1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வினோதமானவளே-19 :

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jul 18, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140775-18.html


    தந்தையிடம் விடை பெற்று வினயோடு கிளம்பினாள் வினோதா!
    காரில் ஏறும் சமயம் அவள் காதருகில் வந்தவன் என்ன இப்பவும் என் கூட ஊட்டி வர விருப்பமில்லையா?? வீட்டுக்கு போலாமா??
    என்றவனை முதல் முதலாய் நிமிர்ந்து நோக்கினாள்! அந்த பார்வையில் இருந்தது என்ன என்று வினயால் சரியாக யூகிக்க
    முடியவில்லை! அது காதலா? நன்றி உணர்ச்சியா?? என்று சரியாக யூகிக்க முடியாத போதும் அப்படியே மனம் மயக்கியது!

    இதயத்தில் கை வைத்து மயங்குவதை போல் சைகை செய்தவனை பார்த்து மெல்ல புன்னகைத்தாள்! அந்த புன்னகையே ஆயிரம்

    அர்த்தங்கள் பொதிந்ததாய்!

    வண்டியில் இருந்த டிரைவரிடம் தானே கார் ஒட்டி செல்வதாய் கூறியவன் அவரை வீட்டிற்கு அனுப்பினான்!

    வண்டியின் முன் சீட்டில் அமர்ந்தவன் ரியர் வியு கண்ணாடியில் மனைவியை பார்த்து முன்னே வா என்று கண்களால் அழைக்க
    அவளும் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் வந்து அமர்ந்தாள்!

    அருகில் வந்து அமர்ந்தவளை கண்டு புன்னகைத்தவன் வண்டியை எடுக்க! அவனிடம் ஏதோ சொல்ல வேண்டி தடுமாறியவளை கவனித்து கொண்டே தான் வந்தான்இருந்தும் அவளே பேசட்டும் என்று காத்திருக்க நேரம் ஆகியும் அவள் பேசுவதாய் இல்லை!

    அவள் தவிப்பை ரசித்தவன் பின் மெல்ல

    "என்ன ஆச்சு??" என்று கேட்டான்!

    "ஹ்ம்ம்...ஒன்னும் இல்லையே!"

    "இல்ல ஏதோ வாந்தி வர மாதிரி அவஸ்த்த பட்டியே அதான் கேட்டேன்! வருதுனா சொல்லு வண்டிய ஓரம் கட்டிடறேன் என்றவனை
    பார்த்து முறைத்தாள்!

    "எனக்கு வாந்தி எல்லாம் வரல!" என்று முறுக்கியவளை நோக்கி

    "அதானே! நான் தான் ஒன்னும் பண்ணலையே! அப்பறம் எப்படி வரும்?" என்றவனை உதைக்க ஏதாவது அகபடாதா என்று தேடினாள்!

    "ஹே! சும்மா விளையாடினேன்! அடிச்சிடாத மா தாயே!"

    "ஹ்ம்ம்! அந்த பயம் இருக்கட்டும் என்றவளை பார்த்து புன்னகைத்தான்!

    அந்த புன்னகை அவளையும் தொற்றி கொண்டது!

    "ஹ்ம்ம் இப்படி சிரிச்சிட்டே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கு??"

    "ஏன் சிரிக்கலானா நல்ல இல்லையா??"

    "கொடுமையா இருக்கு!"

    "என்னது...??" என்றவளுக்கு மீண்டும் ஒரு பயப்படும் தோற்றத்தை

    அளித்தான்! அதை பார்த்தவளுக்கு இம்முறை வாய் விட்டே சிரிப்பு

    வந்தது!


    "என்னங்க....!" என்று இழுத்தவளை

    "அம்மா தாயே! நீ என்ன தனியா இருக்கும் போது எப்படியெல்லாம் சொல்வன்னு எனக்கு நல்லாவே தெரியும் !

    அதனால வினய்ன்னு பேர் சொல்லியே கூப்பிடு! அதுக்காக அன்னைக்கு மாதிரி வாட போடா ன்னு சொல்லாத!"

    என்று அவன் கூறியதும்

    "சாரி!" என்று மன்னிப்பு கேட்டாள்!

    "ஹே இப்ப ஏன் ஒரு மாதிரி ஆயிட்ட? நான் சும்மா விளையாட்டுக்கு தான் கிண்டல் பண்ணேன் உண்மையா சொல்லனும்னா நீ டா
    போட்டது எனக்கு ரொம்ப புடிசுருந்துது நம்ம தனியா இருக்கும் போது வேணா டா போட்டுக்கோ! மத்தபடி வெளியில டா போட்டு
    அப்பறமா பத்திரிக்ககாரங்கா யாராவது கொட்ட எழுத்துல "மூன்றெழுத்து நடிகரின் மனைவி அவரை "டா" போடும் சுவாரஸ்ய
    செய்தின்னு என்ன ஏலம் விற்ற போறாங்க!"
    என்று வினய் கூற அடக்க மட்டமல் சிரித்தாள்!

