1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யாருக்கு யாரோ?

Discussion in 'Stories in Regional Languages' started by devivbs, Jan 10, 2012.

  1. lovelyme

    lovelyme Silver IL'ite

    Messages:
    388
    Likes Received:
    245
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Dear Devi,

    All the very bests for your new story.

    I would like to mention a small correction in the introduction you gave if you don't take me wrong.

    Its not "Irattai Kizhavi". But its "Irattai Kilavi" as in Pallikkoodam. Please don't feel offended.

    Regards

    Simi..
     
    1 person likes this.
  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi devi how are u?
    waiting for your story.
    will have personnel chat when u are free
     
  3. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Story is going super. Dont stop soon..but post more episodes per day..
     
  4. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    யாருக்கு யாரோ?
    2.jpg


    பகுதி 1:

    பல வண்ண சேலைகளைக் கட்டிக் கொண்ட அந்தி பொழுதில் பச்சை பட்டாடை தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலை பிரதேசமான 'Switzerland of India' என்றழைக்கப்படும் மூணாரில் பொன்மாலை 5.30 மணியளவில் தென்றலின் தாலாட்டில் சூரியன் உறக்க கிறக்கத்தில் மறைந்துக் கொண்டிருக்க, பனி இனிதாய் யூக்கலிப்ட்டஸ்(Eucalyptus) மரங்களின் இடையே இறங்கி கொண்டிருந்தது.
    மூணார் -
    எங்கு திரும்பினாலும் கண் கவரும் தேயிலை தோட்டங்கள்,அருவிகள்,யூக்கலிப்ட்டஸ் தோட்டங்கள் என்று பசுமை நிறைந்த மலை பிரதேசம்.
    மதுரபுழா, நலதண்ணி,குண்டலி என்ற மூன்று ஆறுகள் சங்கமம் ஆகுமிடம் என்பதால் மூணார்(மூன்று ஆறுகள் என்ற அர்த்தம்) என்று அழைக்கப்படுகிறது.
    கேரள மாநிலத்தில் இருக்கும் மூணார் இந்தியாவின் முக்கியமான மலை பிரதேசங்களில் ஒன்று. தொடக்க காலத்தில் தமிழர்கள் தான் இருந்தாலும் நாளடைவில் கேரள மக்களில் ஆதிக்கம் அதிகமாகவே 'மலையாளம்' முதல் மொழியாகவும் 'தமிழ்' இரண்டாவது மொழியாகவும் இருந்து வருகிறது.

    இந்த ரம்மியமான அமைதியான மாலை பொழுதில் பனியின் நடுவே அழகு தேவதையாய் நடந்து வந்து கொண்டிருந்தாள் சவிதா.
    இன்றோடு(06Feb2005) சவிதா பெற்றோருடன் மூணார் வந்து 1 மாதம் நிறைவடைகிறது. சவிதாவினுள் சில குழப்பங்கள்.
    "ஏன் சில சமயம் அம்மாவோ அப்பாவோ ஒழுங்கா பதில் சொல்ல மாட்டிக்காங்க?
    ஏன் கடவுளே எனக்கு மட்டும் இந்த நிலை?"
    என்று தன்னுள் பேசியபடியே வந்தவள் எதிரே வந்த இளைஞனின் மீது மோதியது கூட அறியாதவளாய் தன் சிந்தனையில் சுழன்ற படியே நடையை தொடர்ந்தவளின் மோனநிலையை கலைத்தது ஒரு குரல்.

    "சை!இதுகளால் தான் பெண் குலத்திற்கே கேவலம்! எப்படி வேணும்னு மோதிட்டு தெரியாத மாதிரி போறா?" என்ற இளம் பெண்ணின் குரலில் திரும்பினாள் சவிதா.

    அந்த இளம் பெண் அந்த இளைஞனின் கையை பற்றியபடி அவனுக்கு நெருக்கமாக நின்று கொண்டிருந்தாள். இந்த காட்சியை கண்டதும் ஒரு அருவெறுப்புடன் சவிதா,
    "அதை யார் சொல்றது?" என்று அந்த பெண்ணை ஏளனமாக பார்த்தபடி கேட்க,
    "ஏய்! செய்றத செஞ்சுட்டு என்னை..........." என்று சீரிய அந்த இளம் பெண்ணை அந்த இளைஞன் தடுத்தான்.

    "ஷ்..மகி..அவங்க வேணும்னு மோதுன மாதிரி தெரியல..விடு" என்றதும் சட்டென்று அவன் முகத்தை பார்த்தாள் சவிதா. அப்போது ஒரு புன்னகையுடன் அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். உடனே பார்வையை தாழ்த்தி பனியினுள் மறைந்தாள் சவிதா.

    "என்ன சித்து........." என்று அந்த மகியின் கோபம் கலந்த கொஞ்சும் குரல் தன்னை தொடரவும் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள் சவிதா.

    சிறிது தூரம் சென்ற பின்,
    "என்ன சித்து பேசாம வர! என்ன யோசனை?"

