1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாணம் to காதல் !!

Discussion in 'Stories in Regional Languages' started by jaga3421, Mar 18, 2012.

  1. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    vanathy ivlo kova paduvala???
    aniruth ku athirsta kaathu veesudhu adhan malathy ok sollita
     
  2. karpagamp

    karpagamp Senior IL'ite

    Messages:
    104
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Pls update soon.. Very interesting story and can't wait to read..
     
  3. mka

    mka Senior IL'ite

    Messages:
    61
    Likes Received:
    14
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Waiting for next update.. wen will u post??????? Eagerly waiting............
     
  4. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    When is next episode..??
     
  5. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    update pannunga pa
    waiting eagerly
     
  6. rosy786

    rosy786 IL Hall of Fame

    Messages:
    4,478
    Likes Received:
    3,068
    Trophy Points:
    308
    Gender:
    Female
    WEN is the next episode nu atleast tell pa
     
  7. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. எனக்கே நல்லா தெரியும், 2 வாரமா ஆள் அட்ரசே இல்லாம போயிட்டேன்.

    மன்னிக்கவேண்டும் (இதையே எத்தன தடவ சொல்லுவ னு கேட்காதிங்கோ) வீட்டில் நெட் கட் ஆகி விட்டது. ஆபிசிலோ கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நண்பர்கள் வேறு வந்துவிட்டார்கள். நெட் இல்லாமல் கூகில் ட்ரான்ஸ்லிடேரஷன் போக முடியவில்லை. சரியென்று அப்லைனில் கதையை டைப் செய்து நெட் சென்ட்டர் சென்றாள் அங்கே யுனிகோடு சப்போர்ட் இல்லை.

    ஒரு வழியாக மொபைல் போன் மூலம் இணைய வாசலை தொட்டு இதோ அப்டேட்.. இனிமேல் கதை முடியும் வரையில் தினம் அப்டேட் வரும்.. அதற்கு நான் பருப்பு.. ச்சே பொறுப்பு !!!!
     
    7 people like this.
  8. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male

    11. மாலதி அனிருத்

    "நீ ஏன் அருகே இருக்கும்பொழுது
    உன் சுவாசக் காற்று
    என்னை மோதி மோதி கொல்கிறது..
    இனிமேல் என்னோடு நீ இருக்கையில்
    உனக்காகவும் சேர்த்து நானே சுவாசித்துக்கொள்கிறேன்.."

    "டீ போடவா.."

    ஆபீஸிலிருந்து அலுத்து ஓய்ந்து வீடு சேர்ந்த அருள்மொழியை அந்த கேள்வி மொத்தமாய் திகைக்கவைத்தது. ஏனென்றால் கேட்டவள் வானதி. ஒரு மாதமாக அருளிடம் வானதி சரியாக பேசுவதில்லை. இன்று சீக்கிரமாக வீட்டிற்கு வந்து, டீ போட்டு தரவா என்று கேட்டாள் அருள் பாவம் என்ன தான் செய்வான். ஆச்சரியத்திலிருந்து மீண்டு தலையை லேசாக ஆடினான்.

    "ஹா ஹா பயப்படாதிங்க. இப்போ நல்லா டீ போட கத்துகிட்டேன்." உற்சாகமாய் பேசிக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

    சற்று நேரத்தில் ஏலக்காய் வாசனை காற்றில் மிதந்து வந்தது. அதே நேரம் அருளின் கைபேசி 'போ நீ போ' என்று ஒலித்தது. திரையில் அனிருத் சிரித்துக்கொண்டிருந்தான். கையில் பேசலாம வேண்டாமா என்று முடிவு செய்வதர்க்குள் கையில் இரண்டு கோப்பைகளுடன் வானதி வந்தாள். மறு பரிசீலனை இல்லாமல் போனை கட் செய்தான். வானதி நீட்டிய தேனிர் கோப்பையை வாங்கிகொண்டான்.

    "உப்பெல்லாம் சரியா போட்டாச்சா..??" டீயை உறிஞ்சிக்கொண்டே வானதியை பார்த்து கேட்டான்.

