1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Feb 13, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க சில வழிகள்!

    நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

    1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.

    உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது.

    இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம்.

    அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.


    இதே போலத்தான் எலெக்ரிகல் பில் முதலியவைகளும். எங்க வீட்டில் சம்பளம் வந்ததுமே, தனித்தனியாக பேர் எழுதி கவர்களில் போட்டு வைத்துவிடுவோம். என்ன ஆனாலும் ஒரு கவரிலிருந்து மற்றொன்றுக்கு எடுக்கமாட்டோம்.

    தொடரும்..................


     
    sindmani, nayanika, Sun18 and 2 others like this.
    Loading...

  2. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்&a

    Amma, romba correct ma. :hatsoff to your thoughtfulness to start such a thread ma.
     
    3 people like this.
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்&a

    மிகவும் அவசியமான பதிவு , தொடர்ந்து எழுதுங்கள் அருமை மா
     
    1 person likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்&a


    நன்றி ப்ரியா :)
     
    1 person likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்&a


    எழுதுகிறேன் உமா, ஒரு பத்திரிகை இல் வந்தது + என்னுடைய கருத்து இரண்டுமே போடுகிறேன் :)
     
    2 people like this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்&a

    2. சம்பளம் வந்ததும் அத்தியாவசி யமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

    நாங்க 1987 இல் கிருஷ்ணா அப்பாவின் வேலை காரணமாக ஹைதராபாத் புறப்படும்போது எங்க அப்பா சொன்னதை இங்கு சொல்லணும் நான் [​IMG]அவர் சொன்னது இது தான், " இனி நீங்க உங்க சம்பளத்தில் குடித்தனம் பண்ணியாகணும், யாரும் உங்களை வழிநடத்த ஆட்கள் இல்லை, எனவே, எது வாங்குவதானாலும் இதை மட்டும் நினைவில்வை என்று ஒன்று சொன்னார். அது தான் இது [​IMG]

    " அவசியமானதை வாங்காதே....................தவிர்க்க முடியாததை வாங்கு"

    இதுவே எங்கள் தாரக மந்திரமாக இருந்தது .....நிஜமாகவே அதை நாங்க ரொம்ப strite ஆக follow செய்தோம் :)

    ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு அதாவது 2003 இல் நாங்கள் சௌதி லிருந்து இந்தியா வந்தது, A/C போடும்போது சொல்கிறார், "நீ இப்போவெல்லாம் வசதிக்காக சிலது செய்ய ஆரம்பிச்சுட்டியே.".................என்று.

    அதாவது அத்தனை வருடமும் அவர் பார்த்துக்கொண்டிருந்திருக்கார் .கொஞ்சம் கூட வாயே திறக்காமல்............."நீ சூப்பர் ஆக என் வார்த்தைகளை follow பண்ணரடா மாப்பிள்ளை " என்று இவரிடமோ , ஏன் என்னிடமோ சொன்னது கூட இல்லை :( so , இப்போ சொல்வதை பார்த்துத்தான் நாம் ஒ...........அப்பா மதிப்பில் நாம் உயர்ந்து தான் இருந்தோம் என்று சந்தோஷப்பட்டேன்.

    அப்புறம் சொன்னேன்......."அப்பா ...............இவர் சௌதி ல சம்பாதிக்கிறார் அப்பா.........பாவம் கிருஷ்ணா......... என்று தான் அப்பா." ...........என்றேன். அரை மனதுடன் ஒப்புக்கொண்டார்.

    எதுக்கு சொல்ல வரேன் என்றல் அப்படி " கட்டு செட்டாகத்தான் எப்பவும் இருக்கணும்" என்று சொல்வார் [​IMG]

    மேலே நான் சொன்னது போல, அத்தியாவசிய செலவுகளுக் கானதை எக்காரணம் கொண்டும் எடுக்கவே கூடாது :)
     
  7. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்&a

    மிகவும் மகிழ்ச்சி மா
     
    1 person likes this.
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்&a

    மிக சரியான தாரக மந்திரம் . அருமை மா
    நான் கூட ஓர் quote படி த்து இருக்கிறேன். நமக்கு தேவை இல்லாததை வாங்கினால் தேவை யானதை இழக்க நேரிடும் என்று .
     
    4 people like this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்&a

    :thankyou2:.................:welcome
     
    2 people like this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்&a

    ம்ம்.. நிஜம் தான் உமா :) கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கும் போக்கு இப்போது அதிகரித்து இருக்கு .....எங்காத்துக்கரர் சொல்வார், "தொடர்ந்து 24 மணிநேரம் ஒரு பொருளை நீ உபயோகிக்கலை என்றல், அது இல்லாமலே நீ வாழலாம், அது உனக்கு அதிகப்படி , தினசரி வாழ்க்கைக்கு தேவை இல்லாதது என்று முடிவு கட்டலாம் " என்று :)
     
    1 person likes this.

Share This Page