1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகுத

Discussion in 'Stories in Regional Languages' started by amlu, Mar 18, 2014.

  1. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    வணக்கம் தோழிகளே,
    கதையின் தலைப்பு:காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா!
    இது என்னோட முதல் முயற்சி..உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..
    நாயகன்:விஷால்..
    நாயகி:சாகித்யா..
    விஷாலின் பெற்றோர்:விஸ்வநாதன்-சத்யா..
    சாகித்யாவின் பெற்றோர்:விநாயகம்-சாந்தி..
    காதலில் தோற்ற விஷாலும் சாகித்யாவும் திருமணம் மூலம் இணைக்க படுகிறார்கள்..அவர்கள் வாழ்வில் காதல் திரும்பவும் மலருமா??பழைய சம்பவங்களால் பாதிக்க படுவார்களா???..உண்மையான காதலை கண்டு கொண்டார்களா..??தெரிந்து கொள்ள படியுங்கள்



    வாரம் ஒரு அப்டேட் தர முயற்சி பண்றேன்..
     
    Last edited: Mar 18, 2014
    2 people like this.
    Loading...

  2. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகு&a

    வணக்கம் தோழிகளே
    முதல் அத்தியாயம் இதோ
    KIVV1
    உங்களின் கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்waitingsmiley
    இது என்னுடைய முதல் முயற்சி..கண்டிப்பாக பிழைகள் இருக்கும்..பொறுத்து கொண்டு படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்..:welcome
    COMMENTS LINK
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/251398-comments.html
    கருத்தை இந்த லிங்கில்மட்டும் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
    திட்ட வேண்டும் என்றாலும் திட்டிக்கோங்க(நீ எழுதி நாங்க படிக்கணுமா னு நீங்க சொல்றது புரிது)..நான் உங்க அம்லு தானா..செல்லம்ஸ் ஆனா உங்கள் கருத்தை சொல்ல வில்லை என்றால் பிச்சி பிச்சி..நீங்க சமத்துல செல்லம்ஸ் கமெண்ட்ஸ் போடுங்க பார்க்கலாம்..நன்றி..[​IMG]
    BYE செல்லம்ஸ்..
    உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அம்லு :)
     
    Last edited: Mar 19, 2014
    3 people like this.
  3. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகு&#2

    வணக்கம் தோழிகளே
    இரண்டாம் அத்தியாயம் இதோ

    KIVV2
    உங்களின் கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்waitingsmiley
    இது என்னுடைய முதல் முயற்சி..கண்டிப்பாக பிழைகள் இருக்கும்..பொறுத்து கொண்டு படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்..:welcome
    COMMENTS LINK
    காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா!-comments
    கருத்தை இந்த லிங்கில்மட்டும் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
    திட்ட வேண்டும் என்றாலும் திட்டிக்கோங்க(நீ எழுதி நாங்க படிக்கணுமா னு நீங்க சொல்றது புரிது)..நான் உங்க அம்லு தானா..செல்லம்ஸ் ஆனா உங்கள் கருத்தை சொல்ல வில்லை என்றால் பிச்சி பிச்சி..நீங்க சமத்துல செல்லம்ஸ் கமெண்ட்ஸ் போடுங்க பார்க்கலாம்..நன்றி..:thankyou2:
    BYE செல்லம்ஸ்..
    உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அம்லு :)
     
    2 people like this.
  4. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகு&#2

    வணக்கம் தோழிகளே மூன்றாம் அத்தியாயம் இதோ
    KIVV3
    உங்களின் கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்waitingsmiley
    இது என்னுடைய முதல் முயற்சி..கண்டிப்பாக பிழைகள் இருக்கும்..பொறுத்து கொண்டு படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்..[​IMG]
    COMMENTS LINK
    காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா!-comments
    கருத்தை இந்த லிங்கில்மட்டும் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
    திட்ட வேண்டும் என்றாலும் திட்டிக்கோங்க(நீ எழுதி நாங்க படிக்கணுமா னு நீங்க சொல்றது புரிது)..நான் உங்க அம்லு தானா..செல்லம்ஸ் ஆனா உங்கள் கருத்தை சொல்ல வில்லை என்றால் பிச்சி பிச்சி..நீங்க சமத்துல செல்லம்ஸ் கமெண்ட்ஸ் போடுங்க பார்க்கலாம்..நன்றி..[​IMG]
    BYE செல்லம்ஸ்..
    உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அம்லு [​IMG]


     
    2 people like this.
  5. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகு&#2

