1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இது காதலின் சங்கீதம்!!!

Discussion in 'Stories in Regional Languages' started by shinara, Apr 25, 2014.

  1. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தோழிகளே வணக்கம்... கொஞ்சம் அதிக இடைவெளி விட்டு உங்களை நான் மீண்டும் சந்திக்கிறேன். இந்த இடைப் பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களையும், அனுபவங்களையும் என் கற்பனையுடன் சேர்த்து உங்களுக்கு புதியதொரு தொடர் கதையாக தருகிறேன். படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. இதோ கதைக்குள் செல்வோம்...
     
    Loading...

  2. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எழும்பூர் ரயில் நிலையம்!


    எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம!


    கையிலும் தோள்பட்டையிலுமாக பைகளை மாட்டிக் கொண்டு நின்றவளை இடித்துக் கொண்டு மக்கள் கூட்டம் அலைமோதியது.


    பைகளையும், ட்ராலிகளையும் இழுத்துக் கொண்டு ரயிலில் ஏறி தன் இடத்தைக் கண்டுபிடித்தாள் உத்ரா. கையிலிருந்த பாரத்தை இறக்க முடிந்த அவளால் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை. 'ஏசி' காற்று படபட கொஞ்சம் மூச்சுவிடுவது எளிதானது.


    கழுத்தை ஒட்டியிருந்த குர்தாவின் பட்டனை அவிழ்த்துவிட்டு தனது சீட்டில் சாய்ந்து கொண்டாள் உத்ரா. சிறிய வேகத்தில் ரயில் நகரும் போது அவளை ஒரு கருப்பு உருவம் நெருங்கியது.கருப்பு நிற கோட் அணிந்த அந்த உருவம் தன்னை நெருங்குவதைக் கண்ட உத்ரா அதிவேகத்தில் துடித்த தன் இதயத்தையும் நடுங்கிக் கொண்டிருந்த தன் கைகளையும் கட்டுப்படுத்த எண்ணியபடி கண்களை இறுக மூடினாள்.


    குருநாதன்!!


    ஒருவேளை அவளை அழைத்துச் செல்ல குருவே வந்துவிட்டானா? அப்படி ஒன்று நடந்தால்... நடந்தால் இந்த பூலோகமே அவளுக்கு சொர்க்கமாகிவிடுமே!


    ஆனால் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை.. குரு கோபக்காரன். பிடிவாதக்காரன்.அவ்வளவு எளிதில் எதையும் விட்டுக் கொடுக்கமாட்டான். முக்கியமாக தன் பிடிவாதத்தை. அவன் நிச்சயமாக அவளைத் தேடி வரமாட்டான் என்றது உத்ராவின் மனம்.


    ஆம்!அவன் பிடிவாதக்காரன் தான்! வரமாட்டான் தான்!!
    ஆனால் அவளுக்குள் இருக்கும் காதலும் ஏக்கமும் அவனுக்குள்ளும் இருக்கும் தானே. அப்படி ஒருவேளை அந்த காதலோ இல்லை ஏக்கமோ அவனை இங்கு கொண்டுவந்துவிட்டால்...


    இப்படி ஒரு சிந்தனை தோன்றிய மறுகணமே குரு நாதனின் அந்த வசீகரமான முகத்தை உடனேயே காணவேண்டுமென உத்ராவின் மனதில் ஏக்கம் பிறக்க, தாமதிக்காமல் கண்களைத் திறந்தாள்.


    அந்த கருப்புக் கோட் இப்போது அவளுக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தது. சுமாரான உயரமும், முன்சரிந்த தொப்பையும், தொள தொள உடையும் அது குரு நாதன் இல்லை என்பதை உத்ராவிற்கு அறிவித்தது. குரு இல்லை என்பதை அறிந்ததும் தன்னை ஒரு நிமிடம் சமனிலை படுத்திக் கொண்டு கையிலிருந்த செல்ஃபோன் குறுந்தகவலையும் அடையாளத்திற்காக 'டிரைவிங் லைசன்சை'யும் அந்த கருப்புக் கோட் டி.டி.ஆர் ரிடம் காட்டி தன் இருக்கையை உருதிபடுத்திக் கொண்டாள்.


