1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-29!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 6, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வானதிக்கு மூளை தெளிவாக வேலை செய்ய ஆரம்பித்தது.. கிஷோரின் திட்டத்தில் ஓட்டை எதிலும் இல்லை. ஆனால் வான்முகிலின் திருமணத்தை நடத்தும் ஒன்றுமில்லாத திட்டத்துக்கு இத்தனை கஷ்டப்பட அவளுக்கு விருப்பமில்லை. அதோடு கிஷோரின் நடத்தையிலும் அவளுக்கு நம்பிக்கை வர மறுத்தது... அவனுக்கு தன்னிடம் உள்ள தேவை என்ன என்பதிலும் அவளுக்கு ஒரு அனுமானம் இருந்தது.

    தனக்கு தெரியாத ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கவே இத்தனை செய்பவன், தன் வாழ்க்கையை அந்த படங்களை வைத்து நாசம் செய்வான் என்பதில் அவளுக்கு சந்தேகமேயில்லை. இப்போது அவள் குறியும் மாறியிருந்தது. விமலனை திருமணம் செய்தால் தனக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பே இல்லை.. எப்படியும் திருமணத்துக்கு முதல் நாளே சென்று விமலை நேரில் சந்தித்து, எல்லா விபரங்களையும் கூறிவிட்டால், அவன் அதை நம்பாவிட்டாலும் கண்டிப்பாக அவன் தாத்தாவை நம்ப வைத்து விடலாம். பிறகு அங்கேயே டேரா போட்டு அவன் மனதிலும் இடம் பிடித்துவிடலாம்.. ஆக, கிஷோரிடம் இருந்து மாற்றப்பட்ட அந்த படங்களை வாங்கிக்கொண்டு நேரம் அமைவதற்கு காத்திருந்தாள். ஆனால் அவளுடைய அதிர்ஷ்டம் அவளைத் தேடியே விமலன் வந்தான்.

    அவனிடம் எல்லா உண்மையையும் சொல்லிவிட்டு அவன் முகத்தையே பார்த்தாள். அவனும் இவளையே கூர்மையாக பார்த்திருந்தான். அவனுக்கு அவள் சொன்னதில் துளியும் நம்பிக்கை பிறக்கவில்லை.. தன் நண்பனின் தங்கை மட்டும் அல்லாமல், தன் தோழியாகவும் மாறியிருந்த முகிலைப் பற்றி அவன் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான். ஆனால் இந்த புகைப்படங்கள்?? முகில் ஒரு நாளும் இப்படி செய்திருக்க மாட்டாள் அது நிச்சயம்.... அப்படியே இருந்தாலும் , அதை ஒத்துக்கொள்ளும் தைரியமும் அவளுக்கு இருக்கிறது என்பதை அறிந்தவன் வானதியை நினைத்தும் பரிதாபப்பட்டான். இவள் இந்த நிலைமையில் இருப்பதால் தான் இப்படி கேவலமாக புத்தி செல்கிறது என்று தான் திருச்சியில் உள்ள தன் நண்பன் வீட்டுக்கு அழைத்து வந்தான்..

    முதலில் அவன் திட்டம் வானதிக்கு அங்கு ஏதாவது நல்ல வேலை வாங்கி கொடுக்கலாம் என்பது தான். ஆனால் தானே அந்த படங்களை எடுத்து சென்று ஸ்டுடியோவில் கொடுத்து பார்த்தவன், அவை அனைத்துமே மாற்றப்பட்ட புகைப்படங்கள் என்பதை அறிந்ததும், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்துக்கொண்டான்.

    'ஏன்.. ஏன் இப்படி செய்தாள்? முகிலுடன் எனக்கு திருமணம் நடக்கபோவதாய் இவளுக்கு யார் சொன்னது? முகிலுக்கும் தனக்கும் திருமணம் நடந்துவிடுமோ என்ற பயத்தினால் இப்படி செய்திருப்பாளா? அப்படியே நடந்தாலும் தான் அதில் இவளுக்கு என்ன? ஒருவேளை இவள் என்னை விரும்புகிறாளா?'

