1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தேவதைகளின் உலகம்

Discussion in 'Stories in Regional Languages' started by prana, Nov 11, 2011.

  1. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    பால்கனியில் நின்றுக் கொண்டு பதைப் பதைப்பாய் பக்கத்து வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.வீடே ஒரே அமர்க்களமாய் இருந்தது.சில பேர் முகத்தில் ஒட்ட வைத்துக் கொண்ட புன்னகை.சில பேர் முகத்தில் கண்களிலிருந்து வழியும் புன்னகை.கண்கள் புன்னகைக்கும் இடத்தில் இதயமும் புன்னகைக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.அதனால் அந்தப் புன்னகை எப்போதும் எனக்குப் பிடிக்கும்.அப்படிப் புன்னகைப்பவர்களையும்தான்.அருக்காணி அக்கா அந்த இதயப் புன்னகையை சுமந்துக் கொண்டு என்னைக் கடந்து சென்றுக் கொண்டிருந்தார்.நானும் பதிலுக்கு ஸ்மைலினேன்.ஆனால் மனதுக்குள் மூலையில் ஒரு சிறு கலவரம் இருந்துக் கொண்டே இருந்தது.மாலை வீடு வந்து சேர்ந்ததும் சேராததுமாய் கேட்பாளே!என்ன சொல்லி சமாளிப்பேன்?அந்த சின்னப் பூ வாடிப் போகுமே!என் மகளின் கவலைப் படர்ந்த முகத்தை என் மனக் கண்ணில் நினைக்கையிலேயே அந்தக் கவலை என்னையும் தொற்றிக் கொண்டது.

    'கோட்டை (மு)மினியப்பன் துணை' என்ற கொட்டை எழுத்துக்களைத் தாங்கி நின்ற அந்த மினிடாரில் இரண்டு கெடாவையும்,ஒரு ஆட்டையும்,மூன்று கொழுத்த கோழிகளையும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.சிலப் பெண்களும் அதில் ஏறிக் கொள்ள,அந்த வாகனம் கிளம்பத் தயாராயிருந்தது.அதற்குக் பின்னாலேயே ஒரு வெள்ளை நிற அம்பாஸிடர்.அருக்காணி அக்காவின் கணவர் ராமசாமி அண்ணன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருக்க, வீட்டை பூட்டி விட்டு கடைசியாய் ஒரு தரம் பூட்டை நன்றாக இழுத்துப் பார்த்து விட்டு, கோழிக் குஞ்சுகளைக் கூண்டில் அடைத்து விட்டு என்னை நோக்கி வந்தார் அருக்காணி அக்கா.என் வீட்டின் எதிரில் வந்து நின்றவர் அண்ணாந்து என்னைப் பார்த்து சொன்னார்.

    "யமுனா, நாங்கெல்லாம் கிளம்பறோம் கண்ணு.அப்படியே வீட்டை அப்பப்ப வந்து ஒரு எட்டுப் பாத்துக்க.குஞ்செல்லாம் அடச்சுட்டேன்.இருந்தாலும் ஒரு வெசனம்(கவலை).அதான் சொல்றேன்.நாங்க ராவுக்குள்ள வந்துடுவோம்.வரட்டுமா?"

    "சரிக்கா.நீங்க பத்தரமா போய்ட்டு வாங்க"

    சொல்லிவிட்டு அவர்கள் தெரு முனையைத் தாண்டும் வரை அங்கேயே நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.பிறகு ஒரு பெரு மூச்சை விடுவித்தவளாய் உள்ளே வந்து வேலையை ஆரம்பித்தேன்.வீட்டில் போட்டது போட்டப்படி கிடந்தது.அடுத்த பெருமூச்சு.பண்பலையை ஆன் செய்தேன்.ரேடியோவில் தொகுப்பாளர்கள் பேசுவது யாரோ நம் அருகில் இருந்துப் பேசுவதுப் போலவே எனக்குத் தோன்றும்.அதனால் இந்தத் தனிமையை சிறிதுப் போக்க வேண்டி அதில் கவனம் செலுத்தினேன்.ஒரே நேரத்தில் ஒரே விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால் அது மனித மனமே இல்லையே!!பலதும் நினைக்க வேண்டும்.ஒரு நொடி நேரத்தில் ஆயிரத்தெட்டு எண்ணங்கள் மனதில் ஓட வேண்டும்.அப்போதுதான் நாம் இயல்பாக இருக்கிறோம் என்றே அர்த்தம்.பண்பலையில் யாரோ யாருக்கோ யாரோ மெட்டுப் போட்டு,யாரோ எழுதிய ஒரு பாட்டை டெடிகேட் செய்துக் கொண்டிருக்க, என் மனம் வேறெங்கெங்கோ சென்றது.

