1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Letter Love Story : உயிரைத் தொலைத்தேன் உன்னில் நானோ - 1

Discussion in 'Stories in Regional Languages' started by divyasselvan, Dec 28, 2011.

  1. divyasselvan

    divyasselvan Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    181
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அன்புள்ள காதலருக்கு,

    தேக்கி தேக்கி வைத்திருக்கும் காதலை என்ன செய்வதென்று தெரியாமல், உங்களுக்கு மடல்களாக எழுத ஆரம்பித்துவிட்டேன். இது என்னமோ எல்லாம் எனக்கு புதிதாக இருக்கிறது. இக்கடிதங்கள் உங்களை வந்து சேருமா, என் காதல் உங்களுக்கு புரியுமா என்பதெல்லாம் இன்னும் காலம் விடையளிக்காத பதில்களாகவே இருக்கிறது. அது நடக்கும் போது நடக்கும் என்று நானும் எனக்கு எத்தனை தடவை தான் சமாதானம் செய்து கொள்வது...

    இந்த மடல் பயணம் விரைவில் முடிய வேண்டும். இதெல்லாம் எனக்கு தற்காலிக தீர்வாகவே தெரிகிறது. உங்கள் செவிகள் தான் என் மனதில் எழும் எல்லா எண்ணங்களுக்கும் சரணாலயமாக இருக்க வேண்டும். அது இது என்று என்னவெல்லாமோ சொல்லத் தோன்றுகிறது உங்களிடம். இந்த யோசனை இத்தனை நாட்களாக ஏன் தோன்றவில்லை எனக்கு. ஒரு வருடமாய் மனதில் நிழலாடும் இந்த காதலை ஒரே நாளில் கொட்டி விட முடியுமா என்ன..

    சரி.. எதில் இருந்து ஆரம்பிப்பது நான். என்னைப்பற்றியா உங்களிடம் எனக்கு பிடித்தது பற்றியா.. நீங்கள் என் வாழ்வில் வந்த பிறகு நானே எனக்கு மங்கலாக தான் தெரிகிறேன். கண்ணில் இருப்பது எல்லாம் நீங்கள் மட்டும் தான். ஆனா எல்லாரும் சொல்றாங்க நான் இன்னும் தெளிவாகி விட்டேனாம். என்னமோ இந்த காதலே ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி இருக்கிறது.

    உங்களை முதன்முதலில் பார்த்த போதே என் மனதை பறிகொடுத்தேன் என்று சொல்லும் அளவிற்கு நான் பேதையாக மாறாதது வருத்தமாகவே இருக்கிறது. உண்மையில் உங்களை முதன்முதலில் பார்த்த தருணம் என் நினைவில் இல்லை. ஒருவரை பார்க்கும் போதே அவர் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்க போகிறவர் என்று அறிந்து கொள்ளும் சக்தி பலருக்கு வாய்ப்பதில்லை. எனக்கும் அப்படித் தான்.

    ஒரு விருந்திற்காக இருவரும் ஒரே ஓட்டலுக்கு சென்றது தான் இப்போது நியாபகம் இருக்கிறது எனக்கு. பிறந்த நாள், திருமணம், காது குத்துவது, விருது வாங்குவது, கை தட்டல் வாங்குவது, குட்டு வாங்குவது, வாழைப்பழம் வாங்கினால், வாக்கிங் போனால்.. என எல்லாத்துக்குமே ஒரு விருந்து வைக்கனுமாம். என்னுடைய பிறந்த நாளுக்கும் இப்படித்தான் விருப்பமே இல்லாமல் விருந்து கொடுக்க வந்திருந்தேன். 6 பேர் அமர்ந்து என்ன பேசுவது தெரியாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம்.

    அப்போது நீங்கள் ஒரு 20 பேர் அங்கு வந்து இருப்பீர்கள். வந்த உடன் இரைச்சல் அதிகமானது. ஒரு கூச்சலும் கேலியுமாக இருந்தது. நீங்கள் தான் பலி என்று நினைக்கிறேன். எல்லா உரையாடல்களும் உங்களை சுற்றியே நடந்து கொண்டு இருந்தது. 'இளா இளா' என்று அடிக்கடி அழைத்த போது தான் உங்கள் பெயர் எனக்கு பரிச்சயமாக இருந்ததை உணர்ந்தேன்.

    'நாங்கள் முடித்து கிளம்பும் போது தான் உங்கள் நண்பர்.. 'எங்களை எல்லாம் மறந்துவிடாதே இளா' என்று சொன்னது கேட்டேன்.

