1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வினோதமானவளே-24 :

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jul 23, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141250-23.html


    அடுத்த நாளில் இருந்து வினயின் நடவடிக்கையில் பெருத்த மாற்றத்தை கவனித்தனர் எல்லோரும்!
    அன்று காலை உணவு மேஜைக்கு வந்தவன் ரொம்ப நாள் கழித்து வினோவை பற்றி பேசினான்!

    "அம்மா வினோ வீட்ல சும்மா தானே இருக்கா அதனால இனி அருணுக்கு பதிலா என் கூட இருக்கட்டும்!"
    "ஏன் டா பொண்டாட்டிய பிரிஞ்சி இருக்க முடியலையா??"
    என்று தாய் கிண்டல் செய்ய!
    அதெல்லாம் ஒன்னும் இல்ல மா நம்ம நுங்கம்பாக்கம் ஆபீஸ் கு அருணை எம் டி ஆக்கலாம்னு இருக்கேன்! அவனை முதலாளியா பாக்கனும்னு பாவம் சுஜாவுக்கு (அருணின் மனைவி) மட்டும் ஆசையா இருக்காதா?? எப்ப பார்த்தாலும் எனக்கே அவன் கூஜா தூக்கிட்டு இருக்கனுமா?? அதான் நாளைக்கு அவனுக்கு பதவி பிரமாணம் செஞ்சி வைக்க போறேன்!"

    "இப்ப தான் டா வாழ்க்கைல உருப்படியா ஒரு வேலை செய்ய போற!" என்று அன்னை காலை வார சப்பாத்தியை வாயில் வைத்து அமர்ந்திருந்தவனை காண வினோவிற்கு சிரிப்பு வந்தது!
    "அப்ப இது வரைக்கும் நான் உருப்படியா எதையும் செய்யலன்னு சொல்றீங்களா??"
    "புரிஞ்சா சரி!"
    "இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை! இன்னொரு சப்பாத்தி வைங்க!"
    "ஆமாம் என்ன திட்டினாலும் காரியத்துல கண்ணா இரு!" என்று அன்னை மேலும் வார இம்முறை வாய் விட்டே சிரித்தாள் வினோதா!
    அதை பார்த்தவன் சப்பாத்தியும் வேணாம் ஒன்னும் வேணாம் என்று முறுக்கி கொண்டு போனான்!

    "என்ன மா சாப்பிடாம போய்ட்டாரு பாருங்க!"
    "அதெல்லாம் நீ கவலை படாத வழக்கமா சாப்பிடறத விட அதிகமா தான் சாப்டு போயிருக்கான்!" என்று மருமகளை சமாதானம் செய்தார்!


    சற்று நேரத்தில் வீட்டிற்க்கு போன் வர அதை எடுத்தது வினோதாதான்!

    "ஹலோ!" என்றவள் வினயின் குரலை கேட்கவும் உற்சாகம் ஆனால்!

    "அம்மா இருக்காங்களா??" என்று அவன் கேட்க போனை கைகளால் மூடி இங்க குத்து கல்லாட்டம் பொண்டாட்டி இருக்கேன் அம்மா வேணுமாம் அம்மா!" என்று அவள் புலம்ப அது மெல்லியதாய் காதில் விழுந்தது!

    கோவத்தை பாரு என் செல்ல பொண்டாட்டிக்கு! என்று நகைத்தவன்

    "ஹலோ அம்மா இருக்காங்களா?? என்று இம்முறை சத்தமாகவே கேட்டான்!

    "ஹ்ம்ம் அம்மா இல்லை வெளிய போயிருக்காங்க!"

    "எங்க?"

    "தெரியல!"

    "ஓ! சரி அப்ப போன வெச்சிடறேன் அம்மா இன்னைக்கு நான் வெஜிடேரியன் செய்யறேன்னு சொன்னங்க வந்தா மதியம் சாப்பட்ட ஏவிஎம் ஸ்டுடியோ க்கு குடுத்து விட சொல்லு வினோதா!" என்று போனை அணைத்தான்!