    வணக்கம் தோழிகளே மூன்றாம் அத்தியாயம் இதோ
    KIVV3
    கடைசி ஒரு பக்கம் சேர்த்து கொடுத்துள்ளேன் அதை படிக்கும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..
    உங்களின் கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்waitingsmiley
    இது என்னுடைய முதல் முயற்சி..கண்டிப்பாக பிழைகள் இருக்கும்..பொறுத்து கொண்டு படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்..[​IMG]
    COMMENTS LINK
    காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா!-comments
    கருத்தை இந்த லிங்கில்மட்டும் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
    திட்ட வேண்டும் என்றாலும் திட்டிக்கோங்க(நீ எழுதி நாங்க படிக்கணுமா னு நீங்க சொல்றது புரிது)..நான் உங்க அம்லு தானா..செல்லம்ஸ் ஆனா உங்கள் கருத்தை சொல்ல வில்லை என்றால் பிச்சி பிச்சி..நீங்க சமத்துல செல்லம்ஸ் கமெண்ட்ஸ் போடுங்க பார்க்கலாம்..நன்றி..[​IMG]
    BYE செல்லம்ஸ்..
    உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அம்லு [​IMG]

    லைகேஸ் கொடுத்த சக்தி3 அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
     
  6. vidhya3b

    vidhya3b IL Hall of Fame

    Messages:
    2,502
    Likes Received:
    1,074
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Re: காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகு&#2

    Can you post all you updates here itself?

    I am unable to open the links... Thanks!
     
    1 person likes this.
  7. pashni

    pashni IL Hall of Fame

    Messages:
    404
    Likes Received:
    6,131
    Trophy Points:
    350
    Gender:
    Female
    Re: காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகு&am

    same for me:-(.please post here
     
    1 person likes this.
  8. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகு&#2

    காதல்-1

    எல்லாரும் சொல்வது காதல் தான் மனதின்

    வலிக்கு காரணம் ஆனால் உண்மை அதுவல்ல..

    தனிமையில் வலி,

    மற்றவர்கள் நம்மை தவிர்ப்பதில் வலி,

    மற்றவர்களை இழப்பதில் வலி..

    எல்லாரும் இந்த வலியை காதலினால் வலி

    என்று குழப்பி கொள்கிறார்கள் ஆனால்

    உண்மை என்னவென்றால் உலகத்தில்

    காதல் மட்டுமே இந்த வலிகளை விலக்கி

    வாழ்வை திரும்பவும் மலர செய்வது..
    சாகித்யா கட்டிலில் படுத்து வாழ்வின் விடியல்க்கு காத்திருக்க அவள் கணவன் விஷாலோ பால்கனியில் நின்று நிலவை பார்த்து கொண்டிருந்தான்.. விஷால் படுக்கை அறைக்கு வந்த போது கட்டிலில் உறங்கி கொண்டிருக்கும் அவன் மனைவியின் முகத்தை பார்த்தான்.. அவள் முகத்திலோ கண்ணீர் கோடுகள்.. அவனுடைய கைகள் நீண்டு அவளுடைய கண்ணீரை துடைத்து வருடி கொண்டிருந்தது.. அவள் இன்று திருமணம் செய்து கொண்ட மனைவி ஆனால் அவன் மனம் தான் உண்மையை ஏற்கவில்லை.. அவன் செயல் உணர்ந்து கையை எடுக்க.. அவளுடைய கண்ணீர் எப்படி அவனை பாதிக்கிறது என்ற மனதின் கேள்விக்கு விடை தெரியாமல்,யோசிக்க விரும்பாமல் படுக்கையில் படுத்து துயில் கொள்ள முயன்றான்.. இவர்களின் தவிப்பை மேலே இருந்து பார்த்து கொண்டிருந்த கடவுளுக்கு பரிதாபமாக இருந்தது..

    விடியலில் யாரோ கதவை தட்டும் சத்தத்தில் முழித்த சாகித்யா முதலில் குளியல் அறைக்கு சென்று அழுத முகத்தை தண்ணீரால் கழுவி துடைத்த பிறகு கதவை திறந்தாள்.. சகியின் அண்ணன் மகள் மது “அத்தை ஏன் என்கூட தூங்கலை.. நீ தான என்னை தினமும் கதை சொல்லி தூங்க வைப்ப.. அதனால் மது பாப்பா லேட்டா தான் தூங்கினா தெரியுமா.. அம்மா தான் கதை சொல்லி தூங்க வைத்தாங்க.. அம்மா கிட்ட கேட்டா நீ மாமா கூட தான் இருப்பனு சொன்னாங்க.. அத்தை நீ இன்னும் என் கூட இருக்க மாட்டியா..

    சாகித்யா அவள் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் அவளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டாள்.. மது சகியின் அண்ணன் விஷ்வாவின் ஜாடை.. மதுவை பார்த்ததும் அண்ணன் ஞாபகம் வர கண்கள் கலங்கியது.. சகி அழுவதை பார்த்து மதுவும் அழுது “அத்தை அழாத நீ சொன்ன மாதிரி அம்மாகிட்ட சமத்தா இருப்பேன்.. நான் உனக்கு முத்தம் கொடுக்கிறேன் சிரி..”

    “அம்மா எங்க டா குட்டி..”

    “அம்மா கீழே இருக்காங்க..அத்தை வா பாட்டி கிட்ட போகலாம்..”

    “நீ போ டா.. நான் குளிச்சிட்டு வருகிறேன்..”

    குளித்துவிட்டு கீழே சென்ற போது அன்னை சமையல் அறையில் காபி போட்டு கொண்டிருந்தார்.. சகியை பார்த்ததும் சாந்தி “என்னடா மாப்பிள்ளை எழுந்துடாரா..”

