1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-23!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 30, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    புகைக்கு நடுவில் பளிங்காய் அவள் முகம். அவள்.... வானதி. பார்த்ததும் ஏனோ இவனுக்கு மனம் பாதித்தது. நேற்று வரை சமையல் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த பெண் இன்று விறகில் எரியும் நெருப்பில் தானும் சேர்ந்து அல்லவா எரிந்துக் கொண்டிருக்கிறாள்.

    ஊதாங்கோலில் நெருப்பை பெருக்கி எரிய செய்து அதில் எதையோ சமைத்துக் கொண்டிருந்தாள்.. காற்றோடு கலந்த வாசம் அது வடித்த கஞ்சி என்றது...மெதுவாக குரல் கொடுத்தான்.

    "வானு..." இவனுக்கே கேட்டிருக்குமோ என்பது சந்தேகம் தான்.ஆனால் அவளுக்கு கேட்டது. இந்த குக்கிராமத்தில் அவளை யார் வானு என்று பெற்றவர்களைப் போல பாசமாய் அழைக்கிறார்கள். எல்லாரும் ஒருசேர்ந்து " ஏய் புள்ள..." என்றே பெயர் சூட்டிவிட்டனர்.அதனால் தான் வெகு நாட்களுக்கு பின்பு கேட்ட தன் பெயர் அவள் காதை உடனே தீண்டியது.

    யாரென்று ஆவலாய் பார்த்தவளுக்கோ ஒன்றுமே முதலில் புரியவில்லை. ஒரு வேலை இரண்டு நாட்களாய் இவனைப் பற்றியே நினைத்ததனால் நமக்கு பிரமை தோன்றுகிறதோ என்று தான் நினைத்தாள். ஆனால் அவன் அருகில் வந்து இவளுக்கு கைக் கொடுத்து தூக்கி நிறுத்தவும் நிகழ்வு அவளுக்கு உறைத்தது.

    "நீங்க.. நீங்கள் எப்படி இங்கு? நலமா?"

    "நான் நலம் தான் வானு.. நீ சௌக்கியமா?" தன்னை அறியாமலே அவன் குரல் மிகுந்த ஆறுதலாய் ஒலித்தது.

    அந்த ஆறுதல் அவளுக்கு அப்போது வெகுவாய் தேவைப்பட்ட ஒன்று. பெற்றோர் போனதும் ஒதுங்க இடம் கிடைத்தால் போதும் என்று தான் நினைத்தாள். ஆனால் இதுநாள் வரை பழகிவிட்ட சொற்ப வசதியும், அதிக அன்பும் அவளுக்கு தன் தாய்மாமா வீட்டில் கிடைக்கவில்லை. அதோடு அவள் இங்கு ஒரு வேலைக்காரியாய் தான் நடத்தப்பட்டாள். வெளியில் வேலைக்கு அனுப்பவில்லை என்றாலும் மாமாவும் அத்தையுமாக காட்டு வேலைக்கு சென்றுவிடுவதால் வீட்டில் அனைத்து வேலையும் இவள் தலையில் கட்டிவிட்டாள் இவள் அத்தை.

    அதுவும் சமையலில் துவரம் பருப்புக்கும் கடலை பருப்புக்குமே வித்தியாசம் கண்டுப்பிடிக்க தெரியாத அவளிடம் சமைத்துவிடு என்று சொன்னால் அவள் என்ன செய்வாள்? அது கூட பரவாயில்லை...... சமாளிக்கலாம் என்று பார்த்தால், தினப்படி கூலியாக இருவரும் ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொண்டு வந்து தருவார்கள். சில சமயம் அதுவும் வராது... அதில் வீட்டுக்கு தேவையான அனைத்தும் வாங்க வேண்டும் என்று வேறு கட்டளையிடுவாள் அத்தைக்காரி.. முன்னே பின்னே கணக்கு பார்த்திருந்தால் அல்லவா நிர்வாகம் எப்படி என்று ஓரளவேனும் தெரிந்திருக்கும். இன்று புதிதாய் கொடுக்கப்பட்ட பொறுப்பு அவளுக்கு சுமையாய் இருந்தது.