    "வாடி வா! உனக்கு இருக்கு!" என்று மனதில் சிரித்து கொண்டான்!

    அவன் ஆசை பட்டு கேட்கிறானே இந்த நேரம் பார்த்து வீட்டில் அத்தை வேறு இல்லை என்று டிரைவரின் மூலம் கோழி, முட்டை அது இது என்று எல்லாம் வாங்கி வர செய்து அதனை தன் கையாலேயே சமைத்து கொண்டு கிளம்பினாள்!

    ருசி சரியாக இருக்கிறதா என்று ஒன்றிற்கு பத்து முறையாவது பார்த்திருப்பாள்!
    எல்லாம் சரியாக இருக்கிறது என்று உறுதி படுத்தி கொண்டு வெளியே வந்தவள் டிரைவரிடம்

    "அண்ணா ஏவிஎம் ஸ்டுடியோ போகணும்! வரீங்களா??" என்று காரிலேயே அங்கே சென்றடைந்தாள்!

    அங்கே சென்ற போது படத்தின் காட்சிகள் நடந்து கொண்டிருந்தது!

    பின்னாடி பெரிய செட்டிங்கெல்லாம் போட்டு பாடல் காட்சியில் வினய் ஒரு அழகான பெண்ணுடன் நெருக்கமாய் நடித்து கொண்டிருந்தான்!

    அவன் அந்த பெண்ணை கண்ட இடங்களில் கை வைப்பதும் அதற்கு அவள் சற்றும் கூச்சம் இல்லாமல் இயல்பாய் இருப்பதும் பாக்கவே சகிக்க வில்லை! முயன்று தன்னை அடக்கினாலும் அவளால் அங்கு பர்ர்க்காமல் இருக்கவும் முடியவில்லை!

    அங்கே வநத ஒருவர்

    "யார் மா நீ?? என்று கேட்க

    "நான்...வந்து....வினய்....கு...மாருக்கு சாப்பாடு...!" என்று கேரியரை உயர்த்தி காட்ட!

    "ஓ! ஹீரோ சாருக்கு வீட்ல இருந்து சாப்பாடா? நான் சொல்றேன்! நீ அங்க போய் உட்காரு! என்று ஜூனியர் ஆர்டிஸ்ட் பக்கத்தில் உட்கார வைத்தனர்!

    அவன் நீ வா என்றதும் அகே அமர்ந்திருந்தவர்கள் இவளை ஒரு மாதிரி பார்த்ததும் இவளுக்கு உள்ளே அப்படியே கொதித்தது!

    "என்னை சொல்லணும் இவனுக்கு போய் மெனகெட்டு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன் பாரு! எனக்கு இது தேவை தான்!"

    சற்று நேரம் பொறுத்து ஷூட்டிங் முடிந்து உணவு இடைவேளை விட அவனை நோக்கி கை அசைத்தாள்! அவன் ஓரகண்ணால் மனைவியை பார்த்தாலும் அவளை கண்டுகொண்டால் தானே? பார்க்காதது போல் அந்த நடிகையோடு சிரித்து பேசி கொண்டே வந்தான்!
    அவளோ இவன் கைகளோடு கை கோர்த்து நகர்ந்து வர புருஷன் என்று கூட பார்க்காமல் ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது!

    "அதான் ஷூட்டிங் முடிஞ்சாச்சு ல அப்பறமும் என்ன எழஞ்சிகிட்டு மூஞ்சிங்கள பாரு!" என்று உள்ளுக்குள் கடுகாய் பொரிந்தாள்!