    "எல்லாம் பனியில் மறைந்த அந்த அழகியை பற்றிய யோசனை தான்" என்றான் இலகுவாக. மகி என்ற மகிஷா அவனை முறைக்கவும்,
    "ஏய்! அவ அழகினா நீ அழகில்லைன்னு அர்த்தமா?" என்று நகைத்தான்.
    சித்து என்ற சித்தார்த்தனை முறைத்துக் கொண்டே வந்தவள் எதிரே வந்த இளைஞனின் மீது மோதவும் வாய் விட்டு சிரித்தான் சித்தார்த்தன். அவன் நகைத்ததின் காரணம் புரியவும் தன் மீதே கோபம் வந்தது மகிஷாவிற்கு, அதையும் சித்தார்த்தனிடமே காட்டினாள்.

    மகிஷா மோதிய இளைஞன்,
    "ஹாய் சித்து! இவங்க நெற்றிக்கண் திறக்குமளவிற்கு என்னடா பண்ண?"

    "அதுவாடா................." என்று சித்தார்த்தன் தொடங்கவும் மகிஷா அவன் கையை கிள்ளினாள்.
    "ஆ...... சரி சரி... சொல்லல.... விடு" என்றான் சித்தார்த்தன்.

    மகிஷாவை காட்டி கண்களால் 'யார்?' என்று கேட்டான் சித்தார்த்தனின் நெருங்கிய நண்பன் கௌத்தமன்.
    "சொல்லிருக்கேன்லடா... என் சைல்ட்ஹூட் பிரெண்ட்.. அப்பாவோட கிளொஸ் பிரெண்ட் ரமேஷ் அங்கிள் டாட்டர் மகிஷா"

    "ஓ.. அந்த வாயாடி மகியா!" என்றதுடன் நிறுத்திருக்கலாம் ஆனால் அவனுக்கு என்ன தோன்றியதோ மகிஷா சித்தார்த்தனை பிடித்திருப்பதை பார்த்தபடியே,
    "சரியான உடும்பு பிடி" என்று நகைத்தான்.

    சட்டென்று சவிதாவின் பார்வையும் கூற்றும் நினைவிற்கு வந்தது மகிஷாவிற்கு.சித்தார்த்தன் சவிதா பக்கம் பேசியது,அவளை அழகி என்றது, இப்போது கௌத்தமனின் வார்த்தைகள் எல்லாம் சேர்ந்து கொள்ள கோபத்தின் உச்சிக்கு சென்றாள் மகிஷா. அதே கோபத்துடன் கௌத்தமனை பார்த்து,
    "சிலர் சித்துவின் பணத்திற்காக நட்பு என்ற பெயரில் உடும்பாக சித்து கூடவே அழைகிறார்கள்" என்றாள்.

    "மகி.. மைன்ட் யுவர் வோர்ட்ஸ்... என்ன பேச்சு இது?" என்று சீறினான் சித்தார்த்தன்.
    மகிஷாவின் கண்களில் அதிர்ச்சி கலந்த சிறு பயம் தெரிந்தது.
    சிறு வயதிலிருந்தே யாரிடத்து கோபத்தை காட்டினாலும் மகிஷாவிடம் சித்தார்த்தன் கோப பட்டதில்லை, யாரையும் அவளிடத்து கோப பட விட்டதில்லை. அவளது பெற்றோர்களை கூட அவளை திட்ட விட்டதில்லை. அப்படிபட்டவன் இன்று அதட்டவும் அவளுக்கு கண்கள் சிறிது கலங்க தொடங்கியது.

    சித்தார்த்தன் "சாரி டா கௌதம்" என்றதும் மனதினுள் 'கௌதம் னா கௌதமனா?' என்று கேட்டுக் கொண்டாள் மகிஷா. சித்தார்த்தனோ தணியாத சினத்துடன்,
    "இவனை போய் என்ன.................."
    "சித்து... விடுடா... அவங்க ஏற்கனவே கோபத்துல இருந்தாங்க.. நான் வப்பிழுத்துருக்க கூடாது.. நான் பேசியதும் தப்பு தானே.. பாவம் அவங்க.. உன் முதல் கோபத்தில் எப்படி கலங்கிடாங்க பாரு" என்றதும் விழிகளை சட்டென்று உயர்த்தி கௌத்தமனை பார்த்து உடனே தாழ்த்தினாள் மகிஷா.
    சித்தார்த்தனின் கோபம் தணிந்தது, மகிஷாவை மென்மையாக பார்த்தான். அவளோ விழி நீரை தடுத்து தரையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    மகிஷா கௌத்தமனை பார்த்ததில்லையே தவிற அறியாதவள் இல்லை. அவர்கள் இருவரின் நேர்க்கத்தில் அளவு தெரியாதபோதும் கௌத்தமன் சித்தார்த்தனின் உண்மையான நண்பன் என்பதை அறிந்தவள் தான். கௌதமனின் 'முதல் கோபம்' என்ற சொற்கள் சித்தார்த்தனுடன் அவனது நெருக்கத்தை உணர்த்த தன் தவறு புரிந்தது. மேலும் கௌதமன் தன் நிலைமையை சரியாக புரிந்து கொண்டதும், அவளது தவறான வார்த்தையை பெரிது படுத்தாததும், தனக்காக சித்தார்த்தனிடம் பேசியதும் மனதை உறுத்த, மெல்ல நிமிர்ந்து கௌதமனிடம்,
    "சாரி..வந்து..வெரி சாரி" என்றாள்.