    பக்கத்து வீட்டுக்கு அருக்காணி அக்கா இங்கு குடி வந்து ஒரு ஆறு மாதம் இருக்கும்.பக்கத்து ஊரில் தோட்டம் துரவுடன் வாழ்ந்தவர்களாம்.இப்போது இருவருக்கும் வயசாக, பிள்ளைகள் எல்லோரும் படித்து விட்டு கை நிறைய சம்பாதிக்க,வேறு வேறு ஊருக்கும்,நாட்டுக்கும் பயணப்பட,இவர்களால் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்க முடியவில்லையாம்.அதனால் அதை எல்லாம் குத்தகைக்கு விட்டுவிட்டு இங்கு வந்துவிட்டார்கள்.ஆடின காலும்,பாடின வாயும் மட்டும் சும்மா இருக்காது.உழைத்த உடம்பும்தான்.உழைப்பின் ருசியை அறிந்தவர்கள் அதை விட்டுவிட்டு சோம்பி உட்காரவே மாட்டார்கள்.அதுவும் இவர்களைப் போன்ற வயல் வேலைப் பார்த்தவர்களுக்கெல்லாம் சும்மா இருத்தல் என்பது மிகப் பெரிய தண்டனை.அதற்காகத்தான் வரும்போதே தங்களுடைய ஆடுகளையும்,மாடுகளையும் இன்ன பிறவற்றையும் ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள்.வீடும் பெரியதாய் இருக்கவே வீட்டின் முன்பகுதியில் தொழுவம் கட்டிக் கொண்டார்கள்.

    இந்த ஐந்து அறிவாளிகளுக்கு தண்ணீர் கட்டுவது, பால் கறப்பது,மேய்த்தலுக்கு அழைத்து செல்வது என்று தங்கள் பொழுதை உபயோகமாய் கழித்துக் கொண்டிருந்தார்கள்.இந்தக் கதை எல்லாம் வந்த இரண்டாவது நாளில் அருக்காணி அக்கா எனக்கு சொன்னது.அவரது வெள்ளிந்திப் பேச்சில் அவரிடம் நான் சீக்கிரமே ஒட்டிக் கொண்டேன்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவருடன் அரட்டைக் கச்சேரிக்கு கிளம்பி விடுவேன்.ஆனால் அவர்கள் வந்ததில் நான் அடைந்த சந்தோஷத்தை விட என் ஐந்து வயது குட்டிப் பெண் அவந்திக்குதான் சந்தோஷமே.காரணம் அவர்கள் இல்லை.அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள்.அது நாள் வரை பசு மாட்டை எல்லாம் புத்தகத்தில் மட்டுமே பார்த்தவள் அவற்றை நேரில் பார்க்கவும் சொல்ல முடியாத மகிழ்ச்சி.யார் கண்டார்கள்?நாமாவது சிங்கம் யானையைதான் ஜூவில் பார்த்தோம்.எதிர் காலத்தில் இவர்கள் எல்லாம் ஆடு,மாடுகளையே ஜூவில்தான் பார்க்க வேண்டி இருக்குமோ என்னவோ? அந்த ஆடு,மாடு,கன்றுக் குட்டி,கோழி எல்லாமே அவளுடைய செல்லங்கள்.தினமும் ஒரு தடவையாவது அவற்றைப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுவாள்.அவைகளுடன் கதை எல்லாம் பேசுவாள்.'ஒழுங்கா சாப்டியா?','சூசூ போனியா?''குறும்பு பண்ணியா?' என ஏகத்துக்கும் இருக்கும் விசாரிப்புகள் எல்லாம்.

    ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்திருப்பாள்.கடைசியாப் பிறந்த ஆட்டுக் குட்டிக்கு 'ரோஸி' என்று பெயர் வைத்திருந்தாள்.மீனு,சோனு,நக்க்ஷத்ரா என்று விதம் விதமாய்ப் பெயர் வைப்பாள்.பெயர் ஆலோசனையில் மட்டும் என்னையும்,என் கணவரையும் சேர்த்துக் கொள்வாள்.ஆனால் முடிவு அவளுடையது.அதில் யாரும் தலையிட முடியாது,கூடாது.வீட்டில் நான் அறிந்து வைத்த காய்கறிகள்,கீரைகலெல்லாம் மானாவாரியாய் அவற்றிற்கு போகும்.முதலில் கவலைப் பட்டாலும் இப்போதெல்லாம் நான் கண்டுக் கொள்வதில்லை.அவளுடைய சந்தோஷத்தைப் பார்க்கும்போது இன்னும் ஒரு ரெண்டு கிலோ வாங்கிக் கொடுக்கலாம் என்றுத் தோணும் எனக்கு.பாசக்கார அம்மா!

    இது வரை சுபமாய்ப் போய்க் கொண்டிருந்ததில் இன்று ஒரு சின்ன சிக்கல்.இன்று அருக்காணி அக்கா அவர்கள் குல தெய்வக் கோவிலுக்கு கெடா வெட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.அதற்காகவே வளர்த்த இரண்டு கிடா ஆடுகளையும்,வரும் விருந்தினருக்குப் பத்தாது என்பதால் இன்னும் இரண்டு,மூன்று ஆடுகள்,கோழிகளையும் எடுத்து சென்றிருக்கிறார்கள்.நேற்றுதான் என்னிடம் இந்த விஷயத்தை சொன்னார்கள்.சொன்னதுமே எனக்கு மனதில் தோன்றியது அவந்தியின் முகம்தான்.ஆனால் நேற்று இதுப் பற்றி எதுவும் அவளிடம் நான் சொல்லவில்லை.அவளே வந்து கேட்டதும் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

    "ம்மா அம்மா"

    வேன் சத்தத்தைத் தாண்டி இவள் குரல் கேட்டது.

    "அவந்திம்மா"

    நேரே வந்து என் கன்னத்தில் ஒரு இச் வைத்தவள்,வேக வேகமாய் உடையை மாற்றிக் கொண்டு, கை கால் அலம்பி வந்தாள்.

    "ம்மா,பூஸ்ட்" சொல்லிவிட்டு பால்கனிக்கு ஓடியவள்,அடுத்த இரண்டாவது நிமிடம் சமையலறைக்குள் நுழைந்தாள்.

    "ம்மா,அழகி எங்க காணோம்?பாட்டி வீத்(ட்)ல இல்லையா?பூ(ட்)த்தி இருக்கு வீடு?"

    "ஆமாண்டா ஊருக்குப் போய்ட்டாங்க?"

    "அழகியைக் கூட்டிட்டா?"

    அழகி என்பது அருக்காணி அக்கா இந்த வீட்டுக்கு வந்த ஒரு வாரத்தில் பிறந்த குட்டி ஆடு.இவளுக்கு மிகவும் பிடித்த ஆடு.அதுதான் ரொம்ப அழகாம்.அதற்குத்தான் இந்தப் பெயர்.

    "ஆமாண்டா"

    "எப்ப வருவா?"

    "இனிமே வர மாட்டா"

    அவள் முகத்தில் ஒரு பெரிய கலவரம்.

    "ஏம்மா?"