    "ஏய்.. அடி வாங்க போறீங்க நீங்க.." முகத்தை லேசாக கடுமையாக வைத்துகொண்டாள். ஆனால் அவள் வெட்கப்படுகிறாள் என்பதை அவள் கன்னங்கள் காட்டிகொடுத்தன.

    அருள்மொழிக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றால் மறுபக்கம் குழப்பமாய் இருந்தது. ஏன் இந்த திடீர் மாற்றம். அவளிடமே கேட்டுவிடலாமா என்று நினைத்தான். அதற்குள் மறுபடி அனிருத் கைபேசியில் கூபிட்டம். மீண்டும் போனை எடுத்து கட் செய்தான்.

    "நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அருள்." முகம் முழுக்க புன்னகையை அருள்மொழியை பார்த்து வானதி கூறினாள்.

    சோபாவுக்கு முன் இருந்த டீபாயில் கோப்பையை வைத்துவிட்டு உட்கார்ந்தாள். அலுவலகத்தில் இருந்து வந்து முகம் மட்டும் அலம்பியிருந்தாள் போல. நெற்றியில் போட்டு இல்லை, கண்களில் மை இல்லை. காதோரம் புதைந்திருந்த முடி கற்றையில் கொஞ்சம் ஈரம் மிச்சம் இருந்தது. சிகப்பு நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். கண்களில் கொஞ்சம் சோர்வு இருந்தாலும் அதனையும் மீறி ஒரு உற்சாகம் அவள் முகம் முழுதும் மின்னியது.

    "நீங்க என்ன நினைக்கரிங்க..?? நாற்காலியில் ஒரு கை மீது தன் கையை வைத்து அதில் கன்னத்தை வைத்துகொண்டாள். பார்வையில் ஒரு கேள்விக்குறியை சேர்த்துகொண்டாள்..

    "நான் என்ன நினைக்கறேனா. புரில வானதி.." உண்மையில் அருளுக்கும் புரியவில்லை தான். என்ன ஆயிற்று இந்த பெண்ணிற்கு. திடீரென்று சிரித்து சிரித்து பேசிகிறாள் .. என்னென்னமோ சொல்கிறாள்..

    "உங்க கிட்ட அனிருத் அண்ணா இன்னும் சொல்லலையா..??" கொஞ்சம் பரிதாபாமாக கண்களை வைத்துகொண்டாள். அந்த பார்வையில் சம அளவில் ஒரு கிண்டலும் இருந்தது.

    "இல்லையே.. ஏதும் சொல்லல.. என்னாச்சு.. " ஒரு வேலை அந்த முக்கியமாம விஷயத்தை சொல்லதான் போன் செய்தானோ..

    வானதி அருளிடம் வந்து அவன் அருகில் உட்கார்ந்தாள். அவ்வுளவு அருகில் வானதி உட்கார்ந்தது, அருளிற்கு ஒரு கனம் மூச்சு திணறியது. "அனிருத் அண்ணா மாலதி கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டாங்க. மாலதி எஸ் சொல்லிட்டா.."

    அருள்மொழிக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியவில்லை. அடப்பாவி ஊமைகுசும்பா.. அதற்குள் சொல்லிவிட்டாயா.என்கிட்டே ஒரு வார்தை சொன்னியா.

    "அந்த பையன் என்கிட்டே சொல்லவே இல்ல. எப்போ நடந்தது இதெல்லாம்.."

    "இன்னிக்கு தான். ஆபிஸ் புட் கோர்ட்ல.. அனிருத் அண்ணா கொஞ்ச நேரம் முன்னாடி போன் பண்ணங்க. மாலதி வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ஆனால் எனக்கு விஷயம் தெரியும் னு அவளுக்கு தெரியாது." வானதி சொல்லிகொண்டிருக்க மீண்டும் அருளின் கைபேசி ஒலித்தது. அருள் சிரித்துகொண்டே போனை உயிர்பித்தான். அனிருத் அன்று நடந்ததை அருளிடம் ஒப்பிக்க ஆரம்பித்தான்.