    ஒருநாள் இப்படிதான் மாட்டிக்கொண்டாள். அந்த மாதம் சமையலுக்கு தேவை என்று இவள் நினைத்த பொருட்கள் எல்லாம் வாங்கிவிட்டாள். இனி எந்த செலவும் இல்லை என்ற நினைப்பில் கருகுமணி மாலை ஒன்று வாங்கிவிட்டாள். ஆனால் விஷயம் அறிந்த அத்தை அன்று குதித்த குதி இன்றும் நினைவில் வந்து பயமுறுத்தியது.

    அவள் தாய் அவளை வளர்த்த விதம் சரியில்லையாம். ஊதாரியாய் வளர்த்திருக்கிறாளாம். பெண்ணுக்கான எந்த லட்சணமும் இல்லையாம். வேண்டாத பாரமாய் வந்து அவர்கள் உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறாளாம்.

    யாரிடம் முறையிடுவது? யாரிடம் போய் சொல்லி அழுவாள்... இருக்கும் ஒரே சொந்தம் அவர்கள் தான். சிவா வான்முகிலும் இவளைக் கண்டுக்கொள்ள போவதில்லை. அதிலும் இப்போது? யாரிடம் சென்றாலும் தனக்கு ஆதரவாய் இருக்க போவதில்லை.

    விமலன் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே அவளுக்கு தன் எதிர்காலம் பற்றிய யோசனை தான். இனி தன் வாழ்வு இப்படியே சென்றுவிடுமோ? தனக்கு திருமணம் என்று இவர்கள் எதுவும் நடத்த போவதில்லை என்பது உறுதி. அதிலும் இப்போது தன் நிலை அவர்கள் அறிந்தால், வீட்டைவிட்டே துரத்தி விடுவார்களே... அந்த பயத்திலேயே அவளுக்கு தூக்கம் மறந்து போனது. அப்போதெல்லாம் இடை யிடையில் விமலனின் ஞாபகம் வரும். ஆனால் புதிதாய் பழகிய அத்தானிடம் தான் என்னவென்று உதவி கேட்பாள். கேட்டாலும் தான் அவன் செய்வானா?

    இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவள் இதை விட்டால் இனி வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்தோ என்னவோ அவனிடம் அந்த உதவியை கேட்டேவிட்டாள்.

    ஆரம்பத்தில் யோசித்தவனும், பிறகு தீர்க்கமாய் அவளைப் பார்த்தான்.இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவளை விட்டுப்போக மனம் இல்லாது, தன் கூடவே அழைத்து வந்தான். வரும் போது பக்கத்து வீட்டு ருக்மணி அக்காவிடம் தன் அத்தானுடன் செல்வதாய் சொல்லிவிட்டு சென்றாள்.

    அவளும் தானுமாக திருச்சியில் உள்ள விமலனின் நண்பன் வீட்டுக்கு சென்றனர்.
     
    Last edited: Oct 30, 2010
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    paavam vanathi.....

    parava illaye ..naan kooda vaanathiku unna maathiri samaikkaave theriyaathu nu nenachen....anubavam irukka....parava illa

    enna nadanthathu..eppadi kalyaanam aachu nu therinjukka aavalaga irukku.....quick a post pannu next episode a....
     
  3. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Hi ma,

    I am a silent reader of this story. This episode is very nice. Wonderful........:thumbsup
     
  4. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hmmm... Vanadhi enna help ketaa?
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Vanathi enna help kekkara??? Epo avanga marriage..antha suspence epo next parta????

    Nice kavithai deva :)
     
  6. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Nice episode deva...So eppadi dhaan vanathi-ai marriage pannan? next part la therinjiduma...Romba paavam andha vanathi...
     
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    mm kastam thaan Vanathi ku.. aana idhukaga va kalyanam pannanum avala??
     
  8. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Kavidhai missing ?
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Hmm.. ellarume enna mathiri iruka mudiyuma... naan thani thaan...:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Naanum unga story ku silent reader thaan suganya... Neenga post pannuna adutha nimisham padichuruven...:)
     

Share This Page