    ஒரு வேளை நீங்கள் வெளிநாடு போவதாக இருக்கும் என யூகித்தேன். இவன் இனிமே அதிகம் சம்பாதிக்க போறான் என்றே கடைசியாக கரக்க கூட்டம் சேர்ந்து இருக்கும் என்று அசட்டு தனமாக நினைத்துக் கொண்டேன். நீங்கள் கூறும் எல்லா ஒற்றை வரிக்கும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தது ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது. இல்லை பொறாமை என்று கூட சொல்லலாம். பொதுவாகவே போலிகாக சிரித்து பழகி போயிருந்தேன் நான்.

    அதன் பிறகு நீங்கள் என் கண்ணில் தென்படவில்லை. நூலகத்தில் இருந்த ஒரு கவிதைப்புத்தகம் தான் மீண்டும் உங்களை நினைக்க வைத்தது. பொதுவாக அலுவலகத்தில் இது போல கவிதைப்புத்தகங்கள் கிடைப்பதில்லை. அலுவலகம் அருகில் இருக்கும் ஒரு நூலகத்தில் புதிதாக சேர்ந்தேன். நான் தேர்ந்தெடுத்த 'மீண்டும் சிறகுகள்' புத்தகத்தில் உங்கள் பெயர் குறிப்பிட்டு இருந்தது.

    25-08-2007 - இளங்செழியன்
    3 -3 -2008 - மலர்விழி

    நம் இருவர் பெயரும் ஒன்றன் கீழ் முதல் பக்கத்தில் ஒன்றாக இருந்தது அப்போது அர்த்தம் பொதிந்ததாக தெரிவவில்லை. கவிதைப்புத்தகம் வீட்டிற்கு எடுத்து சென்றேன்.
    கவிதைப்புத்தகம் ஒன்றும் அத்தனை பெரியதாக இல்லை. கடைசிப்பக்கங்களில் இருந்த விமர்சனம் தான் எனக்கு ஆச்சர்யம் தந்தது. அந்த புத்தகத்தில் எந்த கிறுக்கலும் இல்லாமல், ஒரு துண்டு சீட்டில், உங்களை பாதித்த கவிதைகளும் அதைப் பற்றிய விமர்சனத்தையும் சின்ன சின்ன எழுத்துக்களில் எழுதி இருந்தீர்கள்.

    அடுத்த ஒரு வாரத்தில், எல்லா தமிழ் புத்தகத்திலும் உங்கள் சின்ன விமர்சனத்தை படித்து முடித்துவிட்டேன். முதலில் உங்கள் விமர்சனம் படித்த பின்பு தான் அதை படிக்கலாமா இல்லையா என்று முடிவு செய்வேன். ஆனால் கடைசியில் எல்லாப் புத்தகங்களையும் படிக்க வேண்டியதாய் போய் விட்டது. உண்மையில் நான் அத்தனை பெரிய வாசகி இல்லை. எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் தான் படித்தேன். ஆனால் அந்த ஒரு மாதம் மட்டும் ஆறு புத்தகங்களை முடித்தேன். என்னை ஒரு தீவிர வாசகி ஆக்கியது நீங்கள் தான் என்று தைரியமாக சொல்லலாம்.

    என்ன மனிதர் நீங்கள். அந்த நூலகத்தில் இருக்கும் எழுபது சதவிகித புத்தகங்களை நீங்கள் படித்து இருந்தீர்கள். அதுவும் எல்லாமே குறுகிய காலத்திலேயே முடித்து விட்டீர்கள். உங்கள் விமர்சனத்தில் தான் உங்கள் பெயர், நேரம் எல்லாம் எழுதி இருந்தீர்களே..

    அதன் பிறகு உங்களைப்பற்றி எங்கள் அலுவலகத்தில் தேடினேன்.

    பாத்தீங்களா உங்களைப்பற்றி எழுதினால் நேரம் போவதே தெரிவதில்லை.. மீண்டும் நாளை சந்திப்போம்.. அன்புடன்..

    மலர்..
    (25- பிப்ரவர் – 2009)

    மடல் பயணம் தொடரும்..

    பி.கு – இது முழுக்க முழுக்க கற்பனை கதை. இதில் யாராவது சாயல் இருந்தால் உடனடியாக தெரிவியுங்கள். இளா-வை சந்திக்கும் ஆர்வம் எனக்கும் உள்ளது !!
     
    6 people like this.
    Loading...