    "நீ என்ன வேணா சொல்லு. என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிய டா.." குரலில் மிரட்டலை வைத்துக்கொண்டு வானதியிடம் கண்களால் சிரிதுகொண்டிருந்தான். வானதி நண்பர்களின் விளையாட்டு சண்டையை ரசித்துகொண்டிருந்தாள். காலிங் பெல் ஒலிக்க வானதி ஓடிச்சென்று திறந்தாள். அவர்கள் எதிர்பார்த்த மாலதி வெளியே சிரிதுகொண்டிருந்தாள்.

    "ஓகே ஓகே என் சிஸ்டர் வந்தாச்சு நான் உனக்கு அப்புறம் கால் பண்ணி டோஸ் விடறேன்.." போனை கட் செய்தான்.

    மாலதிக்கு புரிந்து விட்டது, அனிருத் எல்லாவற்றையும் மனப்பாட செய்யுள் போல ஒப்பித்துவிட்டான் போலும்.. வானதி ஓடி வந்து மாலதியை கட்டி அணைத்துக்கொண்டாள்

    "ஹம் .. ஒரு வழியா அவரே உன் கிட்ட சொல்லிட்டாரா.." மாலதியின் முழங்கையை கிள்ளினாள்.

    வெடுக்கென்று அவள் கையை பிடித்துகொண்டாள் .. "வானி சும்மா இரு. வலிக்குது. அருள் இந்தாங்க ஸ்வீட்.." என்றபடி தன் கைப்பையிலிருந்து ஒரு பெரிய டைரி மில்க் சாக்லேட்டை எடுத்து நீட்டினாள். அதை வாங்கிக்கொண்டு அவளுக்கு கை கொடுத்தான்.

    "ஹேய்.. அவருக்கு மட்டும் தான. உன் பெஸ்ட் பிரென்ட் நான். எனக்கு இல்லையா.. ம்ம்.." தலையை சாய்த்துக்கொண்டு குறும்பாக அவளை பார்த்து முறைத்தாள்.

    "என்ன டி. இப்படி பிரிச்சு பேசற.. யார்க்கு குடுத்தாலும் ஒன்னு தான?" மாலதி இயல்பாக கேட்க வானதி வாய்மூடி கொண்டாள்.

    "சரி உக்காரு. டீ போடறேன்.." என்று வானதி நகர.. "ஐயோ உப்பு போட்ட டீ யா.." என்று மாலதி கேட்டதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

    அரைமணி நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு மாலதி கிளம்பினாள். அவளை அனுப்பிவிட்டு அருள் எதிரே வந்து உட்கார்ந்தாள்.

    "ஐ அம் சோ ஹாப்பி.." அருள்மொழிக்கு வானதியை அப்படி பார்க்கவே ஆசையாக இருந்தது. இப்படி சிரித்த முகத்துடன் பார்க்க எத்தனை அழகாய் இருக்கிறாய். என் இத்தனை நாட்களாய் பேசாமல் கொன்றாய்.

    "ஆனா கொஞ்சம் பயமா இருக்கு.." கொஞ்சம் அவள் தொண்டையில் உற்சாகத்தின் அளவு கீழிறங்கியது.

    "ஏன் வானதி.." இந்த நிலைமையில் வானதி என்ன சொன்னாலும் செய்துவிட கூடிய நிலையில் இருந்தான்.

    "எல்லாம் நார்மல் ப்ராப்ளம் தான். இப்போ லவ் னா உடனே ஒதுக்குவங்களா.. ஸ்டேடஸ், காஸ்ட் னு ஆயிரம் வித்யாசம் பாப்பாங்க. போதா குறைக்கு மாலதி தமிழ் கூட இல்ல. அவள் தெலுகு பாமிலி.."

    "அனிருத் கூட தமிழ் கிடையாது.." அருள் சொன்னதும் வானதி கண்களை விரித்தாள். "அவர் தெலுகு வா..?"

    "இல்லை. கன்னடம்.." வானதி சோர்ந்தாள்.

    "மாலதி அப்பா வ சமாளிச்சிடலாம். அவங்க அம்மா தான் கொஞ்ச கஷ்டம்.. இல்ல ரொம்பவே கஷ்டம்.."