    அவள் சிரிப்பை ரசித்தவனுக்கு அது ஒன்றே தன் வாழ்நாள் முழுவதும் போதும் இவளுடன் வாழ என்று ஏனோ தோன்றியது!

    அவளை விழுங்குவது போல் பார்த்தவனின் பார்வை ஏதோ செய்ய அப்படியே அமைதி ஆனால்!

    "சரி ஏதோ சொல்ல வந்தியே என்ன வினோ?" என்று வினய் பேச்சை மாற்ற! இது தான் சமயம் என்று அவளும் சகஜமானாள்!

    "அது வந்து! என்னை மனிச்சுடுங்க வினய்!"

    "எதுக்கு??"

    "இல்ல ஆரம்பத்துல இருந்தே நான் உங்க கிட்ட ரொம்ப கடுமையா பேசி நடந்துகிட்டேன்! ஆனா நீங்க எனக்காகவும் அப்பாவுக்குமாய்

    இவ்வளவு யோசிச்சு செய்றீங்க ரொம்ப நன்றி வினய் இந்த உதவிய ஆயுள் வரை மறக்க மாட்டேன்!" என்றவளை விசித்திரமாய்
    பார்த்தான்!

    "என்ன அப்படி பாக்குறீங்க??"

    "இல்ல கட்டின புருஷன் கிட்ட மன்னிப்பு சாரி எல்லாம் ரொம்ப பலமா இருக்கே! அதான் பார்த்தேன்!" என்றவனது குரலில் ஏக வருத்தம்!

    "இன்னும் என்னை பிரிச்சு தான் பாக்குற அப்படி தானே??" என்றவன் வருத்தபடுவது தாங்காமல்!

    "சே! சே! அப்படியெல்லாம் இல்லை வினய்! நீங்க ரொம்ப நல்ல டைப்! கொஞ்சம் இல்ல இல்ல ரொம்ப விளையாட்டு தனம் என்னை

    மாதிரியே! எனக்கு ஒரு நல்ல கம்பானியன் தான் நீங்க!" என்றவளை பார்த்து முகத்தை திருப்பி கொண்டான்!

    "ஆக அம்மணி என்னை இன்னும் கணவனாய் ஏற்க வில்லை ஒரு நல்ல தோழனாய் தான் பார்கிறார்களாம்! எல்லாம் என் நேரம்!"
    என்றவனுக்கு ஏனோ அவசியம் இல்லாமல் கோவம் பொத்து கொண்டு வந்தது!

    அந்த கோவத்தை அவளிடம் காட்ட முடியாமல் காரின் வேகத்தில் காட்டினான்!

    அது வரை நன்றாக சிரித்து பேசியவன் சற்றென்று முகம் மாறியதும் கோவமாய் வண்டியின் வேகத்தை அதிகமாக்குவதையும்

    கண்டவளுக்கு காரணம் என்னவென்று புரியவில்லை?? நன்றாக தானே சிரித்து பேசி கொண்டிருந்தான்?? திடீர் என்று என்ன வந்தது??

    இப்படி இவன் இருந்து பார்த்ததில்லையே என்று எண்ணியவளுக்கு தானாக சென்று அவனிடம் பேச்சு தரவும் பயமாய் இருந்தது!


    அமைதியாகவே அவர்கள் பயணம் தொடர நேரம் போகவும் நித்திரையில் ஆழ்ந்தாள்! அவள் தூங்கி விட்டாள் என்பதே அவள் தலை தன்
    மேல் சாயவும் தான் தெரிந்து கொண்டான் வினய்! அது வரை அவள் பக்கம் கூட திரும்பினான் இல்லை!

    அவள் தன் மேல் சாயவும் இருந்த கோவம் எல்லாம் காற்றாய் பறந்தது என்று தான் சொல்லவேண்டும்! அந்த அளவு மனைவியின்

    முகம் குழந்தையாய் தூக்கத்தில் தோன்ற அப்படியே முடியை கோதி நெற்றி பரப்பில் இதழ் பதித்தான்!

    அம்மணி அவனை நெருங்கி படுத்துக்கொள்ள கிட்டத்தட்ட தன்னை அணைத்திருந்த மனைவியை கைகளால் தழுவி கொண்டு வண்டியை

    செலுத்தினான்!

