1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-31!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 13, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இதுவரை விமலனிடம் இவள் எந்த உண்மையும் சொல்லவில்லை. இதில் அவனிடம் மறைத்த ஒன்றை ஊருக்கே தெரியும்படியாக போஸ்டரில் பார்த்தால் அவன் என்ன நினைப்பான்? எல்லா குட்டும் அல்லவா வெளிவந்துவிடும். ஒரு உண்மையை மறைத்ததும் இல்லாமல் அதை திரித்து வேறு ஒருத்திக்கு எதிராக திருப்பிய பழியும் வந்துசேருமே? எங்கே அவனை இழந்து விடுவோமோ என்ற பயம் அவள் உடலில் நடுக்கமாக மாறியது.

    ஆனாலும் எதிரிக்கு முன்பு பயத்தை காட்டிவிட்டால் கோழையாய் நின்றவனும் வீரனாவான் என்பதை உணர்ந்தவள், தைரியமாகவே எதிர்த்தாள்.. "இங்கு பார். நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கொள். உண்மையை மறைத்தவளுக்கு தானே பயம்? எனக்கில்லை... இப்போது வீட்டை விட்டு வெளியேறு... அல்லது பணிப்பெண்ணை வைத்து வெளியேற்றுவேன்..."

    கிஷோருக்கு மனம் எரிமலையாய் கொதித்தது... " என்னடி சொன்னாய்....." கத்திக்கொண்டே கொலை வெறியுடன் அவள் கழுத்தை குறிபார்த்து வந்தவனை அருகில் கைக்கு ஏதுவாய் கிடைத்த கண்ணாடி குவளையை உடைத்து தடுத்து நிறுத்தினாள்... "இன்னும் ஒரு அடி நீ முன்வந்தால், ஒரேயடியாய் போய் சேர வேண்டியிருக்கும்."

    அவள் கண்ணில் தெரிந்த உறுதி அவனை பின்னோக்கி நகர்த்தியது... அப்படியே அவளை முறைத்தவாறே, கதவை பலமாய் சாத்திவிட்டு சென்றுவிட்டான்.

    அதுவரை போராடியவள் அதற்குமேல் நிற்ககூடாமல், சரிந்துவிட்டாள்.. மறுபடி அவள் கண் விழித்தபோது, அருகில் மருத்துவருடன் சமையல்கார பெண்ணும் உடனிருந்தாள்... இவளுக்கு உடல் மிகவும் களைப்பாய் இருந்தது. செல்லும்போது அத்தனை நேர அயர்வையும் போக்கும் விதமாக மருத்துவர் சொன்னார்...

    " வாழ்த்துக்கள் வானதி... நீங்கள் தாயாக போகிறீர்கள்.. அதனால்தான் இந்த மயக்கம்.. பயப்பட ஒன்றுமில்லை.. ஓயும் வரையில் எந்த வேலைகளும் செய்யவேண்டாம்... அதற்காக வேலையே செய்யாமல் சோம்பி இருக்கவும் வேண்டாம்.. ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.. நான் வாரம் ஒருமுறை வந்து பார்க்கிறேன்." சில அடிப்படை அறிவுரைகளை சொல்லிவிட்டு சென்றார்.

    அவர் சென்றபின்பும் இவள் சுய உணர்வை அடையவில்லை... 'உண்மையா இது? ஆனால் எப்படி இருக்க முடியும்? அதற்குள்? அதுவும் திருமணம் முடிந்து இரண்டரை மாதங்கள் தானே ஆகிறது?'

    எதைஎதையோ நினைத்தவள் இன்பத்தில் மூழ்கினாள்.. அவளும் தாய் ஆக போகிறாளே... இந்த நேரம் பார்த்து விமலன் அருகில் இல்லையே.. அவர் இருந்தால், இந்நேரம் குதித்து ஆர்ப்பாட்டம் செய்திருப்பார். தன்னை தரை மீது நடக்ககூட விடமாட்டார். கைகளிலேயே வைத்து தாங்குவார்.'

    அவன் அருகில் இருப்பதாய் நினைத்து ஒவ்வொன்றையும் இவளே கற்பனை பண்ணி பார்த்தாள். தன்னுள் ஒரு உயிர் வளர்வதை நினைத்தவள் முற்றிலும் மாறிப்போனாள். மனதில் முயன்று மகிழ்ச்சியை தருவித்தாள். உள்ளுக்குள் கிஷோரைப் பற்றி இருந்த பயம் கூட மறையத்தான் செய்தது. கரு உண்டாகியிருக்கும் இப்போது...யார் வந்து என்ன சொன்னாலும், தான் பாவமே செய்திருந்தாலும், கணவன் மன்னித்து தன்னை ஏற்றுக்கொள்வான் என்றே நம்பினாள்.