    “இல்லைமா ஆமா மதுவும் அண்ணியும் எங்கமா..”

    “தோட்டத்தில் செடிக்கு தண்ணீர் ஊற்ற போனாங்க டா”

    சாந்திக்கு மகளின் வாழ்வை நினைத்து கவலை.. சகியின் முகத்தை பார்த்தே அவள் அழுதிருப்பதை கண்டுபிடித்தார்..

    “சகி மா போய் அப்பாகிட்ட இந்த காபியை கொடுத்துவிட்டு வா” சகி அப்பா விநாயகத்திற்கு காபி கொடுத்துவிட்டு அவர் அருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள்..

    “என்னடா குட்டிமா.. காபி குடித்துவிட்டாயா? இல்லை என்றால் அம்மா கிட்ட போய் இரண்டு பேருக்கும் காபி வாங்கிட்டு அவரை எழுப்பி கொடுடா.. நேரம் ஆகுது பார்.. சமந்தி வீட்ல இருந்து வருவாங்க..”

    சகி அறைக்கு சென்ற போது விஷால் போனில் யாரிடமோ பேசி கொண்டிருந்தான்.. அவன் பேசி முடித்தவுடன் சகி காபியை கொடுத்தாள்.. விஷால் நன்றி சொல்லி வாங்கி கொண்டான்..

    விஷால் “சாகித்யா நான் உங்ககிட்ட் பேசணும்..”

    “சொல்லுங்க விஷால்..”

    “உங்களை அம்மா அப்பா வற்புறுத்தியதால் தான் திருமணம் செய்து கொண்டேன்.. அவங்க கையில் விஷத்தை வைத்து மிரட்டும் போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. உங்களுக்கு என் கூட இருக்க பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து தர தயாராக இருக்கேன்..”
    சகி “ நான் அம்மா, அப்பா மனதை புண்படுத்தி விவாகரத்து வாங்க இஷ்டம் இல்லை.. இந்த திருமணம் ஒரு வழி பாதை.. நீங்களும், நானும் நினைத்தால் கூட திரும்பி போக முடியாது..”

    “நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இருக்க வேண்டும் என்று விதி இருந்தால் நாம் ஏன் ஒருவரை ஒருவர் பார்த்தால் முறைத்துவிட்டு போக வேண்டும்??.. நாம் நண்பர்களா இருக்காலாம்ல..”

    “ஒகே விஷால்.. உங்களை சாப்பிட கீழே வர சொன்னாங்க..”

    விஷால் குளித்து கீழே சென்ற போது விஷாலின் பெற்றோர் வந்து இருந்தனர்..

    வா மா சகி.. வந்து உட்கார்..”

    “வாங்க அத்தை,மாமா..காவ்யா எங்க மாமா???(அவள் பனிரெண்டாம் வகுப்பு படிப்பதால் படிக்க சென்னை வீட்டுக்கு போய்விட்டாள்)

    “அவ சென்னை வீட்டுக்கு போய்விட்டாள்.. அடுத்த வாரம் அவளுக்கு தேர்வு இருக்குல..”

    “நீங்க அந்தமானுக்கு தேன்னிலவு போக மாமா முன்பதிவு பண்ணிட்டாங்க.. விஷாலுக்கு இந்த வாரம் முக்கயமான ப்ராஜெக்ட் முடித்து கொடுக்க வேண்டும்.. அதான் இன்று மாலையே நாம் சென்னை செல்ல வேண்டும் டா..”

    “சரிங்க அத்தை..”

    “என்ன சகி அமைதியா இருக்க.. கவலைபடாத நான் உன்னை பொண்ணு மாதிரி பார்த்து கொள்வேன்..”

    விஸ்வநாதன் “சத்யா நமக்கு கல்யாணம் ஆன புதிதில் கூட நான் எது உன்கிட்ட சொன்னாலும் சரிங்க அத்தான் தலை ஆட்டிட்டு.. இப்போவெல்லாம் என்னை பேச விடாம நீ தானா பேசிட்டு இருக்க செல்லம்..”

    “என்னை எதுவும் சொல்லாம உங்களால் சும்மா இருக்க முடியாதா..”

    “இல்லை டா செல்லம்..உண்மையை தான சொன்னேன்..”

    “என்னங்க.. பையன்,மருமகள் கூட இருக்கும் போது செல்லம்னு கொஞ்சி கொண்டு இருக்கீங்க..”

    “என்னோட பொண்டாட்டி.. நான் கொஞ்சுவேன் நீ என்ன சொல்றது..”

