1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மீண்டும் சந்திப்போம்

Discussion in 'Stories in Regional Languages' started by machili, May 13, 2014.

  1. machili

    machili Silver IL'ite

    Messages:
    39
    Likes Received:
    67
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Hi friends!!!!

    I would like to share a story "மீண்டும் சந்திப்போம்" in this IL. please friends read this story and share ur valuable comments.

    Im posting first episode of this story.

    மீண்டும் சந்திப்போம்-1.

    “நாம் பிரிந்துவிடுவோம்” என்று சொன்னவளை எரித்து விடுவதுப்போல் பார்த்தான் அவன்.

    அவன் பார்வையை சற்றும் கண்டுக்கொள்ளாதவள் போல் அவள் தொடர்ந்தாள், “நாம் இருவருக்கும் இனி ஒத்துவராது, நாம் பிரிவதுத்தான் நமக்கு நல்லது”, என்று சொல்லும் போதே அவன் கரம் அவளை நோக்கி அடிக்க வர சற்றென்று கண் விழித்தாள் நிவேதா.

    “ச்ச.... கனவா??? இன்னும் எத்தனை முறை தான் இந்த கனவு வந்து தன்னை பாடாய்படுத்தப் போகிறதோ?? என்றோ நடந்த சம்பவம் இன்று நடந்ததுப் போல் அல்லவா உள்ளம் வலிக்கின்றது என்று நினைத்துக்கொண்டே படுக்கையைவிட்டு எழுந்து பக்கத்தில் வைத்திருந்த தனது அலைப்பேசியில் மணியைப் பார்த்தாள்.

    அது அப்போதுத்தான் மணி நான்கு என காட்ட அதற்கு மேல் தூக்கம் வரவில்லை அவளுக்கு, இப்படியே இருந்தால் எதையாவது நினைத்து மனம் சலனப்பட்டுக்கொண்டே இருக்கும் அதற்க்குப் பதில் நம் வேலையையாவதுப் பார்க்கலாம் என்று நினைத்து அதை செவ்வனே செய்தாள்.

    தனது மடிக்கணினியை எடுத்து தான் வரைந்துவைத்த ஆடை வடிவமைப்புக்கு பொருத்தமான வர்ணம் கொடுக்க ஆரம்பித்தாள். எதோ இந்த கலை தானே தன் எல்லா கவலைகளையும் மறக்க வைத்தது.

    நிவேதா, ஃபாஷன் டெக்னொலஜி முடித்துவிட்டு ஓர் தனியார் அலுவலகத்தில் ஆடை வடிவமைபாளராக வேலைப்பார்க்கும் நவ நாகரிகப் பெண். எதையும் தனக்கு தானே முடிவெடுக்கும் திறமைக்கொண்டவள்.

    அன்னைக்கு பிடிக்குமென்பதால் இந்த ஆடை வடிவமைப்பில் சிறு வயது முதல் ஈடுபாடு உண்டு. தந்தை கூட “உன் அம்மாக்கு ஆடையில் அலங்காரம் செய்வது ரொம்ப இஷ்டம் கண்ணம்மா” என்று அடிகடி சொல்லுவதுதானே. நினைவு தெரிந்து தாய் முகம் கண்டதில்லை. தந்தை சொல்வதை வைத்து “நானும் அம்மா மாதிரியே ஆடையில் அலங்காரம் செய்வேன்” என்று அந்த சிறு வயதிலே தந்தையிடம் சொல்லியிருக்கிறாள். நாம் என்னவாக வேண்டுமென்று யோசிக்கின்றோமோ அதுவாகவே வருவோம் என்று சொல்வார்களே அதுபோல் தானும் ஆடை வடிவமைபாளராகவே வந்துவிட்டோம் என்று அவளே பல முறை நினைத்ததுண்டு.

    தன் வேலைக்களை முடித்துக்கொண்டு மடிகணினியை மூடிவைத்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தாள். ஹாலில் அவள் தந்தை கிருஷ்ணன் செய்திதாளுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. சிரித்த முகத்துடன், “குட் மார்னிங்க் அப்பா” என்றாள்.

