1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-35!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 17, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒரு வேளை வானதி தன் கருவைக் குறித்து சொல்லியிருந்தால் விமலன் அவளை அப்படி சந்தேகப்பட்டிருக்க மாட்டானோ என்னவோ.... விமலனுக்கும் அந்த இருவார பிரிவு உண்மையை உணர்த்த தான் செய்தது. வானதியின் பால் தன் மனம் ஈர்க்கப்படுவது அவனுக்கு புரிந்தது.

    முகிலின் கள்ளமற்ற அன்புக்கும் வானதியின் சந்தர்ப்பவாத காதலுக்கும் எடை போட்டுப் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. இனி அதில் பயனும் இல்லை. எது எப்படி இருந்தாலும், வானதி தன்னை விரும்புகிறாள் என்பதில் அவனுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. முகிலின் மேல் அவள் கொண்டுள்ள விரோதம் இவன் அறிந்தது தானே... அவள் தந்தையே சொல்லவில்லையா? அந்த துவேஷத்தின் எல்லையாய் தான் முகில் மேல் அப்படி ஒரு பழி சுமத்தியிருப்பாள். ஏதோ ஒரு படத்தை வைத்து எப்படியெல்லாம் விளையாடிவிட்டாள். ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் அது எல்லாம் தன்னை அடையத்தான் என்பது அவனுக்கு உள்மனதில் கொஞ்சம் உவப்பாய் தான் இருந்தது. இப்போதே அவள் மனம் மாறி வருவதாய் தான் இவனுக்கு தோன்றியது.

    தன்னை அவள் பார்க்கும் பார்வையே உணர்த்தவில்லையா? அவனுக்கு இந்த நினைவு அந்த மழை நாளின் இரவுக்கு அழைத்து சென்றது. அன்று இரவு விமலன் குடித்திருந்தான். பொதுவாக அவன் மதுவை நாடுவதில்லை. ஆனால் அலுவக விழாக்களில் அவன் மறுப்பதில்லை. தினசரி குடிக்காரன் போல அருவருப்பு இல்லாமல் குடிப்பான். அன்று ஏனோ அவன் எத்தனை குடித்தும், நிறுத்தவில்லை. ராமு கூட சொல்லிப் பார்த்தார்....

    "தம்பி நீங்கள் இதுவரை குடித்ததே அதிகம். இன்று அளவை மீறி எடுத்து கொள்கிறீர்கள்." என்று.

    ஆனால் அவன் அது எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை. அவனுக்குள் எரிந்துக்கொண்டிருந்த நெருப்பை அணைக்க அது அவனுக்கு அப்போது தேவைப்பட்டது. பெரிதாக வானதியிடம் சொல்லிவிட்டானே தவிர, அவளை பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் தாபத்தை இவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் இப்போது எல்லாம் மனம் ஒன்றி பழகுவதால் தொட்டு பேசும் சமயங்கள் அதிகம். என்றாவது அவள் தன் பெற்றோரை நினைத்து அழுதால், இவன் தான் மார்போடு சேர்த்தணைத்து சமாதனப் படுத்துவான்.

    அது அவன் கணவனாய் அவளுக்கு செய்ய வேண்டிய கடமையும் கூட. யாரோ போல தூர நின்று பேசினால், நாம் எதிர்பார்க்கும் அன்னியோனியமும் புரிந்துக்கொள்ளுதலும் எப்படி வரும் என்று நினைத்தான். அவன் சமாதானம் பண்ணுவது, அவளும் அதற்கு கட்டுப்படுவது எல்லாம் சரி தான். ஆனால் அதற்கு மேல் தான் அவன் உணர்ச்சியில்லாமல் போவான்.மரக்கட்டையாய் தன்னை மாற்றிக்கொள்வான்.

    இன்று அதையெல்லாம் அளவற்று குடித்து அடக்கி கொண்டிருந்தான். ராமு தான் அவனை காரில் கொண்டு போய் வீட்டில் இறக்கிவிட வேண்டியதாகிவிட்டது. வீட்டுக்குள் படுக்க வைத்துவிட்டு வானதியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான். அவன் சாப்பிட்டானோ இல்லையோ...அவன் வந்து தான் ஏதாவது செய்வான். வேலை அதிகம் இருக்கும் நாட்களில் ஹோட்டலில் வாங்கி வருவான். எனவே இப்போது என்ன இருக்கிறது சாப்பிட என்று கூட அவளுக்கு தெரியாது.