    வந்தவர்கள் ஒரு அறைக்குள் செல்ல அவளுக்கு பகீர் என்றது!
    என்ன இது இவர்கள் இருவரும் மட்டும் அறைக்குள் செல்கிறார்கள் அதை யாரும் கண்டு கொள்ளவும் மாட்டேன் என்கிறார்கள் என்றவள் யாரும் பார்க்காத நேரமாய் சென்று கண்ணாடி தடுப்பின் வழியே உள்ளே பார்த்தாள்! அவ்வளவு தான் அவளுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது! வினய் அந்த பெண்ணை அணைத்து கொண்டு தலையை கோதி விட்டு கொண்டிருந்தான்!

    "இவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டதா?? இனி பொறுக்க முடியாது அன்று என்னவோ நல்லவன் மாதிரி பேசினான்! இன்று கையும் களவுமாக பிடித்து இது தான் உன் யோகியதையா?? என்று நாக்கை பிடுங்கி கொள்வது போல் கேட்க தான் போகிறேன்!"
    என்று கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்!

    இவளை சற்றும் எதிர் பார்க்காத இரண்டு பேரும் விலக

    "கைகளை இடுப்பில் வைத்து கொண்டு அவனை முறைத்தவள்

    "என்ன வினய் இது?" என்று கேட்க! அப்படியே சாட்சாத் பத்ர காளியின் மறு உருவாய் தெரிந்தாள்!

    சிரிப்பை அடக்கி முகத்தை சாதரணமாய் வைத்து கொள்ள வினய் படாத பாடு பட வேண்டியதாய் இருந்தது!

    "ஹலோ யாரு நீங்க கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம உள்ளே வந்துகிட்டு!" என்று அந்த நடிகை கேட்க

    "ஓ! என் புருஷனை நீ கட்டி புடிச்சிட்டு நிப்ப அதை நான் ஏன்னு கேட்டா நான் மேனர்ஸ் தெரியாதவளா??" என்று அவள் கேள்வி கணை தொடுக்க அந்த பெண் வினயை பார்த்து என்ன இது உண்மையா?? என்று கண்களாலேயே கேட்டாள்
    அவனும் "ஆம்!" என்று கண்ணாலேயே பதில் கூற அந்த நடிகை முகத்தில் புன்னகையை பூசி கொண்டு "வாங்க ஏன் நிக்குறீங்க உட்காருங்க!" என்று உபசாரத்தில் இறங்கினாள்!

    "இங்க உன் உபசாரத்துக்கு ஒன்னும் நான் வரல! இதோ நிக்குறாரே ஒரு பெரிய மனுஷர் அவரு இப்ப என்ன காரணம் சொல்ல போறாருன்னு கேட்க தான் வந்தேன்!

    "என்ன வினய் இது??" என்று அந்த பெண் சிரிக்க!
    அவன் பொறு என்று ஒரு புன்னகையை சிந்தி கை கட்டி ஒரு புறமாய் சாய்ந்து நின்றான்!
    அதில் என்ன வேண்டும் என்றாலும் பேசி கொள் என்கிற எகத்தாளம்!

    திமிரை பார் என்று நினைத்தவள்
    கோபமாய் வெளியேற நினைக்க அந்த நடிகை சிரித்து கொண்டே

    "அண்ணி ஒரு நிமிஷம்!" என்றது தான் பாக்கி அவள் அப்படியே ப்ரேக் போட்டது போல் நின்றாள்!

    "என்னது அண்ணியா??" என்றவளை பார்த்து புன்னகைத்து

    "பின்ன அண்ணன் பொண்டாட்டி அண்ணி தானே? நானே உங்கள வந்து பாக்கணும்ன்னு இருந்தேன்! அதுக்குள்ள நீங்களே வந்துடீங்க! எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்கு அதுக்கு தான் அண்ணா என்னை அணைச்சு வாழ்த்து சொன்னாரு! நீங்க தப்பா நெனச்சுடீங்க! என்று புன்னகைத்தவள் ஒரு கல்யாண பத்திரிக்கையை எடுத்து நீட்ட அதை பிரித்து பார்த்தவளின் முகம் போன போக்கை விவரிக்க முடியாது!

