1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாணம் to காதல் !!

Discussion in 'Stories in Regional Languages' started by jaga3421, Mar 18, 2012.

  1. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    quite inetesting jaga. waiting for the next.
     
  2. Priya501

    Priya501 Senior IL'ite

    Messages:
    143
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hello Sir,

    Where is the next part cudnt see any link or story here
     
  3. harinee

    harinee Bronze IL'ite

    Messages:
    50
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Hello Jaga sir,

    We are still waiting for the next update!
     
  4. Special

    Special Silver IL'ite

    Messages:
    776
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Very nice story...i like your way of narration a lot :) waiting for next episode eagerly...
     
  5. soudha

    soudha Junior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    nice story,waiting for next update
     
  6. alagarsamy

    alagarsamy Bronze IL'ite

    Messages:
    137
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Female
    very nice story sir...read the complete story today and its so nice and intresting..good kavithai and title in front of every episode...every episode ends with a good suspense / good punch..

    good going....v r njoying...
     
  7. ramaninl

    ramaninl Bronze IL'ite

    Messages:
    33
    Likes Received:
    34
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Hi jaga

    Please post the 8th part soon.
     
  8. Visasri

    Visasri Platinum IL'ite

    Messages:
    1,103
    Likes Received:
    1,146
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hi Jaga,

    post the next update soon
     
  9. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Anaivarukkum nandri + periya sorry.. indha update poda konjam thaamadham agivittadhu..
    mannithu arulumaaru thaazmaiyudan kettu kolgiren :)


    அனைவருக்கும் எனது இனிய நந்தன ஆண்டு வாழ்த்துக்கள்
     
    1 person likes this.
  10. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    8. நீயா ??

    "பூக்கள் செடியில் இருப்பது தான் அழகு
    என்று சொல்லி பறிக்காமல் விட்டுவிட்டாய்..
    அந்த பூக்கள் உன்னை சேராமல் வாடி வதங்கி நின்றன,
    என்னை போல.."


    "நீ நல்லாருப்பியா..??"

    "மாட்டேன்"

    "நீயெல்லாம் உருப்புடுவியா..??"

    "மாட்டேன்"

    "நீ வெளங்குவியா..."

    "இல்ல...."

    "டேய் நீயெல்லாம் ஒரு பிரெண்டா .."

    அது வரை தலை குனிந்து பதில் சொல்லிகொண்டிருந்த அனிருத் சடாரென்று நிமிர்ந்தான்.

    "அருள், என்ன வார்த்த சொல்லிட்ட டா. என் நண்பனோட மனைவி அவனோட அன்ப புரிஞ்சிகமாற்றானு தெரிஞ்ச..."

    "மவனே இதுக்கு மேல பேசினா மூக்க அறுத்துடுவேன் .. பாவி பயலே. அது எப்படி டா கொஞ்சம் கூட டைமிங் மிஸ் ஆகாம சொதப்பர.."

    "நான் வேணும் னு பண்ணனா .. சத்தியமா இனிமே தண்ணி அடிக்கவே கூடாது டா சாமி.." அருளுக்கு பாவமாக இருந்தது. சரி போகட்டும், வேண்டுமென்றா செய்தான். தன் மீதுள்ள பாசத்தில் தானே அவளிடம் கடுமையாக பேசிவிட்டான்.

    "சரி சரி விடு.. போகட்டும்.." என்றபடி அவன் தோளில் கைபோட்டு தட்டி குடுத்தான்.

    "இல்ல மச்சி.. நான் உன் வைப் கிட்ட சாரி கேட்கணும் டா", நடந்துகொண்டிருந்த அருள் சட்டென்று நின்றான்.

    "ஏன்டா இதுவரை ஏழரை போட்டியே அது போதாதா..."

    "என்னடா அருள், என்மேல நம்பிக்கை இல்லையா.. "அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.

    "வேணாம் டா.. அவ ஏற்கனவே உன்மேல செம்ம கடுப்புல இருக்கா.." எச்சரித்தான் அருள்.

    "நோ.. இத வளர விட கூடாது. நீ யாரு.. என் பால்ய நண்பன். உன் வைப் கு என் மேல கொஞ்சம் கூட நல்ல அபிப்ராயம் இல்ல னா, அப்புறம் உன்ன என்கூட பேசக்கூடாது பழக கூடாது னு கண்டிஷன் போட்டுடுவா.. நீயும் தலைய ஆட்டிட்டு , நம்ம பிரண்ட்ஷிப்ப கட் பண்ணிடுவ.. அதுக்கப்புறம் இந்த அகண்டு விரிந்த சிறுசேரி ல, நான் மட்டும் தனியா பைத்தியம் பிடிச்சவன் மாதிரி சுத்தி திரிவேன். ஒரு காலத்துல என் இன்னொரு உயிரா இருந்த நீ, என்ன பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லாம, கொஞ்சம் கூட கவலைப்படாம.."