    உத்ராவின் கண்களிலிருந்து டி.டி.ஆரின் உருவம் மறைந்தாலும் அந்த கருப்பு கோட் அவள் மனதை சலனப்படுத்தியது.


    ஒரு அழகான மாலைப் பொழுதில் மெல்லிசைப் பின்னணியில் கருப்புக் கோட் அணிந்திருந்த குரு நாதனின் கையில் அழகுப் பதுமையாய் உத்ரா சாய்ந்திருந்த அந்த தருணம்... அதை மறக்க முடியுமா?? அன்று அதற்காக அவனிடம் கோபப் பட்டதும்... அவனது நண்பர்கள் கேலி செய்ததும், சுற்றியிருந்த பெரியவர்கள் அந்த ஜோடிப் பொருத்தத்தைப் பற்றி கிசுகிசுத்ததும், அதை அறிந்தபோது அம்மா கண்டித்ததும், பின்னாட்களில் அதை நினைத்து நினைத்து மகிழ்ந்ததும்... நினைக்க நினைக்க உத்ராவின் கண்களில் நீர்கோர்த்தது. மிகவும் சிரமப் பட்டு தன் மனதை அடக்கிக் கொண்டு எழுந்து சென்று குளிர்ந்த நீரால் முகத்தை அலம்பினாள். இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் முகத்தில் நீரை அறைந்து அலம்பிவிட்டு பூந்துவாலை துண்டால் முகத்தை ஒத்தியபடி தன் சீட்டில் ஏறி படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.ஆனால் அப்பொழுதும் கருப்பு கோட்டில் கைகளை கட்டிக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்த குரு நாதனின் உருவம் கண்களுக்குள் நிலை கொண்டிருக்கத் தான் செய்தது...


    தொடரும்...
     
    vsomu, Caide, uma1966 and 7 others like this.
  3. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    friends do read the second episode and share your feedback... it helps me a lot to correct my mistakes... thanks..
     
  4. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உத்ரா கண்களை மூடி குருநாதனை முதலில் பார்த்த தினத்தைப் பற்றி யோசித்தாள்.


    ஒரு வருடத்திற்கு முன், சரியாகச் சொல்லப்போனால் பதினோறு மாதம் 16 தினங்களுக்கு முன்.


    காலையில் எழுந்து குளித்து இஸ்திரி செய்யப்பட்டிருந்த 'கரீஷ்மா காட்டன்' சுடிதாரை உடுத்திக் கொண்டு வீட்டினுள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றி வந்தாள் உத்ரா..


    "முடியை விரித்து போட்டுக் கொண்டு சமையல் சறைக்குள் வராதேன்னு சொல்லிருக்கேன் இல்லை. இப்போ என்ன அவசரம் உனக்கு" என்றபடி உத்ராவின் கைகளை பிடித்துக் கொண்டு அவளை ஹாலுக்கு இழுத்து வந்தாள் அன்னை கீதா.


    "இல்லே மா. இப்போ தான் நியாபகம் வந்துச்சு. நேற்று மதியம் சாப்பிட இரண்டு மணி ஆகிவிட்டது. பசில வயிற்றுக்குள் சத்தம் கூட கேட்டுச்சும்மா.. அதானால ஒரு டப்பாவில் கொஞ்சம் 'ஸ்னாக்ஸ்' ஏதாவது எடுத்து வையுங்க அம்மா" என்றவள் அங்கிருந்து அவளது அறையை நோக்கி நடந்தாள்.


    இரண்டு எட்டிலேயே மீண்டும் அன்னையிடம் வந்து " ஏதாவது பழம் வைத்தால் போதும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்டால் எடை கூடி விடும். அப்புறம் உன் அருமை அண்ணன் மகன்கள் எல்லாரும் என்னை கத்திரிக்காய், தக்காளி என்று கேலி செய்வாங்க" என்று பொரிந்துவிட்டு கையில் சீப்புடன் ட்ரெஸ்ஸிங் டேபிளின் அருகே சென்றாள்.