    கௌத்தமன்,"நான் தான் சாரி கேட்கணும்.. நான் தானே ஆரம்ச்சு வைத்தேன்.. சாரி"

    மகிஷா, "இல்ல.. நீங்க கிண்டலுக்கு தானே சொன்னீங்க.. நான் தான்.. சாரி"

    கௌத்தமன், "ஓகே..ஓகே.. எதுக்கு மாற்றி மாற்றி சாரி கேட்டுட்டு.. ஒன்னு பண்ணலாமா? ரெண்டு பெரும் இதை மறந்து, பிரெண்ட்ஸ் ஆகிறலாமா?"
    "பிரெண்ட்ஸ்!" என்று கை நீட்ட, மகிஷா உறுத்தல் அகன்று அவனது கை குலுக்கி ஒரு மென்னகையுடன்,
    "பிரெண்ட்ஸ்" என்றாள்.

    இவர்கள் உரையாடலை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சித்தார்த்தன் நண்பனை வித்யாசமாக பார்க்கவும், கௌத்தமன்,
    "என்னடா புதுசா பார்க்குற மாதிரி பார்குற?"

    "ஹ்ம்ம்.. இன்னைக்கு நீ வித்யாசமா தானே தேரிற" என்றான். சித்தார்த்தன் கூற வருவது புரியவும் ஒரு புன்னகையுடன்,
    "நீ படிக்குற காலத்துல மகிஷா பற்றி நிறைய கூறியதால் எனக்கு இவங்க புதுசா தோன்றல" என்றதும் சித்தார்த்தன் ஒரு புன்னகையுடன் கை குலுக்கி விடை பெற்றான்.

    அதன் பிறகு கௌத்தமன் தன் வழியில் செல்ல சித்தார்த்தனும் மகிஷவும் தங்கள் வழியில் சென்றனர்.

    சித்தார்த்தன் - மூணாரில் 2 பங்களா, 3 தேயிலை தோட்டங்கள், 2 ரப்பர் தோட்டங்கள், 1 யூக்கலிப்ட்டஸ் தோட்டம், 2 டி பாக்டரிகள் , 1 மருத்துவமனை, சில நிலங்கள், கொடைக்கானலில் 1 பங்களா, ஊட்டியில் 1 பங்களா,1 தேயிலை தோட்டம் என்று சொல்லி கொண்டே போகுமளவிற்கு சொத்துக்களை கொண்ட, மூணார் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சுதர்சனத்தின் ஒரே மகன்.
    தந்தைக்கு தொழிலில் உதவியாக இருப்பதோடு தன் சுய முயற்ச்சியில் 1 ரிசார்ட், 1 ரப்பர் பாக்டரி, பல டீலேர்ஷிப்ஸ் தொடங்கி அதையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறான் சித்தார்த்தன். B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் சென்னை அண்ணா யுனிவேர்சிட்டியில் கௌத்தமனுடன் ஒன்றாக படித்தவன் MBA படிப்பை ஆஸ்திரேலியாவில் 2002யில் படித்து முடித்தான்.

    மகிஷா - B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். அவளது தந்தை ரமேஷும் மூணார் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவர். ரமேஷ் சுதர்சனத்தின் நெருக்கிய நண்பர். நண்பர்களுக்கு சம்பந்தி ஆகும் ஆசை உண்டு. மகிஷாவின் படிப்பு முடிந்ததும் திருமணத்தை நடத்துவதாக அவர்களுக்குள் பேசியுள்ளனர்.

    கௌத்தமன் மற்றும் சவிதாவின் முழு விவரம் கதையின் ஓட்டத்தில் தெரிந்து கொள்வோம்.
    இந்த நால்வரில் யாருக்கு யார் மேல் காதல் வருகிறது? யார் யாருக்கு ஜோடி? என்பது தான்
    "யாருக்கு யாரோ?" கதை.


    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/156277-comments.html

    என்ற தளத்தில் கூறவும்
    நன்றி..
    உங்கள் தோழி,
    -தேவி.

     
    Last edited: Jan 11, 2012
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nalla thuvkkam.
    keep rocking.
     
    1 person likes this.
  7. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குறிப்பு : முதல் பகுதியில் சித்தார்த்தனும் கௌதமனும் சென்னை Anna Universityயில் படித்ததாக சொல்லியிருந்தது தவறு.. அவர்கள் சென்னை SRM Universityயில் படித்தார்கள். 'edit option' disabledஆ இருப்பதால் மாற்ற முடியவில்லை.

    பகுதி 2:
    'எனக்கு இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இது வேறயா?
    1st டைம் பார்க்குற பொண்ணுட எப்படி பேசுறா! அவள போல தானே அவ நினைப்பும் இருக்கும்.. அவளும் அவ நின்ன தினுசும்! இதுல என்ன சொல்றா, உண்மைய சொன்னா இதுல கோபம் வேற.. எல்லாம் என் நேரம்.. ஹ்ம்ம்..
    அவள கூட விட்டுறலாம், ஏதோ அவ ஆள தக்க வச்சுக்க நினைத்தானு ஆனா அவன் இருகனே! பேரென்ன சித்து தானே சொன்னா.. கிரிக்கெட் ல சித்து சிக்ஸர் அடிச்சா இவன் பொண்ணுங்க கிட்ட சிக்ஸர் அடிப்பான் போல.. பக்கத்துல ஒரு பொண்ணோட ஒட்டிகிட்டு நிற்கும் போதே என்ன பார்த்து இழிக்குறான்.. சை! ரெண்டும் என்ன பிறவிகளோ!
    யார் எப்படி இருந்தா எனக்கென்ன? நான் ஏன் அவங்கள பத்தியே யோசிச்சுட்டு இருக்கேன்... எனக்கு என் குழப்பங்கள் போதாதா? ஹ்ம்ம்ம்......." என்று பெருமூச்சு விட்டாள் சவிதா.