    "ஐயோ, என்னதான் டா சொல்ல வர.."

    "சாரி கேட்டு சரண்டர் ஆக போறேன் டா.."

    அருளிற்கு அது தேவை இல்லை என்று பட்டது.. "வேணாம் அனி.. இத்தோட இத விற்றலாம்.."

    "ப்ச்.. ப்ச்.. நீ பயப்படாத.. பீ பாசிடிவ்.."

    அருளிற்கு அதுற்கு மேல் அவனை தடுக்க தோன்றவில்லை. "சரி ஏதோ பண்ணு.." என்றபடி காபி வாங்க சென்றான். அனிருத் தன் கைபேசியில் வானதியின் நம்பரை அழைத்து விட்டு காத்திருந்தான்.

    இரண்டு நிமிடங்கள் கழித்து அருள் இரண்டு காபி கப்பை கையில் எடுத்து வந்தான். அனிருத் போனில் பேசிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவன் முகம் வெளிறி போயிருந்தது..

    "என்னடா அதுக்குள்ள பேசிட்டியா .." ஒரு கப் காப்பியை உறிஞ்சுகொண்டு இன்னொரு கப்பை அவன் முன் வைத்தான்.

    அனிருத் பேசவில்லை.. அமைதியாக தன் கப்பை எடுத்துகொண்டான்.

    "என்னடா பேசாம உக்காந்துருக்க.. ஒரு மாதிரி வேற இருக்க.."

    அனிருத் சற்று நேரம் அருளை உற்று பார்த்தான். சத்தம்போட்டு பெரிதாக சிரித்தான். அருள் குழம்பினான், இவனுக்கு மூளை ஏதும் பிரண்டு போச்சா..? ஆன அதுக்கும் மூளை வேணுமே..

    "டேய்.. ஏன்டா இப்படி சிரிக்கற.."

    "சிரிக்கமா என்னடா பண்ண சொல்ற.. என்னையே இப்படி பண்றா.. நீயெல்லாம் செத்த.."

    "இப்போ என்ன நடந்துச்சு னு.."

    அனிருத் நிறுத்தினான். "நானே சொல்றேன்... போன் பண்ணேன். உன் ஆள் எடுத்தா.."

    "டேய் ஆள் னு சொல்லாத டா.. என்னமோ ரொம்ப கொச்சையா இருக்கு.."

    அனிருத் மீண்டும் பெரிதாய் சிரித்தான். "ஒ.. ஆள் னு சொன்னா கொச்சையா இருக்கோ சாருக்கு.. டேய் போன் எடுத்ததும் என் பேரை சொன்னேன். அவ்வுலோதான். உன் ஆள் இங்கிலீஷ் கேட்ட வாரத்திலே திட்டிட்டா டா.. ரெண்டே வார்த்தைல என்ன சைலேன்ட் ஆகிட்டா.." மிரட்சியும், பயமும், ஆச்சர்யமும் இன்னும் பல உணர்வுகள் கண்ணில் எதிரொலித்து கொண்டிருக்க மூச்சி வாங்கி சொல்லி முடித்தான்.. அருளால் சுத்தமா
    கட்டுப்படுத்த முடியவில்லை, வெடித்து சிரித்துவிட்டான்.

    அதே நேரம்.. வானதி ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். 'ச்ச.. என்ன இப்படி நடந்துகிட்டோம். அவர் என்ன சொல்ல வரார் னு அமைதிய கேட்ருக்கலாம். கண்டிப்பா நேத்து பேசினதுக்கு சாரி கேக்க தான் போன் பனிருப்பார். இப்படி திட்டிட்டோமே..'

    இன்னொரு மனம் அதனை மறுத்து பேசியது.. 'நீ பண்ணது கரக்ட் தான் வானதி. பின்ன இவனுங்க பாட்டுக்கு தண்ணி போட்டு நம்ம கிட்ட வம்பு வலப்பானுங்க. நாம கம் னு அதெல்லாம் காதில வாங்கணுமா.. நமக்கென்ன தலை எழுத்தா ..'

    இருந்தாலும் வானதிக்கு மனம் கேட்கவில்லை. ஒரு மன்னிப்பு கேட்டு விடலாம் என்று அருள் நம்பருக்கு கால் செய்தாள்.

    வானதியிடம் இருந்து முதல் முறை அழைப்பு வந்ததும் அருள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று விட்டான். பட்டனை தட்டி காதில் வைத்தான்..

    "ஹலோ .."

    வானதி ஒரு நொடி தயங்கினாள் .. "ம்.. அருள் ??"