    “குட் மார்னிங்க்!! வா மா என்ன இன்று சிக்கிரம் எழுந்துவிட்டாய் போல??” என்றார் பதிலுக்கு. ”ஆம் அப்பா, அதிகாலையிலே விழிப்பு வந்துவிட்டது அதான் எழுந்துவிட்டேன்” என்று மகள் சொல்லிகொண்டிருக்கும் போதே கையில் காபி கோப்பையுடன் வந்தார் சாந்தி. “தாங்குயு அத்தை” என்றப்படி ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டாள் நிவேதா.

    சாந்தி, கிருஷ்ணனுக்கு தூரத்துச் சொந்தம். ஒரு வகையில் தங்கை முறை. கணவன் இறந்தப்பின் யாருமில்லாமல் இருந்தவரை தன் வீட்டையும் சிறுப் பெண்னையும் பார்த்துக்கொள்ளும்படிச் சொல்லி அழைத்துவந்தார் கிருஷ்ணன். அன்று முதல் நிவேதாவுக்கு சொந்த அத்தையாகவே மாறிப்போனாள் சாந்தி.
    மகளுடன் பேசிவிட்டு, “சரி எனக்கு நேரமாயிற்று, இன்று ஒரு மீடிங்க் இருக்கின்றது நான் கிளம்புகிறேன்”, என்று எழுந்தார், வங்கியில் மேல் அதிகாரியாக வேளைப்பார்க்கும் கிருஷ்ணன்.

    நிவேதவும் அலுவலகம் செல்ல தயாரானாள்.


    -சந்திப்போம்.....​
     
    5 people like this.
    Loading...

  2. mahesaran

    mahesaran IL Hall of Fame

    Messages:
    2,999
    Likes Received:
    4,956
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Good start, nice narration.....keep going...

    one request.... Plz give the updates as soon as possible and don't stop in the middle , (without the climax)...
     
    1 person likes this.
  3. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    nice flow.. waiting for the next episode
     
    1 person likes this.
  4. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    nice start ...
     
    1 person likes this.
  5. machili

    machili Silver IL'ite

    Messages:
    39
    Likes Received:
    67
    Trophy Points:
    58
    Gender:
    Female
    hi iam posting second episode here.please drop your comments.
     
  6. machili

    machili Silver IL'ite

    Messages:
    39
    Likes Received:
    67
    Trophy Points:
    58
    Gender:
    Female
    மீண்டும் சந்திப்போம்-2.

    தனது வெள்ளை நிற காரை மிதமான வேகத்தில் லாவகமாக சாலையில் ஓட்டிக்கொண்டிருந்தாள் நிவேதா. எப்போது இந்த காரை எடுத்தாலும் மனதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அவளுடைய சொந்த உழைப்பில் வாங்கிய கார் அல்லவா இது. இந்த வேலையில் சேர்ந்த புதியதில் இருச்சக்கர வாகனத்தில் அலுவலகம் செல்லும்போது, “ஏன்னம்மா இந்த சென்னை வெய்யிலில் இப்படி ஸ்கூட்டியில் செல்கிறாய்?? நான் வேண்டுமானால் உனக்கு கார் வாங்கி தருகிறேன் அதில் செல்”, என்று தந்தை சொன்னபோது கூட, “வேண்டாம் அப்பா. நானே என் சொந்தப் பணத்தில் கார் வாங்கி அதில் நானே ஓட்டிச்செல்லும் போதுதான் எனக்கு சந்தோஷம்” என்று சொல்லி அடுத்த ஓர் ஆண்டுக்குள் சொன்னப்படியே வாங்கியவளாயிற்றே.

    அந்த எட்டு மாடி கட்டிடத்தின் கார் நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு லிஃப்ட்டை நோக்கிச்சென்றாள். லிஃப்ட் வந்ததும் அதில் ஏறி ஐந்தாம் தளத்தை அடைந்தாள். அங்கு ‘ஃபாஷன் வார்ல்ட்’ என்று எழுதப்பட்டிருந்த பலகையை ஒரு முறைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்து வரவேற்ப்பறையில் இருந்தப் பெண்னிடம் ஒரு புன்னகையை சிந்திவிட்டு ‘மனேஜிங்க் டிரைக்டர்’ என்று எழுதப்பட்டிருந்த அறை கதவை தட்டிவிட்டு உள்ளேச் சென்றாள்.