    "அனிருத் வீட்ல பெருசா பிரச்சனை வராது. நான் சொன்னா கேப்பாங்க. "

    "ம்ம்.. நாம தான் ரெண்டு பேர் வீட்லயும் பேசி இவங்க கல்யாணத்த நடத்த வைக்கணும் அருள், ப்ளீஸ் .." கெஞ்சலாக கண்களோடு அருளை பார்த்தான். அந்த பார்வைக்காக எதையுமே செய்யலாம் என்று தோன்றியது..

    சற்று நேரம் அவளையே பார்த்தான். கேட்காதே பெண்ணே, ஆணையிடு. "கஷ்டம தான்.. இருந்தாலும் பேசுவோம்.. முடிப்போம்"

    ***********

    கஷ்டம தான்.. இருந்தாலும்

    பேசினார்கள்..

    முடித்தார்கள்...

    முடித்தார்கள் என்றாலும் அத்தனை லேசில் முடியவில்லை. அனிருத் வீட்டில் விஷயத்தை ஆரம்பித்தான் அருள், ஒரு வாரமாக பேச்சுவர்த்தை நடந்து கடைசியாக மாலதி மருமகளை வர ஒப்புக்கொண்டனர். ஆனால் மாலதி வீட்டில் விபரீதங்கள் தான் நடந்தன. வானதி மாலதியின் தந்தையிடம் அவர்கள் காதலை பற்றி சொல்லியது தான் தாமதம். மாலதியின் அம்மா மாலதியை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லி வீட்டில் உக்கார வைத்துவிட்டாள். வேறு ஜாதி, வேறு மொழியா.. முடியவே முடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாள். பின்பு மாலதியின் தாய் மாமாவை பிடித்து அவரை முதலில் சமாதானம் செய்து அவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாத அவகாசத்தில் வெற்றிகரமாய் பெண் பார்க்கும் படலமும் நடந்து முடிந்தது. இத்தனைக்கும் அருள்மொழியும் வானதியும் தான் அலையோ அலையென்று இரண்டு வீட்டிற்கும் மாற்றி மாற்றி நடந்தனர். மாலதியும் அனியும் கொஞ்சம் கூட கவலை இன்றி இரவு முழுவதும் செல் போன் பில்லை ஏற்றிக்கொண்டிருந்தனர்..

    சித்திரை மாதத்தின் முதல் முகூர்த்தத்தில் மாலதி அனிருதின் திருமணம் இன்று நடந்து முடிந்தது.. மாலதியும் அனிருதும் வானதி அருளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வந்தார்கள் என்றால் பார்த்துகொல்லுங்கள். போட்டோ, விருந்து என்று மற்ற வழக்கங்கள் எல்லாம் பொறுமையாக முடிய, அனிருத் அவளோடு எதிர்பார்துகொண்டிருந்த இரவு வந்தது.

    மஞ்சள் பூசிய முகத்தில் கொஞ்சம் குங்குமம் பூசியது போல சிவந்து உட்கார்ந்திருந்தாள் மாலதி. சந்தன நிறத்தில் அணிந்திருந்த பட்டு புடவையின் தலைப்பை விரல் இருக்கில் விட்டு முறுக்கி கொண்டிருந்தாள். இருவர் உள்ளத்திலும் சொல்லமுடியாத மகிழ்ச்சி. ஒரு வழியாக இன்று கணவன் மனைவியும் ஆகிவிட்டார்கள்.

    "வானதி அருள் இல்லானா.. நம்ம கல்யாணமே நடந்துருக்காது. இல்ல அனிருத்.."

    "ஹம்.. ஆமா மாலு.."

    மாலதி க்ளுகென்று சிரித்தாள் "என்னது மாலு வா..??"

    "என்.. அப்படி கூப்பிட கூடாதா.. நீ மட்டும் அனி னு கூபிட்ற இல்ல.." நெருங்கி வந்து மாலதியின் அருகில் உட்கார்ந்தான். மாலதி லேசாக வியர்த்தாள், விலகினாள்.

