1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாணம் to காதல் !!

Discussion in 'Stories in Regional Languages' started by jaga3421, Mar 18, 2012.

  1. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Hahaa.. Beerangi mooku dhan ;)
     
  2. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Jaga,

    Wow, wonderful selection of title to the post.........azhagaana tamizh il , arumaiyaana thalaippu.....apparam vanadhi, innocence romba pidichurukku.....eppadi ava arul kitta marubadi paesa poraa nu theriyala.....rendu vaartha paesave yosikkaraa..idula salt add panna coffee ah kuduththu , nallaa irukkaa nu, kaettu ini eppadi arul ah paarkum bodu, react pannuvaanga, rendu paerum nu nenacha , I cant stop laughing....Expecting next post eagerly!

    Vasupradha.S
     
  3. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Vanadhi character ah nalla absorb panirkinga.. :) Keep reading.. Will update daily
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hi jaga...
    romba naalaiku aparam IL ku varen... vantha udane unga kathai than... :)
    @1: nalla arambam... :thumbsup
    mudhal athiyaayathulaye suspense ah... tho adutha athiyaayathuku poren...
    @2: amma kan asaivai vaithu thaaliye kattitaane... romba nalla paiyan... :)
    @3:
    - aniyaayathuku nalla pilaya irukaane...
    oru valiya ponnu pesita... perayum sollita... :)
    @4: achacho arul paavam... uppu potta coffeeya kuduchutaane... so sweet character... ;)
     
  5. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hi Jaga, quite interesting today. nice narration.
     
  6. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi jaga..
    very interesting ah poguthu pa..
    uppu potta tea kuduthutu ithula permai vera vaanathiku.. Arul veliye vanthathum avanai yeppadi paarka poralo! chummave pechchu varalai avalukku.. ippo enna seiyya poralo..
    oru velai avalathu nilai unarnthu Arul ye 'its ok..no problem' nu yethum pesuvaano! allathu tea tumblerai paarthuvittu ivalai paarthu thanathu vasikarikkum trade-mark sirippai uthirppaano!
    eagerly waiting pa..
    seekiram next post podunga..
    -devi.
     
  7. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    5. அவன் நான்தான்..

    "அழகாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது
    என்று சீண்டினேன்
    எனக்கு கொஞ்சம் கூட பயமில்லை
    என்று வாயடைத்துவிட்டாய்..
    அடி.. வாயாடிப் பெண்ணே !"

    வானதி நெளிந்துக்கொண்டிருந்தாள்.. இன்னும் சற்று நேரத்தில் அருள் வெளியே வருவான். அவன் என்ன சொல்வானோ என்று வியர்த்துக்கொண்டிருந்தாள். 'அடிப்பாவி அம்மா, சர்க்கரையை தானே அந்த டப்பாவில் கொட்டி வைப்பாய், யார் உன்னை மாற்றி அதில் உப்பு வைக்கசொன்னது' மனதில் வசந்தியை திட்டிக்கொண்டிருந்தாள். வசந்தி என்ன செய்வாள். நீயாவது ஒரு வாய் குடித்து பார்த்திருக்கவேண்டும். உனக்கென்ன அவ்வளவு அவசரம் என்று அவள் உள்மனது அவளையும் திட்டிக்கொண்டிருந்தது. என்ன கரணம் சொல்லி சமாளிக்கலாம் என்று யோசிப்பதற்குள் அருள் வெளியே வந்து விட்டான். உதட்டில் அதே புன்னகையை அணிந்திருந்தான்.

    "சாரி.. இப்போ தான் கவனிச்சேன்" தன பெரிய பெரிய கண்களில் அப்பாவித்தனத்தை ஒட்டிக்கொண்டு தடுமாறி தடுமாறி கூறினாள்
    அருள் பதில் சொல்லவில்லை.

    மீண்டும் அடேய் புன்னகை. "வேணும்னு செஞ்சிருக்கமாட்டிங்கனு தெரியும், விடுங்க.. ஏன் இதுக்கெல்லாம் சாரி"

    வானதிக்கு இது சமாதானமாய் படவில்லை. "இல்ல.. first impression is bestனு சொல்வாங்க. இப்படி லூசு தனமா பண்ணிட்டேன்.."