    எளிமையாக தலையை பின்னலிட்டவள் மீண்டும் அன்னையின் பக்கம் திரும்பினாள்.


    " ஏன் மா ஒருவேளை வேற ஊரில் நான் வேலைக்குப் போயிருந்தால் என் நிலைமை என்ன ஆயிருக்கும்?" என்று கண்களை விரித்தவள் ஓடி வந்து அன்னையை கட்டிக் கொண்டாள்.


    "என்ன ஆயிருக்கும் உன் வேலைகளை எல்லாம் நீயே செய்ய வேண்டியிருக்கும். இப்படி ஒவ்வொன்ருக்கும் நான் ஓடி வர முடிந்திருக்காதல்லவா. ஆனால் என்னைக் கேட்டால் நீ இந்த வேலைக்குப் போவதே எனக்குப் பிடிக்கவில்லை. பெண் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் சாப்பிட வேண்டும் என்ற நிலமையா நம் குடும்பத்துக்கு. எவ்வளவு சொன்னாலும் உன் அப்பா கேட்க மாட்டேன்குறார் என்றால் நீங்களும் அதற்கேற்றவாறு தானே நடந்துக்குறீங்க" என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்.


    " கேட்டால் பிள்ளைகள் உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாம். அப்போது தான் வாழ்க்கையை தைரியமாக வாழமுடியுமாம். ஏன் நான் என்ன கல்யாணத்திற்கு முன் வேலைக்கா போனேன். இதோ இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து திருமண வயதுவரை கொண்டுவரவில்லையா? நீங்களாவது வேலைக்குப் போகமாட்டேன்னு அப்பாவிடம் சொல்லலாமில்லையா?" என்று மகளிடம் பாய்ந்தாள் கீதா.


    "அப்பா சொல்றது சரி தான் மா. உங்கள் காலமும் எங்கள் காலமும் ஒன்றா? தினமும் பத்திரிக்கைல எத்தனை படிக்கிறோம். அதுபோல நம்ம வீடிலும் நடக்காது என்று எப்படி சொல்ல முடியும்? ஏன் நம்ம லீலா அத்தையோட பொண்ணு வினுவின் கதை நினைவிருக்கிறது இல்லையா.. கல்யாணம் செய்து வெளி நாட்டுக்கு அழச்சுட்டுப் போனவன் அவளை எப்படியெல்லாம் கொடுமை பண்ணியிருக்கான். அங்கிள் அவளை நல்ல படிக்க வைத்து தைரியனாக வளர்த்தால் தான் அவள் தனியாக போராடி வீடு சேர்ந்திருக்கிறாள். இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாயிருக்கும்... நினைத்து பாரு நம்ம வீடிலயும் இதுபோல..." என்று அவள் சொல்லும் முன்னரே குறுக்கே புகுந்த கீதா "ஐயோ போதும் போதும் வெள்ளிக் கிழமையும் அதுவுமா என்ன அபசகுன பேச்சு இது.. " என்று தடுத்து நிருத்தியவள் உத்ராவின் சரியான பதிலால் வாயடைத்துப் போனாலும் வேறொரு விதமாக அவளை மடக்க முயன்றாள்.


    " சரி அதை விடி. பெண் பிள்ளைகள். நாளை கல்யாணம் பண்ணி போகிற வீட்டில் எங்களைத் தான் மட்டமாகப் பேசுவாங்க. பொம்பளப் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு பெத்தவங்க வீட்டுல இருந்து சாப்பிடறாங்கனு" என்றாள்.


    சரியான நேரத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்த பவித்ரா தங்கைகு ஆதரவாகப் பேசினாள்.


