1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-28!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 5, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வானதிக்கு காதல் என்ற உணர்வே மரத்து போயிருந்த நேரம் அது. தான் எப்படியாவது இந்த வீட்டை விட்டு வேறு எங்காவது நல்ல நிலையில் இருக்க இடம் கிடைக்குமானால் அதுவே போதும் என்று பட்டது.இந்த சமயத்தில் தான் முகிலுக்கும் விமலனுக்கும் திருமண ஏற்பாடு செய்வதற்கு அவன் தாத்தா ஊரிலிருந்து வந்திருப்பதை அவள் அத்தை கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    "ம்க்கும்.. எங்கே அந்த கிழம் வந்தாவது இவள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்று பார்த்தால், உங்கள் தங்கை லட்சணம் ஊரெல்லாம் பிரசித்தம் போல.. சாவு எடுத்ததுமே இவள் பொறுப்பைப் பற்றி கண்டுக் கொள்ளாமலே போய்விட்டார். அட.. கூட பிறக்காதவள் என்றாலும் தங்களுக்கும் தங்கை தானே என்று அந்த சிறுசுகளாவது இவளை சீந்தினார்களா? அதுவும் இல்லை... அவர்களுக்கே கவலை இல்லாத போது உங்களுக்கு என்ன? இப்போது, இவளை வைத்துக் கொண்டு ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை."

    கேட்டுக்கொண்டிருந்த வானதியின் மாமா ஒன்றும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார். அதுவே போதுமென்று இவள் அத்தை தொடர்ந்தாள்..

    "இப்போது வந்தவர் ஏதோ வீட்டு வேலை செய்வதற்காவது இவளை கூட்டிக்கொண்டு போவார் என்று பார்த்தால், அந்த மனுஷன் சம்மந்தம் பேச வந்திருக்கிறாராமே? பக்கத்து வீட்டு கௌரி தாய் வீட்டுக்கு அங்கு போனவள் இந்த செய்தி கொண்டு வந்தாள்.. அந்த முகிலு பார்ப்பதற்கு சாது தான்.. ஆனால் வியாக்கியானமாய் இருந்து காரியம் சாதித்து விட்டாளே.. இந்த கழுதைக்கு அந்த சாமர்த்தியமும் இல்லை... வந்து நம் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது.."

    அதற்கு மேலும் அத்தை புலம்பிக் கொண்டே தான் இருந்தாள். ஆனால் அது எதுவும் இவள் காதை எட்டவில்லை. காதை எட்டி மனதை தொட்ட விஷயம் ஒன்று தான்.. அது முகில் சாதித்துவிட்டாள் என்பது.
    தான் தோற்றுப்போனோம் என்பது வெறியாய் மாறியது. தான் இருக்கிறோமா செத்தோமா என்பதை பற்றி கூட கவலைப்படாத அந்த வஞ்சக கூட்டம், நிம்மதியாய் இருக்கிறதே என்று பொருமினாள். தனக்கு இல்லாத வசதியான வாழ்க்கை முகிலுக்கும் கிடைக்க கூடாது என்பதில் இவளுக்கு வெறியே பிறந்தது.

    தன் வழியையே தீர்மானிக்க முடியாதவள் வாழ்க்கை விதியை தீர்மானிப்பது எப்படி????????

    அதை பற்றி ஒரு தெளிவான எண்ணம் வகுத்துக் கொண்டு கிஷோரிடம் சென்றாள். இவளை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தின் அதிர்ச்சியிலேயே தெரிந்தது. ஆனால் பழைய விஷயம் எதுவும் பேச விரும்பாமல் சுருக்கமாய் விஷயத்தை முடித்தாள். அவள் சொன்ன செய்தி இது தான்... "தாங்கள் இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படம் அனைத்தையும் தன்னிடம் கொடுத்துவிடுமாறு கேட்டாள்."