  2. Karpagamkarthik

    Karpagamkarthik Junior IL'ite

    Messages:
    74
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வாவ்!!! ரொம்ப வித்தியாசமா இருக்கு திவ்யா...
    கதை அழகான வடிவில் உள்ளது...
     
  3. zingy

    zingy Local Champion Staff Member Platinum IL'ite

    Messages:
    1,115
    Likes Received:
    791
    Trophy Points:
    215
    Gender:
    Female
    Very differnt Divya. Loved the narration as well as the flow
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai ma...
    it s very different ... nice start.. best wishes ma..
     
  5. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Divya,
    romba different tana story......nalla irukku....
     
  6. divyasselvan

    divyasselvan Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    181
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Part 3:
    ---------------------------------

    அன்புள்ளவரே.

    இன்று மனம் மிகவும் நிறைவாக உள்ளது. நெடுநாட்களுக்கு பிறகு வைஷ்ணவியை சந்தித்தேன். பேறு காலத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இன்று அவருக்கு பிடித்த வத்தக்குழம்பு செய்து கொடுத்தேன். பிறகு மூன்று மணி நேரம் உரையாடினோம். எப்போதுமே பேசிக்கொண்டிருக்கும் வைஷ்ணவி கொஞ்சம் அமைதியாக பேசினாங்க.

    திருமணம் ஒரு பெண்னை எத்தனை மாற்றத்திற்கு உள்ளாக்குகிறது. அவளுக்கு மட்டுமா அவளை சுற்றி இருக்கும் எல்லாரையும் தான். விதவிதமாக சமைப்பதில் தேர்ந்தவர் அவங்க அம்மா, அடிக்கடி வீட்டிற்கு ஏதாவது பண்டம் கொடுத்து அனுப்புவார். ஒரே மகளை கட்டி கொடுத்த பின் அத்தனை விசேஷங்கள் கொண்டாடுவதில்லை. எனக்கும் கூடத்தான். இரண்டு வயது முதியவள் என்றாலும் நான் அதிகம் பரிமாறிக் கொள்வதி வைஷ்ணவியிடம் தான். அதே போல் தான் வைஷ்னவியும்.

    கல்யாணமாகி சென்ற பின் எனக்கு ஒரு கையே உடைந்தது போல் இருந்தது. உறவின் பெருமை பிரிவில் தான் தெரியும் என்பது எத்தனை உண்மையான வாக்கு.

    உண்மையில் சின்ன வயதில் எல்லாம் எனக்கும் வைஷ்ணவிக்கும் அத்தனை நெருக்கம் இல்லை. அவள் படிப்பு திறமையைக்காட்டி என்னையும், நான் வீட்டு வேலை எல்லாம் செய்வதைக்காட்டி வைஷ்ணவியையும் பெற்றோர்கள் குத்திக்காட்டியது காரணமாக இருக்கலாம்.

    பிறகு ஒரு கோலப்போட்டியில் இருவரும் போட்ட கோலம் எங்களை நெருக்கமடைய செய்தது. அதன் பிறகு பரிமாற்றம் அதிகம் ஆனது. எனது எல்லா முடிவுகளிலும் வைஷ்னவியின் ஆலோசனை நிச்சயம் இருக்கும். உங்களைப் பற்றி மட்டும் நான் இதுவரை வாய்த் திறக்கவில்லை. அதற்கு இன்னும் சந்தர்ப்பம் அமையவில்லை.

    நம் உறவில் கூட வைஷ்னவின் உதவி இருக்கத்தானே செய்தது. நாம் தொலைபேசியில் உரையாட ஆரம்பித்தது வைஷ்னவியின் திருமணத்தில் சந்தித்த பிறகு தானே..

    மறக்க முடியுமா அதை.. வழக்கம் போல உங்களை சுற்றி கூட்டம். கல்லூரி தோழர்கள் பலரையும் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தீர்கள் நீங்கள். வழக்கம் போல உங்கள் நகைச்சுவைகளை தூரத்தில் இருத்து ரசித்தபடி நான். பந்தியில் பரிமாற உதவி செய்து கொண்டிருந்தேன். நீங்கள் அமர்ந்ததும் நான் பார்த்துக்கொண்டிருந்த வரிசையில் தான். நீங்கள் கை கழுவ சென்ற போது என்னை அறியாமல் உங்களிடம் வந்து நின்றேன்..


    அப்போது நாம் பேசிய வரிகள்..

    “மான்விழி தானே நீங்க”

    “இல்லைங்க மலர்விழி”

    “மலரோ மானோ.. எப்படி இருக்கீங்க”

    “ம்”

    “கல்யாணம் எல்லாம் சிறப்பா இருக்குங்க .. வாழ்த்துக்கள்..”