    “ஹாய்!! நிவி வா வா. உன்னைத்தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றான் உற்சாகமாய் எம்.டி இருக்கையில் அமர்ந்திருந்த கமலேஷ்.

    “என்ன கமல் இன்று ரொம்ப குஷியாக இருக்கின்றாய் போல??” என்றாள் தானும் சிரித்தப்படி.

    “ஆம் நிவி ஆம்!! நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘இயங்க் லுக்ஃஸ்’ என்ற புதிய துணிக்கடை சென்னையில் துவங்க உள்ளது. அதற்கு டிசைனிங்க் நாம் தான்” என்றான்.

    “ஆனால் அது புதிய கடை தானே அது எப்படி பெரிய வாய்ப்பாகும்??”என்றாள் கேள்வியாக.

    “ஐயோ நிவி, அவர்கள் பெரிய தொழிலதிபர்களாம். ஊட்டியில் அவர்களுக்கு நிறைய தொழில்கள் உள்ளதாம். நண்பர்கள் இருவர் ஒன்றாக இனைந்து முதல் முறையாக இந்த துணிக்கடையை இங்கு ஆரம்பிக்க உள்ளனர். விரைவிலே கிளைகள் திறக்க வாய்ப்புள்ளது. அவர்கள் இந்த கடையை கட்டாயம் பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள். நிச்சயம் இது நல்ல வெற்றிப் பெரும் பார். நமக்கும் இதன் மூலம் நல்ல பெயர் கிடைக்கும்”, என்றான் மகிழ்ச்சியாக.
    ஊட்டி என்று கமலேஷ் சொன்னதில் அதிர்ந்த நிவேதா, பின் சுதாரித்து, “இது சரி வருமா கமல் நன்றாக விசாரித்தாய் தானே??” என்றாள் கலக்கமாக.

    “ஆமாம் நிவி. விசாரிக்காமல் செய்வேனா என்ன? நாம் போன மாதம் அழகு சாதனை கம்பனி ஒன்றுக்கு ஷோ செய்துக்கொடுத்தோம் அல்லவா அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு இது. அவர்களுக்கு அந்த காஃஸ்டும்ஸ் எல்லாம் பிடித்திருந்ததாம், அதனால் நம்மை ஃஸ்பெஷல் டிசைங்க் டீம்மாக ஒப்பந்தம் செய்யக்கேட்டுள்ளனர். நீ தானே அதற்கு டிசைன் செய்தாய், ஆகையால் உன்னை தான் டிசைனராகப் போடலாம் என்றுள்ளேன்”, என்று அவன் சொன்னதைக் கேட்டு இன்னும் கலங்கினாள் அவள்.

    “ஆனால் கமல் எனக்கு என்னவோ சரியாக தோண்றவில்லை. நீ வேறு யாரையாவது டிசைனராகப் போடு” என்றவளை பார்த்து, “என்ன நிவி நான் இவ்வளவு சொல்லிகின்றேனே நீ இன்னும் முடியாது என்கிறாய்? உன்னால் தான் இந்த வாய்ப்பே கிடைத்துள்ளது நீ தான் செய்ய வேண்டும். ப்ளிஸ் நிவி. இது நமக்கு நல்ல வாய்ப்பு. சரி என்று சொல்லு எனக்காக” என்று எரிச்சலாக ஆரம்பித்து கெஞ்ச்சலாக முடித்தான் அவன்.

    “சரி செய்கிறேன் அழாதே” என்று அவள் சொன்னப்பின்பு தான் கமலேஷ் மூச்சுவிட்டான்.

    “தாங்க்யு சோ ம்ச் நிவி” என்றான் அவன் சிரித்த முகத்துடன். பதிலுக்கு அவளும் சிரித்தாள்.

    ஆனால் அவள் இன்னும் யோசனையாகவே இருந்தாள். எதுவோ சரியில்லை என்றே அவள் உள் மனது சொல்லியது அவளுக்கு.


    சந்திப்போம்...
     
