1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-30!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 13, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வானதியும் விமலனும் திருமணம் செய்து ஒரு மாதம் முடிந்திருந்தது...

    'இரண்டாவது தடவையாக ஏமாந்திருக்கிறான்... அதுவும் ஒரு பெண்ணிடம்... அதிலும் ஒரே பெண்ணிடம்... அவள் தான் சொன்னாள் என்றால் இவனுக்கு எங்கே போனது புத்தி... ஏற்கனவே தெரிந்த செய்தி தானே அவளைப் பற்றி.. அவள் வார்த்தையை நம்பி தப்பிக்க விட்டது பெரும் பிசகு.. ஆனால் அதையெல்லாம் இப்போது யோசிப்பதில் பயன் இல்லை.


    இனி நான் அவளுக்கு கொடுக்கும் அடி வாழ்க்கையில் மறக்க கூடாததாய் இருக்க வேண்டும். அந்த விமலனுக்கு மனைவியாய் இருப்பதை விட இந்த கிஷோருக்கு கால்மிதியாய் இருந்திருக்கலாமே என்று அவள் துடிக்க வேண்டும்... ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு நரகமாய் கழிய வேண்டும்... என்னை உதறித்தள்ளி விட்டு போனவள் என்னை நினைத்து நினைத்து கதறி அழ வேண்டும்...'


    'ஊரை விட்டு சென்னைக்கு வந்தவன் வானதியை விடாமல் துரத்தினான்... ஆனால் அவள் கவனிக்காத வண்ணம்... விமலன் வீட்டிலிருந்து வெளியில் போகும் நேரம், திரும்பும் நேரம் எல்லாவற்றையும் குறித்துக்கொண்டான்.. வானதி என்னவெல்லாம் விமலனிடம் சொல்லியிருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியாதே.. இவனாக சென்று மறுபடியும் உண்மையான அந்த படங்களைக் காண்பித்து கூட விமலனை நம்ப வைக்கலாம்.. ஆனால் வானதி இப்படி ஒருவன் என்றோ எடுத்த படங்களை வைத்து என்னை மிரட்டிக்கொண்டிருக்கிறான் என்று கூட சொல்லியிருப்பாள்.. வில்லி... அவளை நம்புவதற்கில்லை. எனவே இனி வேறு ஒரு கதையை தான் புதிதாக உருவாக்க வேண்டும்..'

    அந்த கதையை உருவாக்க அவனுக்கு தகுந்த நேரமும் கிடைத்தது... விமலன் தொழில் விஷயமாக ஒரு வாரம் வெளியூர் செல்கிறான் என்பதை அவன் அலுவலகத்தில் விசாரித்துத் தெரிந்து கொண்டான். இந்த ஒரு வாரத்தில் ஏதாவது செய்தால் தான் உண்டு... என்ன செய்யலாம்...

    விமலன் ஊருக்கு சென்றிருந்தான்... அவன் சென்ற இரண்டாவது நாள் கிஷோர் வானதியை சந்திக்க வீட்டுக்கே நேரடியாய் வந்துவிட்டான்.. எதற்கும் அவளிடம் பேசிப்பார்த்து அதற்கு தகுந்தபடி திட்டம் போடலாமே என்று. அவனை முதலில் கண்டவளுக்கு அதிர்ச்சி தான். ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கேட்டாள்.

    "இங்கு எதற்காக வந்தாய்?"

    'எவ்வளவு திமிர் இந்த கழுதைக்கு.... எகத்தாளமாய் என்னிடமே ஏன் வந்தாய் என்று கேட்கிறாள் பார்.. கொஞ்சம் கூட பயம் இல்லாமல்.. இருடி.. இன்னும் எத்தனை நேரம் இப்படி துள்ளுவாய் என்று பார்க்கிறேன்..'

    "என்ன வானு... இப்படி கேட்கிறாய்? ஒரு காதலன் தன காதலியை பார்க்க, அதுவும் யாரும் இல்லாதபோது வருகிறான் என்றால்.. அது ஏன் என்று கூடவா உனக்கு தெரியாது?" குரலில் ஏளனம் ஒழிக்க போலியாய் வியந்தான்.

    இதற்கு முன்பு எப்படியோ, ஆனால் விமலன் தன்னை வானு என்று அழைக்கத் தொடங்கியதில் இருந்து, வேறு யார் அப்படி அழைத்தாலும் அவளுக்கு அது கசந்தது... அதிலும் இவன்...

    காரமாய் பதில் கொடுத்தாள்..." அடச்சீ... யாருக்கு யார் காதலி? உன்னை ஒருநாளும் நான் காதலிக்கவில்லை... அப்படியே வயது கோளாறு காரணமாக அந்த பாவத்தைப் பண்ணியிருந்தாலும், இப்போது அப்படி எதுவும் என் மனதில் இல்லை... என் மனதில் இருப்பவர் என் கணவர் மட்டும் தான்..."