    "போங்கம்மா.. நீங்க எந்த காலத்துல இருக்குறீங்க. படிச்ச பொண்ணுங்க யாரும் இப்போ வீட்டுல சும்மா இருக்குறது இல்லை. அதும் இல்லாமல் நீங்க எங்க சம்பாத்தியதுல சாப்பிடலை. வீட்டிலிருந்தே அப்பா பிஸினஸ் கவனிச்சுக்குறாங்க. ஆஃபிஸ் வேலைகளை நான் கவனிச்சுக்குறேன். அதுக்குக் கூட ஒரு சம்பளம் மாதிரு ஒவ்வொரு மாதமும் அப்பா என் அக்கவுண்டில் போடுறாங்க தெரியுமா. அதே போல நாளை உத்ரா வாங்கும் சம்பளம் கூட அவள் கணககில் தான் சேரப் போகிறது. மற்றவர்கள் தெரியாமல் பேசினால் சரி நீங்களே இப்படிச் சொல்லலாலா?" என்றவள் டைனிங் டேபிளுக்குச் சென்று அமர்ந்தாள்.


    "உத்ரா வா சாப்பிடலாம். உனக்கு நேரமாயிடுச்சு" என்றபடி இரு தட்டுகளிலும் பரிமாறினாள் பவித்ரா.


    காலையும் இரவும் அக்கா தங்கை இருவரும் சேர்ந்து தான் உணவு உண்பர். இருவரும் மாறி மாறி பரிமாறி உண்பதைக் காண கீதாவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இதுபோல கடைசிவரை இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள்.


    புதிதாக அப்பா வாங்கிக் கொடுத்த 'ஸ்கூட்டியை' அழுத்திக் கொண்டு வங்கியை அடந்தாள் உத்ரா. வேலையில் சேர்ந்து இரண்டே நாட்கள் தான் ஆயிருந்தாலும் அவளது மதிக்கத்தக்க நடை உடையும் புன்னகை பூத்த முகமும் அங்கே வேலை செய்பவர்களையும் வாடிக்கையாளர்களையும் அவள் பால் ஈர்த்திருந்தது. வாசலில் நின்ற காவலாளி அவளைப் பார்த்து வணக்கம் சொன்னார்.


    "குட் மானிங் மணி அண்ணா. சாப்பிட்டாச்சா?" என்றபடி வண்டியிலிருந்து இறங்கியவள் அவரது தலையசைப்பைக் கண்டு புன்னகைத்தபடியே உள்ளே சென்றாள்.


    கடந்த இரண்டு தினங்களில் அவளுக்கு வேலை அதிகமில்லை. பயிற்சி இன்னும் அளிக்கப்படாத நிலையில் முதலில் வேலையில் சேர்ந்துவிட்டு பின் ஓரிரு வாரத்தில் பயிற்சி அளிப்பதாக வங்கி நிர்வாகம் அறிவித்திருந்தது. உத்ரா படித்திருந்த பொறியியல் படிப்பிற்கும் இந்த வங்கி வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் அவளது கூர்ந்த அறிவுத் திறனால் கற்றுக் கொடுப்பதை உடனேயெ புரிந்து கொண்டாள்.


    அங்கிருந்த அனைவருமே அவளுக்கு உதவியாக இருந்தனர். குறிப்பாக மீனாட்சி சுந்தரம். இன்னும் ஓரிரு மாதங்களில் பணி நிறைவு ஆகும் அவர் உத்ராவிற்கு இரண்டு நாட்களிலேயே
    பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்திருந்தார். உத்ராவும் புன்னகையுடன் மரியாதையாக நடந்து கொள்ள அவளை அவருக்கு முகவும் பிடித்து போயிற்று.


    "சுந்தர் சார் குட்மானிங். இன்றைக்கு என்ன இவ்வளவு கூட்டம் சார். நீங்களும் முன்னதாகவே வந்துட்டீங்க?" என்றவள் அடுத்த க்யூபிக்கிளில் அமர்ந்தாள்.


    "குட்மானிங் உத்ரா. நீ சுந்தர்னு கூப்பிடும் போது ஏதோ பத்து வயசு குறைந்தது போல தோணுது.. ஹாஹா..."என்று சிரித்தவர் "இங்கே இரு கஸ்டமர் அவரும் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்" என்று சொல்ல இருவரும் சேர்ந்து நகைத்தனர்.