    அந்த வாரம் திங்கட்கிழமை விமலன் வருவதாய் இருந்தது.
    விமலன் தான் வர மேலும் பத்துநாட்கள் பிடிக்கும் என்று போன் பண்ணியிருந்தான். இவளுக்கு லேசாக ஏமாற்றம் இருந்தாலும் ஆனந்தமாகவே உலாவினாள்...
    அவள் இந்த நற்செய்தி சொல்லும்போது அவன் முகம் எப்படி மலர்கிறது என்று பார்க்கவேண்டும். எனவே அவனிடம் அவள் இதை போனில் கூட சொல்லவில்லை.

    அந்த வாரமும் மருத்துவமனைக்கு சென்றாள். பெரிதாக ஒன்றும் இல்லை.. கருவை உறுதி செய்தனர்.. அந்த மகிழ்ச்சியில் காரை ஒட்டிக்கொண்டு வந்தவள், ரோட்டைக் கடக்க சென்ற சிறுமியை கூட கவனத்தில் வைக்காமல் சென்றாள். அது அவள் கவனத்துக்கு எட்டியபோது காரை ஒரு பக்கமாக வளைத்து திருப்பியவள், பின்னால் வந்த லாரிக்கும் முன்னால் வந்த அரசு பேருந்துக்கும் இடையில் சிக்கிகொண்டாள்.

    கதையை இங்கு நிறுத்திவிட்டு சிவாவின் முகம் பார்த்தாள்.. "இதற்கு பிறகுதான் உங்களுக்கு தெரியுமே அண்ணா.. கரு விபத்தில் கலைந்து விட்டது.. இந்த இரண்டு ஆண்டுகளும் நான் சுயநினைவு இழந்து இருந்தேன்... எத்தனையோ நாட்கள் அவர் வந்து என்னை பார்த்திருக்கிறார். அது எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் எங்கோ தூரத்தில் அவர் குரல் கேட்கும்... இத்தனை பாவியா நீ என்று..." சொல்லிவிட்டு முகத்தில் கை வைத்து தேம்பிதேம்பி அழுதாள்...

    "அவர் என்னிடம் இரக்கம் காட்டுவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை தான். ஆனால்... ஆனால்... அண்ணா... அவர்.. அவர் என் பக்க நியாயத்தை கூட கேட்காமல் வெளியேற்றிவிட்டாரே...."

    சிவா கடினமான குரலில் சொன்னான்... "நியாயம் இருந்தால் அல்லவா கேட்டிருப்பான்." சம்மட்டியால் அடி வாங்கியவள் போல நிமிர்ந்தாள்... "அண்ணா..?"

    "வானதி நான் உனக்கு மட்டும் அண்ணன் இல்லை. அவனுக்கும் நண்பன். இத்தனை நாள் எப்படி வருந்தியிருப்பான்? நினைத்து நினைத்து அழுதிருப்பானே? அதுவும் நீ செய்த துரோகம் எல்லாம் தெரிந்த பின்பு?"

    அவளுக்கும் குற்றஉணர்வு முள்ளாய் குத்தியது.

    அவள் மெய்யாகவே வருந்துவதைப் பார்த்து ஆறுதலாய் பேசினான்... " சரி வானதி, இப்போது அதை பற்றியெல்லாம் பேச வேண்டாம். ஆனால் அவன் உன்னை வெறுக்க வேறு ஏதோ காரணம் இருக்கிறது. உனக்காக இத்தனை நாள் சிகிச்சை பார்க்கவில்லையா? உனக்கு பணி செய்வதற்கு என்னிடம் வந்து ஆள் தேடித் தருமாறு சொல்லவில்லையா? ஊருக்கே வந்து லக்ஷ்மி அம்மாவை அழைத்து வரவில்லையா? இதையெல்லாம் உன்மேல் உள்ள அக்கறையில் தானே செய்தான்? இப்போது அதை எதுவும் நினைக்காமல் வீட்டை விட்டு துரத்துவானேன்?"

    கேட்ட அவனுக்கும் கேட்கப்பட்ட அவளுக்கும் விடை தெரிந்துதான் இருந்தது... விடை வான்முகில் என்று..
     
    Last edited: Nov 13, 2010
    Loading...

  2. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    ohhh.. vera yethuvum nadakalaya. i'm confused. why vimalan is mad at vanathy when he aleady knew vanathy made the fake photos. is he mad because he didnt know about vanathy's love? or was the baby not his? how come vanathy was clever enough to avoid kishore's advancements during her encounter before marriage......

    evolo suspense. avoloda wait panren.
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotflipdi ottu mothama kelvi ketta enaku azhugaiye varuthu shri... Adutha post night poduven.. appa paarunga...
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    good going deva.adutthu yenna nadakkum yendra aaval than enakku
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Sonna maathiri moonu paart innaikku.Ok...am waiting......
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    antha kishore onnum panalaya!!!

    adutha part ku waiting...
     
  7. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    shrikala ketta questions enakum iruku...very confusing...next part padichutu solren...
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    eppadi vimalanukku therinjuthu intha unmai ellam.....

    aval appadithan nu therinju thane kalyaanam pannunan..apparam yethukku marupadiyum kovap paduraan.....:spin
     
  9. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Nalla pogudhu priya.. But Vimalan mugil pakam sanjitana ena??
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you soniya...:)
     

Share This Page