1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-25!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 3, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அவள் வந்து இன்றோடு நாட்கள் மூன்றாகி விட்டது. இப்போதெல்லாம் வானதி அதிகமாக விமலுடன் பேச முடிவதில்லை. அவனும் அவள் வந்த மறுநாளிலிருந்தே வீட்டில் இருப்பதை குறைத்துக் கொண்டிருந்தான். அப்படியே ஏதாவது சமயம் கிடைத்து இவள் பேச சென்றாலும் முகில் பக்கத்திலேயே நின்றிருப்பாள். இவளால் எதுவும் பேச முடியாது.

    விமலனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் இந்த நாடகத்தை.அவள் தன அருகில் வருவதும், முகில் தானாக ஏதாவது சொல்லி அவளை தன்னுடன் பேச விடாமல் தடுப்பதும் என்று... ஆனால் கவனியாதவன் போல அப்படியே உட்கார்ந்திருப்பான்.

    இப்படி தான் நேற்று மாலை தன்னிலை விளக்கம் அவனுக்கு சொல்லும் அவசியம் உணர்ந்து வானதி அவன் வரும் வரை வெளி அறையிலேயே காத்திருந்தாள். முகிலும் அதை பார்த்துவிட்டு காரணம் கேட்டாள்.

    "என்ன வானதி? படுக்க செல்லவில்லையா? நேரம் ஆகிறதே?"

    "இல்லை.. அவருடன் பேச வேண்டும் போல இருக்கிறது அக்கா.. அவருக்கும் நேரம் கிடைப்பதில்லை போல... அது தான் அவர் வரும்வரை இருந்து பேசிவிட்டு பிறகு படுக்க செல்கிறேன்."

    தலையாட்டிவிட்டு சென்றவள், விமலன் வந்ததும் தன் வேலையை காட்டிவிட்டாள். விமல் வந்ததுமே தன்னறைக்கு சென்று குளித்து உடை மாற்றிவிட்டு வந்தான். இவள் உட்கார்ந்திருப்பதை பார்த்து இவளை நோக்கி வர திரும்பினான்..ஆனால் முகில், "வானதி சாப்பிட்டுவிட்டாள். நீங்களும் வந்தால் நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம். எனக்கு பசிக்கிறது. ஆனாலும் உங்கள் வருகைக்காக தான் இத்தனை நேரம் சாப்பிடாமல் காத்திருந்தேன்." என்றதும் அவன் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று உணவு மேஜைக்கு சென்றான்.

    வானதிக்கு கண்களில் குளம் கட்டியது. ஆனாலும் மற்றவர் முன் அழுக பிடிக்காமல் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

    'தெளிவாய் வெளிப்படையாய் தெரிந்துவிட்டதே... நான் அவ்வளவு சொல்லியும் என்னிடம் வராமல் தடுத்து விட்டாளே.... நான் என்ன கொஞ்சி குலாவ அழைத்தேனா...இல்லையே.. நான் செய்த தவறுக்கு விளக்கம் குடுக்க தானே... பத்து நிமிடம் கூட என்னுடன் பேசவிடாமல் தடுக்கிறாள் என்றால்? அவரும் அவளுக்கு செவி சாய்க்கிறார் என்றால்? ஒருவேளை அவர்களுக்குள்?'

    அதற்கு மேல் நினைக்க கூட முடியவில்லை அவளால்... ஒரே வீட்டில் அதுவும் மனைவியாய் இருந்துக்கொண்டு தன்னால் தன் கணவனை நெருங்க முடியாத வேதனைக்கு நினைவற்ற நிலையிலேயே இறந்திருக்கலாமே என்று தோன்றியது.

    அவளுக்கு அப்படி தோன்றியதை அறிந்ததாலோ என்னவோ மறுநாளே விமலன் அவளை வீட்டை விட்டு போக சொன்னான்.

    காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வெளியில் வந்தவள் முகில் மகிழ்ச்சியாய் தன்னருகில் பையோடு வரவும் சந்தேகமாய் பார்த்தாள். ஊருக்கு போகிறாளா? நேற்று நடந்தது அவருக்குமே உறுத்தியிருக்குமோ? அதனால் தான் அவரே போக சொல்லிவிட்டாரோ? அப்படியானால் அவருக்கு இன்னும் தன் மேல் கருணை இருக்கிறதா?

    முகில் அருகில் வருவதற்குள் இவள் மனம் வெகு தூரம் சென்றுவிட்டது... ஆனால் அருகில் வந்தவள் இடியை இறக்கினாள்.

    "வானதி, உன்னிடம் இந்த பையை குடுக்க சொன்னார் அவர். இதில் உன் துணிமணிகள் எல்லாம் இருக்கிறது. இந்தா... செலவுக்கு பணமும் கொடுத்தார்."

