1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காலம் கடந்த ஞானோதயம்...............by Krishnaamma:)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Mar 27, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்? "..என்கிற தலைப்பில் சூடான பட்டிமன்றம் மறு ஒளிபரப் பாகிக் கொண்டிருந்தது ...........வீட்டில் யாரும் இல்லாததால் டிவியை பார்த்துக் கொண்டிருந்தார் விநாயகம். அவர் மனைவி சியாமளா காலனி இல் ஏதோ கூட்டுப் பிரார்த்தனை என்று போயிருந்தாள்...இதைப்போல மாதத்தில் பாதி நாட்கள் இது போல செல்வாள்...ஊருக்கு உபகாரி............வீட்டையும் விட்டுவிட மாட்டாள்.............ஒரே மகள் ஏதோ Walk in interview என்று ஏதோ ஒரு ஹோட்டலுக்கு போய் இருக்கிறாள்......எனவே, இன்று முழுவதும் ரெஸ்ட் தான்......கிரிகெட் தான்......அது ஆரம்பிக்கும் வரை இப்படி ஏதாவது பார்க்கலாம் என்று டிவி இன் எல்லா சானல்களையும் சுற்றி வந்து கொண்டிருந்தார் .

    டிவி இல் பேசுபவர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்தார்..........." இது கலி யுகம், இப்போ தவறு செய்பவர்களுக்கு கை மேல் பலன் ...அதாவது காலை இல் தவறு செய்தால் மாலையே அதற்கான தண்டனை கிடைத்து விடும் என்று தான் இந்த தலைப்பை தந்திருக்கிறார்கள்.......இது சுத்த பொய்...........அப்படி எல்லாம் இருந்தால் இன்று நாட்டில் நடக்கும் எவ்வளவோ அக்கிரமங்களை செய்தவர்கள் பாதிப்பு ஏதும் இல்லாமல் நல்லபடி வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள்..நாமும் பார்த்துக்கொண்டு தானே இருக்கோம்? "................கரவொலிகளுக்கிடையே அவர் தொடர்ந்தார்..................

    இதைக்கேட்ட விநாயத்துக்கும் அவர் சொல்வது சரி என்றே பட்டது..............எவ்வளவோ பேர் மனதறிந்து தப்பு செய்து விட்டு நல்லாத்தானே இருக்காங்க........என்று யோசித்துக்கொண்டே............தனியாய் தானே இருக்கோம், உணவு சாப்பிடும் முன் .கொஞ்சம்....என்று யோசித்து எழுந்து போய் 'அதை' எடுத்து வந்தார்......கூடவே வறுத்த முந்திரி............

    கொஞ்ச நேரம் போச்சு அடுத்த பேச்சாளர் வந்தார்...........இவர் அதில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் தன் வேலையை பார்த்து கொண்டிருந்தார்............காலின் பெல் சத்தம் வரவே, அவசரமாக எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்து விட்டு கதவை திறக்க வந்தார்.அதற்குள் 2 - 3 முறை மணி ஒலித்து விட்டது...........

    "யாராய் இருக்கும்?"...........என்று எண்ணியபடியே.....தளர்வாக நடந்து வந்தார்..................
    கதவை திறந்து பார்த்தால் ஒரு இளமங்கை நின்றுகொண்டிருந்தாள்.............சேல்ஸ் கேர்ள் ஆக இருக்குமோ என்று எண்ணி...."வீட்டில் அம்மா இல்லை எனக்கு ஒன்றும் வேண்டாம் நீபோ" என்றார்...............

    அதற்கு அந்த பெண்..........." இல்லை ஐயா, நான் உங்கள் வேலைக்கார அம்மா பொன்னம்மாவின் மகள்....அம்மாக்கு உடம்பு சரி இல்லை................அது தான் என்னை அனுப்பினார்கள்"....என்றாள்.

    " நான் வேணா அப்புறம் வரவா?." என்றாள்..................

    இவர் அவசரமாக....' வேண்டாம், வேண்டாம்.......எந்த எந்த வேலை செய்யணும் என்று உனக்கு தெரியுமா? ".என்றுகேட்டார்

    அதற்கு அந்த பெண்ணும் " அம்மா சொல்லி அனுப்பினாங்க ஐயா"...என்றாள் புன்னகையுடன்.........................

    " சரி ...நீ போய் வேலையை பார்"....என்றார்.