    “போங்க உங்களுக்கு வேற வேலையே இல்லையா..” சத்யா அழகாக வெட்கப்படார்.. (எல்லாரும் ஹீரோவோட romance எதிர்பார்த்தால் ஓல்ட் man romance பண்ணிட்டு இருக்கார்)

    சாப்பிட்டு முடித்தவுடன் சத்யாவும் சாந்தியும் சகியை அவள் அறைக்கு அழைத்து சென்று “சகி உனக்கு என்ன நடந்தது என்று அனைத்தும் அம்மா சொன்னாங்க டா.. உங்கள் விருப்பம் இல்லாமல் தான் திருமணம் நடந்தது.. நீங்கள் இந்த திருமணத்தை ஏற்று கொள்ள கொஞ்சம் நாள் ஆகும்.. நீங்க ரெண்டு பேரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று தான் நானும் அம்மாவும் இந்த திருமணத்தை நடத்தி வைத்தோம்.. எங்க மேல எதாவது தவறு இருந்தால் மன்னித்து விடு..”

    “அத்தை ப்ளீஸ் இப்படி பேசாதிங்க..நான் முயற்சி பண்றேன்..”

    “சரி டா..நீ கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடு டா..”
    சத்யாவும்,சாந்தியும் நெருங்கிய தோழிகள்..விஸ்வநாதன்
    சென்னை சென்றும் தொடர்பு கடிதம், போனில் தொடர்கிறது..

    சகி உறங்கிவுடன் சத்யா “சாந்தி கவலைப்படதே..நான் இவளை பார்த்து கொள்கிறேன்..”

    “சத்யா சந்தியா (சாகித்யாவின் அண்ணி) நினைத்தாலும் கவலையாக இருக்கிறது.. இவர் இன்னும் 1 மாதத்தில் retire ஆனவுடன் சென்னையில் வந்து செட்டில் ஆகலாம் என்று யோசிக்கிறோம்..”

    “நல்ல முடிவு தான் சாந்தி.. வா கீழே போகலாம்..”

    சந்தியாவை பார்க்க சாந்திக்கு கஷ்டமாக இருந்தது.. “கடவுளே என்னோட இரண்டு பொண்ணுங்களையும் நீ தான் காப்பாற்ற வேண்டும்..”

    கடவுள் அவர்கள் வாழ்வை மலர செய்வாரா..?? சகிக்கு சென்னை வாழ்க்கை எப்படி அமையும்??? சந்தியாவுக்கு மறுவாழ்வு அமையுமா??.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

    -மலரும்..
     
  9. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகு&#2

    காதல்-2

    ஒரு நாள் உன் பழைய காதலை பற்றி
    கவலைபடாத ஜீவனை சந்திப்பாய்..
    அவன் உன்னோடு தன் எதிர்க்காலத்தை
    மட்டுமே கழிக்க விரும்புவான்..

