1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கற்பனையில் வாழ்ந்து வாடும் சருகுகள்...

Discussion in 'Stories in Regional Languages' started by GoogleGlass, Apr 19, 2015.

  1. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    கற்பனையில் வாழ்ந்து வாடும் சருகுகள்...

    சில்லென்ற தென்றல் இதமாக கன்னம் வருடி சென்றது. சென்ற வாக்கில் கன்னத்தை மறைத்திருந்த கூந்தலை விலக்கி சென்றது. மெலிதே சதைப் பிடித்த கன்னங்கள் அவை. மஞ்சள் பூசிக் குளிக்காமலே மாங்கனி மஞ்சள் என மிளிர்ந்தது. நிலவு வெளிச்சத்தில் அக்காட்சி பளீரென அவள் செல்பி எடுத்ததுபோல் என் நெஞ்சில் பதிந்தது.

    இதுபோல் தருணங்களில் சொல்லாமலே கரடி ஒன்று எங்கிருந்தோ வரும். வந்து இடைஞ்சல் செய்யும், இது நமக்கு தெரிந்த கதை தானே. ரசிப்புத் தன்மையை கெடுக்கும் ராட்சச குரல் - ஏண்டி இந்த பாத்திரத்தை கழுவி வைக்க சொல்லி காட்டு கத்தாய் கத்துகிறேன் கேக்குதா உனக்கு. உங்க அப்பு வரட்டும் அந்த வாடஸ் அப்பை முதலில் ஒழிக்க சொல்றேன்.

    கரடி காட்டு கத்தாய் அலறியதில் ஆச்சரியம் இல்லை தான். ஆனாலும் அப்படி நெனச்சது தப்பு தப்பு வருங்கால மாமியார் ஆச்சே என உள் மனம் உளறியது. உளறிய தருணத்தில் பால்கனியில் உலவிய ரோஜா, முட்களை மட்டும் விட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டது, மனதை தைக்கிறது.

    நீங்கள் கேட்ட பாடல் என அவன் கேட்காமலே டைமிங் பாடல் எப்எம் ல்:

    அவள் வருவாளா அவள் வருவாளா
    என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
    என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
    கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
    சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

    கடுப்பில் வேறு அலைவரிசையை மாற்றினால்:

    அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

    பாட்டே வேண்டாம்டா சாமி ஆள விடுங்கப்பா என வானொலியை அணைத்துவிட்டு அவளை நெஞ்சிலே அணைத்துக்கொண்டு கண்களை லேசாக மூட எத்தனிக்க, அவன் வீட்டு கரடி - ஏண்டா நாளைக்கு தானே அரியர்ஸ் ரிசல்ட், இந்த தடவையாவது பாஸ் பண்ணிடுவியா என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச -

    சோதனை மேல் சோதனை
    போதுமடா சாமி
    இனி தாங்காது பூமி

    என அவன் நடிகர் திலகம் போலே நொந்து நூடுல்ஸாகி பாட துவங்க -
    அய்யய்யோ வேண்டாம்டா சாமி நீ பாஸ் பன்னலேன்னாலும் நா ஒன்ன இனிமே ஒண்ணுமே கேக்கலடா மவராசா, பாடி என்ன கொன்னுடாதடா என அலறிவிட்டாள் அம்மா.

    ஆகா இது தெரியாம போச்சே இன்னும் நாலஞ்சு பாட்டு இதுமாதிரி கத்துக்கணும் அப்பத்தான் நிம்மதியா இருக்கலாம் என்ற எண்ணம் ஓடியது மனதுள்.

    மைண்ட் வாய்ஸ்: ஹூம் இதெல்லாம் எங்க உருப்படப் போவுது, அரியர்ஸ் முடிச்சு, வேலை கிடைத்து, எதிர் வீட்டு பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தறது - சான்சே இல்ல.
     
    3 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Gg கற்பனை காவியமா .
     
    1 person likes this.
  3. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா..

    Gg.. ஒரு முடிவோட தான் இருகிங்கனு நினைக்கிறேன்.. கவிதைகள் கதைகள்னு ஒரே அமர்க்களம் பண்றிங்க..
     
    2 people like this.
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    GG,

    இது கவிதையா கதையா ? thinkingsmiley

    எதுன் தெரியாம என்ன சொல்ல.
     
    1 person likes this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    May I send a list of songs?
    Jayasala 42
     
    1 person likes this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    kirukkal mmaa :)
     
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    kuttaya kuzhappurathunnu mudivaayiduchchu appuram yenna - amarkkalam thaan :)
     
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thumbs down option illama poche :( better karpanai next time....
     
    1 person likes this.
  9. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ithellaam yosikka koodaathu - pattunnu nallaalla nnu sollidanum :)
     
  10. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Idhikaasam... Attakasaam (Enna Kodumai Sir..Edhu ?)
     
    1 person likes this.

Share This Page