    மறுபடி எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு டிவி முன் உட்கார்ந்தார்....ஒரு 15 நிமிடங்கள் சென்று இருக்கும்.........குடித்ததால் அவருள் சில மாற்றங்கள்..... வந்துள்ள பெண்ணை பார்த்து கொஞ்சம் சபலப்பட்டார் மனிதன்.....தன் பெண் வயது தான் இருக்கும் என்பதை மறந்தார், தன் கௌரவம், வீடு வாசல் சுற்றம் என எல்லாம் மறந்தார்............நேரே உள்ளே போனார்............வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை பலவந்தப்படுத்தி... அதில் வெற்றி யும் கண்டார்......

    பாவம் அந்த சின்ன பெண்.............பயந்து நடுங்கி அழுதுகொண்டிருந்தாள்...............அவளை மிரட்டவும் செய்தார்..." இதோ பார் , இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால்......எங்க வீடு 10 பவுன் செயின் ஐ உங்க அம்மா தான் திருடினா என்று போலீசில் பிடித்து கொடுத்துவிடுவேன்.அப்புறம் உனக்கு பிழைக்க வழி இல்லாமல் தினமும் இதே தான் செய்து பிழைக்கணும்....பேசாமல் இருந்து விட்டால் ஒன்றும் இல்லை".........
    என்றார்.

    பாவம் அந்த பெண் அழுதுகொண்டே ஓடிவிட்டாள்..........டிவி இல் கடைசி ஆள் பேசிக்கொண்டிருந்தார்..........."எதிர்கட்சி நண்பர் சொல்வது ரொம்ப நல்லா பேசினார் ........எவ்வளோ பேர் தாங்கள் செய்த தப்புகளுக்கு தண்டனை அனுபவிக்காமல் சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறார் , ஆனால் அவர்கள் எல்லோரும் மன நிம்மதியாக சந்தோஷமாக இருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா?..............கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்......

    BHAGWAN KE GHAR DER HAI , ANDHER NAHI என்று ஹிந்தி இல் சொல்வார்கள் அதாவது,

    "இறைவனின் சன்னதி யிலிருந்த தண்டனை வர கொஞ்சம் தாமதாமாகலாம் ஆனால் வராமல் இருக்கவே இருக்காது"............என்று அர்த்தம்.................என்ன, நாம் எதிர்பார்க்கும் தண்டனை அவர்களுக்கு கிடைக்காது..............ஆனால் அவர்களுக்கான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும்..............என்ன புரியலையா?" ..............மன்றமே அமைதியாய் இருந்தது..............

    இவர் என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்தது................" அதாவது , எங்கு அடித்தால் அவர்களுக்கு வலிக்குமோ, அங்கு அடி கண்டிப்பாக விழும்..........மேலும் அப்படி விழும் அடி 'மரண அடியாக' இருக்கும் வெளியே சொல்லி புலம்பக்கூட முடியாமல் போகும்...........இது நிச்சயம்" ......"நீங்கள் உங்கள் வாழ்வில் கூட பார்த்திருப்பிர்கள்............" என்று மேலே மேலே ஏதோ பேசினார்..............

    தொடரும்..............
     
    vaidehi71 and Caide like this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இவனுங்களுக்கு வேறு வேலை இல்லை..............சும்மா பயமுறுத்துறாங்க............இப்போ நான் கூடத்தான் தப்பு செய்தேன்..............என்ன ஆய்டும்? எவனுக்கும் தெரியாது.........போட்ட போடில் அந்த 'குட்டி' வாயே திறக்கமாட்டா ".............என்று பெருமையாக தனக்குத்தானே கொக்கரித்துக்கொண்டே டிவி யை சேனல் மாற்றிவிட்டார்.

    விநாயகம் சாவகாசமாய் தன் சாப்பாட்டை முடித்துக்கொண்டார்.......கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லை அவரிடம்............மீண்டும் கதவு தட்டப்பட்டது...............இந்த முறை calling பெல் இல்லாமல் கதவு தொடர்ந்து தட்டப்பட்டது.......கொஞ்சம் துணுக்குற்றார்......அவ்வளவு பயமுறுத்தியும் அந்த பெண் ஆட்களை கூடிக்கொண்டு வந்து விட்டாளா?.....................என்ன செய்யாலாம் என்று எண்ணிக்கொண்டே கதவை திறக்கப்போனார்.

    கதவை திறந்ததும் பார்த்தால் இவரின் பெண் நின்றுகொண்டிருந்தாள்................கொஞ்சம் அழுகையுடன்............." வாம்மா லதா, ..........என்ன வேலை கிடைக்கலையா?......இதுக்கெல்லாம் அழுவாங்களா?......... இதெல்லாம் சகஜம் ஸ்போர்டிவாக எடுத்துக்கணும்.......போ......போய் முகம் கழுவிக்கொண்டு வா, அப்பா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்......அம்மா வெளிய போய் இருக்காங்க"...........என்றவாறே அவளின் பதிலுக்கு காத்திராமல் கிச்சனுக்கு சென்றார்.