    மதியம் வைத்த சாதமும், பிரிட்ஜில் தயிரும் இருந்தது. குளிருக்கு சூடாய் இருக்க வேண்டுமே என்று ஏதோ தனக்கு தெரிந்த அளவு.... கடுகை தாளித்து போட்டு தயிரோடு சாதம் பிசைந்து எடுத்து வந்து கொடுத்தாள். அவன் சாப்பிடும் நிலையில் இல்லை என்பது புரிந்து நனைந்திருந்த உடைகளை களைந்து படுக்க வைத்தாள். தன் வேலையெல்லாம் முடித்துக்கொண்டு வந்தவள் அவனோடவே படுத்துக்கொண்டாள்.

    விடிந்தும் விடியாத பொழுதில்... மணி மூன்று அல்லது நான்கு இருக்கும், தன் தோள் மேல் விழுந்த கையில் திடுக்கிட்டு விழித்தவள், அடுத்து நடப்பத்தை யோசிக்கும் முன்பே அவனுக்கு வளைந்துக் கொடுக்க தொடங்கியிருந்தாள். அத்தனையும் அவன் சுய உணர்வின்றி போதையில் நடப்பது என்பதை அறிந்திருந்தும், அவளால் அந்த அணைப்பை விட முடியவில்லை.

    ஆறு மணிக்கு விழித்தவனுக்கு ஏதோ வித்தியாசம் புலப்பட்டது. ஆனால் அவன் எதுவும் கேட்கவில்லை.அவனுக்கு நடந்ததை பற்றிய சந்தேகம் கூட வர வாய்ப்பில்லாமல் வானதி எப்பவும் போல நடந்துக் கொண்டாள். அவனும் அதற்கு மேல் எதுவும் கிளறவில்லை. ஒருவேளை பேசியிருந்தால், அவளை அப்படி சந்தேகப்பட்டிருக்க மாட்டானோ என்னவோ...

    அதற்கு பிறகு வந்த நாட்கள் அவனின் வசந்த காலமே தான்... வானதி அவனை அத்தனை தூரம் கவர்ந்திருந்தாள்..அவளை பிரிந்திருந்த இப்போதும் கூட, அவளின் அருகாமை தந்த இன்பத்தை கற்பனையில் கண்டு மகிழ்ந்திருந்தான்.இனி தன் வாழ்வு சொர்க்கமாய் அமையும் என்று நினைத்தான்..
    ஆனால் அவன் உறுதியாய் நினைத்த அதுவும் அத்தனை சீக்கிரம் பொய்த்து போகும் என்று அவன் துளியும் எண்ணவில்லை.
    இருவாரம் கழித்து திரும்பியவன் அவளை பார்த்தது மருத்துவமனையில் தான்... அப்போது கூட எங்கே பார்க்கவிட்டார்கள்?
     
    Loading...

  2. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    ohhhh.... he thinks the kid is not his thats why he is mad at vanathy? ippo unmai therinja... appo vanmugil vazhkkai????
    vanmugil or vanathy only one person can live with vimal. what would happen to the other?
    avalaga kaathu kondu irukiren.
    enge ungal kavithai?
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya ooh idhu thaan thirupumunai episode a.. gyabagam illaathal Vanathi vazhakkai pochu.. suya ninaivu nalla irukkum podhu vaanmugil vaazhkkaiyai kedukiraane Vimal.. :rant
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    vanathi than bad nu ninaicha... vimal than bad ah...
    romba kolapura...
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Twist mela twista koduthu engala twist aakure.
    Kalakkal.
     
  6. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Though Vimal sounds like a bad guy, romba practical-a elaroda emotions-um solra...good deva...So, idhu naala dhaan thorathitaana? See, eppadiyum oru ponnu kooda serthu vachuduva nu ninaikuren. Inoruthi ivan ninaipulaye vaazhkaiya kadathitaal nu old cinema madhiru mudichudadha :rant pls deva...
     
  7. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    hero kuta uaar serapporaangkaa........eagarly waiting........
     
  8. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    yenanenamolaam thriupam nadanthruku shockinga iruku aduthu ena deva waiting for it
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    oh.....ippathan suspence udaya aarambichu irukku.....

    kishore yetho sollirukkan vimal kitta...illa deva.....

    vaanathiya????????????? vaanmukila????????yaaru ku vaazhkai....????:coffee

    aavalaga irukku unnoda next episode padikka.....:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Kavithai thinamum eluthuna bore adichurum shri... Thank you..:)
     

Share This Page