    “நான் என்னங்க செஞ்சேன்.. “

    “இதோ பரிமாறினீங்களே.. அதை விட பெரிய வேலை இல்லைங்க”

    “ம்”

    “உங்களுக்கு ஸ்கூல்ல “ம்” தவிர வேற சொல்லி குடுக்கலையா”

    “அயோ என்னங்க நீங்க”

    “சரி சரி விடுங்க.. அப்போ நான் கிளம்பட்டுமா மலர்விழி அவர்களே”

    “உங்க நம்பர் குடுங்களேன்”

    “எதுக்குங்க.. “

    “அது அப்புறம் சொல்றேங்க.. “

    “சரி சரி.. எப்போ வேணும்னாலும் பண்ணுங்க.. ஆனா மிஸ்ட் கால் குடுக்காதீங்க.. நான் திரும்பி பண்ண மாட்டேன்.. ”

    “சரிங்க.. “

    என்னிடம் இது போல எத்தனையோ பேர் கேட்டு இருக்கிறார்கள். அது எத்தனை எரிச்சலை ஏற்படுத்தும் என்று எனக்கும் தெரியும். எனக்கே அந்த தைரியம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

    உங்களிடம் பேசுவதற்காக இல்லை. இனிமேல் உங்களை எப்போது சந்திப்பேனோ என்ற ஆதங்கம் தான் அந்த தைரியத்தை தந்தது. நான் கேட்ட போது கூட திருப்பி என் அலைபேசி என்னை கேட்காமல் ஒரு சிரிப்பை வரவழைத்து விட்டு சென்று விட்டீர்கள்.

    உங்களோடு பேசும் நாளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்..

    மலர்விழி.
    15-3-2009
     
  7. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    malar ilancheliyan ku call pannala???
    different ah romba super ah irukku unga writings....
     
  8. divyasselvan

    divyasselvan Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    181
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Part 5
    --------------

    கனவெல்லாம் அபகரித்தவரே,

    இன்று எங்கள் வீட்டில் என் சமையல் தான். அம்மா கோவை போய் இருக்காங்க ஒரு திருமணத்திற்காக. அம்மாவிற்கு அடிக்கடி அடுப்படியில் உதவி செய்வேன். அம்மா அளவு சொல்ல சொல்ல சமையல் செய்வேன். ஓரிரு வகை மட்டும் நானே செய்வேன். ஆனால் முழு நாளிற்கும் சமையல் செய்வது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது.

    ஒரு வீட்டில் அம்மா இல்லை என்றால் அது எவ்வளவு அப்பட்டமாக தெரிந்து விடுகிறது. குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் கோலம், டீப்பாயில் இருக்கும் கலைந்த செய்தித்தாள், அங்கே இங்கே இரைந்து கிடக்கும் துணிமணிகள், காப்பி குடித்த குவளை அப்படியே அவரவர் அறையில் இருப்பது, கழுவிய சாமான் அப்படியே சிங்கில் இருப்பது.. இப்படி சொல்லி கொண்டெ போகலாம். அம்மாவிற்கு மட்டும் இதற்கெல்லாம் எப்படித் தான் நேரமிருக்கிறதோ..

    அம்மா இல்லாமல் இருக்கும் வீடு எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. வார இறுதியில் தோழிகள் போல இருவரும் ஒரு வாரக்கதை பேசிக்கொள்வோம். அண்டை வீட்டில் நடக்கும் எல்லா கதையும் ஒரு மணி நேரத்தில் ஒப்பித்து விடுவார் அம்மா. நல்ல வேளை மெகா சீரியல் பார்க்கும் பழக்கம் அம்மாவிற்கு இல்லை. அப்புறம் நாள் முழுவதும் அதே கதை தான் பேச வேண்டி இருக்கும்.

    அம்மா இல்லாத சமயம் என்ன தான் செய்தாலும் அதில் சுவாரசியம் இருக்காது. ஒரு வித சோர்வு தொத்திக்கொள்கிறது. எதாவது ஒரு புத்தகம், அல்லது ஒரு வரைப்படம் கைக்கொடுக்கும். அதிலேயே திளைத்திருக்க மனம் ஒத்து போகும்.
    அப்படி ஒரு தடவை அம்மா இல்லாத தனிமையை போக்கத் தான் உங்களோடு உரையாட ஆரம்பித்தேன்.

