குறுந்தொகை பாடல்-1

Discussion in 'Tamil Nadu' started by jeyapushpalatha, Mar 13, 2013.

  1. jeyapushpalatha

    jeyapushpalatha Senior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    சங்க காலப்பாடல் என்றாலே பயந்து ஓடிவிடுகிறோம்.நமக்கும் அதற்கும் காததூரம் என்று..
    அக்கால வாழ்வியலின் பதிவு.அக்கால முறைபடி ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள்.
    நாம் அவற்றை இலக்கிய வடிவில் பார்க்க பயிற்றுவிக்கப்பட்டு விட்டோம்.
    அழிந்த பாடல்கள் போக நமக்கு கிடைத்தவை அனைத்தும் பொக்கிஷங்கள்.
    இதோ அவற்றிலிருந்து ஒரு பாடல்..

    குறுந்தொகைப் பாடல் ஒன்று

    தலைவியின் உணர்வுகள்..(தலைவி என்றால் இபொழுது கதாநாயகி எனலாம்)


    பைங் காற் கொக்கின் புன் புறத்தன்ன
    குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
    வந்தன்று வாழியோ மாலை!
    ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே

    -ஒரம் போகியார்-

    துறை; தலைமகள் பொழுது கண்டு அழிந்தது.

    பொருள்
    பசிய கால்களையுடைய கொக்கினது புல்லிய முதுகினைப் போன்று
    ஆழமான நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் குவிந்தன.
    இபோழுது மாலைக் காலமும் வந்தது.அக்காலம் வாழ்வதாக!
    இங்ஙனம் வந்தது மாலை மட்டுமன்று அதன் பின்வரும் யாமத்தையும் உடையது;
    இனி யான் என் செய்வேன்.?

    கருத்து
    மாலைக் காலம் வந்தனால் துன்புற்ற தலைவி “இம்மாலையோடு எம் துயர் ஒழிந்திலது
    இதன் பின் வருவது கங்குல்,அதுவும் என் துயரை மிகுவிப்பதாகும்” என வருந்திக் கூறியது.


    நெய்தல் திணைக் குறித்தான இலக்கணம்

    virudhaimalar:

    இதில் வரும் குறிப்புகளைக் கொண்டே திணை விளக்கப்பட்டது.

    இப்பாடலில் ஆம்பல் பூக்கள் நிரம்பிய நீர்பரப்பினை கொக்கினது முதுகு
    என்றிருப்பது ஒரம் போகியாகியாரின் கற்பனை வளம் படித்து இன்புறதக்கது.
     
    3 people like this.
    Loading...

  2. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    அருமையான பதிவு.. நல்லா முயற்சி.. சங்க இலக்கியத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு ஆனால் பள்ளி பருவத்திற்கு பின் அதை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. இந்த பதிவினை தொடருங்கள்.. :) நன்றி
     
    1 person likes this.
  3. jeyapushpalatha

    jeyapushpalatha Senior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    நன்றி சகோதரரே..கண்டிப்பாக...
     
  4. quantSundar

    quantSundar Junior IL'ite

    Messages:
    25
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Male
    நல்ல பதிவு . தொடர்ந்து எழுதுங்கள்
     
  5. jeyapushpalatha

    jeyapushpalatha Senior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    நன்றி சுந்தர் அவர்களே...
     
  6. ashwanth

    ashwanth Gold IL'ite

    Messages:
    861
    Likes Received:
    854
    Trophy Points:
    188
    Gender:
    Female
    சிறந்த பதிவிற்கு நன்றி. மேலும் தொடருங்கள்.
     

Share This Page