    விநாயகம்-சாந்திக்கு இரண்டு பிள்ளைகள்..மூத்த பையன் விஷ்வா..கடைக்குட்டி சாகித்யா வயது-26.b.e(cse) முடித்து விட்டு சென்னையில் it கம்பெனியில் வேலை பார்க்கிறாள்.. அவள் அண்ணன் வங்கியில் வேலை..அவள் அண்ணி சந்தியா சாந்தியோட அண்ணன் மகள்.. அவங்க மகள் மது 3 வயது குழந்தை..விநாயகம் அரசு பணியில் இருக்கிறார். சொந்த ஊர்-மதுரை..
    விஸ்வநாதன்-சத்யாக்கு இரண்டு பிள்ளைகள்..மூத்த பையன் விஷால் வயது-28.விஷால் b.e(ece) முடித்து விட்டு tcs கம்பெனியில் வேலை பார்க்கிறான்.. கடைக்குட்டி காவ்யா பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள்.சொந்த ஊர்-மதுரை விஸ்வநாதன் வங்கியில் வேலை பார்கிறார்..
    சாகித்யா புகுந்த வீட்டிற்கு கணவனோடு அடி எடுத்து வைத்தாள்.. சத்யா “வா மா வலது கால எடுத்து வைத்து வா”
    சகி உள்ளே நுழைந்தும் காவ்யா “வாங்க அண்ணி..” என்று சகியை பார்த்த மகிழ்ச்சியில் அணைத்து கொண்டாள்..
    “வா மா வந்து முதலில் விளக்கு ஏத்தி வைமா..”
    விளக்கு ஏற்றி சாப்பிட்டு முடித்தவுடன் “விஷால் கண்ணா இவளை உங்களோட அறைக்கு கூட்டிட்டு போடா..”
    சாகித்யாவுக்கு வீடு ரொம்ப பிடிச்சிருந்தது..மூன்று அறைகள் உள்ள சின்ன வீடு தான்..அவளுக்கு அத்தை,மாமா, காவ்யாவை எல்லாரையும் பிடிச்சி இருந்தது..விஷால்?? அவளால் ஆண்கள் யாரையும் நம்ப முடியவில்லை..விமல் அண்ணனையும், அப்பாவையும் தவிர.. அவள் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் அப்படி.. அவளை பொறுத்து ஆண்கள் அனைவரும் சுயநலவாதிகள்.. அன்று மட்டும் விமல் அண்ணன் வந்து காப்பாற்றவில்லை என்றால் அவள் இன்று உயிரோடு இருந்து இருக்க மாட்டாள்.. விஷாலால் அவள் எண்ணத்தை மாற்றி நம்பிக்கை வரவழைத்து அவள் மனதில் இடம் பிடிக்க முடியுமா?? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
    விஷால் சகியை அவன் அறைக்கு கூட்டி சென்றான்.. பெரிய அறை.. பக்கத்தில் பால்கனி.. பால்கனிக்கு போய் பார்த்தாள்.. ரோஜா செடி தொட்டியில் நட்டப்பட்டு இருந்தது.. அவளுக்கு ரோஜா என்றால் கொள்ளை ப்ரியம்..
    “உங்களுக்கும் ரோஜா பிடிக்குமா விஷால்..”
    அவள் முகத்தில் ரோஜாவை பார்த்தவுடன் சந்தோசம்.. சாகித்யா புதிதாக அவன் கண்களுக்கு தெரிந்தாள்..
    “பிடிக்கும்.. இந்த அறை உனக்கு பிடிச்சிருக்கா?”
    “ரொம்ப பிடிச்சிருக்கு விஷால்..”
    “சரி தூங்க போகலாம் வா.. நாளைக்கு நான் வேலைக்கு போகணும்.. முக்கியமான project வேலை இருக்கு முடிக்கணும்.. ஆமா நான் கேட்க மறந்துட்டேன் நீங்க எங்க வேலை பார்த்துட்டு இருக்கிங்க”
    “விப்ரோவில் சாப்ட்வேர் டெஸ்ட்டரா இருக்கேன்..”
    “சரி மா.. எத்தனை நாள் விடுமுறை எடுத்து இருக்க..”
    “இரண்டு வாரம் விடுமுறை விஷால்.. வடபழனியில் விமல் அண்ணன் இருக்காங்க.. நம்ம கல்யாணத்துக்கு கூட வந்து இருத்தாங்க.. அவரை போய் நாளைக்கு பார்த்துட்டு வந்துவிடவா விஷால்..”
    “அம்மா கிட்ட சொல்லிட்டு போ மா.. வா நாம தூங்க போகலாம்..”
    விஷாலும்,சகியும் ஒரே கட்டிலில் தான் தூங்கினார்கள்.. காலையில் விஷால் வேலைக்கு கிளம்பியவுடன் சகி அவள் அத்தையிடம் அனுமதி கேட்டு விமல் வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் கிளம்பினாள்..
    விமல் வடபழனியில் பிரபல கட்டுமான கம்பெனியை சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கிறான்.. விமல் வயது-30 b.e(civil) முடித்து விட்டு அப்பாவின் தொழிலை கவனித்து கொள்கிறான்.. மனைவியை மகனுடைய பிரசவத்தில் பறிக்கொடுத்தவன்..
    சகி விமல் வீட்டுக்கு சென்ற பொழுது விக்னேஷ்(விக்கி) 4 வயது குழந்தை தொலைக்காட்சியில் கார்ட்டூன் சேனலை பார்த்து கொண்டிருந்தான்.. விமல் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தான்..
    விக்கி சகியை பார்த்ததும் முகத்தை கோபத்தில் திருப்பி கொண்டான்.. சகிக்கு அவன் முகத்தை திருப்பி கொண்டது பார்த்து சிரிப்பு வந்தது..
    “விக்கி செல்லத்திற்கு என் மேல் என்ன கோவம்.. பாவம்ல அத்தை ப்ளீஸ் டா செல்லம் பேசு”