    அந்த கவிஞருக்குத் தான் கோடி நன்றிகள்.. தன் கற்பனைக்காதலிக்காக எழுதிய

    உன் கண்களைப் பார்த்தால் மான்விழி
    உன் சொல்லைக் கேட்டால் தேன்மொழி

    வரிகள் சட்டென்று உங்களை நினைவுப்படுத்தியது..

    முதலில் உங்களிடம் பேசாமல் உங்கள் குரலை மட்டும் கேட்டு விட்டு துண்டித்துவிட நினைத்தேன். உங்கள் விமர்சனங்களையும், உங்கள் நகைச்சுவை உணர்வையும் ரசிக்கிறேன் என்பதை தவிர உங்களைப் பற்றி பேச வேறு ஏதும் தெரியாது.

    சரி அப்படியே ஏதாவது நடந்துவிட்டால் கூட தவறான எண்ணுக்கு அழைத்தாக சொல்லி சமாளித்து விடலாம் என்று எண்ணி இருந்தேன். உங்கள் செல்பேசி மட்டும் ஒரு பெண் எடுக்காமல் இருந்திருந்தால் அப்படித் தான் நடந்து இருக்கும். அதுவும் இனிய குரலாய் இருந்தது.

    ஒரு கணத்த குரலை எதிர்பார்த்த எனக்கு, ஒரு இனிமையான பெண்ணின் குரல். தவறான எண் கொடுத்து விட்டாரோ.. இல்லை தெரிந்த பெண் யாரவது இருக்குமோ என்று மனம் கணக்கு போட்டு கொண்டிருந்தது. எதிர்முனையில் ‘ஹலோ ஹலோ’ என்ற கூவலில் அனிச்சையாக நானும் ஹலோ சொல்லி விட்டேன். இப்படி போன் போட்டு, பேசாமல் இருந்து பழக்கம் இல்லை. அளவாகவே நான் அலைபேசி பயன்படுத்துவேன்.
    ஆகையால் எனக்கு திடீரென்று நடிக்க வரவில்லை.

    “யாருங்க வேணும்”
    “இளா இருக்காரா”

    “ஆங்… “

    “இளஞ்செழியன்”

    “ஒரு நிமிஷம் இருங்க.. செழி.. உனக்கு போன்.. செழி.. எங்க இருக்கீங்க”

    உங்களிடம் பேசும் ஆர்வத்தை விட அந்த பெண் யாராக இருக்கும் என்ற கேள்வி தான் அதிக வலுவோடு இருந்தது..

    உங்கள்

    ‘ஹலோ” எல்லா கேள்விகளையும் மறக்கடிய செய்தது.. “

    நான் யோசித்து வைத்த பிரியா, பானு, ரேகா எதுவாக என் பெயரை சொல்லலாம் என்று யோசித்து கொண்டிருக்க..

    “யாரோ அவள் யாரோ.. மலரோ விழியோ.. என் இளமையின் செழிப்பை தழைக்க வந்தவளோ”

    என்று பாடலைப் போல முனுமுனுத்தீர்கள்.. என் பெயரை கண்டுபித்ததையா அல்லதி இருவர் பெயரையும் சேர்த்து ஒரு வரியில் வாக்கியமாக்கியதையோ என்னால் நம்ப முடியவில்லை..

    “எப்படிங்க” – என்று ஒரே வார்த்தையில் அடக்கி விட்டேன் அத்தனை கேள்விகளையும்..

    “அதெல்லாம் அப்படி தாங்க மலர்.. எப்படி இருக்கீங்க”

    “நல்லா இருக்கேன். நீங்க”

    “எங்கும் எதிலும் இன்ப மயம்”

    “ம்”

    “அப்புறம் என்ன விசேஷம்..”

    “சும்மா தாங்க”

    “சும்மாவா.. அப்போ என்னோட விமர்சனங்களைப் பத்தி எல்லாம் சொல்ல போறதில்லையா”

    அதிர்ச்சி மீது அதிர்ச்சி தந்து என்னை நீங்கள் தாக்கி கொண்டு இருந்தீர்கள். ஒரு மனம் இது கனவாக இருக்க வேண்டுமென்றும் ஒரு மனம் இதெல்லாம் நிஜமாகவே இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தது..

    மடலிடும் நேரம் அதிகமாகி விட்டது. நாளை காலை அதிக வேலை இருக்கிறது. மீண்டும் அடுத்த வாரம் தொடர்கிறேன்.

    மலர்,
    22-3-2009
     
    1 person likes this.
  9. divyasselvan

    divyasselvan Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    181
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Sorry that's part 4..
     
  10. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Alagana nadai. Different write up. Keep it up...
     

Share This Page