    "அவளை ஊர்ல கொண்டுப் போய் விட்டுட்டாங்கடா.சாமி அவ ரொம்ப அழகா இருக்கானு கேட்டுச்சாம்.அதுக்குக் கொடுத்துட்டாங்க"

    பலி என்ற கொடூரத்தை சொல்லி அவள் சிறு மனதை சிதைக்க நான் விரும்ப வில்லை.

    "ஏம்மா,எனக்குதான் அவளை ரொம்பப் பிடிக்கும்.நாந்தானே பேரு வ(ச்சே)த்தேன்.சாமிகிட்ட சொல்லலையா?பாட்டி ஏன் சொல்லல?"

    அடுத்த அரை மணி நேரத்துக்கு அவளுடைய கேள்விகள் பல விதக் கோணங்களிலிருந்து வந்தன.பாதிக் கேள்விகளுக்கு எனக்கு பதிலே தெரியவில்லை.எப்படியோ சமாளித்து வைத்தேன்.இரவு அவள் அப்பா வந்ததும் மீதிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.அவரும் முடிந்த அளவு தாக்குப் பிடித்தார்.திருப்தி இல்லாத மனதுடனும்,பாதி வயிறுடனும் உறங்கிப் போனாள்.

    அடுத்து வந்த ஒரு வாரமும் இதே கதைதான்.அவ்வப்போது அழகியைப் பற்றியக் கேள்விகள்.உம்மென்ற முகம்.என் மகளைப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது எனக்கு.என்னால் முடிந்த வரை அவளைத் தேற்றினேன்.

    அந்தத் திங்கட்கிழமைக் காலை,அவசர கதியில் சமையலறையில் சுழன்றுக் கொண்டிருந்தேன்.பால்கனியிலிருந்து அவள் குரல்.ஒரு வாரமாய் இல்லாத சந்தோஷம் அந்தக் குரலில் ஒட்டிக் கொண்டிருந்ததுப் போல் எனக்குப் பட்டது.

    "ம்மா,இங்க வந்துப் பாரேன்"

    பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு,பால்கனிக்கு ஓடினேன்.

    "ம்மா , பாட்டி புது ஆடு வாங்கிட்டாங்க.சூப்பர்"

    கீழிருந்து அருக்காணி அக்கா சொன்னார்.

    "அவந்தி கண்ணு.பாரு உனக்காகவே ஊர்ல இருந்து ஒரு ஆடு புடிச்சுட்டு வந்துட்டேன்.நல்லாருக்கா?"

    "சூப்பர் பாட்டி.இதுக்கு இன்னும் பேர் வைக்கலில?"

    "அது எப்டி?அவந்திக்குட்டிதான வைக்கனும்"

    "சரி பாட்டி.நான் ஸ்கூலுக்கு போய் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டலாம் டிஸ்கஸ்(?) பண்ணிட்டு ஈவ்னிங்க் வந்து வைக்கறேன்.ஓகே?"

    "ஓகே ஓகே" இவளைப் போலவே அவரும் விளையாட்டாய்த் தலை ஆட்டி சொல்லிக் கொண்டே உள்ளே போனார்.

    "அம்மா நான் பேக் எடுத்து வைக்கறேன்" புதுத் துள்ளளுடன் சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள்.

    இந்த ஆட்டின் ஆயுட்காலம் எத்தனை நாளோ தெரியாது.விருந்துக்கு நாள் குறிக்கப்படும் வரையில் பூமியில் அது சந்தோஷமாய்க் கூத்தடிக்கும்.அடுத்த ஆறு மாதங்களுக்கு அதன் மகிழ்ச்சி நீடிக்கும்.இது எதுவும் தெரியாத என் மகள் புது ஆடு வந்த சந்தோஷத்தில் ஒரு வார கவலைகளை எல்லாம் மறந்துவிட்டாள்.அழகி நியாபகம் கூட இப்போது இல்லை அவளுக்கு.நாளை என்ன நடக்கும் என்ற கவலை இல்லை.ஆறு மாதத்திற்கு பின் இந்த ஆட்டின் நிலைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை.அவளுக்கு இப்போது இருப்பதெல்லாம் இன்று வந்த ஆட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற சந்தோஷ யோசனை மட்டுமே.என்ன அழகான உலகம் அவர்களுடையது.அந்த உலகத்தில் சிங்கம் புலிகள் கூட பேண்ட் சட்டை அணிந்து வரும்,சாமி எல்லாம் பைக்கில் வரும்,பொய் சொல்பவர்கள் கெட்டவர்கள்,அவர்களும் கூட கடைசியில் திருந்திவிடுவார்கள்..எல்லாமே நல்லவை..எல்லாமே நல்லவர்கள்.என் மகளைப் பார்க்கையில் எனக்கு சந்தோஷமாய் இருந்தது.கொசுறாய் ஒரு சிறு கவலையும்!