    "என்ன சவி நீ விடுற பெருமூச்சுல நான் பறந்துருவேன் போலிருக்கே!" என்ற குரலில் நிகழ் காலத்திற்கு வந்தாள். தன்னுள் யோசித்தபடியே வந்தவள் வீட்டிற்கு வந்துவிட்டதை அப்போது தான் உணர்ந்தாள். ஒரு புன்னகையுடன்,
    "இப்படி ஒல்லியா இருந்தா அப்படி தான் பறப்பீங்க.. அங்கிள் உங்கள கவனிக்குறதே இல்லையா?" என்று தன் தந்தையின் நெருங்கிய நண்பர் ராஜனின் மனைவி சுதாவிடம் கேட்டாள்.

    "ஹே! அவ ஒல்லியா இருந்தா நான் கவனிக்கலனு அர்த்தமா? அவ இப்படி ஒல்லியா இருக்குறது தான் அவளுக்கு அழகே" என்று மனைவியை பார்த்தார் ராஜன்.

    "இந்தாங்க அங்கிள்" என்று தனது கைக்குட்டையை நீட்டினாள்.
    "ரொம்ப வழியுது தொடச்சுகொங்க" என்று நகைத்தாள். ராஜன் ஆள் காட்டி விரலால் சவிதாவை மிரட்டினார்.

    "ஆண்டி இனி நான் உங்கள அக்கா னு தான் கூப்ட போறேன்.." என்றதும் சிறு நிசப்த்தம் நிலவியது.
    நிலைமையை மாற்ற ராஜன் பேச்சை தொடங்கினார்.
    "நீ எப்....... ஏன் இந்த முடிவுக்கு வந்த?" என்று மிக சிறு தடுமாற்றத்துடன் கேட்டார்.

    சவிதா, "இவ்வள எங் அண்ட் எனர்ஜெட்டிக் ஆ அழகா இருக்கும் போது எப்படி அங்கிள் ஆண்டி னு
    கூப்புடுறது?" என்றதும் ராஜனுக்கும் சுதாவிற்கும் இடையே சிறு அதிர்ச்சி கலந்த பார்வை பரிமாற்றல் நடந்தது. பின் சுதா சவிதாவை கட்டிக்கொண்டு "நீ எங்............ சவி.. நீ அப்படியே கூப்டு" என்றார்.

    சவிதா மனதினுள்,'ஏன் இவ்ளோ உணர்ச்சிவச படுறாங்க? கண் கூட சிறிது கலங்கி இருக்கோ! ஏதோ சொல்ல ஆரம்
    ச்சு பேச்ச மாத்துன மாதிரி இருக்கே! அங்கிள் கூட தடுமாறுன மாதிரி இருந்துதே! இல்ல இதுலாம் என் கற்பனை தானா?' என்று குழம்பியவள் அவர்களை பார்த்த போது 'கற்பனை தான்' என்று சொல்வது போல் அவர்ள் இருவரும் இயல்பாக இருந்தனர்.

    சவிதாவின் அன்னை கீதராணி, "போய் கை கழுவிட்டு வா.. டிப்பன் சாப்பிடலாம்"

    "ஹ்ம்ம்.. சரி மா" என்று யோசனையுடனே சென்றாள் சவிதா.

    ராஜன்,"கோபி எப்ப வருவான்மா?"

    கீதராணி,"வர நேரம்
    தான் அண்ணா" என்று கூறவும் சவிதாவின் தந்தை மதனகோபால் உள்ளே நுழைந்தார்.

    ............................................................................................................................................................................................................................................................................................................

    'நான் வித்யாசமா தெரிறேனா? இயல்பா பேசுறது கூட வித்யாசமா? ஹ்ம்ம்.. அவன் சொல்றதும் சரி தானே.. இப்பலாம் நான் அப்படி தானே இருக்கேன்.. எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்! ஹ்ம்ம்.. எல்லாம் என் விதி' என்று நொந்துக்கொண்டே தான் இருக்கும் வீட்டை நோக்கி சென்றான் கௌத்தமன்.

    .............................................................................................................................................................................................................................................................................................................

    மகிஷா, "என்ன சித்து இன்னும் கோபம்போகலையா? நான் தான் சாரி சொல்லிட்டேனே!... எனக்கு கௌதம் னு தெரியாது.. அதான்.."

    சித்தார்த்தன்,"கோபம்லாம் இல்ல.. நான் கௌத
    ம் பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்.. நான் இன்னைக்கு உன்ட ரொம்ப கோபபட்டுடேன்ல.. சாரி மகி" என்று அவன் வருந்தவும் அதை பொறுக்காமல்,

    "ஹ்ம்ம்...
    ஒன்னு பண்ணலாமா? ரெண்டு பேரும் இதை மறந்து, பிரெண்ட்ஸ் ஆகிறலாமா? பிரெண்ட்ஸ்!" என்று கௌதமனை போலவே நடித்து காட்டவும் சித்தார்த்தன் சிரித்தான்.