    "பரவாயில்லை விடுங்க. ஏன் பிரெண்ட்ஸ்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்கை உப்பு சப்பில்லாம போஹிடும்னு சொல்லுவானுங்க. அது இப்போ பொய்யாகிடுச்சி இல்லையா..?"

    வானதிக்கு அவன் கிண்டல் செய்வது சுத்தமாக புரியவில்லை, "ஆமாம் ஆமாம்" என்று தலையை ஆட்டினாள். பிறகு தான் புரிந்துகொண்டாள் அருள் தன்னை நன்றாக ஓட்டிவிட்டான் என்று. 'நல்ல சிரிச்சு பேசி இப்படி காலை வாருகிறாயா..?? உன்னை.....' என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு அவன் பின்னே நின்று கொண்டிருந்த வானதி அவனை அடிப்பது போல சைகை செய்தாள். நம் வானதிக்கு தான் இன்று ராசி பலனில் ஏமாற்றம் என்று எழுதியிருக்கிறதே. அருள் முன் இருந்த கண்ணாடியில் அது தெளிவாக இருவருக்குமே தெரிந்தது. வாந்தி தலையில் அடித்துக்கொண்டு நொந்துபோனாள்.

    "வானதி மாப்பிள்ளையை கூட்டிட்டு வாமா.. சாப்பிடலாம்" என்று அப்போதைக்கு வானதியை பாட்டி காப்பாற்றினாள்.

    அன்று முழுவதும் அருளின் முன்பு கூட நிற்காமல் வானதி பார்த்துக்கொண்டாள். மதியம் பொன்னி, குந்தவை அவர்களுடைய உரவிநர்கலௌ வந்திருந்தாள். குந்தவைக்கு வானதியை மிகவும் பிடித்திருந்தது. இருவரும் கொஞ்ச நேரத்திலே தங்களுக்குள் நெருக்கமான சிநேகிதம் எர்ப்பட்டதை உணர்ந்து கொண்டார்கள். மாலை வானதி கணவன் வீட்டிற்க்கு புறப்பட்டாள்.


    "நீங்க சென்னை போயிட்டு தகவல் குடுங்க மாப்பிள்ளை. நாங்க இந்த சீர் லாம் அனுப்பி வைக்கறோம். சார் இப்பவே எடுத்து போயிடுங்க" சாவியை நீட்டினார் வானதியின் அப்பா.

    அருள் பொன்னியை பார்த்தான். பொன்னியின் கண்களுக்கு அருளில் உள்ளத்தில் ஓடியது தெளிவாக புரிந்தது. ஒரு புன்னகையோடு தன் அனுமதியை கொடுத்தாள்.

    "தப்ப எடுத்துகாதிங்க மாமா.. இதெல்லாம் வேண்டாம்" அருள் பணிவாக மறுத்தான். வசந்தி இதை எதிர்ப்பார்த்தால். ஆனால் மற்றவகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    "அது எப்படி தம்பி, எங்க வீட்டு பொண்ண வெறும் கையோட அனுப்புவோமா..??"

    "இது போதல நினைக்கறிங்களா.. வேற ஏதும் எதிர்பார்கிரிங்களா..??"

    வானதியின் உறவினர்கள் அருளை சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தனர்.

    "ஏன் பா இப்படி ஒன்னும் தராம எங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்ச எங்க சொந்தக்காரங்க லாம் எங்கள என்ன சொல்வாங்க.." ஒரு பெரியவர் தன் மீசையை முறுக்கிக்கொண்டு வசனம் பேச அருள் கோபமானான்.

