1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-26!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 3, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எல்லாமே ஆச்சர்யமாய் இருந்தது அவளுக்கு. இப்படி ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்போம் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. கடவுள் ஒரு கதவை அடித்தால் மறு கதவை திறப்பார் என்பது எத்தனை உண்மை. நேற்று வரை கணவன் ஒருவன் தான் தனக்கு ஆதரவு என்று நினைத்தவள் எதிர்ப்பாராமல் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த இந்த உதவியில் சற்று திகைத்து தான் போனாள்.

    ஆரம்பத்தில் அவளுக்குமே நம்பிக்கை இல்லை தான். தன்னை ஜென்ம விரோதியாய் நினைப்பவளின் பாசறையிலிருந்து வரும் ஒருவன் அவளை எதிர்த்து தனக்கு உதவி செய்வதை யாரால் தான் நம்ப முடியும்...

    வானதி வீட்டை விட்டு வீராப்பாய் வெளியில் வந்துவிட்டாலே தவிர எங்கு போவது அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுக்கு லக்ஷ்மி அம்மாவைத் தவிர வேறு யார் நினைவும் வரவில்லை. அவர் ஒருவர் தான் தனக்கு இப்போது இடமளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் பேருந்து நிலையம் வந்தவளுக்கு எதிரில் வந்தவனைக் கண்டதும் வியப்பு தான். அதிலும் அவன் தன்னை நாடி வந்து பேசவும் ஒன்றுமே இவளுக்கு புரியவில்லை.

    "இங்கே நின்று எதுவும் பேச வேண்டாம் வானதி... என்னுடன் வா..." என்று சிவா தன்னை இந்த வீட்டுக்கு அழைத்து வந்தது, தன் சொந்த தங்கையை போல கவனித்து கொள்வது, எல்லாமே அவளுக்கு இப்போதும் கனவாய் தான் தோன்றியது.

    "என்ன வானதி... ரொம்ப யோசனை போலவே? உன் கணவனைப் பற்றியா?" சிவாவின் குரல்.

    நினைவுலகத்தில் இருந்து தடைப்பட்டு வெளியில் வந்தாள்...

    " ம்... அவரை மறந்தால் தானே நினைப்பதற்கு. என் யோசனை அதுவல்ல. நீங்கள் எங்கிருந்து எப்படி வந்தீர்கள் அண்ணா? அதுவும் நான் வீட்டை விட்டு வெளியேறும் அன்றே? உங்களுக்கு எல்லாமே தெரியுமா? யார் சொன்னது? முகில் அக்காவா? இல்லை உங்கள் நண்பரா?"

    "போதும் வானதி... மூச்சுவிட்டு கொண்டு பிறகு பேசு... இத்தனை கேள்விக்கு பதில் சொல்ல எனக்கும் கொஞ்சம் அவகாசம் தேவை.."

    "நான் வந்ததில் இருந்து இப்படி தான் ஏதாவது சொல்லி பேச்சை நிறுத்தி விடுகிறீர்கள்.. தயவு செய்து இப்போதாவது சொல்லுங்கள் அண்ணா.. யார் உங்களுக்கு இதை எல்லாம் சொன்னது?"

    அவளை கூர்ந்து பார்த்தவன் சொன்னான்.. " நீ நினைப்பது போல உன் கணவன் இல்லை வானு... லக்ஷ்மி அம்மா..."

    வானதி ஆச்சர்யமாய் பார்த்தாள்... "அவர்களா? அவர்களை உங்களுக்கு தெரியுமா? எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லையே..."

    "அவர்கள் இங்கிருந்து கிளம்பும் போதே என்னை இங்கு வர சொன்னார்கள்... ஆனால் என்னால் உடனே கிளம்ப முடியவில்லை. நீ வெளியேறுவது எனக்கு தெரியாது. ஆனால் உன் வீட்டுக்கு தான் வந்துக்கொண்டிருந்தேன். வழியில் உன்னை காணவும் எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அதுவும் முகில் அங்கு இருப்பது தான் எனக்கு தெரியுமே... நானாகவே யூகித்துக் கொண்டேன். "

    வானதி குறுக்கிட்டாள்..." அதெல்லாம் இருக்கட்டும்..."

    "பொறு வானதி... எல்லாம் சொல்கிறேன்... ஆனால் அதற்கு முன்பு எனக்கும் சில விவரங்கள் தெரிய வேண்டும்.. உனக்கும் விமலனுக்கும் இடையில் இருப்பது என்ன? அனைத்து விவரமும் உன்னைப் பற்றி அறிந்த பின்பு தானே அவன் திருமணம் செய்துக்கொண்டான். பிறகு? பிறகு ஏன் நீங்கள் இருவரும் பிரிந்தீர்கள்? உன் பழைய காதலனால்.."

    "அண்ணா.. வேண்டாம்.. அவனை.. அந்த அயோக்கியனை என் காதலன் என்று சொல்ல வேண்டாம். அப்படி சொல்லி கேட்கவே அவமானமாய் இருக்கிறது."

    வேதனையில் உண்மையாகவே அவள் முகம் சுருங்கி தான் போனது. என்றிருந்தாலும் யாரிடமாவது சொன்னால் தான் தனக்கும் குற்ற உணர்வு குறையும் என்று சொல்ல தொடங்கினாள்.

    அப்போது அவள் கல்லூரி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்த சமயம்...

    "தீயினுள் குதித்து கருகும் வரை
    அதன் வெப்பம் தெரிவதில்லை
    விட்டில் பூச்சிக்கு..
    தெரிந்து வெளியில் வந்தாலும்
    அதன் தகிப்பு இருந்துக்கொண்டே
    இருக்கும் விவரமில்லா பெண்ணுக்கு.."
     
    Last edited: Nov 3, 2010
    Loading...

  2. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Wow!! oru vazhiya suspense udaika poriya...Good good...waiting eagerly deva...

    kavidhai superb...
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    appada oru valiya..flashback solla aarambichuttiya...

    yen deva ippadi aarambichu nirutharathukku pathila muzhusa solli irukkalaam la...paaru ippa naan enna nadanthurukkumo nu yosikka vendi irukku...
    enakku yen ivlo kastamana velai ellam thara?????

    innaike antha flashback yum mudichu post panniduva illa....good girl..??
     
  4. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    2 episodes today... thank you soooo much deva. Diwali nerunguthu, enga kathaiku ippo irunthe leave o nu ninaichutu irunthen...

    wow super speada iruku. appo vanathi mela entha thappum illaya.. good good. ayyo appo vanmugul??? as usual waiting for next episodes

    Iniya Deepavali nalvaazhththukkal.
     
    Last edited: Nov 3, 2010
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    nalla velai suspense mudicha avilka poriyaa.. :)
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you ishu...:)
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotflAamaa... ore naal la ella episode um post pannidren....
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ini leave kedaiyathu story ku....:) daily um two episodes post pandren...:)

    Ungalum vaazhththukkal shri... Diwali special yenna?
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Aamaa... Aamaa... story mudiya poguthu....:)
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Priya,I loved your narration...kavidhai super.....

    your Avatar is super..:)
     

Share This Page