    முதல் முறையாக அருளின் பெயரை உச்சரித்ததும் தன்னையே அறியாமல் முகம் சிவந்தாள்..

    அருள்மொழியோ கிட்ட தட்ட பறந்து கொண்டிருந்தான்.. "சொல்லுங்க.. வானதி.."

    "என்னது.. சொல்லுங்க வா.." வானதியின் குரல் உஷ்ணமானதை போல் இருந்தது. இப்பொழுது தானே அனி வாங்கி கட்டிகொண்டான் என்ற பயம் வேறு..

    "ஹிஹி.. சொல்லு வானதி.. சாப்பிட்டச்சா.. ”

    "ம்ம்.. ஆச்சு.. இட்லி நல்லாருந்துச்சு.." அருள்மொழிக்கு இதுவே போதும் என்றிருந்தது.. முதல் முறையாக அவன் சமையல் பற்றி பேசுகிறாள்..

    "வந்து.. உங்க பிரென்ட் அனிருத் கால் பண்ணாரு.." லேசாக இழுத்தாள்

    அருள் பயந்து, பிளேட்டை மாற்றி போட்டான் "என்னது, அந்த ராஸ்கல் உனக்கு மறுபடி போன் பண்னானா.. இன்னிக்கு மார்னிங் தான் அவன வார்ன் பண்ணேன். அவ்ளோ திமிரா அவனுக்கு, அவன இப் என்ன பண்றேன் பார்.

    இதை அருகில் அமர்ந்து கேட்டு கொண்டிருந்த அனிருத் ஆடி போனான்.. 'அட பாவி நெசமா என்ன கழட்டிவிட்டுடுவ போலற்குதே.. அது எப்படி டா பிகர் வந்தா பிரண்ட்ஸ இப்படி டீல்ல விட்டட்ரிங்க..'

    "ஹேய் இல்ல.. ஆக்சுவலா அவர் மேல எந்த தப்பும் இல்ல.. நான் தான் கொஞ்சம் கோபமா நடந்துகிட்டேன். அவர் இருக்காரா.. ஐ ஹவ் டு அஸ்க் சாரி.." கெஞ்சலாக பேசினாள் வானதி.

    "ஒன் மினிட்.." என்று அவளிடம் கூறி விட்டு அருகில் இருந்த அனிருத்தை சத்தம் போட்டு அழைத்தான்..

    "அனிருத்.. கொஞ்சம் இங்க வரியா.."

    அனிருத் அவனை பார்த்து முறைத்தான். 'பக்கதுல தானட இருக்கேன். என்ன ஏன்டா பத்து ஊரு தள்ளி இருக்கிறவன கூபிட்ற மாதிரி கூபிட்ற.. இவ வேற என்னலாம் சொல்லி இப் திட்டபோறாலோ' என்று புலம்பியபடி போனை கையில் வாங்கினான்.

    "ஹேலோ.."

    அனிருத் முடிப்பதற்குள் வானதி பேசினாள்.. "ஹாய் அண்ணா.. ஐ ஆம் ரியல்லி சாரி.."

    வானதி அண்ணா என்று அழைத்ததும் அனிருத் நெகிழ்ந்தான். "ஐயோ நீ ஏன் சாரி கேக்கற.. என் மேலயும் தப்பு இருக்கு நான் தான் சாரி.."

    "இல்ல னா.. நான் உங்க கிட்ட அப்படி பேசிர்கவும் கூடாது.. ஐ அம் ரியல்லி ரியல்லி சாரி.."

    "இட்ஸ் ஓகே வானதி.. லெட்ஸ் போர்கேட் தட். மன்டே ஆபிஸ் வர இல்லையா.. அப்போ பாக்கலாம்.."

    "நாளைக்கு சாட்டர்டே லீவ் தானே.. நீங்க லஞ்ச் க்கு வரணும்" கண்டிப்பான அன்புடன் கூறி போனை வைத்தாள் வானதி.

    அருள், அனிருத் இருவருக்கும் ஒரு பிரச்சனை முடிந்து நிம்மதியாய் இருந்தது...

    ******************

    சனிக்கிழமை மதியம் நெருங்கி கொண்டிருந்தது.. அருள்மொழி சமையலறையில் தன் திறமையை காட்டி கொண்டிருந்தான். வானதி அவன் அருகில் நின்று கொண்டு அவன் கேட்கும் உப்பு, சீரகம், மிளகு போன்றவற்றை தப்பு தப்பாக எடுத்துகொடுத்து கொண்டிருந்தாள். அருளுக்கு மிகவும் வித்யாசமாக இருந்தது. இந்த வீட்டில் தினமும் அவன் தான் சமைப்பான். ஆனால் இன்று வானதி அருகில் இருந்தது அவனை மேலும் சுருசுருப்பாகியது.