    "பேச்சை மாத்ததிங்க.. நான் என்னமோ சொல்லிகிற்றுந்தேனே.." நெற்றியை சுருக்கி யோசிக்க அரமித்தாள்

    "அருள் வானதி இல்லைனா.. " அனிருத் அவளுக்கு எடுதுகொடுக்க அவள் தொடர்ந்தாள்.. "ஆங்.. ஆமா.. இல்லான நம்ம கல்யாணமே நடந்துர்க்காது..

    "ம்..ம் .." என்று சொல்லிகொண்டே அவளுடைய விரல்களை லேசாக பற்றினான். அந்த தீன்டலை மாலதி விழி மூடி ஒரு கனம் ரசித்தால். அந்த அன்பின் தொடுதலை ஏற்றுக்கொண்டாள். அனிருத் அவளை இன்னும் நெருங்கினான்.

    "நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்களேன்.." அவன் பிடியில் இருந்த விரல்களை லேசாக விடுவித்தாள்.

    "கேட்காலாமே.. சொல்லு.. " பேச்சுக்கு சொன்னனே தவிர அனியின் கவனமோ வேறு எதிலோ தான் இருந்தது.

    அமர்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்தாள். "சுத்தமா அருள் கிட்ட பேசாம இருந்த வானதி நம்ம கல்யாண ஏற்பாடு நடக்க நடக்க நல்லா பேச அரமிசிட்டா.."

    "ஆமா ஆமா.. இப்போலாம் வானதி அருள் கூட அவன் பைக் ல தான் ஆபிஸ் வரா.. முன்ன சண்டை போட்டுகிற்றுந்தா.. இப்போ அருளுக்கு நல்லா பிரென்ட் ஆயிட்டா.." சொல்லியபடி அவனும் கட்டிலை விட்டு எழுந்து கொண்டான்.

    மாலதி அனிருதிடம் திரும்பினாள்.. "ஹ்ம் வெறும் பிரண்டா மட்டும் தான் இருக்கா. பஸ்ட் அப் ஆள், வானதி அருள் நம்ம பிரண்ட்ஸ்."

    "ம்..ம்.." அனிருத் மாலதியை நெருங்கினான்.

    "அதோட இல்லாம நம்ம கல்யாணம் அவங்களால தான் நடந்துச்சு.." மாலதி சொல்லிகொண்டே பின்வாங்கினாள்

    "ம்..ம்.." மாலதியின் தோலை பற்றி தன்னிடம் மென்மையாக இழுத்தான்.

    "சோ.. அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா கணவன் மனைவியா வாழனும். அதுக்கு நாமதான் பொறுப்பு என்ன சொல்றிங்க.." தன்னை இரு கைகளிலும் பற்றிக்கொண்ட அனிருதின் கண்களை பார்த்து பேசினாள்.

    "ம்.. நிச்சயமா.." அவள் கன்னங்களை பிடித்து அவள் உதடுகளை நெருங்கினான்.

    கொஞ்சம் பின்வாங்கிய மாலதி தன் ஒற்றை விரலை அனிருதின் மார்பில் வைத்து அவனை பின்னே தள்ளினாள். "அதுக்கப்புறம் தான் நமக்கு பஸ்ட் நைட்.. ஓகே.." என்றபடி அவனை பார்த்து கண் அடித்தாள்.

    "என்னது.." இருநூறு சதவிகிதம் அதிர்சியானான் அனி.. "அப்படினா.. இன்னிக்கு..??"

    ஒரு போர்வையும் தலையணை தூக்கி அவன் மீது வீசினாள்.. "குட் நைட்.." அவனிடம் பதில் எதிர்பார்க்காமல் தானும் ஒரு போர்வைக்குள் ஒளிந்துகொண்டாள்..

    ( To be continued ... )
     
    Caide, niranjanii, kirthika99 and 9 others like this.
  9. umadeviks

    umadeviks New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    4
    Trophy Points:
    3
    Gender:
    Female
    very interesting....waiting for the next episode....
     
  10. novelparvathi

    novelparvathi New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    hi Jaga I have read all the episodes together..... very interesting story... waiting for the next episode...
     

Share This Page