1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சுகன்யா

Discussion in 'Stories in Regional Languages' started by crvenkatesh, Oct 25, 2013.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நான்தான். திரும்பவும் உங்கள போர் அடிக்கலாம் என்று வந்திருக்கிறேன்.

    லக்னோ பிராஞ்சில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் நடந்த சம்பவம் தான் இதுவும்.

    ஒரு நாள் கஸ்டமர் சர்வீஸ் நேரம் முடிந்து லஞ்ச் டைமில் உணவருந்திக்கொண்டிருந்த போதுதான் அந்தப் பெண்மணி வங்கிக்குள் நுழைந்தாள். கஸ்டமர் என்று நான் நினைத்தேன். அவளைப் பார்த்தால் தென்னிந்தியப் பெண்மணி என்று அப்பட்டமாகத் தெரிந்தது. சரி என்னிடம்தான் வருவாள் என்று நினைத்தால், எங்கள் கிளையில் வேலைப் பார்க்கும் சுஜாதாவிடம் சென்றாள். சுஜாதா கேரளா. ஆனால் நன்றாக தமிழ் பேசுவாள்.

    சுஜாதாவும் அவளும் ஒரு பத்து நிமிடம் உரையாடியிருப்பார்கள். ஆனால் அந்தப் பத்து நிமிடத்துக்குள் அந்தப் பெண் என்னைப் பலமுறையும் சுஜாதா ஆச்சரியத்துடன் இரு முறையும் பார்த்தார்கள். என்னுடைய வயிற்றுக்குள் குடல் ஒரு முறை சின்னதாய் புரண்டது.

    ‘என்ன பேசியிருப்பார்கள்? என்னைப் பார்த்து என்ன பேசினார்கள்? எனக்கு அந்தப் பெண்மணியைத் தெரியவே தெரியாதே!’ என்ற குழப்பங்களுக்கெல்லாம் விடையாக சுஜாதா என்னருகே வந்தாள்.

    “வெங்கட்! நீங்களா இப்படி? நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று சொன்னாள். அதற்குள் கிளையின் மற்ற staffம் சுற்றிக் கொண்டுவிட்டார்கள். ஒரு மர்மக்கதை போல சுஜாதா சொன்ன விஷயத்தின் சுருக்கம் இது தான்.

    அந்தப் பெண்மணி ஒரு புகாரைக் கொண்டு வந்திருக்கிறாள். அவள் பெண்ணுக்கும் எனக்கும் சுமார் ஆறு மாதமாய் தொடர்பாம். காதலாம். அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றுகூட நான் சத்தியம் செய்தேனாம். சத்தியம் செய்த ஒரு வாரம் பிறகு அவளைச் சந்திப்பதை
    நிறுத்திவிட்டேனாம். அதனால் எல்லாரும் தயவு செய்து பஞ்சாயத்து செய்து அவளை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமாம்.

    சாமி! என்ன விபரீதம்? ஒரு பெண்ணைக் கூட ( ஒரு பேச்சுக்குத்தான்!) ஏறெடுத்துப் பார்க்காத எனக்கு என்ன சோதனை!

    சிலர் முகத்தில் பரிதாபம். சிலர் முகத்தில் புன்னகை. சிலரோ விஷமமாகப் பார்த்தார்கள். எங்கள் கிளையின் ஜொள்ளுத்திலகம் சுதீப் ‘க்யா க்யா கியா ஜரா detail மே பதாவோ யார்! என்று நேரம் காலம் தெரியாமல் ஜொள்ளினான்.

    எனக்கு திடீரென்று சென்னை சென்று விட வேண்டும் போல தோன்றியது. அடிவயிற்றில் ஒரு விதமான ஜுரம் போல தகித்தது. இரண்டு சிகரெட்டை ஒரு சேரப் புகைக்க வேண்டும்போல இருந்தது.

    அப்புறம் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அந்தப் பெண்ணை அங்கு அழைத்துவந்து அவள் வாக்குமூலத்தையும் கேட்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு.

    என்னை ஜாக்ருதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அந்தப் பெண்மணி ஒரு ஆட்டோ பிடித்து சென்றாள். சென்றவள் சரியாகப் பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள். அவளுடன் சுகன்யா! ( பெயர் பிற்பாடு தெரிந்து கொண்டேன்)

    ‘எத்தனை அழகு இருவது வயதினிலே’ என்று இவளைப்பார்த்துத் தான் பாடியிருப்பார்களோ என்னும்படி அழகு.

