட்டுக் குரலில் நாம் வைத்திடுவோம் ஒரு
    அன்பு வணக்கம் அத்தனை ஆசிரியர் சமுதாயத்திற்கும்.
    நன்றி தோழியே உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    இந்த அறியாப் பிள்ளைக்கு
    அறிவு கொடுத்து அனைத்தும் அறியச் செய்து
    அகிலம் காண்பித்த என் மகிழம் பூ மா மேதைகளுக்கு
    எதிர்பார்ப்பு ஏதும் இல்லா கடந்த கால கலங்கரை விளக்குகளுக்கு
    என்னால் செய்ய முடிந்த ஒரு சிறு காணிக்கை.

    என் பகிர்தலில் பங்கெடுத்த என் அன்னைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஆசியர்களுக்கு தந்த வாழ்த்துப்பா அருமை சரோஜ்... :thumbsup நீங்களும் ஒரு ஆசியரா போயிருந்தா தமிழ் ல பின்னி எடுத்துருப்பாங்க பிள்ளைகள்..... :)
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இந்த டீச்சரத் தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்.
    இவங்க தான் உங்கள இப்படி நீள, நீளமா கவிதை எழுத கத்துக் கொடுத்தவங்களா? :)

    நல்லா எழுதக் கத்துக் கொடுத்தவங்க,
    நறுக்குன்னு நாலு வரில எழுத சொல்லித் தராம போயிட்டாங்களே.
    இல்ல Cutshortaa எழுதனும்னு சொன்ன கிளாஸ கட் அடிச்சிட்டீங்களா? :rotfl

    சரோஜ் உங்கள் கவிதை என்றும் போல் அருமை. அதில் எங்களுக்கு பெருமை.
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சும்மா இருந்த சிங்கத்த உசுப்பேத்தி விட்டுடீங்களே...இனி இதுக்கு எவ்ளோ நீளம் வர போகுது..:spin:spin:spin
     

Share This Page