    பின் வருத்தத்துடன் பேச தொடங்கினான்,
    "அவன் ரொம்ப பாவம் மகி.. ரொம்ப கஷ்ட பட்டுருக்கான்.. நான் ஆஸ்திரேலியா போனதும் காண்டக்ட்
    இல்லாமயேபோச்சு.. அப்பறம் சென்னைல இந்த நியூ இயர் jan1 தான் நான் அவன பார்த்தேன்.. பார்க்க கூடாத நிலையில் பார்த்தேன்.
    நான் dec31 நைட் 12 மணிக்கு மெரீனா பீச்ல இருந்தப்ப கடல்ல தற்கொலைக்கு முயற்சி செய்த ஒரு ஆளை காப்பாத்தி கரைக்கு கொண்டு வந்து பார்த்
    தா அது கௌதம்.. ஆடி போயிட்டேன்...."
    மௌனம் நிலவியது...சொல்லும் போதே சித்தார்த்தனின் கண்கள் சிறிது கலங்கியது.. எதற்கும் கலங்காத சித்தார்த்தன் கலங்கவும் ஆச்சிரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது மகிஷாவிற்கு.. தைரியம் குடுப்பது போல் அவன் கைகளை அழுத்தினாள் மகிஷா.

    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    யாருக்கு யாரோ? - comments

    என்ற தளத்தில் கூறவும்
    நன்றி..
    உங்கள் தோழி,
    -தேவி.
     
    1 person likes this.
  8. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பகுதி 3:

    சித்தார்த்தன் இந்த அளவிற்கு வருந்துகிறான் என்றால் இதை விட அதிகமா கௌதமன் கஷ்ட பட்டிருக்கணும் என்று இப்போது கௌதமனுக்காக வருந்தியது மகிஷாவின் மனது.

    "கௌதம் ரொம்ப தைரியமானவர்னு சொல்லிருக்கியே சித்து" என்று கம்மியே குரலில் கேட்டாள் மகிஷா.

    "ஹ்ம்ம்.. தைரியமானவன் தான் மகி.. மனதைரியமும் மனதிடமும் உடையவன் தான், அதனால் மட்டுமே துக்கத்திலிருந்து மீண்டு இப்போது நடமாடி கொண்டிருக்கிறான்."

    "அப்படி பட்டவர் எப்படி தற்கொலைக்கு முயன்றார்?"

    "இதே தான் நானும் கேட்டேன்....." சித்தார்த்தனின் சிந்தனை அன்றைய கடல்கரை சம்பவத்திற்கு சென்றது.

    Dec31 அன்று மாலையில் ஒரு டீலர்ஷிப் ஒப்பந்தத்திற்காக சென்னை சென்றிருந்த சித்தார்த்தன் ஒப்பந்தம் நல்லபடியாக முடிந்த சந்தோஷத்தில் கடற்கரையில் அமர்ந்து கௌதமனுடன் அங்கு வந்த நாட்களை நினைத்து கொண்டிருந்தான். அப்போது யாரோ கடல் அலைகளின் வேகத்தை பொருட் படுத்தாமல் நீரில் முன்னேறி செல்வது தெரிந்த போது முதலில் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, புத்தாண்டு துவக்கத்தை கடலில் நீராடி சந்தோசமாக துவங்குகிறார் என்றே நினைத்தான் ஆனால் 'body language' என்று ஒன்று உண்டே! அதை வைத்து தற்கொலைக்கு முயற்சிக்குறார் என்ற யூகத்தில் கடல் நீருக்குள் சென்று அந்த ஆளை இழுத்து வந்து கரையில் போட்டவன் அது கௌதமன் என்று தெரிந்ததும் பெரிதும் அதிர்ந்தான்.

    கௌதமனோ தான் கரைக்கு வந்துவிட்டதையோ தன் எதிரில் இருப்பது தன் நண்பன் என்பதையோ உணராதவனாய் பித்து பிடித்தது போல் கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    சித்தார்த்தன் கௌதமனின் கன்னத்தில் சில அடிடிகளை குடுத்து அவனை உழுக்கி,
    "டேய் கௌதம்.. கௌதம்.. என்ன பாருடா" என்று பலமுறை கத்தவும் அவனது குரல் ஒருவாறு கௌதமனின் மூளையை எட்டியது.
    சுயயுணர்விற்கு வந்தவனுக்கு ஒன்றும் புரியாமல் விழித்தான். பின்,
    "ஹே! சித்து.. நீ இங்க எங்க?"

    "எப்பா ஒருவழியா பேசுனியே!" என்று நிம்மதி மூச்சை விட்டு கௌதமனின் அருகில் தொப்பென்று அமர்ந்தான் சித்தார்த்தன்.
    அப்போதும் புரியானவனாய் கௌதமன்,
    "என்னடா.. என்னாச்சு?" என்று நண்பனை வினவினான்.

    சித்தார்த்தன் கோபமாக,
    "என்னாச்சா? நீ எதுக்கு டா இப்போ சூசைட் அட்டெம்ப்ட் பண்ண?"

    "என்னது நானா? சூசைட் அட்டெம்ப்ட்டா?" என்று அதிர்ந்த நண்பனை குழப்பத்துடன் பார்த்தான் சித்தார்த்தன்.