    “அப்படியா என்னோட விக்கி செல்லம் பேச மாட்டாங்களா சரி அப்படினா உனக்கு வாங்கிட்டு வந்த சாக்லேட்டை நான் சாப்பிட போறேன்”
    சகி சாக்லேட் கவரை பிரித்து வாயில் போடும் முன் புடுங்கி அவன் வாயில் போட்டு கொண்டான்..
    “சகி என்கிட்ட பேசாத..ஏன் என்னை வந்து ஒரு வாரமாக பார்க்க வரலை”
    “சாரி விக்கி நான் ஒரு வாரமாக சென்னையில் இல்லை டா செல்லம்.. அதான் வந்து பார்க்க முடியலை”
    இவர்கள் பேச்சு சத்தத்தை கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியில் வந்த விமல் “வாங்க கல்யாண பெண்ணே.. என்ன எங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா.. என்ன எங்களை பார்க்க வந்து இருக்க.. விஷால் எங்க டா..”
    “வேலை இருக்கு னு போய்ட்டாங்க.. என்ன அண்ணா இப்படி கேட்டுட்டிங்க.. உங்களை எல்லாம் எப்படி மறப்பேன்.. அம்மா,அப்பா எங்க அண்ணா..”
    “முக்கிய வேலையாக தஞ்சாவூர் போய்ட்டாங்க.. ஆமா இப்போ தானே கல்யாணம் முடிந்தது.. வேலைக்கு போய்ட்டாங்கனு சொல்ற.. ஏன் டா குட்டிமா எதாவது பிரச்சனையா டா”
    விமல் கேட்டவுடன் சகியும் ஆறுதல் தேடி அவன் மடியில் படுத்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.. விமலும் அவள் அழுதால் தான் மன பாரம் குறையும் என்று அழ விட்டுவிட்டான்.. அவளும் அப்படியே அழுதுகொண்டே அண்ணன் மடியில் தூங்கிவிட்டாள்.. விமல் படுக்க வசதியாக படுக்க வைத்து சமையலை கவனிக்க சென்று விட்டான்..
    ஒரு மணி நேரம் கழித்து “விக்கி கண்ணா போய் அத்தையை எழுப்பி சாப்பிட வர சொல்லுடா”
    சாப்பிட்டு முடித்தவுடன் தோட்டத்தில் அமர்ந்து விமல் “குட்டிமா சொல்லுடா மாப்பிள்ளை கூட சந்தோசமாக இருக்கியா டா”
    “என்னால் பழைய சம்பவங்களை மறக்க முடியலை.. அன்று நீங்க மட்டும் காப்பாற்றவில்லை என்றால் நான் இன்று உயிரோடு இருந்து இருக்க மாட்டேன்”
    “பழைய சம்பவங்களை மறக்க முயற்சி பண்ணு டா.. இன்னும் அவனை பற்றி நினைத்தாலே தப்பு மா.. இப்போது நீ விஷாலுடைய மனைவி..”
    “என்ன அண்ணா இப்படி சொல்லிட்டிங்க.. அவன் எனக்கு துரோகம் செய்தவன்.. அவன் என்னை பொறுத்து எப்போவோ செத்து போய்ட்டான்.. என்னால் யாரையும் நம்ப முடியவில்லை.. எப்போது எனக்கு துரோகம் பண்ணிட்டு போவாங்கனு இருக்கு”
    “என்னை கூட உனக்கு மூன்று வருடங்கள் முன்பு தான் தெரியும் என்னை மட்டும் எப்படி நம்பினாய்.. ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்டா.. பெண்களில் கெட்டவர்களும் இருகிறார்கள்.. நாம் தான் நல்லவர்கள் யார்,கெட்டவர்கள் யார் னு அடையாளம் கண்டு பழக வேண்டும்.. இது உன்னோட வாழ்க்கை டா.. நீ விஷாலை கவனிக்க ஆரம்பி டா.. அவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்று உனக்கு தெரிய வரும்.. அதன் பிறகு முடிவு பண்ணு.. நீ என்ன முடிவு செய்தாலும் நான் உனக்கு துணையாய் இருப்பேன்.. உனக்கு துரோகம் பண்ண அவர்கள் முன்னாடி நீ சந்தோசமாக வாழ்ந்து காட்டு.. சரியா குட்டிமா”
    விமலுடன் பேசியது ஆறுதலாக உணர்ந்தாள்..வீட்டுக்கு வந்து அத்தைக்கு சமையலில் உதவி ,காவ்யாவுடன் அரட்டை என்று நேரத்தை கழித்தாள்.. விஷால் எட்டு மணிக்கு தான் வந்தான்.. வந்தவுடன் சாப்பிட்டு விஷால் சகியிடம் தனது வேலையை பற்றி பகிர்ந்து கொண்டான்..
    சகிக்கு விமல் சொன்னது ஞாபகம் வந்தது.. விஷாலை கவனிக்க ஆரம்பித்தாள்.. விஷால் ஆறடி உயரத்திற்கு மேல்,பரந்து விரிந்த தோளும், கட்டுமஸ்தான உடற்கட்டும்,நிமிர்ந்த நடையும்,நேர் கொண்ட பார்வையுமாய்,அழகே உருவாய்,கம்பீரமாய் இருந்தான்..
    “பார்க்க அழகாதான் இருக்காங்க.. பழகி பார்த்தால் தான் இவருடைய சுயரூபம் தெரியும்.. அவனையும் எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும்.. ஆனால் சுயநலமாய் என்னுடைய காதலை தூக்கி எறிந்துவிட்டு போன அவர்கள் சுயரூபம் எனக்கு தெரியாமல் போய்விட்டது.. நான் தான் சரியான முட்டாள்.. எல்லா ஆம்பளைகளும் இப்படிதான்..” விமலின் அறிவுரை??? கேட்டு இருந்தால் விஷாலை நம்பி இருப்பாள்..