    " நேற்று உன்னிடம் சொல்ல மறந்துட்டேன் மா இன்று கூட்டம் அதிமிருக்கும் என்று. அதான் நானும் சீக்கிரமாகவே வந்துவிட்டேன் உன்னக்கும் கொஞ்சம் ஒத்தாசையாக இருக்குமே என்று" என்றவர் கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார்.


    "தாங்ஸ் சார். ஏதோ நீங்கள் இருக்க போய் தான் பயிற்சி இல்லாமலேயே சமாளித்துக் கொண்டிருக்கிறேன்" என்ற உத்ரா அவளும் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.


    இரண்டு நாட்கள் இலகு வேலை பார்த்தவளுக்கு அன்று நிஜமாகவே வேலை 'ட்ரில்' வாங்கிவிட்டது. நேரம் ஆக ஆக கூட்டம் பெருகிக் கொண்டே போனது தவிர குறைந்தபாடில்லை.


    இயற்கையிலேயே சுறுசுறுப்பான உத்ரா முகவும் துரிதமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தாள். இருப்பினும் அவள் முன்னே ஒரு பெரிய வரிசை நின்று கொண்டே தான் இருந்தது.


    பணம் போட, எடுக்க, பாஸ்புக் பதிவு செய்ய, இருப்பு சரிபார்க்க, பரிட்சைக்குப் பணம் கட்ட என்று மக்கள் வருவது போவதுமாக இருந்தனர்.


    கூட்டம் அதிகமிருந்த போதும் நன்கு காற்றோட்டமாக வடிவமைக்கப்பட்டிருந்த பெரிய கட்டடமும் 'ஏசி' வசதியும் பணியாளர்களுக்கு உதவியாக இருந்தது.


    ஆனால் திடீரென வெளிச்சமும், காற்றும் தடைபட கையில் எண்ணிக் கொண்டிருந்த நூறு ரூபாய் நோட்டுகளை அப்படியே நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.


    பளிச்சென பிரகாசமான முகம், நெடிய உயரம், அடர்ந்த சிகை, ட்ரிம் செய்யப்பட்டிருந்த மீசை, கூர்ந்த பார்வை, சிகரெட்டிற்கு பழக்கமில்லாத இதழ்கள், கசங்காத உடையில் ஒரு இளைஞன் அங்கே நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு ப்ரீஃப் கேஸுடன் நின்று கொண்டிருந்த அவனுக்கு பின்னிருபதுகளில் வயதிருக்கும்.


    ஒரு நிமிடம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த உத்ரா மறு நிமிடம் சுதாரித்து நினைவுக்குத் திரும்பினாள்.


    "என்ன சார்? என்ன வேண்டும் உங்களுக்கு?"


    " டெப்பாசிட் பண்ணனும்" என்றவன் கையிலிருந்த ப்ரீஃப் கேஸை கௌண்டரில் வைத்தான்.


    அவனதி செய்கையால் எரிச்சலுற்ற உத்ரா அவனை முறைத்தபடி "இவ்வளவு பெரிய வரிசை நிற்பது கண்ணுக்குத் தெரியவிலையா?" என்றாள்.


    "கண்கள் மட்டுமல்ல என் ஐம்புலன்களும் நன்றாகவே வேலை செய்கின்றன. அதனால் உங்களுக்கு அதைப் பற்றிய கவலைத் தேவையில்லை. நேரத்தை வீணடிக்காமல் இந்த பணத்தை என் கணக்கில் கட்டிவிட்டால் நன்றாக இருக்கும்" என்றான் ஏளனமாக.


    "என்ன சார் விளையாடுகிரீர்களா? இத்தனை பேர் வரிசையில் நிற்கும் போது உங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? போய் வரிசையில் வாருங்கள்" என்றாள் ஆத்திரத்துடன்.