    5 people like this.
  7. machili

    machili Silver IL'ite

    Messages:
    39
    Likes Received:
    67
    Trophy Points:
    58
    Gender:
    Female
    hello iam posting 3rd episode here. please drop your valuable comments
     
  8. machili

    machili Silver IL'ite

    Messages:
    39
    Likes Received:
    67
    Trophy Points:
    58
    Gender:
    Female
    மீண்டும் சந்திப்போம்-3.

    அலுவலகத்தில் தனது அறையில் அமர்ந்திருந்த நிவேதா, நான்காவது முறையாக தான் வரைந்த டிசைனிங்க் பேப்பரை கசைக்கி எறிந்தாள். ‘ஐயோ என்ன இது?? ஏன் என் மனம் இப்படி தவிக்கின்றது??’ என்று தன்னையே கேட்டுக்கொண்டாள் அவள். அதற்கு காரணமும் தான் அவளுக்கே தெரியுமே. இன்று தான் அந்த ‘இயங்க் லுக்ஃஸ்’ உரிமையாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்துப்பெற வருகிறார்கள். கமலேஷிற்காக ஒத்துக்கொண்டாலும் மனம் குழம்பிக்கொண்டுத்தான் இருக்கின்றது என்ன செய்வது என்று தனக்குள் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தவளை அவளுடைய அலைப்பேசி சினிங்கி களைத்தது. கமலேஷ் தான் அழைக்கிறான், எடுத்து பேசினாள் அவள்.

    “சொல்லு கமல்”, என்று அவள் சொல்லி முடிப்பதற்க்குள், “சிக்கிரம் என் அறைக்கு வா நிவி”, என்று சொல்லி வைத்துவிட்டான் அவன்.

    அவனுடைய அறை கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளை பெரிய புன்னகையுடன் வரவேற்றான் கமலேஷ். “அவர்கள் வந்துவிட்டார்கள் நிவி, நீ தயார் தானே??” என்று கேட்டவனை, “யவர்கள் கமல்??” என்று கேட்டு அதிர வைத்தாள் அவள்.

    “நிவீயியியி!!!!!! என்ன நீ?? ‘இயங்க் லுக்ஃஸ்’ உரிமையாளர்கள் வருகிறாள். மறந்துவிட்டாய்யா?” என்றான் பாவமாக.

    “இல்லை இல்லை. மறக்கவில்லை. சொல் எப்போது வருகிறார்கள்??”, என்றாள் எந்தவித உண்ர்ச்சியுமின்றி.

    அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, “இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார்கள். நீ ஏன் ஒரு மாதிரி இருக்கின்றாய்? எதாவது பிரச்சனையா?” என்றான் அவன்.

    “அப்படி ஒன்றுமில்லை லேசாக தலைவலி.” என்றவளை, “அப்படியா! மாத்திரை போட்டுக்கொள்கிறாயா? என்றான் கனிவாக. “ம்ம் இப்போது பரவாயில்லை” என்று அவள் சொன்னவுடன் அறை கதவு தட்டப்பட்டது.

    நிவேதாவும், கமலேஷும் ஒரே நேரம் திரும்பி பார்க்க, அங்கு கதவை பாதி திறந்துக்கொண்டு, “மே ஐ கம் இன்?” என்றது ஒரு ஆண் குரல்.

    அவனை அடையாளம் கண்ட கமலேஷ், “வாருங்கள் வாருங்கள் மிஸ்டர் முரளிதரன் உங்களை தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்”, என்றான்.

    உள்ளே இருவர் நுழைந்தனர். அவர்களை அறிமுகம் படுத்தும் விதமாக நிவேதாவிடம், “இவர் தான் முரளிதரன் ‘இயங்க் லுக்ஃஸ்’ உரிமையாளர், இவர்..”, என்று கமலேஷ் இழுக்கும் போதே, “இவர் எங்கள் வக்கீல் ரவிராம்”, என்று முடித்தான் அந்த முரளிதரன். அவர்களை வரவேற்க்கும் விதமாக புன்னகை ஒன்றை புரிந்தாள் அவள்.

    அதே புன்னகையுடன் அவர்களிடம் “இது நிவேதா கிருஷ்ணன், எங்கள் டிசைனர்” என்று கூறினான் கமலேஷ்.