    அவள் உள்ளே போய்விட்டாள்............மீண்டும் கதவு தட்டப்படவே, வாசலுக்கு விரைந்தார்......அங்கு ஒரு ஆட்டோ டிரைவர் நின்று இருந்தார்.......அவரின் கை இல் இவர் மகளின் ஹண்ட் பாக் மற்றும் பைல் இருந்து.........இவர் கேள்விக் குறியுடன் அவனை பார்த்தார்...............

    " இப்போ உள்ளே போச்சே அந்த பாப்பவோடது சார்.............அழ்துகினே வந்திச்சு....இத்தக்கூட வண்டில விட்டுடுச்சு.....எத்தாந்து குத்துட்டு ......ஆட்டோ துட்டு வாய்ங்கிக்னு போலாமுன்னு வந்தேன் சார்" என்றான்................

    கொஞ்சம் யோசனையுடன் அவற்றை வாங்கிக்கொண்டார்......அவன் கேட்ட பணத்தை கொடுத்து அனுப்பினார்...." டாங்க்ஸ் சார்.....பாவம் புள்ளைக்கு என்னமோ ஏதோ ஆய்டுச்சு சார்......இன்னானு கவனி.............காலம் கேட்டு கிடக்குது.....இதுங்கெல்லாம் வெளிய வாசல்ல போய் வர்றதுக்குள்ளே ....வவுத்துல நெருப்பு தான் கட்டிகினு இருக்கணும்.....இன்னா பாக்குற சார்..............எனக்கும் இதைப்போல ஒரு பொட்டபுள்ள இருக்கு சார்......ஊட்டு வேலைக்கு போவுது "..............என்றவாறே சென்றான்.

    அவன் பேசப்பேச இவருக்கு 'சொரேர்' என்றது......அதற்குள் இதை கேட்டவாறே சியாமளாவும் வந்து விட்டாள். சிரித்தவாறே வந்தவள் ஆட்டோகாரரின் பேச்சை கேட்டதும்..........பதறியவளாய்......." என்னங்க என்ன ஆச்சு? " என்றாள்..............

    " ஒண்ணும் இல்ல அவன் ஏதோ உளறுகிறான்.....லதா interview வில் sellect ஆகலை போல இருக்கு அழுதுகொண்டே வந்திருக்கா ".............என்றார்.

    இவள் "இப்போ லதா எங்கே?" என்றபடி உள்ளே ஓடினாள்................

    ஒரு 2 நிமிடம் கூட இருக்காது...அவள் போட்ட கூப்பாடில் அந்த காலனியே கூடிவிட்டது என்னவோ ஏதோ என்று...........நடந்தது இதுதான்.........

    interview சென்ற இடத்தில் 2 -3 பேர் தவிர மற்றவர்களை அனுப்பி விட்டார்கள்...short லிஸ்ட் செய்த இவர்களுக்கு மீண்டும் ஒரு interview இருப்பதாகவும் கொஞ்சம் காத்திருக்கவும் சொல்லி இருக்கிறார்கள். இவளும் மற்ற 2 பெண்களும் ரொம்ப சந்தோஷமாய் காத்திருந்திருக்கிரார்கள்; இவர்களுக்கு குடிக்க ஏதாவது வேண்டுமா என்று கேட்டு குடிக்க கொடுத்திருக்கிறார்கள் .............அதில் ஏதோ கலந்து கொடுத்து விட்டார்கள் போல இருக்கு....இவர்கள் மூவருக்குமே கொஞ்சநேரத்தில் பறப்பது போல இருந்திருக்கு...............

    அந்த நேரத்தில் இவர்களை உள்ளே கூப்பிட்டு இருக்கிறார்கள்..............உள்ளே கட்டில்,கேமரா ஆட்கள் என்று எல்லாம் பார்த்ததும் , பயந்து ஓட நினைத்திருக்கா லதா....ஆனால் கை யும் காலும் இவள் சொன்னபடி கேட்கவில்லை.............தள்ளாடின.............முகமூடி போட்ட ஒருத்தன் வந்து இவளை கைத்தாங்கலாய் பிடித்து அழைத்து சென்றிருக்கான் ...............அப்புறம் என்ன?..............