    "உன்னிடம் வாக்குவாதம் செய்ய எனக்கு விருப்பமில்லை. அதற்கு நேரமுமில்லை. என் வேலையை முதலில் முடித்துக் கொடு. எனக்கு வேறு பல வேலைகள் இருக்கின்றது" என்று கடுகடுத்தான் இளைஞன்.


    " நான் தமிழில் தானே பேசுகிறேன். அப்படியும் புரியவில்லையா? உங்களுக்கு மட்டும் தான் வேலை இருக்கிறதா? உங்களை விட பத்து..... நூறு மடங்கு வேலை எனக்கு அதிகமாயிருக்கிறது.. போங்கள் போய் வரிசையில் வாருங்கள்" என்று அவளும் கடுகடுத்தாள்.


    இதற்கிடையே வரிசையில் முதலாவதாக நின்ற ஒரு பாமரப் பெண்மணி " பரவாயில்லை அம்மா. நீங்க அந்த தம்பியின் வேலையை முதலில் முடித்துக் கொடுங்கள். பார்த்தால் எதோ பெரிய வேலையில் இருப்பவர் மாதிரியில்ல தெரியுது. என்ன அவசரமோ போகட்டும். நான் காத்திருக்கேன்" என்ராள்.


    அதை ஆமோதிப்பவனாக "படிக்காதவர்களுக்கு இருக்கும் பொது அறிவு கூட படித்து வேலைக்கு வருபவர்களிடம் இல்லை" என்று கூற உத்ராவும் கோபத்துடனேயே " படிக்காதவர்கள் கூட சட்டதிட்டங்களை புரிந்து நடந்து கொள்கின்றனர். உங்களைப் போல படித்த.... யார் அரிவார்? கசங்காத வெள்ளை உடையை மட்டும் வைத்துக் கொண்டு படித்தவர் என்ரு நினைப்பதில் நியாயமில்லை தான்"என்றவள் அந்த பெண்ணிடம் திரும்பி "இல்லையம்மா இப்படி இடையில் விட்டு பழக்கப்படுத்திவிட்டால் பின் எல்லாருமே இதை சலுகையாக எடுத்துக் கொண்டு அதை நாடி வருவார்கள். உங்கள் பாஸ்புக்கை கொடுங்கள்"என்று அவள் கௌண்டரில் இருந்த கண்ணாடி துழை வழியே கையை விட அதை அழுத்தமாக பிடித்தான் இளைஞன். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத உத்ரா அதிர்ந்தாலும் கையில் ஏற்பட்ட வலியால் சத்தமிட்டாள் "ஹேய்.... மிஸ்டர்.. உங்... கையை எடுங்கள்" என்று அவள் குரள் உயர அருகிலிருந்த மீனாட்சி சுந்தரம் அங்கே எழுந்து வந்தார்.


    அதற்குள்ளே அங்கே சிறு பரபரப்பி ஏற்பட்டது.


    "என்னாச்சு உத்ரா?" என்றபடி வந்த மீனாட்சி சுந்தரம் அங்கே அவனைப் பார்த்ததும் சிரித்தபடி பேசினார் " வாங்க வாங்க குரு நாதன். எப்படி இருக்குறீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்குறாங்க?" என்று விசாரித்தவர் உத்ராவிடம் திரும்பி "இங்கே என்னம்மா சப்தம்?" என்றார்.


    "வணக்கம் சுந்தர் சார். ஒரு முக்கிய மீட்டிங் இருக்குது. அவசரமாக கணக்கில் பணம் டெப்பாசிட் செய்து வரும்படி அப்பா சொன்னாங்க. அதான் வந்தேன். இங்கே என்னவென்றால் இந்தப் பொண்ணு வம்பு பண்ணுது. அனுபவ அரிவு இல்லாமல் இப்படி பள்ளிபடிப்பு முடித்தவுடனேயெ வேலைக்கு வருபவர்களால் எப்பொழுதுமே பிரச்சனை தான்" என்றான் குரு நாதன்.