    -மலரும்
     
  10. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா! கதைப்பகு&#2

    காதல்-3

    SOME PEOPLE ARE MEANT
    TO FALL IN LOVE WITH EACH OTHER
    BUT NOT MEANT TO BE TOGETHER..

    அவனது வாகனம் சிக்னலில் நின்ற போது அருகில் நின்ற வாகனத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.. அதிர்ச்சிக்கு சொந்தக்காரி கிருத்திகா.. அவள் அவன் கணவனின் வாகனத்தில் பின்னால் அமர்ந்து அவன் முதுகில் சாய்ந்து இருந்தாள்..
    விஷாலால் அந்த காட்சியை பார்த்து விட்டு அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. முன்பு அவளை அவன் தான் வண்டியில் அழைத்து செல்வது..
    அவனது நண்பன் சூர்யா வந்து அருகில் அமர்ந்தது கூட உணராமல் இருந்தான்..
    “விஷால் என்னடா ஆச்சு இப்படி இருக்க.. டீம் லீடர் வேலையை இன்று முடிச்சு கொடுக்க சொன்னார்ல வேலையை பார்க்காம இருக்க”
    “ஒன்றும் இல்லை சூர்யா இன்று நான் கிருத்திகாவை பார்த்தேன்”
    “என்னது கிருத்திகாவை பார்த்தியா..எங்க பார்த்த??..”
    “இன்று டிராபிக்ல நிற்கும்போது பார்த்தேன்.. அவ husband கூட வண்டியில் போய்ட்டு இருந்தாள்.. அவ சந்தோசமா அவனை அணைத்து கொண்டு சென்று கொண்டிருந்தாள்..”
    “நான் அவளை எவ்ளோ லவ் பண்ணேன் தெரியும்லடா..நான் அவளை உயிராக நேசித்தேன்.. அவளை இன்னொருவன் கூட பார்த்து என்னால தாங்க முடியலை..”
    “என்ன சொல்ற விஷால்.. அவள் இன்னொருவன் பொண்டாட்டி.. நீ அவளை நேசிக்கிறது தப்பு.. உன்னை நம்பி இன்னொரு பொண்ணு கழுத்தை நீட்டி இருக்கிறாள்.. கிருத்திகா உன்னை மறந்துட்டு அவன் கூட வாழும் போது உன்னால் ஏன் முடியாது..”
    “ஏன் டா நான் கிருத்திகா கூட சேர முடியலை.. அவளை நினைக்கிறது தப்பு என்று தெரிந்தும் அவளை என்னால் மறக்க முடியவில்லை.. நடந்து முடிந்த உண்மையை என் மனம் ஏற்க மறுக்கிறது”
    “எல்லாம் விதி டா.. உனக்கு கிருத்திகா இல்லாமல் சாகித்யா தான் உன் மனைவி என்று உன் தலையெழுத்த்தில் எழுதி இருந்தால் யாரால் மாற்றமுடியும்.. சாகித்யா நல்ல பொண்ணு மாதிரி தான் தெரிகிறாள்.. காலம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்..”
    நம்ம கூட இருக்குறவங்க நம்மளை விட்டு
    போய்டாங்கனா நாமளும் போனும்னு
    அவசியம் இல்லை என்னிக்காவது ஒரு நாள்
    நாம ஆசைப்பட்ட மாதிரி லைப் மாறும்..