    தான் நினைத்ததை விட அவள் தைரியசாலி தான் என்பதை தெரிந்துக்கொண்டவன், நிதானமாய் பேச தொடங்கினான்.

    "இங்க பார் வானதி... எனக்கு உன்னோடு வாழ விருப்பமே இல்லாத போது அந்த படங்களை வைத்துக்கொண்டு உன்னை மிரட்டி தான் என்ன பயன்? எதற்காக அப்படி செய்ய வேண்டும்? பார்க்கபோனால், நீ எங்கே அதையெல்லாம் காட்டி என்னை பிடிக்க முயல்வாயோ என்று தான் என் பயமே... அதனால் என்னால் உனக்கு எந்த பிரச்சனையும் நிச்சயமாய் வராது... அதிருக்கட்டும், நீ அதை பற்றி கவலைப்படும் அளவு உனக்கு என்ன வந்தது இப்போது?"

    தான் விமலனை திருமணம் செய்ய திட்டம் போட்டிருப்பதை பற்றி சொன்னாள்.. சட்டென்று கிஷோருக்கு முகம் மலர்ந்தது.

    "வானதி... அப்படியா? அவ்வளவு பணக்காரன் உனக்கு உறவா? இதை முன்பே சொல்லியிருந்தால் நம் திருமணம் நடந்திருக்குமே?" பெரிதாய் மகிழ்பவனை போல நடித்தான்.

    இவள் புரியாமல் பார்த்தாள். அவனே தொடர்ந்தான்... "என்ன வானதி, புரியவில்லையா? உனக்கு பணம் இல்லை என்பதால் தான் என் வீட்டாரிடம் பேச நான் தயங்கினேன்... நீ நடித்தாயே என்றில்லை... உனக்கு என்மேல் எந்தளவு காதல் இருந்திருந்தால், நடித்தாவது என்னை அடைய நினைத்திருப்பாய் என்று எண்ணி தூங்காமல் தவித்த நாட்கள் எத்தனை தெரியுமா? இப்போது நீ இதை சொன்னதே போதுமே... உன்னை பற்றி சொல்லி திருமணம் செய்துக்கொள்ள..."

    "எனக்கு புரியவில்லை... நான் என் அத்தானை திருமணம் செய்துக்கொள்வது பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்.. நீங்கள் என்னை திருமணம் செய்துக்கொல்வதாய் உளறுகிறீர்கள்..."

    என்னவோ அவள் பெரிய விட் அடித்துவிட்டது போல சிரித்தான்.. " வானதி, உளறுவது என்னவோ உண்மை தான்.. நீ பக்கத்தில் இருந்தால் நான் அதை தானே பண்ண முடியும்... உன் அழகு அப்படி... சரி கேள், உன் உறவுக்காரன் பணம் படைத்தவன் என்பதே என் தந்தையை ஏமாற்ற போதுமானது. அதை சாக்கிட்டே நீயும் பணக்காரி என்று அவரை எப்படியாவது நம்ப வைத்து விடலாம் என்கிறேன்.. அதோடு, உன் எண்ணமும் நிறைவேறும்.. முகிலுக்கும் விமல் கிடைக்காமல் செய்துவிடலாம்.. இப்போது புரிகிறதா? "

    "இல்லை... எப்படி செய்துவிடலாம் என்று சொல்லுகிறீர்கள்? அதையும் சொல்லுங்கள்."

    "முகிலுக்கும் உனக்கும் ஜாடை ஒன்று தானே? உன் பெறோர் இறந்த போது நானும் பார்த்திருக்கிறேனே.. உன்னை வைத்து நான் எடுத்த படங்களை எல்லாம் கொஞ்சம் மாற்றினால் போதும், நீ என்று நீயே சொன்னால் தான் நம்புவார்கள்.. அதை வைத்து விமலனிடம் ஏத்தி விடு... முகில் ஏற்கனவே இன்னொருவனைக் காதலிக்கிறாள்... இப்போது அவனைத் தவிக்கவிட்டு உங்களை திருமணம் செய்தால் அவன் நிலைமை என்னாகும் என்று... அப்படி இப்படி எதையாவது சொல்.. நானும் வேண்டுமானால் துணைக்கு வருகிறேன். பணத்துக்காக உங்களை மணக்கிறாள் என்று சொல்கிறேன்.. நம்பாமலா போவான்? அவனுக்கு சந்தேகம் வந்தால் கூட நான் சமாளித்துக்கொள்கிறேன்..."