    "இது தாங்க.. உங்க பிரச்சனையே.. கல்யாணம் ரெண்டு பேர் வாழ்க்கையோட ஆரம்பம். அதை அந்த ரெண்டு பேர் முடிவு பண்ணாலே போதும். ஆனா நீங்க உங்க வீட்டு கல்யாணத்த, உங்க பெருமைய காட்ற ஒரு கருவியா, உங்க ஸ்டேட்ஸ காட்றதுக்கு ஒரு சந்தர்ப்பமா யூஸ் பண்ணிக்ரிங்க. உங்க பொண்ணுக்கு நீங்க பண்ணனும்னு ஆசபடரிங்க சரி, அதுல ஏன் உங்க சொந்தக்காரங்க அபிப்ராயத்த எதிர்பார்க்கரிங்க.. அவன் பொண்ணு கல்யனுத்துக்கு இவ்வளோ செலவு பண்ணான் பா.. இப்டி ஒரு நாள் உங்க சொந்தக்காரங்க சொல்லணும், அந்த ஒரு நாளுக்காக நீங்க கடன் வாங்கி பல வருஷம் கஷ்டபடுவிங்கலா..??"

    பெரியவர் அமைதியாய் இருந்தார்.

    இப்படி கூட இருப்பர்கள என்று வானதி அதிசயித்தாள்.. "ஒரு சார், அறுபது பவுன் நகை, அப்புறம் வீட்டுக்கு தேவையான சமான்.. இப்போதிக்கு இவ்ளோ, அப்புறம் ரொக்கம எவ்வளோ தரனும் னு நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம்.. நிசியாயத்தார்த்த செலவு, கல்யாண செலவு உங்களுது.. " ஜம்பமாக பேசிய ராக்கம்மா வானதியின் கண்களுக்கு வந்தாள். ச்சே என்ன பெண் அவள், என் அருள்மொழிக்கு முன் அவளெல்லாம் ஒன்றுமே இல்லை. என் அருள்மொழி என்று நினைத்தோம் என்பதை அவள் உணர்ந்தபோது சிலிர்த்தாள். இவனை நினைத்தாலே இனிக்கிறதே.

    என்ன தன் அருள்மொழி கூறியதில் ஞாயம் இருந்தாலும் வசந்திக்கு மனம் கேட்கவில்லை. "நீயாவது சொல்லக்கூடாதா பொன்னி" என்று அவளிடம் கேட்டாள்.

    பொன்னி சிரித்தாள், "நான் நினைத்ததை தான் அருள் சொன்னான். தவிர அவன் ஏதும் தப்பா சொல்லலையே.."

    ஒரு வழியாக வானதியை மட்டுமே அந்த வீட்டில் இருந்த எடுத்துக்கொண்டு செம்மன்கலம் வந்து சேர்ந்தனர். குந்தவை ஆரத்தி எடுக்க, அந்த வீட்டின் இரண்டாவது மருமகள் வீட்டில் வலது கால் எடுத்துவைத்து விளக்கேற்றினாள்.

    அருள்மொழியின் கண்களில் படாதவாறு வானதியும் அன்று முழுதும் தப்பித்துக்கொண்டே இருந்தாள். அருள் சற்று நேரத்தில் பிரச்சனையை ஆரம்பித்தான். இன்னும் ஒரு வாரம் லீவ் போடும்படி பொன்னி சொன்னாள். அருள்மொழியோ தான் இன்றே சென்னை கிளம்பியாக வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்க ஆரம்பித்தான்.

    "கொஞ்சமாது புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரி நடந்துக்கோ டா. இன்னும் ஒரு வாரம் லீவ் சொல்லு ஆபிஸ்ல. சொந்தக்காரங்கலாம் போன் மேல போன் போட்டபடி இருக்காங்க. எல்லாரோட வீட்டுக்கும் போகணும். வழக்கம் னு ஒன்னு இருக்கு அது தெரியுமா உனக்கு" பொன்னி மூச்சிவிடாமல் பேசி முடித்தாள்.

    "பாஸ் னு ஒருத்தர் இருக்காரு. அப்ரைசல் னு ஒன்னு இருக்கு. அது தெரியுமா மா உனக்கு ..?' எரிச்சலோடு கேட்ட அருள்மொழியை ஒன்றும் புரியாமல் பார்த்தாள். பின்பு வானதியை பார்த்தாள்.