    'இந்த நொடி என் மகளுக்கு இருக்கும் மனநிலை அவள் பெரியவள் ஆனாலும் இருக்க வேண்டுமே!'.மனதுக்குள் நினைத்த அடுத்த நொடி, இன்னொரு மனம் எகத்தாளமாய் சிரித்தது.

    இதோ அவள் பெரியவள் ஆனால் இப்படியே இருக்க வேண்டுமே என்று எப்போதோ நடக்க வேண்டிய ஒன்றை நினைத்து இப்போது கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெரியவளாகிவிட்டேனே!'சே' ஒரு கணம் என்னை உதறியவளாய், என் மகளின் சந்தோஷத்தை என் மனதில் அப்பிக் கொண்டு அவளைப் பள்ளிக்குக் கிளப்ப ஆயத்தமானேன்..
     
    10 people like this.
    Loading...

  2. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    என் மகளைப் பார்க்கையில் எனக்கு சந்தோஷமாய் இருந்தது.கொசுறாய் ஒரு சிறு கவலையும்!...

    Mostly yella ammakkum intha feelings irukkum...

    Nice writing prana... unga writing kekanumaa?
     
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Prana akka....:hiya
    நல்ல இருக்கு அக்கா அது அவ அந்த பிராணிகளோட பேசுறது ரொம்ப நல்ல இருக்கு... எனக்கு சிரிப்பு வர வச்சது அவ சாப்டியா சுசு போனியா நு கேட்டது தான் :rotfl..... short story ah ka idhu?
     
  4. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    thank u sowmi...
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Aki kutti, idhu enna doubt..short story dhan..

    thanks da...
     
  6. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    prana.. adhu doubttala ketta kelvi illa... orey episodedoda unga kadha mudinjuduchchey... unga yezhutta neraya rasikka mudiyalayengara yekkaththin velippaadu...

    seekram aduththa kadhayoda vaanga...
     
  7. lovekids

    lovekids New IL'ite

    Messages:
    61
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    romba azhagana narration ....
     
  8. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அழகான படைப்பு ப்ராணா....வெகு இயல்பாக அழகான அந்த குட்டி உலகத்தை கண் முன்னால் கொண்டு வந்து விட்டீர்கள் ...அவர்களின் நுட்பமான உணர்வை புரிந்து கொள்ள நாமும் சிறியவர்கள் ஆனால் தான் முடியும் ....அழகான +மனதை கனக்க வைக்கும் உணர்வை நேர்த்தியாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள் ப்ராணா :) வாழ்த்துக்கள் :) :) :)
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    prana pa,

    romba romba nalla iruku.....
    azaha aavanga ulagaththa soliteenga ellorum iruka virumpum ulagam.....
    ella ammavukkum irukum unarvukalaiyum azaha sonnega pa........
    avanthiyoda visaripugal ellam cuta irunthathu..........
    kalakkal pa:thumbsup

    aana enaku oru kuRai etho puthu thodar kathai arambichuteenganu ododi vantha ennai emaaRi viteegale athuku punishmenta neega sikkaram thodar kadhai yoda varanum sariya?:hide:
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ஒ அதுக்கு இதுதான் அர்த்தமா..அப்பாடா..
    அடுத்த கதை??எனக்கே தெரியலை சௌமி.. பாப்போம்..
     

Share This Page