1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-37!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 22, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கிஷோரின் நடவடிக்கையில் இந்த ஒரு வாரம் நல்ல மாற்றம் தெரிந்தது. நல்ல நண்பனாய் அவனுக்கு சிவா கிடைத்திருந்தான்.அவர்கள் இருவரும் சேர்ந்திருந்த நேரம் எல்லாம் சிவாவுக்கு விமலின் நினைவு தான் அடிக்கடி வரும். அவனும் இப்படித்தான் எந்நேரமும் சிவாவிடம் ஒட்டிக்கொண்டே இருப்பான்.

    இன்று சிவா கேட்டான்... "என்ன கிஷோர்? ஊருக்கு போகிறேன் என்று நீயாக சொல்லவில்லையே?"

    "நீங்கள் எது செய்தாலும் அதில் கவனமும் அர்த்தமும் இருக்கும் சிவா.. அதனால் தான் நீங்களாக சொல்லும் வரை காத்திருக்கிறேன். நீங்கள் சொல்லுவதை செய்தால் மற்றவருக்கு எப்படி நல்லதாய் முடியுமோ, அது போல கண்டிப்பாக எனக்கும் நன்மையாக தான் முடியும்."

    "ஹா.. என்ன திடீரென்று என்மேல் இவ்வளவு நம்பிக்கை? உன்னையே பிடித்து நான் வானதிக்கு கட்டிவைக்க மாட்டேனா? அப்படி செய்தால் மட்டும் நீ ஒத்துக்கொள்வாயா?"

    "சொன்னேனே சிவா.. நீங்கள் கவனத்தோடு தான் செய்வீர்கள் என்று. வானதி மனதில் இப்போது நான் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். அவளை கட்டிக்கொள்ள சொன்னால் அது அவளுக்கு நியாயம் செய்வது ஆகாது என்பதும் நீங்கள் அறிந்தது தான். அதனால் அப்படி ஒருநாளும் நீங்கள் சொல்ல மாட்டீர்கள்."

    சிவாவுக்கு பெருமையாக இருந்தது, கூடவே வருத்தமும்.

    "உனக்கு என்னை பற்றி முழுமையாக கூட தெரியாது. ஆனால் நீ என்னை நம்புகிறாய். விமல்? அவனுடன் எப்படியெல்லாம் பழகினேன்? அவன் நான் சொல்வதையே கேட்க மறுக்கிறானே?"

    இப்போது கிஷோரின் முகத்தில் இருள் படிந்தது. "அதற்கு நானும் ஒரு காரணம் தானே..."

    "ம்ம்...அதனால் தான் எல்லாவற்றையும் சரிப்பண்ண உன்னை அழைத்து வந்திருக்கிறேன்...பார்க்கலாம்."

    "என்னை அழைத்து வந்ததெல்லாம் சரி தான்... ஆனால் என்ன பண்ண போகிறீர்கள்? அது தான் எனக்கு புரியவில்லை."

    "இன்று புரிந்துவிடும்... நீயும் நானும் விமல் வீட்டுக்கு போக போகிறோம்...அங்கு நான் சொல்லிக்கொடுப்பது போல நீ சொல்ல வேண்டும்."

    "என்ன சொல்ல வேண்டும்?"

    சிவா சொன்னான்... அதைக் கேட்ட கிஷோர் மட்டுமல்ல.. அதுவரை அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த வானதியே உச்சகட்ட அதிர்ச்சிக்கு உள்ளானாள்.
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    appdi rendu perum athirnthu pora alavirkku enna plan panni irukkaan Siva???
    mudivu nerunguthoo....
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    mm maaratha kishore maaritaan.. maari pona Vimal enna panna poraan???
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    siva nalla manithanaaga irukkirane thavira (mugilukku)nalla annan illai.
     
  5. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Periamma solra madri dan enaku kuda thonudhu priya.

    Sorry to say , enaku edho story lighta drag agara madri iruku.
    Sorry ma if my words hurt you. Ususally you write in fast pace.tats y told
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Aamaa saroj... nandri...:)
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Nandri pinnoottathuku rammy...:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Amma... siva nala annan thaana enbathai kathai niraivadaiyum pothu sollungal... nandri amma..:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Athe bathil thaan ungalukkum raba...:)
    Cha Raba... naa enna thottachinugiya.... ithukellam hurt aaga??????????:rant:rant

    Enaku time illa raba...Nethu story aarambichen... eluthi mudikurathukulla velai vanthuruchu.. Ini eppavum pola fast ah poyiralam..:)
     

Share This Page