    "ஆறு மாசத்துக்கு ஒரு தடவை நாம எப்படி வேலை செஞ்சிருக்கோம் னு பாத்து அதுக்கு மார்க் மாதிரி போடுவாங்க மா. அதுக்கு பேர் தான் அப்ரைசல். அது முக்கியமானது தான்." வானதி ஒரே நாளில் பொன்னியோடு ராசி ஆகிப்போனாள். அம்மா என்றே கூப்பிட்டாள்.

    'பார்த்தாயா என் மருமகளை..' என்பது போல அருளை ஒரு பார்வை பார்த்தாள். அருள் ஒன்றும் சொல்லாமள் தன் அறைக்குள் சென்றான். "நீ வாம்மா என்று வாஞ்சையுடன் வானதியை அணைத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் பொன்னி.ஆனால் அருள் விடவில்லை. காரணம் பலவற்றை அடுக்கி, சென்னை செல்வதற்கு டிக்கட்டையும் புக் செய்துவிட்டான். ஆம் வானதியோடு தான்.

    வானதிக்கு கொண்டாட்டமாக இருந்தது. 2 மணி நேரம் பயணம், இவனோடு நெருக்கமாக அமர்ந்து பேருந்தில் செல்லப்போகிறோம். இவனை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். "அடுத்த வாரம் வந்துடுங்க அண்ணி" என்று குந்தவை ஒரு முத்தத்தையும் அவளோடு அனுப்பி வைத்தாள்

    என்னென்ன பேசலாம் என்று மனதில் பட்டியல் போட்டுகொண்டு, எப்படி பேசுவது என்று ஒத்திகை கூட பார்த்து வைத்திருந்தால் வானதி. எல்லாம் அருள் அவள் அருகில் உட்கார்ந்ததும் மறந்து போனது. பயணத்தின் முதல் ஒரு மணி நேரம் இருவருமே ஏதும் பேசவில்லை. சென்னை நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு கடையில் பேருந்தை நிறுத்தினர்.வெளியில் சிறுவன் ஒருவன் டீ விற்றுக்கொண்டிருந்தான். அவனை பார்த்து இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தனர். வானதி சிறிது முடித்ததும் அருள்மொழி மீண்டும் சிரித்தான்.

    வானதி கெஞ்சலான மொழியில் கேட்டாள், "கிண்டல் பண்ணாதிங்க ப்ளீஸ்.."

    அருள் சிரித்தான், "ஐயோ நான் கிண்டல்லாம் பன்னலங்க. சரி விடுங்க.. உங்கள பத்தி சொல்லுங்களேன்.."

    வானதிக்கு வெட்கம் தொண்டையை அடைத்துக்கொண்டு பேச்சை தடுத்து நிறுத்தியது..
    'ஐயோ இப்படி திட்டேரென்று கேட்கிறான். ஏதேதோ ஒத்திகை பார்த்தோம் இதை மறந்துவிட்டோமே.."

    அவள் ஒன்னும் பேசாமலிருப்பதை கண்டு அருளே தொடர்ந்தான். " நான் கொஞ்சம் கூட எதிர்பார்களை, இப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு இணைக்கு இந்த பஸ் ல சென்னை போவேன்னு.."
    வானதி சிரித்துகொண்டாள். அவள் மட்டும் எதிர்ப்பர்த்தால என்ன..

    "அப்பரைசல் பத்திலாம் பேசறிங்க.. IT பத்திலாம் தெரியுமா.."

    "ஐயோ,, நானும் வொர்க் பண்றேன்.." வானதி சினுங்கிகொன்டே சொன்னாள். என்னை பார்த்தால் எப்படி தெரியுது இவனுக்கு..

    "எங்க வொர்க் பண்றிங்க.." உலகத்திலே தன மனைவியிடம் எங்கே வேலை செய்கிறாய் என்று கேட்கும் கணவன் இவனாகத்தான் இருந்திருப்பான்.

    வானதிக்கு புதுமையாக இருந்தது. "TCS , சிறுசேரி ல இருக்கேன். அங்கே வேளைக்கு சேர்ந்து ஒரு வருஷம் ஆகப்போகுது.."