    அவன் உயரம் இல்லை என்றாலும் உத்ராவும் நல்ல உயரம் தான். அவளைப் பார்த்தா பள்ளி வகுப்பு முடுத்தவள் என்கிறான். ஒருவேளை அவளது மெலிந்த தோற்றம் அப்படி காட்டுகிறதோ என்று உள்ளூர அவளுக்கு ஒரு சந்தேகமும் எழுந்தது. மற்ற நேரங்களில் இப்படி யாராவது சொல்லி இருந்தாள் என்ன தோன்ரியிருக்குமோ ஆனால் இப்போது அவளது கோபத்தை அது மேலும் அதிகரித்தது.


    "பார்ங்கள் சார்... எவ்வளவு பெரிய 'க்யூ' நிற்குது. இவர் நேராக முன்னே வந்து அவரை முதலில் கவனிக்க சொன்னால் அது எப்ப்டி சார் முடியும்? யாருக்குத்தான் வேலையில்லை. யாரானாலும் சட்டத்தை மதித்து அதன்படி தான் நடக்க வேண்டும் என்று நீங்களே அவருக்கு புரியும் படி சொல்லுங்க சுந்தர் சார்" என்று அவள் வேக வேகமாக பேசினாள்.


    "பொறு உத்ரா. தம்பி நீங்க இரண்டு நிமிஷம் மானேஜர் அறையில் இருங்கள். நான் இப்போது வருகிறேன். ஐந்து நிமிடங்களில் உங்கள் வேளையை முடித்துத் தருகிறேன்" என்று அவனை அனுப்பிவைத்தார் சுந்தரம். உத்ராவிடம் திரும்பி அவளிடம் ரகசியம் போல பேசினார். "பார் உத்ரா. பொதுவாக இப்படி சூழ்நிலை வரும்போது நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசிவிட முடியாது. அவர் நம் கிளையில் ஒரு 'பொடென்ஸ்ஷியல் கஸ்டமர்' சிறு காரணங்களுக்காக அவரை இழந்துவிடக் கூடாது. அதனால அவரை மானேஜரிடம் நீ அறிமுகப் படுத்தினால் அவர் கவனித்துக் கொள்வார், இவையெல்லாம் தொழில் நுணுக்கங்கள். போகப் போக உனக்கே புரியும்" என்று கூறிச் சென்றார்.


    அந்த அவனால்.... பேரென்ன...குரு வா... ம்... குரு நாதன்..அவனால விரயமான அந்த ஐந்து நிமிடங்களை ஈடுகெட்ட அவள் முன்னைவிட வெகுவேகமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. ஓரிரு நிமிடங்களிலேயே தன் வேலை முடிந்து உத்ராவின் கௌண்டர் வழியே கடந்து சென்ற குரு நாதன் உத்ராவைப் பார்த்த பார்வையில் ஒரு ஏளனமும் வெற்றி முறுவலும் இருந்தது. அதைக் கண்ட உத்ராவிற்கு தனது இயலாமையை எண்ணி ஆத்திரமும் உள்ளூர அழுகையும் வந்தது.


    ஆனால் சிறிது நேரத்திலேயே வேலையில் மூழ்கிய உத்ரா மற்றவற்றை மறந்து வேலையை கவனமானாள்.




    தொடரும்.....
     
    vsomu, Caide, uma1966 and 9 others like this.
  5. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
    another nice one..keep writing
     
    1 person likes this.
  6. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thanks vidya...
     
  7. vidhya3b

    vidhya3b IL Hall of Fame

    Messages:
    2,502
    Likes Received:
    1,074
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Nice start Shinara!!!! pls post the next part soon!!!!
     
    1 person likes this.
  8. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thanks dear.. seekirame update seykiren...:)
     
  9. mahesaran

    mahesaran IL Hall of Fame

    Messages:
    2,999
    Likes Received:
    4,956
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Good star..... Nice updates... Pls give the updates without any delay......
     
    1 person likes this.
  10. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thanks mahesaran... sure.. will post the next part without any delay..
     
    1 person likes this.

Share This Page