    "ஓ.. என்னை காதலிப்பது பாவமா உனக்கு? அதை என்னிலும் மோசமான பாவியான நீ சொல்வது தான் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது." சொல்லிவிட்டு ஒரு மாதிரியாக சிரித்தான்.

    அந்த சிரிப்பே அவளுக்கு நாராசமாய் இருந்தது... "இங்கே பார்...நான் பாவிய இல்லையா என்பது உனக்கு தேவையில்லாத விஷயம்.. அதை பற்றி கேட்கும் உரிமை உள்ளவர் என் கணவர் மட்டும் தான்.. நீ இல்லை. எதற்கு வீண்பேச்சு? முதலில் இங்கிருந்து வெளியில் போ..."

    இப்போது அவன் குரலும் கடினமாய் மாறியிருந்தது. "அத்தனை சுலபத்தில் வெளியில் போவதற்காக நான் இங்கு வரவில்லை வானதி... உனக்கு தேவை வசதி... பணம்... அது தானே? அதற்கு தானே அவனை திருமணம் செய்துக்கொண்டாய்? அதில் நான் குறிக்கிடவில்லை. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது.."

    "ஹா... ஹா... நீ எனக்கு நிபந்தனை இடுகிறாயா? அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை... உன்னிடம் பணிவதற்கு நான் முட்டாள் இல்லை.."

    "நீ முட்டாள் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும் வானதி... அதனால் தான் மாற்றிய படங்களை உன்னிடம் கொடுத்தவன், நீயும் நானும் இருக்கும் அசல் படங்களை என்னிடமே வைத்துக்கொண்டேன்.." இடுங்கிய விழிகளில் அவளைப் பார்த்தான்.

    ஆனால் வானதி அசைந்துக்கொடுக்கவில்லை... புதிதாய் வேறு ஒரு பொய் சொன்னாள்... "இது எல்லாம் என் கணவருக்கு தெரியாமல் நான் மறைத்திருந்தால் தானே நீ காடும் படங்கள் என் வாழ்வைப் பாதிக்கும்? அவரிடம் நான் எல்லாவற்றையும் சொல்லிய பிறகு தான் மணம் செய்துக்கொண்டோம்.." அவனுக்கு இவள் சொன்னால இல்லையா என்பது தெரியாதே என்ற தைரியத்தில் இப்படி சொன்னாள்.

    அவள் எதிர்ப்பார்த்தது போல ஒரு வினாடி அவன் முகம் களை இழந்தது... ஆனால் அவனும் ஒன்றும் இதை யோசிக்காமல் இல்லையே...

    "ஹா... வானதி ஒன்றை மறந்துவிட்டாயே கண்ணு... இதையெல்லாம் உன் கணவனிடம் கொடுப்பேன் என்றா நினைத்தாய்? இந்த சென்னையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் போஸ்டர் அடித்து ஓட்டுவேன்... இது அந்தரங்கமாய் மட்டும் இருந்தபோது உன் கணவன் பெருந்தன்மையாய் எடுத்துக்கொண்டிருக்கலாம்.... ஆனால் ஊருக்கே தன மனைவியின் லட்சணம் தெரிந்துவிட்ட பின்பு? நினைத்து பார்.."

    முதன்முதலாக வானதியின் உடல் நடுங்கியது...

    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    (மன்னிக்கவும்... ஒரு வாரமாக கணினி செயலற்று போனதால், கதை எழுதுவதில் தாமதம்.)
     
    Last edited: Nov 13, 2010
    Loading...

  2. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    ada paavamae, ippadi oru thirupama....
    sorry about your computer deva. i hope you didnt loose any data in it.
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    mm...villanin leelaigalai solla aarmbithu vittaya........

    ippa vanathi reaction enna?????????..vinai vithaithal vinai thaan mulaikkum ...

    super deva.....one week story ku pathila...1 part mattum potta eppadi deva.....:rant:rant..
     
  4. misslov

    misslov New IL'ite

    Messages:
    69
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Continuous aaga padikuren. Konja nal story update pannalaya.. So i felt sad.one week story ku compensate panunga.:)
     
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    vaanathy romba thayiriyama handle panra intha prechanaya.good going deva
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Paravaala late aa vanthaalum
    hot aa koduthirukke intha paarta....
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Computer repair ah??? kathai ezhuthiye repair panitiya??? :biglaugh
    just kidding da...
    Nice...
     
    Last edited: Nov 13, 2010
  8. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    semma interesting-a pogudhu pa...idho, next episode padilka poren...
     
  9. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Enna priya,
    Kadhai over a soodu pidikudhu pola???
    Moving on to next episode....
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ellaame poiduchu shri...:)
     

Share This Page