    அருள் வானதியை ஆச்சர்யமாக பார்த்தான்.. "சிறுசேரில எங்க..??"

    "உங்களுக்கு எப்படி சொன்ன புரியும்..." லேசாக கண்மூடி யோசித்தால்.. "சிறுசேரியில் எங்க ஆபிஸ் பில்டிங் ரொம்ப பெருசு. பட்டாம்பூச்சி மாதிரி பெரிய பெரிய பில்டிங் 6 இருக்கும். அது ஒவ்வொன்னும் EB னு சொல்வாங்க . நான் EB3 ல இருக்கேன் செவன்த் floor ". உற்சாகமாக பேச ஆரம்பித்தாள். அவளின் தயக்கம் கொஞ்ச கொஞ்சமாய் மறைய ஆரம்பித்திருந்தது.

    "ஓரளவுக்கு ஒத்துபோகலாம். ஆனா இது அநியாயம்.." அருள் அதிர்ச்சியான பார்வையோடு அவளை பார்த்தான். வானதிக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்ற கேள்வியை கண் கொண்டு கேட்டாள்.

    "வானதி நானும் tcs தான். சிறுசேரியில் EB3 ல தான் இருக்கேன்.." முதல்முறையாக பெயர் சொல்லி அழைக்க வானதிக்கு ஏகத்துக்கு சில்லிட்டு போனாள். அதும் இவன் நான் இருக்கும் இடத்திலே தான் இருக்கிறான். ஆச்சர்யம் பொங்கும் கண்களுடன் அவனை பார்த்தாள்.

    அதன் பின் இருவரும் பேசவே இல்லை. வானதிக்குள் சொல்ல தெரியாத சந்தோஷ அலைகள் அடித்துக்கொண்டிருந்தன.. சத்ரி நேர்த்தி அருள் அதை மொத்தமாக கலைத்தான்.

    "உங்களுக்கு லோகா தெரியுமா.. உங்க floor தான்" வானதிக்கு அருளின் குரலில் ஒரு இறுக்கம் தெரிந்தது..

    "பாத்துருக்கேன். ரொம்ப அழகா இருப்பாங்க அவங்க தான..?" லோகாவை பற்றி ஏன் அருள் கேட்கிறான் என்பது புரியாமல் குழம்பினாள்.

    "ம்ம்.. அவ தான்.."

    "நான் பேசினது இல்ல.. என் பிரன்ட் அவங்களுக்கு காலேஜ் மேட்.. இப்போ கூட ரிசன்ட்டா அவங்களுக்கு கல்யாணம் ஆச்சு நினைக்கிறன்.."

    "ஆமா.. நாலு மாசம் ஆகுது.." அருள் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்..

    வானதிக்கு அவளை பற்றி தெரிந்த கடைசி தகவலையும் சொன்னாள். "அந்த லோகா கூட யாரையோ ரொம்ப வருஷமா லவ் பண்ணி அப்புறம் அந்த பையன ஏமாத்திட்டாங்க.. வேற யாரையோ கல்யாணம் பண்ணிகிட்டாங்க."

    அருள் அடுத்து கூறிய வார்த்தை வானதியை சுக்குநூறாய் உடைத்துப்போட்டது.. "அவன் நான் தான்"

    (தொடரும் ...)
     
    vaidehi71, Caide, pariksha and 8 others like this.
  8. AArchana

    AArchana Gold IL'ite

    Messages:
    737
    Likes Received:
    621
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Jaga, Nice surprise and twist at the end.. Super like :)
     
  9. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Ammadiyov, unexpected twist. Ithai Vanathi epadi eduthuka poralo? smootha poitu iruntha storyla epadi oru breaka?
     
  10. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Jaga,

    Nalla twist......loga vaala yerpatta kaayathai marandhu, vanadhi ya, yeppadi arul yeththukka poraangaradhu daane , neenga solla poreenga....mmm......vanadhi enna panna poraa......Waiting eagerly to know that.......

    Vasupradha.S
     

Share This Page