    விஷாலுக்கு கடைசியாக கிருத்திகாவை பார்த்த நாள் நினைவில் வந்தது..
    இடம்:சென்னை மெரினா கடற்கரை..
    விஷால் வேலை முடிந்தவுடன் கிருத்திகாவை அழைத்து கொண்டு மெரினா கடற்கரைக்கு வந்து இருந்தான்..
    “விஷால் நாளையுடன் நாம் காதலிக்க ஆரம்பித்து ஏழு வருடங்கள் முடிந்துவிட்டதுல..”
    “ஆமா கிருத்தி இவ்ளோ வருடங்கள் ஆனது நம்பவே முடியலை.. நான் அம்மா அப்பா கிட்ட நம்ம காதலை சொல்லிட்டேன்.. அவங்க ஏற்றுக்கொண்டார்கள்.. உங்க வீட்ல எப்போ சொல்ல போற கிருத்தி..”
    “விஷால் இந்த வாரம் செமினார் அட்டென்ட் பண்ண டெல்லி வரை போக வேண்டி இருக்கிறது.. நான் அப்படியே வீட்டுக்கு போய் அப்பா அம்மா கிட்ட நம்ம காதலை பத்தி சொல்லிருவேன்.. ஏற்றுக்கொள்வார்களா விஷால்..”
    “படிச்ச அழகான மாப்பிள்ளையை யார் தான் வேண்டாம் னு சொல்லுவாங்க செல்லம்..”
    “படிச்ச அழகான மாப்பிள்ளையா இங்கே யாரையும் காணுமே விஷால்..யாரை சொல்ற”
    “இட்ஸ் மீ..நான் தான் படிச்ச அழகான பையன் என்னை மாதிரி அழகான பையனை இந்த உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியுமா சொல்லு டா செல்லம்..”
    “போ டா உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு வேற அழகான பையனை கல்யாணம் பண்ணிக்க போறேன் பார்(அதான் நடக்க போகுதுன்னு நம்ம அப்பாவி ஹீரோவுக்கு தெரியலை)..”
    விஷால் கிருத்திகா கன்னத்தில் முத்தமிட்டு “இப்போ சொல்லு பார்க்கலாம் என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன்னு..”
    “பிராட்..எப்போ வாய்ப்பு கிடைக்கும் முத்தம் கொடுக்கலாம்னு இருக்க..BAD BOY..”
    “போடி..இது வரைக்கும் எப்போவது எனக்கு முத்தம் கொடுத்து இருக்கியா.. கேட்டா கல்யாணம் முடிந்த பிறகு னு சொல்றது..”
    விஷால் முகத்தை தூக்கி வைத்தது பார்த்து கிருத்திகாவுக்கு சிரிப்பாக இருந்தது..
    “விஷால் கண்ணா இங்க பார் செல்லம்ல.. கல்யாணம் முன்னாடி இப்படி முத்தம் கொடுக்ககூடாது..”
    நீ என்னோட பொண்டாட்டி.. ஏழு வருசமா லவ் பண்றேன்.. முத்தம் கொடுக்க மாட்டியா..”
    “நாளைக்கு உன்னோட பிறந்த நாள் தான உனக்கு நல்ல கிபிட் தரேன்.. இப்போ சிரி பார்க்கலாம்..”
    “என்ன கிபிட் டா ஸ்பெஷலா இந்த மாமாவை கவனிக்க போறியா..”
    “எப்போவும் போல வாட்ச் தான்..நேற்றே வாங்கிட்டேன் டா.. இதான் டா ஸ்பெஷல்”
    “இப்படியே என்னை ஏமாத்திட்டு இருக்கே.. இப்போ தான என்னை விட்டுட்டு வேற எவனையோ கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன.. அப்போ நீ என் கூட பழகினது பொய்யா..”
    “என்ன விஷால் இப்படி சொல்லிட்ட.. இந்த ஏழு வருடமா நீதான்டா எனக்கு எல்லாமாக இருந்து இருக்க.. உனக்காக என்ன என்றாலும் செய்வேன்.. ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு சீரா கொண்டு போக போறது கற்பு தான்டா.. நாம யார் கூட இணைவோம் னு யாருக்கும் தெரியாது.. அது கடவுள் தான் முடிவு பண்ணுவது.. அப்படி நடந்தா அந்த வாழ்கையை ஏற்று கொள்ள நாம் பழகி கொள்ள வேண்டும்.. அதை விட்டுவிட்டு தற்கொலை செய்வது கோழை தனம்.. நாம் நெருக்கமாக பழகி நான் வேறு ஒருவனையோ நீ வேறு ஒருத்தியோ திருமணம் செய்து கொண்டால் குற்றவுணர்வு தான் அதிகம் ஆகும் விஷால்.. நான் வீட்ல பேசுவேன் டா.. உன்னை திருமணம் செய்து கொள்வதில் சந்தோசம் தான்.. என்னை நம்பு விஷால்.. i love u விஷால்”
    விஷாலுக்கு நாளை பிறந்த நாள்.. அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.. நாளை ஏதோ விபரிதம் நடக்க போகிறது என்று அவன் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது..
    நாள்-ஜூன் 22
    காலை எழுந்தவுடன் அம்மா அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கியவுடன் நண்பர்களுடன் சினிமா சென்று விட்டு நைட் ஹோட்டலில் விஷால் கிருத்திகாவை சந்திப்பதாக இருந்தது..
    விஷால் காரில் கிருத்திகாவை சந்திக்க செல்லும் போது கிருத்திகா மொபைலில் அழைத்து இருந்தாள்..
    “விஷால் கிளம்பிட்டியா டா.. உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்”
    “சொல்லு டா கிளம்பிட்டேன்..”
    “எங்க அக்காவுக்கு next month கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்காங்க..”
    “வாவ் சூப்பர் நியூஸ் சொல்லி இருக்க..அப்போ நம்ம ரூட் கிளியர்னு சொல்லு..”
    “பயமா இருக்கு விஷால் நம்ம காதலை ஏற்றுகொள்வார்களா..”
    “கண்டிப்பா..சரி வந்துட்டு இருக்கேன்..”
    விஷால் ரொம்ப சந்தோசமாக இருந்தான்.. அவன் சந்தோசத்திற்கு ஆயுள் கம்மி என்று அந்த மானிட பிறவி அறிந்து கொள்ளாதது அதோ பரிதாபம்..
    அவன் காரின் எதிரே திடீர் என்று ஒரு பெண் வந்து நிற்க அந்த பெண்ணை காப்பாற்ற விஷால் முயற்சி செய்து balance இழந்து அவன் கார் மரத்தில் மோதி மயக்கம் அடைந்தான்(அந்த பெண் குஷி எஸ்.ஜே.சூர்யா போல)..
    அவன் நினைவு திரும்ப முழுதாக இரண்டு மாதங்கள் கடந்தது.. நினைவு திரும்பி அவன் கண் திறந்து பார்த்த பொழுது அவன் நண்பன் சூர்யா தான் நின்று இருந்தான்..
    “சூர்யா அப்பா அம்மா எங்க டா..”
    “இப்போ தான் டா என்னை விட்டுட்டு வீட்டுக்கு போனார்கள்..”
    “டேய் கிருத்தி எங்க டா? அவளை பார்க்கணும் போல இருக்கு டா.. அவ எங்க டா”
    “சொல்றேன் டா.. அவ வீட்டில் இருக்கிறாள்.. நீ முழுதாக குணமாகி வீட்டுக்கு வா டா”
    விஷாலுக்கு சூர்யா எதையோ மறைப்பது போல் தோன்றியது..
    ஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்தவுடன் அவன் சொன்ன செய்தி கேட்டு அதிர்ந்தான்..
    -மலரும்..
     
    1 person likes this.

Share This Page