    இவளால் எதிர்ப்பு ஏதும் சொல்ல முடியாமல் மயக்கத்திலே 2 - 3 பேர் அவளை 'உபயோகித்து' விட்டார்களாம் .............இவற்றை எல்லாம் நாலாபுறமும் இருந்த காமெரா உள்வாங்கிக்கொண்டதாம் ................ஒரு injection தந்ததும், கொஞ்ச நேரத்தில் சுய நினைவு பெற்ற லதா அழுது ஆர்பாட்டம் செய்தாளாம் .....போலிசுக்கு போவதாக சொன்னாளாம் ......அதற்கு கொஞ்சம் கூட பயப்படாமல் அவர்கள் CD க்களை காட்டினார்களாம் ........... " போ....நீ போனால் நாங்க அடுத்த நிமிடம் இதை YOU TUBE இல் upload செய்து விடுவோம், நீ மட்டும் தான் இதில் தெரிவாய்....... நாங்கள் எல்லாம் முகமூடி போட்டிருக்கோம் ...யார்மேல் கம்ப்ளைன்ட் தருவாய்?"....................என்று கூறி சிரித்தார்களாம் ..............இவளும் வேறு வழி தெரியாமல் அழுதுகொண்டே வந்து விட்டாளாம் ................

    இதையெல்லாம் கேட்ட சியாமளாவுக்கு மயக்கமே வந்து விட்டது......" நாம் யாருக்கு என்ன துரோகம் செய்தோம்?.......ஒரு புழு பூச்சிக்கு கூட கெடுதல் செய்தது இல்லையே.....கடவுளே எங்களுக்கு ஏன் இந்த கொடுமை?........இனி இவளை வைத்துக்கொண்டு நாங்க என்ன செய்யப்போறோம்?...............என்று ஒப்பாரி வைத்தாள்..............

    விநாயகத்தின் நிலைமையை சொல்லவும் வேண்டுமா? .................அவர் காதுகளில் டிவி இல் கேட்ட "." அதாவது , எங்கு அடித்தால் அவர்களுக்கு வலிக்குமோ, அங்கு அடி கண்டிப்பாக விழும்..........மேலும் அப்படி விழும் அடி 'மரண அடியாக' இருக்கும் வெளியே சொல்லி புலம்பக்கூட முடியாமல் போகும்...........இது நிச்சயம்" .இந்த பேச்சு விழுந்தது..அப்படியே தளி இல் கைவைத்துக்கொண்டு , நிலை குலைந்து உட்கார்ந்து விட்டார்..............." ச்சே ....எல்லாம் பாழாப்போன அந்த குடியால் வந்த வினை...........குடித்ததால் தானே மகள் வயது பெண்ணை...........சீ ............தன்மீதே அவருக்கு வெறுப்பு வந்தது..............இனி என்ன ஆனாலும் குடிக்க க்கூடாது என்று நினைத்துக்கொண்டார் "..ஆனால் என்ன செய்வது?..............காலம் கடந்த ஞானோதையம்..............

    "குடி குடியைக்கெடுக்கும் " என்பது இதுதானா?

    கிருஷ்ணாம்மா [​IMG]
     
    vaidehi71 and Caide like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்த முடிவை நான் எதிர் பார்த்தேன்.உங்கள் கதையில் இரண்டு கருத்துக்கள் உள்ளன.ஒன்று குடி குடியை கெடுக்கும் .இன்னொன்று தனக்கு வலிக்கும் போது தான் அடுத்தவர் வலியும் புரியும் .கருது செறிந்த கதை
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி ருக்மணி :)
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நிறைய பேர் படித்து இருக்கீங்க, ஆனால் எதுவுமே கமெண்ட் போடலையே என்று எனக்கு வருத்தமாய் இருக்கு......பிடித்திருக்கு இல்லை என்று ஒரு வரி எழுதலாம் தானே ?.............பின்னூட்டம் ப்ளீஸ் :)


    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Periamma sonna mathri rendu karuthum pramadam. Tamzhilum englishilum oru pazhamozhi ullathe, vithai vithaithavan vinai arupan (what you sow is what you reap).
     
    1 person likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாஸ்த்தவம் ப்ரியா :)......நன்றி !
     
    1 person likes this.
  8. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    தன் வினை தன்னைச் சுடும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்.
    போல்ட் ஆன கதை மா..
    keep writing :)
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you so much dear :)
     
    1 person likes this.
  10. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Wonderful story but it's a pathetic reality. For all of your story, the way you narrates I like it ma.

    This time message conveyed to accused via TV debate. New thinking. Kudos to you.
    **
    These drinking b******s are like this only. I had a different experience recently while I was traveling. Behind my seat was heavy drunkard who did non sense: shouted loudly, bad mouthing, kicking his own friends etc. I somehow adjusted but ladies who were there near my seat felt very badly. This incidence is lighter compared to what your story say and what's happening in this country.

    But in our Tamil nadu, this is what has been encouraged. They are setting targets to increase revenues compared to last year. Spoiling the entire state. Sorry ma I opened more.

    Your story tells more messages ma. Good. Keep writing.
     
    Last edited: Oct 16, 2015

Share This Page