    உடனே அடையவேண்டும் போல இளமை. அதுவம் தகித்துக் கொதித்துக் கொண்டிருந்த இளமை. என் உடல் ஜிவ்வென்றானது. சுதீப் திறந்த வாயை மூடவில்லை. ‘இந்த மதராசிக்கு இப்படி ஒரு மச்சமா?’ என்பது போன்ற முகபாவம் பலர் முகத்தில்.

    அந்த சிறிய இடைவேளைக்குள் நானும் சுகன்யாவும் காஷ்மீர் சென்று டூயட் பாடினோம். மழையில் நனைந்தோம். அவள் வெட்கத்துடன் எனக்கு எதிரிலேயே ஈர ஆடையை பிழிந்து உலர்த்தினாள். திடீரென்று ‘அம்மா’ என்று குரல். என்ன அதற்குள் குழந்தை பிறந்து விட்டதா என்று குழம்பிய என்னை சுதீப் தட்டி சுயநினைவுக்குக் கொண்டு வந்தான்.

    ‘அம்மா’ என்று கூப்பிட்டது சுகன்யாதான். என் மாமியாரைதான் (!) கூப்பிட்டாள். ‘என்னடி?’ என்ற அம்மாவிடம், ‘ நான் பரேலி கார்பொரேஷன் பாங்க்’ சொன்னேம்மா. இந்த பாங்க் இல்லை என்றாள்.

    அதற்குப் பிறகு பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்கள் கலைந்தார்கள். போகையிலே ‘ஹாய்! ஐ ஆம் சுகன்யா’ என்று சொல்லி கைகுலுக்கி விட்டுச் சென்றாள் என் குழந்தையின் தாய்.

    இப்போதும் சிலர் முகத்தில் பரிதாபம். சிலர் முகத்தில் புன்சிரிப்பு.

    இரவு உணவையும் முடித்துக்கொண்டு ரூமுக்கு சென்ற என்னை என் அப்பாவின் கடிதம் வரவேற்றது.

    பச்சையப்ப முதலியாரிடம் வாங்கிய கடனுக்குப் பர்த்தியாக என்னை அவர் கடைசி பெண்ணுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாக வாக்குத் தந்து விட்டாராம். இரண்டு வாரத்தில் நிச்சயதார்த்தம். உடனே புறப்பட்டு வரும்படி வேண்டுகோள். அந்தப் பெண்ணின் புகைப்படம் இணைப்பு.

    ஆவலுடன் போட்டோவைப் பார்த்தால் கோபுர வாசலிலே சுகாசினி மாதிரி ஒரு முகம் என்னைப் பார்த்துப் பயத்துடன் சிரித்தது.

    எனக்கு அந்த முகமறியா பரேலி கார்பொரேஷன் வங்கியில் வேலைப் பார்க்கும் சுகன்யாவின் காதலன் மேல் இனமறியா கோவம் வந்தது.
     
    6 people like this.
  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Really a nice story. Your narration and presentation are so wonderful. Like an experienced writer you are handling the words. Good keep it up !!!
    with love
    pad
     
  3. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மிக்க நன்றி பத்மினிஜி. உங்கள் ஊக்கம் என்னை மேலும் எழுதத் தூண்டும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை .
     
  4. banujaga

    banujaga Gold IL'ite

    Messages:
    658
    Likes Received:
    356
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Very well written....... enjoyed reading it
     
  5. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Thank you banujaga ji.
     
  6. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    My heartfelt thanks for these kind words dviswa29. Thank you.
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அது என்ன யாருகிட்ட நீங்க ஏமாந்தாலும் கடைசியா ஒரு கல்யாணம் நடந்துடுது? அங்க என்னடானா குழலிக்கு கல்யாணம்.................இங்க என்னடானா உங்களுக்கே கல்யாணம் ideasmiley
     
  8. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    :)


    Glad that you enjoyed that story too.
     
  9. vidhya3b

    vidhya3b IL Hall of Fame

    Messages:
    2,502
    Likes Received:
    1,074
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Nice one.. Liking your writing style!!!
     
  10. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மிகவும் நன்றி வித்யா
     

Share This Page