    "பின்ன.. இல்லையா?" என்று நடந்ததை சித்தார்த்தன் கூறினான்.

    "ஓ...."

    "என்ன டா ஓ?"

    "ச்ச்.. ஒன்னுமில்லைடா விடு.. நீ எப்படி இருக்க? பார்த்து எத்த வருஷமாச்சு!" என்றதும் சித்தார்த்தன் ஒன்றும் பேசாமல் கெளதமனையே ஆழ்ந்து நோக்கினான்.

    தன் முயற்சி தோல்வியே இவன் விஷயம் அறியாமல் விடமாட்டன் என்று கௌதமன்,
    "ஹ்ம்ம்.. சொல்றேன்.. நான் சூசைட் அட்டெம்ப்ட்லாம் பண்ணல.. கோபமா இறைவனிடமும் இந்த கொடுமைக்கார கடலிடமும் சில கேள்விகளை கேட்டபடியே என்னையும் அறியாமல் கடலுக்குள் சென்றுவிட்டேன் போல.. அப்பத்தான் நீ என்ன பார்த்துருக்கணும்" என்று சிரித்தான்.
    நண்பனின் சிரிப்பின் பின் ஏதோ ஒரு பெரும் சோகம் இருப்பது சித்தார்த்தனுக்கு நன்றாகவே தெரிந்தது ஆனால் அது என்னவென்று தெரியாமல் நண்பனுக்காக வருந்தினான்.

    "உனக்கு என்ன கோபம்?"

    "ப்ளீஸ் சித்து.. இப்ப இத பத்தி பேசவேண்டாமே" என்று மீண்டும் கடலை பார்த்தான்.

    "நான் வரலைனா என்ன ஆகிருக்கும்?"

    "........"

    "நான் உன் பெஸ்ட் பிரென்ட் இல்லையாடா?"

    "சித்து ப்ளீஸ்.."
    சித்தார்த்தன் விடுவதாக இல்லை. கெளதமனையே ஆழ்ந்து நோக்கினான்.

    "நீ மட்டும் தானே என் பிரென்ட், பெஸ்ட் பிரென்ட் எல்லாம்" மௌனம் நிலவியது.
    கௌதமன் தொடர்ந்தான்,
    "உன்ட சொல்லாம வேற யார்ட்ட சொல்ல போறேன்?
    (மனதினுள் 'சொல்லவும் தான் யாரு இருக்கா?' என்று நினைத்தான்)
    இப்ப வேண்டாம் டா ப்ளீஸ்.."

    கௌதமனின் கெஞ்சும் பார்வையில் சித்தார்த்தன் அந்த பேச்சை விட்டான்.
    நண்பனின் வலியை குறைக்கவோ தீர்க்கவோ முடியாவிட்டாலும் கௌதமன் தற்கொலை முயற்சி செய்யவில்லை என்பதே அப்போதைக்கு சித்தார்த்தனுக்கு சிறு நிம்மதியை அளித்தது.

    "ஆஸ்திரேலியா எப்படி இருந்தது? லைப் எப்படி போகுது?"

    கௌதமன் பேச்சை மாற்ற விரும்புவதை உணர்ந்து சித்தார்த்தன் கௌதமனின் கேள்விகளுக்கு பதிலளித்தான்.
    கடந்த நான்கு வருடங்களின் நிகழ்ந்த பல சம்பவங்களை சித்தார்த்தன் கூறினான். நண்பனை சிரிக்க வைத்தான். என்ன தான் கௌதமன் சிரித்தாலும் அவன் கண்களில் சோகம் தெரிந்தது.
    சிரிக்கும் போது வாய் மட்டும் சிரிக்காமல் கண்களும் சேர்ந்து சிரித்து முக மலர்ச்சியுடன் கூட இருப்பவர்களையும் சேர்த்து சிரிக்க தூண்டும் ஆற்றல் கொண்ட தன் நண்பனா இப்படி இருக்கிறான் என்று சித்தார்த்தனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

    சித்தார்த்தனின் மனநிலையை சரியாக புரிந்து கௌத்தமன் ஒரு புன்னகையுடன்,
    "விடு சித்து.. நான் சரி ஆகிருவேன்.. நோ ப்ரோப்லேம்.. இதலாம் எனக்கு ஒன்றும் புதுசில்லையே! என்ன இந்த முறை கொஞ்சம் பெரிய அடி.. பட் ஐ வில் ஓவர் கம் இட்.. டோன்ட் வொர்ரி டா.."

    'ஒன்றும் புதுசில்லையே' என்ற வார்த்தைகளை கேட்டதும் சித்தார்த்தன்,
    "அங்கிள் எப்படி இருக்காங்க?" என்று வினவ கௌதமன் மீண்டும் சோக கூட்டுக்குள் அடங்கி கடலை வெறித்தான்.
    சித்தார்த்தனுக்கு இப்போது ஏதோ புரிவது போல் இருந்தது, தன் யூகம் சரியாக இறுக்க கூடாதே என்று இறைவனை வேண்டினான்.


    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    யாருக்கு யாரோ? - comments

    என்ற தளத்தில் கூறவும்
    நன்றி..
    உங்கள் தோழி,
    -தேவி.
     
