1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு நாள் நாட்டாமை

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, May 20, 2015.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அது ஒரு அழகிய கிராமம்.மொத்தம் பத்து தெருக்கள் தான் உண்டு .அந்த ஊருக்கு ஓர் நாட்டாமை .நமது கதையின் நாயகன்.அவர் பெயர் ராஜன் .அவர் மனைவி பெயர் ராஜாத்தி .ராஜாத்தி தன கணவருடன் பயங்கரமாக சண்டை போட்டு கொண்டு இருந்தாள்.அவர் ஊருக்கு நாட்டாமை என்றாலும் வீட்டில் மனைவிக்கு அடங்கிய கணவன்..சண்டைக்கு என்ன காரணம் தெரியுமா ?அவர் சட்டையில் இருந்த ஒரு விதமான நறுமணம் ."இவ்வளவு நாளும் அத்தர் ஜவ்வாதுமணக்கும்உங்கள்சட்டையிலவேறுவிதமணம்வருகிறதே.அதற்குஎன்ன காரணம்" என்று அவரை வார்த்தைகளால் விளாசி கொண்டு இருந்தாள்."அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை எப்போதும் உபயோகிக்கும் வாசனை திரவியம் தான்"என்று பதில் சொல்ல அவர் மனைவியோ பஞ்சாயத்தை கூட்ட போகிறேன் என்று சொல்லி விட்டாள்."நான் தீர்ப்பு சொல்லும் பஞ்சாயத்தில் என்னை நிறுத்தி வைக்க போறாயா .வேண்டாம்மா "என்று எடுத்து சொல்லியும் அவர் மனைவி பஞ்சாயத்து கூட்டி விட்டாள்.

    அந்த ஊர் இளவட்டங்களுக்கு ஏற்கனவே நாட்டாமை மேல கோபம் .அதனால் இந்த சமயம் நாம் அவரை கடுப்படிக்க வேண்டும் என்று திட்டம் போட்டனர்.
    வழக்கம் போல பதினெட்டு பட்டி இல்லாமல் அந்த ஊர் ஜனங்கள் மட்டும் வந்தனர்.இப்ப யாரை நாட்டமை நாற்காலியில் அமர வைப்பது என்ற கசமுசா வந்தது .இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்று நினைத்த வாலிபர்கள் ஒரு கோரிக்கை வைத்தனர்."ஐயா இனி எதிர்காலத்திலே எங்களில் ஒருவர் தான் நாட்டாமை ஆகப்போறார்.அதனாலே நீங்க இளம் வயதுக்காரர் யாரையாவது நாட்டாமை ஆக்குங்க.எங்களுக்கு ஒரு பயிற்சி மாதிரி இருக்கும் .தப்பு செய்ஞ்சாலும் நீங்க எங்களை திருத்தலாம் .இது நம்ம ஊர் நன்மைக்காக சொல்றோம்"என்று சொன்னார்கள் .நாட்டாமை வசமாய் மாட்டி கிட்டியா என்று நக்கல் சிரிப்பு சிரித்தார்கள் வாலிபர்கள் .நாட்டாமைக்கோ வயிற்றில் புளி கரைத்தது .ஆஹா இந்த பயலுக நம்மை வச்சு ஏதோகூத்து பண்ண போறானுக.இந்த கூறு கெட்டவ கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாமோ என்று குமுறி கிட்டு இருந்தார்.ஆச்சு கதிர் என்பவன் நாட்டாமை சீட்டில் உட்கார்ந்தான் ."அம்மா என்ன காரணத்துக்கு இந்த கூட்டம் கூட்டினீங்க சொல்லுங்கன்னு கேட்டான் .அந்த அம்மாவும் விஷயத்தை சொன்னார்கள் .பின் பிரதிவாதி மாஜி தலைவரிடம் "உங்க பதில் என்ன சொல்லுங்க"ன்னு கேட்டான் .அவர் அதிகார தொனியில் "கதிர் என்று பெயர் சொன்னதும் நாட்டாமை பேர் சொல்ல கூடாதுன்னு உமக்கு தெரியாதான்னு கதிர் அதட்டினான் .உடனே அங்கு இருந்தவர்கள் கதிரை நோக்கி ஆவேசமாக பாய்ந்தார்கள். தற்காலிக தலைவரின் தோழர்கள் சும்மா இருப்பார்களா .அவர்களும் பதிலுக்கு கத்தினார்கள்."நாற்காலி மரியாதை தெரியாதா உங்களுக்கு .வயதில் சின்னவர் என்றாலும் பதவிக்கு மரியாதை கொடுக்கணும்னு" கதிர் சொன்னான் .