    ஏனோ அந்த காற்றுக்கும் மனைவியின் அணைப்பிற்கும் என்று ஏகாந்தமாய் இருந்தது!

    அவளை அணைத்து கொண்டே தூங்கும் தன் மனைவியோடு பேசினான்!

    "ஹே செல்லம் இன்னும் நான் உன்னோட நண்பன் தானா? என்னை எப்ப டி புருஷனா ஏத்துக்க போற??" என்று இம்முறை கன்னத்தில்

    அழுத்தமாய் முத்தம் பதிக்க தூக்க கலக்கத்திலேயே அதை கைகளால் துடைத்தாள்!

    அவளது செய்கை வினயை சிரிப்பில் ஆழ்த்தியது! " பாரு டா முத்தம் தந்தா தூக்கத்துல கூட தொடைக்குறா!" என்று மறுபடியும் இதழ்

    பதிக்க இம்முறை கண்களை சற்று நெளித்து மறுபடியும் துடைத்தாள்!

    "வேண்டாம் வினய் உன் பொண்டாட்டி எழுந்துட போறா! அப்பறம் இருக்கற சந்தோஷமும் போய்டும்!" என்று சுதாரித்தவன்! மெல்ல

    அவளை வருடி மீண்டும் தூக்கத்தில் ஆழ்த்தினான்!

    மனைவியை பற்றி அவன் அறிந்த விஷயங்களில் இதுவும் ஒன்று! சிறு பிள்ளையாய் அவள் இருக்கும் போது தாயோ தந்தையோ

    ஆசையாய் அணைத்து முத்தம் கொடுத்தால் இப்படி தான் கன்னத்தை துடைபாளாம்!

    இன்னும் மாறவில்லை இவள் என்று நினைத்தவன் அதே புன்னகையுடன் வண்டியை செலுத்தினான்!

    ஊட்டி வரும் வரை மனைவியின் அருகாமையா? இல்லை அவள் மேல் உள்ள அக்கறையா என்று தெரியாமல் அவன் சற்றும் தூங்கவே

    இல்லை! ஏனோ தூக்கம் அவன் கண்களை தழுவவே இல்லை!

    ஊட்டி நெருங்கியதும் கணவனை அணைத்த நிலையில் படுத்திருப்பதை உணர்ந்தவள் அவனிடம் இருந்து விலகி மன்னிப்பு கேட்க

    இருக்கட்டும் என்று பெருந்தன்மையாய் கூறியவன் அதோடு நில்லாமல் மனைவிக்கு குளிருமே என்று அக்கறையாய் சால்வை

    ஒன்றையும் போத்தி இருப்பதை அப்போது தான் உணர்ந்தாள்!
     
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    apa oru valiya sagaja nilamaiku pesikuranga...
    ini romance than nu sollu... ;-)

    vinai manasula ninaikira dialogs ellam super da...:thumbsup
     
  3. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi yams
    lovely update da:whistle........madam, avainga manasula hero sir-ai enemy rangeil irrundhu friendinkira rangeil konduvandhu irrukainga...nalla imporvement:)....bt eppo husband position???:hide: vinay unnoda aluimpal thanga mudiyala:rotfl.... super pair:whistle...waiting for next update da:coffee....
     
  4. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Yamini,

    Vinai romba super.....vino-vinai dialogues...humour+love....
    padichikitte irukkalaam.....
    vinaiyin oru oru seiyalum..vino mel avanukku irukura kadhalai velipaduthum vitham...
    so nice.....vinaiyin mathippu naaluku naal yerikitte poguthu paa...
    super updates!!!!!!!
     
  5. supriyamini

    supriyamini Senior IL'ite

    Messages:
    142
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    viney kandippa vino palayabadi mathama vida mattan ana vino yen eppadi silent ah maritta d.................................................... apparam ava diary ah viney padichana ellaya
     
  6. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    So Vinay is coming close vino. nice dialogue.
     
  7. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Yams!!!
    vinay & vino ooty ya reach pannitangala? Ini koodia seekiram romance sa? Parkalam.. intha vino enna panna pora nu.... wating for next update ma....

    Regards,
    S.Uma
     
  8. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Vinay Enemyla irunthu Friend aayachu. Vino sagaja nilaikku marittu vara. Vino kurumba aarambicha vinay thanga mattannu ninaikkaren.
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    adhayum dhaan paakkalamae vaishu! thanks dear!
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வினையோட அலம்பல் மட்டும் இல்லை ரமியோட அன்பும் அதிகமே!
    அன்பாய் பின்னோட்டம் தரும் தோழிக்கு என் நன்றிகள்!
     

Share This Page