  9. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பகுதி 4:

    'தன் யூகம் சரியாக இருக்க கூடாதே' என்று சித்தார்த்தன் இறைவனை வேண்டினாலும் நடப்பு வேறாக இருந்தது.
    கௌதமனின் மௌனம் தன் யூகத்தை சரி என்று உணர்த்த,
    'இவனுக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ! கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா?' என்று மனதினுள் இறைவனை திட்டி தீர்த்தன் சித்தார்த்தன்.

    நண்பனின் நிலையையும் மனநிலையையும் நன்கு புரிந்துகொண்ட சிந்தார்த்தன்,
    "நான் இருக்கேன் டா உனக்கு" என்றான்.
    இதை கேட்டதும் கௌதமனின் நெஞ்சம் குளிர்ந்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
    'நீ தான் டா என் உயிர் நண்பன்.' என்று மனதினுள் சொல்லிக்கொண்டன். சித்தார்த்தனின் கைகளை இறுக பற்றிக்கொண்டான்.
    சித்தார்த்தன் தயக்கத்துடன், "எப்படி?" என்று வினவ கௌதமன் தன் வலகரத்தால் கடலை காட்டினான்.

    சித்தார்த்தன்,"சுனாமியா?"
    கௌதமன் கண்களை இறுக முடி திறந்தான். அதற்கு மேல் 'எப்படி' என்று விளக்கம் கேட்கவில்லை சித்தார்த்தன்.

    தன்னையும் மகனை போல் நினைத்து ஒரு நண்பனை போல் பழகிய கௌதமனின் தந்தையின் இழப்பு சித்தார்த்தனையும் பாதித்தது. கௌதமனின் வலியும் சேர்ந்து கொள்ள சித்தார்த்தனின் கண்கள் கலங்கியது, நண்பனுக்கு தெரியாமல் துடைத்து,
    "இன்னைக்கு நான் மூணார் கிளம்புறப்ப என்னுடன் நீ வர" என்றான் உறுதியுடன்.

    கௌதமன் மென்மையாக புன்னகைக்கவும்,
    "என்ன?" என்று கேட்டான் சித்தார்த்தன்.

    "வரேன்.. எனக்கும் இந்த சென்னையில் இருக்க பிடிக்கவில்லை, மூணார் வர தான் விரும்புறேன்" என்று ஒரு பெருமூச்சு விட்டன.

    "என்னடா.. வேற ஏதோ மறைக்குற நீ"
    மீண்டும் கௌதமன் புன்னகைத்தான்.

    "சொல்லுடா"

    "ஒன்னுமில்லைடா.. பழைய நினைவுகள் தான்.. வேறெதுவுமில்லை"

    "ஓகே.. நீயா சொல்லணும்னு நினைக்குறப்ப சொல்லு" இதற்கும் மெல்லிய புன்னகையே பதிலாக கிடைத்தது.

    "இன்னைக்கு வர முடியாது டா.. நான் நெக்ஸ்ட் மன்த் வரேன்"

    "எதுக்கு இந்த சென்னைலயே இருந்து பழைய நினைவுகளில் கஷ்டபடவா?" என்று கோபமாக கேட்டேன் சித்தார்த்தன். சித்தார்த்தனின் கோபத்தில் இருந்த அக்கறை கௌதமனுக்கு இதமாக இருந்தது.

    "நான் என் ஜாப் ரிசைன் பண்ணனும்..நான் இந்த கம்பெனில ஜாயின் பண்ணி ஒன் மன்த் தான் டா ஆகுது(என்று சொல்லும் போதே தான் பெங்களூரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு சென்னை வந்த காரணத்தை நினைத்த போது நெஞ்சம் பெரிதும் வலித்தது கௌதமனுக்கு,பழைய நினைவை விலக்கி பேச்சை தொடர்ந்தான்) சோ formalities லாம் முடிச்சுட்டு............."

    "3months சலரி கேட்டாலும் குடுத்தறலாம்"(கௌதமனை நன்கு புரிந்துகொண்டிருந்ததால் 'நான் குடுக்குறேன்' என்று சித்தார்த்தன் சொல்லவில்லை)

    கௌதமன் ஏதோ சொல்ல வாய் திறக்கவும்,
    "ஏதும் சொல்லாத, உன்ன தனியா விட்டுட்டு நான் நிம்மதியா மூணாரில் இருக்க முடியாது, ஒரு மாசம் சென்னைலையும் இருக்க முடியாது. ஒன் வீக் டைம் உனக்கு, உன் ஜாப் ரிசைன் பண்ண இல்ல, வீட்ட வாடகைக்கு விட்டுட்டு என் கூட கிளம்புறதுக்கு" என்றதும் கௌதமன் சித்தார்த்தனை பார்த்தான்.

    "என்னடா வீட்டை பற்றி நாம யோசிக்கவே இல்லையே! இவன் எப்படி யோசிக்குறான்னு நினைக்குறியா? உன் இழப்பும் அதிர்ச்சியும் உன் மூளையை வேலை செய்ய விடல.. மூணார் வா எல்லாம் சரியாகிடும்" என்று மென்மையாக புன்னகைத்தான். பதிலுக்கு கௌதமன் புன்னகைத்தான். தன் இழப்பிற்கு பிறகு முதல் முறையாக உண்மையாக சிறிது புன்னகைத்தான்.