    இவளுக்கோ எதுவுமே புரியவில்லை... இவள் பார்வையை உணர்ந்து முகில் சொன்னாள்... "என்ன அப்படி விழிக்கிறாய்? உன்னை வீட்டை விட்டு வெளியேற சொல்லி அவராக என்னிடம் தந்தவை இவை அனைத்தும்... இதுநாள் வரை தான் நீ குணமாகவில்லை. கடமைக்காக உன்னை வைத்து பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கும் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதே... இனியாவது அதை அவர் தனக்காக வாழ வேண்டாமா? இப்போது தான் உனக்கு சரியாகி விட்டதே.. அது தான் பிரச்சனை எதுவும் பண்ணாமல் வெளியில் போய்விடு"

    வானதிக்கு தோன்றியது நிம்மதியா... வருத்தமா.. எது என்றே தெரியவில்லை. ஆனால் இப்போது அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. ஆனாலும் கேட்டாள்... "இதை அவரே வந்து சொல்லியிருக்கலாமே?"

    ஏளனமாய் வந்தது பதில்... "அவருக்கு அந்த அளவு இரக்கம் இல்லாமல் போய்விடவில்லை. கட்டிய மனைவி ஆயிற்றே? தானே வந்து போக சொல்ல மனம் வந்திருக்காது..."

    மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் வானதி.. ' கட்டிய மனைவியை அடுத்தவளை விட்டு வெளியேற செய்வதில் சங்கடப்படாத மனம் தானே அனுப்புவதில் கஷ்டபடுமாமா? சரி தான்.. ஆனால் தான் இப்போது கேள்வி கேட்கும் நிலையில் இல்லையே..'

    எதுவும் பேசாமல் பையையும் வாங்காமல்.. வாசல் நோக்கி சென்றாள்.

    "பணம்... அது கூடவா வேண்டாம்? நாடிய நாடகம் எல்லாம் இதுக்கு தானே?" முகிலின் குரல் பின்னால் இருந்து தடுத்தது.

    திரும்பி பார்த்தவள் சொன்னாள்... "வேண்டும் தான்.. ஆனால் அடுத்தவர் பணம் இல்லை."

    முகிலுக்கு கோபம் வந்தது.. இப்போதும் ஆணவம் அடங்கவில்லையே..."ஏன்... இதற்காக தானே..."
    அவள் முடிக்கும் முன்பே வானதி சொன்னாள்.. " ஆம், ஆனால் அது அப்போது என் கணவர் பணமாக இருந்தது... அதில் எனக்கு உரிமையும் இருந்தது. இப்போது அவரே எனக்கு உரிமையானவர் இல்லையே.."

    இதற்கு மேல் பேசினால் தன்னால் இங்கிருந்து நகரவே முடியாது என்று விரக்தி நடையில் சென்றுவிட்டாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற முகில் யாரும் அறியாமல் தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

    மாடியில் தன்னறையில் இருந்துக்கொண்டு வானதி கண்ணைவிட்டு மறைவதை பார்த்தவனும் அதையே தான் செய்துக் கொண்டிருந்தான்.

    "என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி
    போல தான்
    உன்மீது இருக்கும்
    என் காதலும்;
    மூடிவிட்ட உன் கண்களுக்கு
    அது புலப்படாது...
    கண் திறந்து நீ பார்த்தால்
    என் விழிய
    து மூடினாலும்
    உன் விழி அதை கண்டுவிடும்..."
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hiyo...enathaan nadakkuthu inga........yen ippadi ellorum azhuguraanga...

    deva neethan nalla joke solluviye...appdi yethavathu solli sirikka vai paarppom...
    going good ma..aana innum enna antha suspence nu sollave illaye....eppa solluva..:rant:rant

    kavithai dhool...
     
  3. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Romba kolapura deva...Ena dhaan nadakudhu? Mukil avalai viratitu, ipo edhuku azhuvura? Suspense eppo dhaan udaika pora nee?

    Arumaiyaana kavidhai :)
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya Vimal, Mugil, Vanathi elorum nallavangala illai kettavangala?? :hide: onnume puriala..
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    intha suspense ndra vaarthaiya paarthale enaku allergy ya iruku latha ka...:)
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Acho... naan ippa thaana flashback eh start pandren... athukulla mudi nu soldringale ishu...:rotfl:hide:
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Theriyala ye ma ramya theriyala ye....:rotfl

    Ellarume nallavangalavum iruka mudiyathu... ellarume kettavangalavum iruka mudiyathu...:hide:

    Punch epdi ramya... nallaruka?:biglaugh
     
  8. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    "என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி
    போல தான்
    உன்மீது இருக்கும்
    என் காதலும்;
    மூடிவிட்ட உன் கண்களுக்கு
    அது புலப்படாது...
    கண் திறந்து நீ பார்த்தால்
    என் விழிய
    து மூடினாலும்
    உன் விழி அதை கண்டுவிடும்..."

    Wonderful kavithai Deva.. Vanadhi manasai padam pidithu kaatuthu unga kavithai
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Ennada idu ore azhugaachi episode poiduchu?? Yen vanathiya velila anupanum? Inum antha suspensea mudicha epo thaan avilka poriyooo:):)

    kavithai epavum pola dhool :thumbsup
     
  10. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    dhool than pa kavithai
     

Share This Page