    வானதிக்கு முகம் மலர்ந்தது இப்போது.. இது மட்டும் நடந்துவிட்டால்? நினைக்கவே சந்தோஷமாய் இருந்தது. இதற்கு அவளும் சம்மதித்தாள்.

    கிஷோர் மெதுவாக அவள் அருகில் வந்தான்.. "என்ன டா... நான் உனக்கு மகிழ்ச்சி தரும் விதமாய் எத்தனை செய்திகள் சொல்லியிருக்கிறேன்..ஒன்றும் கிடையாதா?" ஏக்கமாய் பார்ப்பது போல பார்த்தான். ஆனால் வானதி அப்படி ஒன்றும் ஏமாந்தவள் இல்லையே...அழகாய் நழுவி விட்டாள்.... எல்லாம் அவர்கள் திருமணத்திற்கு பிறகு என்று.

    கிஷோருக்கு அவளின் இந்த மாற்றமே போதுமாய் இருந்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் காரியம் சாதித்துவிட்டு, தன் தேவையை நிறைவேற்றி கொள்ளலாம் என்று நினைத்தான்.

    ஆனால் வானதி அவன் நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு புத்திசாலி என்பது பாவம் அப்போது அவனுக்கு தெரியவில்லை.

    "ஆம்..சதி செய்து தான்
    என் விதி மாற்றி அமைத்தேன்...
    வினை வைத்து தான்
    என் வழிப்பாதை வகுத்தேன்...
    தவறென்று தெரிந்தும்
    தவறாது செய்தேன்...
    உறவென்று அறிந்தும்
    உலைக்களத்தில் எரித்தேன்...

    மரணமே மார்க்கமாய்
    எனக்கு அளித்திருந்தால் கூட,
    நான் கொண்ட துன்பம் மறைந்திருக்குமே?

    ஆனால்.. மனம் வருந்தி மாறிய பின்போ
    ஏன் என்னை பழி தீர்த்துவிட்டாய்??
    பிழை செய்தபோதும்
    ஏன் என்னை மன்னித்து விட்டாய்??
    "
     
    Loading...

  2. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Aaha!! Ivlo matter nadandhurukka? Nalla vithyaasaman yosichurukka...very good...next enna nadandhuchu nu padika aavalodu kaathirukkiren :)
     
  3. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    aha vanathy ippadi ellam villi maari panra.....

    diwali ku nalla episode. enaku ithu thala diwali ana thala(husband) foreign la irukaar. so as usual thaan diwali poguthu.
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ooh Vanathi thaan Mugil pakkam Vimal pogama iruntha kaaranamaa?? too badd.. Kavithai romba nalla irukku Priya.. :)
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    this girl is too bad... shakehead
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    vanathi ivlo criminal la yosichala?? romba mosam.....

    deva ....romba super a oru twist kondu vanthutta.....

    unnoda thinking kooda criminal a than irukku :rotfl:rotfl

    paakalaam ini enna aaga poguthu nu...:)
     
  7. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    adada vanadhi ivlo cruel a plan panirukala??

    Avalai pavam pathadhu thapu pola?
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thanks ishu.. neengalavathu nambureengale.. itha naan thaan yosichen nu...:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Acho... paravala shri.. vidunga... intha diwali ya vida vara pora innum pala diwali ungaluku special ah irukum....:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you rammy....:)
     

Share This Page