    சித்தார்த்தன் கௌதமன் கூடவே இருந்து வீட்டை வாடகைக்கு விட ஏற்பாடு செய்தான்.ஒரு மாத சம்பள பணத்தை குடுத்து தன் வேலையிலிருந்து விலகினான் கௌதமன். சித்தார்த்தனுடன் மூணார் கிளம்பினான். இருவரும் 06Jan2005 மூணார் வந்தனர்.

    "கௌதமன் அம்மா?" என்று வினவினாள் மகிஷா.

    "கௌதம் 12th படிச்சுட்டு இருந்தப்பவே அவன் அம்மாவை இழந்துட்டான்."
    இப்போது கௌதமனிற்காக பெரிதும் வருந்தினாள் மகிஷா. வாலிப பருவத்தின் தொடக்கத்தில் இந்த இழப்பில் எப்படி தவித்திருப்பான் என்று வருந்தினாள். எந்த வயதில் அன்னையை இழந்தாலும் அந்த இழப்பு பெரிது தானே.

    "அவன் இழப்பு பெரிது தான் மகி.. அவனுக்கு ஒரு அக்கா இருந்தாங்க. அவங்க இவனை விட 8 வயசு பெரியவங்க, பேர் கலையரசி. அவங்க ரொம்ப அழகா இருப்பாங்க. பெருக்கு ஏத்தபடி அவங்க முகமும் கலையா இருக்கும். அவங்க ரொம்ப அமைதி, மென்மையானவங்க,பெயருக்கு ஏத்தபடியே கலையில் அரசி தான் னு கௌதம் சொல்லுவான். அவங்க ரொம்ப அருமையா வீணை வாசிப்பாங்கலாம், நல்ல பாடுவாங்களாம். அவங்களால் தான் கௌதம் இசையை ரொம்ப நேசிச்சான். இவனும் நல்ல பாடுவன், ஆடுவான். அம்மாவை விட இவன் அக்கா கிட்ட தான் ரொம்ப close, அக்கா மேல் பாசம் அதிகம்.
    இவன் 11th படிச்சுட்டு இருந்தப்ப தான் இவன் வாழ்வில் முதல் இழப்பை சந்தித்தான். காதல் தோல்வில அக்கா சூசைட் பண்ணிகிட்டாங்க. அக்கா இறந்தபின் இவனது இயல்பு மாறியது, சிரிப்பு மறைய தொடங்கியது.
    அம்மா ஏற்கனவே ஹார்ட் patient, அம்மா அக்கா போன துக்கத்தில் 5 மாசத்துல இறந்துட்டாங்க. இழப்பிற்கு மேல் இழப்பு இவனுக்கு." என்று பெருமூச்சு விட்டான் சித்தார்த்தன்.

    "இந்த இழப்பிற்கு மேல் அவர் எப்படி தான் மெரிட்ல படிச்சாரோ?"

    "அக்காவிற்கு இவன் MBA படிக்கணும்னு ஆசை, அம்மாவும் இறக்குறதுக்கு முன் "நல்ல படிக்கணும், அக்கா ஆசை படி MBA படிக்கணும்" சொன்னாங்களாம்.
    அவங்க ஆசைக்காக படித்தான் ஆனால் தனக்கென்று எந்த ஒரு ஆசையும் இல்லாமல் சிரிக்காமல், பிறர் தன்னை பரிதாபத்துடன் பார்ப்பதோ பரிதாப உணர்ச்சியுடன் தன்னுடன் பழகுவதோ பிடிக்காமல் தனக்கென்று ஒரு உலகத்தை அவனே ஏற்படுத்தி தனிமையிலே வாழ்ந்தான். என்னை மட்டும் தான் அவன் நண்பனாக ஏற்று கொண்டான்."

    "எப்படி நீங்க ரெண்டு பேரும் ரொம்ப திக்(ஒரு அழுத்தம் குடுத்தாள்) பிரெண்ட்ஸ் ஆனிங்க?"

    "ஏன் உன்ன திட்டுற அளவிற்கு எப்படி திக் பிரெண்ட்ஸ் ஆனோம்னு தெரியனுமா?" என்று சித்தார்த்தன் சிரிக்கவும், மகிஷாவிற்கு வெக்கமாக இருந்தது, அவளில் பார்வை நிலத்தில் நிலைத்தது. சித்தார்த்தன் அவளது தோளை தட்டி,
    "கூல்.. மகி.. எனக்கு நீங்க ரெண்டுபேருமே திக் பிரெண்ட்ஸ்" என்றான். மகிஷா சங்கடத்துடன் மெலிதாக சிரிக்கவும் சித்தார்த்தன் புன்னகையுடன் பேச தொடங்கினான்.

    "நாங்க நாலு வருஷம் ஒன்னா படிச்சாலும் நான் முதல் முதலில் அவன்ட பேசியது 2nd இயர் 4th செம் எண்டுல தான்" என்றதும் மகிஷா வியப்பாக சித்தார்த்தனை பார்த்தாள்.







    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    யாருக்கு யாரோ? - comments

    என்ற தளத்தில் கூறவும்
    நன்றி..
    உங்கள் தோழி,
    -தேவி.
     
  10. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Devi,

    seekaram next update post pannunga.........Eager to read...

    Vasupradha.S
     

Share This Page