    ஏனென்றால் பெரியம்மா மகன் என்று அண்ணன் முறை சார்பில் வினயின் பெயர் அச்சடிக்க பட்டிருந்தது!

    "நீங்களும் கண்டிப்பா கல்யாணத்து வாங்க அண்ணி என்றவள்!
    அண்ணனிடம் திரும்பி
    "அண்ணா நீங்க ரொம்ப லக்கி ணா அண்ணி உங்க மேல ரொம்ப அன்பா இருக்காங்க! வாழ்த்துக்கள்!" என்று விட்டு வெளியேறினாள்!

    அவள் சென்ற பிறகு தான் வினோதாவின் நிலை மோசமானது
    அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை! அவன் நின்ற தோரணையோ
    "பார்த்தாயா உன் அவசர புதியாய்!" என்று எள்ளலாய்!
    அவள் நிமிராமல் காதுகளை பிடித்து தோப்பு கரணம் போட வினய் இம்முறை வாய் விட்டு சிரித்தான்!
    மனைவியின் அருகில் வந்தவன் அவளை இழுத்து அணைக்க ஒரு நிமிடம் உலகம் மறந்தாள் வினோதா!
    அவள் மயங்கிய நிலையில் இருக்க அவள் காதோரம் தன் மூச்சு காற்றால் விளையாடி "மத்தவங்க என்னை கட்டி பிடிக்க கூடாதுன்னா நீ புடுச்சுக்க வேண்டியது தானே!"
    என்று அவளை அணைத்த நிலையிலேயே கூற இது தான் சொர்கமா? என்று மயங்கி போனாள் அவன் வசம்!
     
    2 people like this.
  2. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    vino slowly start understanding the reality. todays episode is good.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks usha!
     
  4. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Yams
    nice update da:2thumbsup:.....vinay nee romba correct routeil pora:)....super vinay:whistlevino nee vinay-ai avoid panna nenaithalum, adhuirrku vinay unnai vidamattaen...unnalum mudiyadhu:spin....so loveai konjam quicka accept panniko....
    waiting for next da:coffee
     
  5. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Yams,
    Hero heroism step edukka aarambichuttaaraa?
    Good Good.
    So Ini Vino thaan PA.
    Thappikka mudiyaamal koodave irukanum.
    Vino unakuu thindattam engalukku kondaattam.
    Samaikka vaicha item superaa?
    Samaicha Vino superaa?
    samaichu eduthuttu vara vaicha
    Vinay potta scene superaa?
    Engal Ootu Vinayke.......
    Ithai nambi katchi aarambichu
    deposit kaaliyaachuinaa naan porupillai sollitten.
     
  6. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Yamini,

    nice updates....
    vinai...first steppa ..arunna replace pannitaanaa..vinovoda......
    shooting spotla..vinovai kandukaama ponathu...antha thangachi nadigaiyai..kattipidichi..kovathai kelapuvathu.....padikka swarasiyamaa irunthathu....
    kadaisiyil..romance..super.....vino..konjam kojama veliya vara..paarpom...
    waiting for next!!!!!!!!!!!!!!
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    aasadu valiyura... :biglaugh
    serthutanga oru valiya... ;-)
     
  8. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    akka superb episode ka....:thumbsup vinayoda vilayaadaraan ponga... :) paavam vino....
    intha lines awesome... sirichu sirichu vayaru valikkuthu...:rotfl:rotfl

    next episode kaaga waiting ka... :coffee
     
  9. supriyamini

    supriyamini Senior IL'ite

    Messages:
    142
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    viney eppadiyo avan villayattai arambichittan, vino romba pavam..........................................very funny episode da,
    waiting for the next part.
     
  10. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Yams!!!
    Super update ma.... kathaiya remba super ra kondu pora... adutha update eppo varum nu ethir pakka vaikira.... keep going on!!!
    Regards,
    S.Uma
     

Share This Page