    “உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டேன், நீங்கள் திறமையானவர்கள், உங்கள் டிசைன் எல்லாமே நல்ல ஹிட் என்று, எங்களுக்கும் அது போலவே நல்ல டிசைனிங்க் செய்து தர வேண்டும்”, என்று சிரித்த முகத்துடன் சொன்னவனை பார்த்து பதிலுக்கு, “நிச்சயம் செய்கிறேன் அது தானே என் வேளை” என்றாள் அதே சிரிப்புடன்.

    “நன்றி மிஸ் நிவேதா. இப்போது வேளையைப் பற்றி சொல்லிவிடுகிறேன். எங்கள் ஷோ ரூம்’யில் இரண்டு வகையாக டிசைனிங்க் பிரித்துள்ளோம். ஒன்று சற்று எல்லா வகை சாதாரனமான டிசைனிங்க், அதற்கு வேரு டீம் உள்ளது. மற்றோன்று ஸ்பேஷல் டிசைனிங்க் அது தான் எங்கள் ப்ரண்ட் வகை. அதற்கு தான் உங்களை ஸ்பேஷல் டீம் ஹேட்டாக நியமிக்கின்றோம். உங்களுக்கு ஒகே தானே?” என்று கேட்டான் முரளிதரன்.

    அவள் கமலேஷை பார்க்க, அவனும் அவளை தான் ‘என்ன சொல்ல போகிறாளோ’ என்பது போல் பார்க்க, “எனக்கும் இதில் சம்மதம் தான் மிஸ்டர் முரளிதரன்” என்றாள்.

    “ம்ம் அப்போ சரி. ரவி சார் அந்த ஒப்பந்தம் பேப்பர்களை அவர்களிடம் கொடுங்கள்” என்று வக்கிலிடம் கூறிவிட்டு, இவர்களிடம், “ நீங்கள் படித்துப் பாருங்கள். உங்களுக்கு எல்லாம் சரி என்றால் இன்றே கையப்பமிடலாம்.” என்று கூறினான் முரளிதரன்.

    கமலேஷ் இந்த வாய்ப்பை பற்றி சொல்லியத்திலுருந்து கலக்கமாகவே இருந்த நிவேதா, முரளிதரனை பார்த்த பின் சற்று தெளிந்தாள். அவன் பேசிய விதமும் சரியாக தோன்ற அவளும் ஈடுபாடுடன் வாங்கிப் படித்தாள்.

    ஏதேதோ விலாவரியாக எழுதப்பட்டிருந்தது. அவளுக்கு தேவையான சில வரிகள் இது தான், முரளிதரன் சொன்ன மாதிரியே ஸ்பேஷல் டீம் ஹேட், ஒரு வருட ஒப்பந்தம் எல்லாம் ஒத்துவந்தால் பிறகு நீடித்துக்கொள்ளலாம், இடையில் எந்தவித முன் அறிவிப்பின்றி யார் ஒப்பந்தத்தை ரத்து செய்தாலும் அவர்கள் மற்றவர்களுக்கு அன்றைய மதிப்பிற்க்கு ஏற்ற நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இருந்தது.

    முழுதாக படித்து விட்டு இருவரும் சரி என்று சொல்ல, “ இந்த ஒப்பந்தம் எல்லாம் ஒரு ஃபார்மலிட்டி தான். மற்றப்படி இந்த ஒரு வருடம் நமக்குள் நல்ல நட்பு இருந்தால் நமது வேளை நல்லப்படியாக செல்லும்” என்றான் முரளிதரன் புன்னகையை பரவவிட்டு. அவர்களும் ஆமோதிப்பது போல் தலையாட்டினர்.

    மூவரும் ஒப்பந்ததில் கையப்பமிட்ட பின், “உங்களை சிக்கிரம் எங்கள் அலுவலகத்தில் சந்திக்கின்றேன் மிஸ் நிவேதா”, என்று முரளிதரன் சொல்ல இருவரும் விடைப்பெற்றனர்.


    - சந்திப்போம்...
     
    3 people like this.
  9. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nice update dear... pls make it bit lengthy...
     
  10. machili

    machili Silver IL'ite

    Messages:
    39
    Likes Received:
    67
    Trophy Points:
    58
    Gender:
    Female
    ya sure shinara... thanks fr comments..
     
    1 person likes this.

Share This Page