    சிக்கன் துண்டுகளை மிளகு, உப்பு, தயிர் கலந்து மூடி போட்டு ஓரமாய் வைத்தான்.

    வானதி ஒரு கேரட் துண்டை கடித்தபடி கேட்டாள் ,"இந்த கூக்கிங் லாம் எங்க கதுக்கிடிங்க..:"

    கடலைமாவை தண்ணியில் கரைத்துவிட்டு நிமிர்ந்தான். "சின்ன வயசுலேர்ந்தே இண்டரஸ்ட் தான். அப்படியே அம்மா சமைக்கும் போது பக்கத்துல இருந்து ஹெல்ப் பன்வேன். சென்னை வந்ததும் ஹோட்டல் சாப்பாடு சுத்தமா பிடிக்காம போயிடுச்சு.. அதான் நானே சமைக்க அரமிச்சிட்டேன்.."

    வானதி சிந்தி கிடந்த தண்ணீரில் கோலம் போட்டுகொன்டே சொன்னாள், "எனக்கு சுத்தமா சமையல் வராது.. டீ மட்டும் தான் போடா தெரியும்.."

    அருள் பொங்கி வந்தா சிரிப்பை அடக்கி கொண்டான்..

    வானதி அதை கவனித்தி விட்டாள். அருகில் இருந்த கரண்டியை தூக்கி அவன் மீது வீசினாள். அதை லாவகமாக பிடித்தான் அருள். "ஹேய் என்ன பண்ற.."

    "கிண்டல் பண்ணாதிங்க அருள் ப்ளீஸ்.." முகத்தை சுருக்கி கொண்டு வானதி சிணுங்கினாள். அருள்மொழிக்கு அவளை அப்படியே பார்த்துகொண்டிருக்கலாம் போல் இருந்தது. அழகாய் இருக்கிறாள், மென்மையாய் பேசுகிறாள், தேவைப்பட்டால் கோபமும் படுகிறாள், அதுவும் அழகாக. இவள் அருகில் இருக்கும் போது உலகமே அழகாய் தெரிவதாய் ஒரு மாயம் வருவது ஏன்.. ஒருவேளை உண்மையில் அழகான உலகம் இவள் வருகையால் தான் எனக்கு புலப்படுகிறதோ..

    "ஹலோ.." அருள் முகத்திற்கு நேராக விரலை சொடுக்கினாள்.. அறல் மீண்டு தன்னிலைக்கு வந்தான்.

    "என்ன என்னமோ யோசனை.. " வெங்காயத்தை நறுக்கி கொண்டு கேட்டாள் .. அருள் சரிதானே தவிர ஒன்றும் சொல்லவில்லை. வாணலில் என்னை ஊற்றி காய வைத்தான்.

    "நீங்க நல்லா சமைக்கரிங்க.." கீழே குனிந்து கொண்டு வானதி கூறினாள்.

    "ஆங்.. என்னது" இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அருள் தடுமாறினான். "என்ன சொன்ன.."

    தலை குனிந்து கொண்டிருந்த வானதி நிமிர்ந்து இவனை ஓரக்கண்ணால் பார்த்து "ம்ம்.. சொரக்காய் ல உப்பில்ல னு சொன்னேன்" என்று கூறி சிரித்தாள். அருள் அவள் சிரிப்பை ரசித்தான். இவள் பின்னே இப்படி மனம் அலைகிறதே.. நான் இவளை காதலிக்கிறேனா ?? அப்படி என்றால் இவள் ??

    அருளின் கவனத்தை காலிங் பெல் கலைத்தது .. "உங்க பிரென்ட் வந்துட்டார் நெனைக்றேன்.." நகர்ந்து சிங்கில் கை கழுவினாள். அருளின் கழுத்தில் இருந்த துண்டில் அவசரமாய் கை துடைத்து கொண்டாள். வானதியின் மேல் இருந்து வந்த வாசம் அருளை தலை சுற்ற வைத்தது. லேசாய் அவனை பார்த்து புன்னகைத்து

    விட்டு கதவின் அருகில் சென்றாள், அருள் பிந்து தொடர்ந்து வந்தான்.

    தாழ்ப்பாளை இறக்கி விட்டு கதவை திறந்தாள். வெளியே கையில் ஸ்வீட் பாக்சுடன் நின்று கொண்டிருந்தான் அனி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் அதிர்ந்து முகம் மாறினார்கள். ஒரே நேரத்தில் இருவர் உதடும் உச்சரித்தது.. "நீயா..."

    (தொடரும்...)
     
    kavithas, vaidehi71, Caide and 7 others like this.

Share This Page