    பின் பிரதிவாதி விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்."நான் நேத்து டவுனுக்கு போனேன்.பஸ்ஸில் இருக்கும் போது என் அருகில்
    இருந்த ஒரு இளைஞன் சட்டையில் இருந்து நல்ல மணம் வந்தது வித்தியாசமான வாசனை வரவே அது என்ன என்று கேட்டேன்
    .அதற்கு அவன் body spray and perfumeனு சொன்னான்.தம்பி தமிழில் சொல்லுப்பான்னு கேட்டேன்.ஐயா ஒன்னு நாம் குளிச்சிட்டு வந்ததும் வியர்வை நாற்றம் தெரியாம இருக்க உடம்பு பூரா தெளிசுக்கணும் .இன்னொன்னு சட்டை போட்டுட்டு அது மேல தெளிக்கணும் .உள்ளுக்குள்ளே தெளிக்கிறது பாடி ஸ்ப்ரே சட்டையில் போடறது செண்ட்டுன்னு சொன்னான் .அதை தான்யா நான் வாங்கிட்டு வந்து போட்டேன் .இதை என் மனைவி கிட்ட சொன்னா காசை வீணாக்குறேன்னு திட்டுவாளேன்னு சொல்லலை .ஆனா இப்படி இங்க வந்து நிப்பேன்னு எதிர் பார்க்கல "அப்படின்னு வருத்தப்பட்டார்.ஊர் ஜனங்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்


    .இப்ப நம்ம ஒரு நாள் நாட்டாமை தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார்."நாட்டாமை ஐயா ஒவ்வொரு மனிசனுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும்
    .நாங்க எங்க வயசுக்கு ஏத்த மாதிரி இருக்கோம்.ஆனா நீங்க எங்களை பொறுப்பில்லாத பயலுகன்னு சொல்றீங்க.அது தப்புய்யா .நீங்க இப்படி உங்க வயசுக்கு ஏத்த மாதிரி இல்லாம இளைஞன் போல சென்ட் போடணும்னு ஆசை பட்டீங்க .அது தப்பில்லை .அதை ஏன் உங்க மனைவி கிட்ட மறைச்சீங்க .அது தான்யா தப்பு .அம்மா நீங்களும் கொஞ்சம் பொறுமையா கேட்டு இருந்தா அவரு உண்மையை சொல்லி இருப்பார் .இப்படி சந்தேகப்பட கூடாது .ஒருத்தரை ஒருத்தர் நம்புவது தான் இல்லறம் "என்று தீர்ப்பு சொல்லி விட்டு "நாட்டாமை ஐயா நான் ஏதும் மரியாதை குறைவா நடந்து இருந்தா மன்னிச்சுருங்க 'ன்னு சொன்னான் .நாட்டாமை "கதிர் இனிமே நீ தான் நாட்டாமை .உன் தீர்ப்பை கேட்டு எங்களுக்கு சந்தோஷமா இருக்கு "என்றார். .பதவியில் இருப்பதற்கு வயது ஒரு தடை அல்ல . ..
     
    3 people like this.
    Loading...

  2. cherrybud

    cherrybud Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    110
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Good story amma.... nalladhu enge irunthaalum eduththukkanumnu Ex-naattaamai kaattittaar.... adhukku vayasu vidhyaasam illainum....

    Good pne.... please write more...
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    periamma, Kadhai arumai !:clap

    Shankar padaththula(mudhalvan) varum oru naal mudhalvar pola, unga kadhaiyila vandha oru naal naattaamai, nalla theerpu thaan solli irukkaaru !

    enakku oru sandeham, ivaru , adhaan, sinna naattaamai Kadhir,kalyaanaththukku munnadi nalla naattaamaiya irukkaarey, kalyaanaththukkup pinnaadi verum veettaamaiyaa maara maattarey ?!!! gigglingsmiley Kovichchukkadheenga, naan summa jolly pannen..

    Respects & Regards,

    Pavithra
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks CB.Chummaa oru trial ma
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Pavithra varapora maharasi eppadi irukkaalo appadi thaan Kathir vaalkkai amaiyum .Aanaa eppavume onnu vegamaa irunthaa innonnu santhamaaga irukkum .opposite poles attract each other .Appa en kathaikkum irandu vaasagarkal kidaichirukkaanga .
     
    1 person likes this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    nalla kathai mmaa

    naattaamai theerppa maaththunnu sollaama,
    nalla theerppaal naattaamaya vae maaththitteengammaa :):):)
     
    1 person likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    GG ithu thaan unga style.Thanks
     
  8. ahtinani

    ahtinani Silver IL'ite

    Messages:
    145
    Likes Received:
    70
    Trophy Points:
    68
    Gender:
    Female
    romba nalla iruku ma...
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ahtinani Thanks ma
     
  10. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @periamma, azhagana gramathai kannukkul katchiyai, kachidhamana kadhaiyuddan, viveghamana saedhi ondrai kurrineer. Arpudhammana karpanai. Innum neraiya kadhai aezhudha vanedum yendru kuri vidaiperugirane, nandri, vanakkam.
     

Share This Page