1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-22!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 29, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    விமலனுக்கு தாய் இல்லாத அந்த வீடு நரகமாய் இருந்தது. அவன் தாத்தா கிராமத்துக்கு தன்னையும் அழைத்த போது நேரம் இல்லை என்று செல்ல மறுத்துவிட்டது தவறோ என்று தோன்றியது. பகலில் கூட அலுவகம் சென்று விடுவதால் தெரியவில்லை. ஆனால் இரவுகளில் அதுவும் தாத்தாவும் இல்லாமல் தனிமை அவனை வாட்டியது.

    'பேசாமல் இரண்டு நாட்கள் எங்கேயாவது போய்விட்டு தாத்தா வந்தவுடன் வரலாமா? ஆனால் எங்கே செல்வது? தங்கிவிட்டு வருமளவு எந்த சொந்தமும் அவர்களுக்கு இல்லை.சென்றால் திரும்பவும் கிராமத்துக்கு தான் செல்ல வேண்டும். சிவா தேர்ந்தெடுத்த பெண் எப்படி என்றாவது பார்த்துவிட்டு வரலாம்.

    அங்கே தான் இப்போது தாத்தாவும் இருக்கிறாரே.அங்கு சென்றால் தன் திருமணத்தை பற்றி பேச தொடங்குவார். அவருக்கென்ன, காலம் முடியும் முன் தன் கடமையை முடிக்க வேண்டும். ஆனால் தனக்கு? தாயையும் தந்தையையும் ஒரே நேரத்தில் பறிக்கொடுத்துவிட்டு அந்த வலி அடங்கும் முன்பே மணம் செய்துகொள்வது இயலாதே... அதை சொன்னால் அவர் புரிந்துக்கொள்ள போவதில்லை.'

    அவனுக்கு இந்த யோசனை சரியாக படவில்லை.... 'எப்படியும் சிவா தனக்கு ஏற்ற குணவதியை தான் தேர்ந்தெடுத்திருப்பான். அவனுக்கு படிப்பறிவு இல்லையே தவிர பட்டறிவு இருக்கிறது. அவனுக்கு நாம் சென்று எந்த உதவியும் செய்யும் அவசியம் இருக்காது. இப்போது சென்றாலும் வெறும் பெண் பார்க்கும் படலம் தானே.. பெண்ணின் குணம் எதையும் அறிந்துக்கொள்ள முடியாது..'

    'வேண்டாம்.. கிராமம் செல்லும் யோசனை இப்போது வேண்டாம். பிறகு? வானதி? அவளை மறந்தேனே... பாவம் அவளுக்கும் நம் நிலைமை தானே... என்னதான் தாய்மாமா வீட்டில் இருந்தாலும், எப்படி இருக்கிறாள் என்று ஒரு எட்டு அங்கேயே போய் பார்த்துவிட்டால் மனம் நிம்மதியாய் இருக்கும், எந்த உறுத்தலுமின்றி. மிக சரி.. தாத்தா இருந்தால் அவர் அங்கே எல்லாம் போக அனுமதிக்க மாட்டார். இதுதான் சரியான நேரம்.'

    இப்படி நினைத்துக்கொண்டு தான் விமலன் கரியம்பட்டி கிராமத்துக்கு... வானதியின் தாய்மாமா வீட்டுக்கு சென்றான்.

    வானதியின் தாய் மாமா வீடு இருந்த கிராமத்தில் கொஞ்சம் கூட நாகரிக வாசனையே இல்லாமல் வெறும் சுள்ளி செடிகளுக்கு இடையில் அங்கங்கே சில வீடுகள் மட்டும் இருந்தன.இதற்கு முன் இங்கெல்லாம் வந்து பழக்கம் இல்லாததால் வீட்டை தேடி கண்டுப்பிடிக்க ரொம்பவும் சிரமமாய் இருந்தது அவனுக்கு.

    ஆனால் அங்குள்ள மக்களை அவன் நன்றி பாராட்ட தான் வேண்டும். இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தவன் வழியெல்லாம் அங்கங்கு தட்டுப்பட்ட வீடுகளில் விசாரித்துக்கொண்டே வந்தான். விசாரித்த அத்தனை குடிசைகளிலும் அவனுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வந்து கொடுத்தனர். இல்லாவிட்டால் அத்தனை தூரம் வெயிலில் சலிக்காமல் நடந்தவனுக்கு மயக்கம் கூட வந்திருக்கும். கரடுமுரடான பாதை வேறு.

    ஒருவழியாய் வீட்டை கண்டுப்பிடித்தான்... அதுவும் கூட ஓலை குடிசை தான்.கதவு என்பதே இல்லாமல் ஓலையில் செய்யப்பட்ட தடுப்பு ஒன்று தெரிந்தது. அதை லேசாய் உள்நோக்கி தள்ளினான். உள்ளே புகை மண்டலம் தான் தெரிந்தது.எரிந்துக்கொண்டிருக்கும் குடிசைக்குள் தெரியாமல் நுழைந்துவிட்டோம் போல என்று திரும்பி பார்த்தவனுக்கு ஏதோ ஒன்று தோன்ற மறுபடியும் குடிசைக்குள் தலை நுழைத்தான்.

    புகைக்கு நடுவில் அதோ தெரிகிறதே... அது??

    "கார்காலத்து காலை பனி
    எனக்கு மிக பிடிக்கும்,
    பனிக்குள் விண்மீனாய் உன் முகம் மட்டும்
    பளிச்சென்று தெரிவதனால்...

    இருட்டில் ஏற்றிய ஒற்றை திரி விளக்கு
    எனக்கு மிக பிடிக்கும்,
    சுடருக்குள் சூரியனாய் உன் முகம் மட்டும்
    மின்னலென
    ஒளிர்வதனால்..."
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    இந்தக் கதையை முதலில் இருந்து படிக்கவில்லை நான்.
    இந்த அத்தியாயத்தில் நீங்கள் ஒரு அழகிய குறுங்கவிதை
    சொல்லி முடித்திருந்தது அழகாக இருக்கிறது.
    தெளிவான நடையும், இயல்பான வர்ணனையும் உங்கள் எழுத்துக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள். -ஸ்ரீ
     
  3. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Now we can understand why he married Vaanathi. Waiting for more.
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ipa than ne suspense ku vanthiruka...???
    ena ulla???
     
  5. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    suspense thaangalai pa...Ulla enna parthaan???

    waiting eagerly for next episode :)
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    oh ippa theriyuthu yen avala kalyanam pannunaan nu....aana anuthabathil kalyaanam..????


    romba nalla irukku deva intha episode.....kavithai also....super thool kilappu....:)
     
  7. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Appada oru valiya suspense open agthu.:)
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Ohhh ipo thaan theriyuthu yen vanathiya pannikitanu. Atlast suspensea odaikara...Good going da :)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி ஸ்ரீ...உங்கள் பாரட்டுதலில் என் எழுத்து எனக்கே அழகாய் தெரிகிறது... நன்றி மீண்டும்...:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Kaathirungal deepa..:)
     

Share This Page