    'அன்றொரு நாள் தன் மாமா அம்மாவிடம் சொல்லியது நினைவு வந்தது... அவளுக்கு கிடைக்காத ஒன்று யாருக்கும் கிடைக்க விட மாட்டாள்.. தன்னை விரும்பியதால் தான் முகிலை கெட்டவளாய் காட்ட முயன்றிருக்கிறாள்.. இனியும் தான் கிடைக்காவிட்டால் சகோதரி என்றும் பாராமல் அவள் வாழ்வை அழித்தாலும் அழித்தே விடுவாள்.. இப்போது என்ன செய்யலாம்...'

    யோசித்துக்கொண்டே இருந்தவன், அவளை திருமணம் செய்துக்கொள்வது தான் சிறந்த தீர்வு என்று தப்பாக முடிவெடுத்தான்.. ' ஆமாம்.. அது தான் சரி... என்மேல் உள்ள விருப்பம் தானே இத்தனைக்கும் காரணம்.. எந்த வசதியும் இல்லாத ஊரில் உட்கார்ந்துக்கொண்டே இவ்வளவு செய்கிறவள்... நாளை எது வேண்டுமானாலும் செய்யலாமே..? அவள் அப்படி எதுவும் செய்யக்கூடாதென்றால், அவள் விரும்பியது அவளுக்கு கிடைக்க வேண்டும். எனவே இதற்கு திருமணம் ஒன்று தான் வழி..'

    கண்டிப்பாக தாத்தா விரும்ப மாட்டார் என்று அறிந்தவன் அவசர அவசரமாக இங்கேயே திருமணமும் செய்து அதை பதிவும் செய்துக்கொண்டு போய் அவர் முன் நின்றான்.

    நினைத்ததுக்கு மாறாக அவர்கள் வாழ்க்கை மனம் ஒன்றிய இல்லறமாய் அமைந்தது.. அவள் விட்டுக்கொடுக்காத சமயங்களில் எல்லாம் அவன் விட்டு கொடுத்தான். அவனின் அன்பையும் காதலையும் பார்த்தவள், நாளடைவில் தானும் மாறத் தொடங்கினாள்.

    ஆனால் செய்த வினை சும்மா விட்டுவிடுமா?? கிஷோரின் வடிவில் அது துரத்திக்கொண்டே வந்தது.
     
    Loading...

  2. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    ippo nimathiya iruku vanathy vimalai yemathala. ana.... eagerly waiting for next episodes.
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    vanathi panna thappai thirutha thaana paarkanum...atharkkaga kalyaanam seyyanuma???:spin:spin

    vimalan decision thappo.....appa vimalukku mugil mela love illaya???
    deva???????????:hide:..

    ini enna aaga poguthu nu paarkkalaam...
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    vimal odathu loose thanamana mudivu... :bonk
     
  5. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    ena idhu loosuthanamaana decision-a iruku?? Mugil mela unmaiyaana love irundha ipdi seivana? Avan character-ai purinjikavey mudiyalaiye...
     
  6. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Peria peria business lam deal panravan ivlo muttal thanama decide pannuvana. Logic romba idikudhae.


    Avaloda photo nu kattayam vimalanuku therinjirukum.. Mugil madri nalla ponnai ivlo kashtapaduthalama vimalan?? Loose apa indha vimal??:hide:
     
  7. apar_ram

    apar_ram Silver IL'ite

    Messages:
    804
    Likes Received:
    48
    Trophy Points:
    70
    Gender:
    Female
    Hi Deva,
    Been reading your story.. was interesting and very nice poems. aana intha logic idikkuthe.. comeback with your next episode soon so we can read your justification. BTW why the delay in posting.... post soooon
    Aparna
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Kalakuredaa kanmani.
    athuvum antha kurung kavithgal SUPERbbbbbbbbbb....
     
  9. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    yen ipdi oru thirupam ipdi oru decision
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you shiri...:)
     

Share This Page