1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-21!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 26, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    விமலனின் தாத்தாவும் முகிலும் மணிக்கணக்கில் அரட்டை அடித்தனர். முகிலுக்கும் விமலனுக்கு பிடித்தம் எதுவெல்லாம் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வம். ஆனால் விமலனைப் பற்றி அவர் பேசியதை விட அவன் தாய் மல்லிகாவைப் பற்றி தான் அவர் அதிகம் பேசினார்.

    "முகிலு.. மல்லிகா மாதிரி ஒரு பெண் எங்கள் வீட்டுக்கு மருமகளாக வருவதற்கு நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.. பணம் என்னம்மா பணம்... அவளின் குணம் தான் இன்றும் என் வம்சத்தை செழிப்பாய் வளர்க்கிறது... விமலனை கண்ணும் கருத்துமாய் வளர்த்தாள்.

    பாசம், குடும்பம், உறவு, தொழில் என்று அனைத்தும் சொல்லிக்கொடுத்து வளர்த்தாள். இல்லாவிட்டால் அவனும் என் மகனைப் போல வெறும் தொழில் என்றே காலம் கழித்திருப்பான்.என் மகன் செய்த ஒரே நல்ல காரியம் மல்லிகாவை என் மருமகளாய் அழைத்து வந்தது தான்."

    முகிலும் மனம் விட்டு அனைத்தும் பேசினாள்....

    "அதில் எனக்கும் ஆச்சர்யம் தான் தாத்தா..அத்தை இங்கு வளர்ந்த போது இந்த அளவு வசதி கூட நம்மிடம் இல்லை என்று அப்பா சொல்லுவார்கள். ஆனாலும் அத்தை அங்கு வந்து பணத்தைக் கண்டு மயங்காமல் அது போலவே தன மகனையும் வளர்த்திருக்கிறாரே?

    மாமா மட்டும் என்ன... தன் வசதிக்கு குறைவு என்று தெரிந்தும் அத்தையை காதலித்து மணம் செய்து கடைசி வரை அன்பாக தானே வைத்திருந்தார்?" உண்மை ஆச்சர்யம் வெளிப்பட்டது அவள் குரலில்.

    தாத்தா சிரித்தார்..."இது என்ன பிரமாதம் முகில்.. இது எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்று தான்.. அது காதல்.. அன்பு... நேசம்.. காதல் ஒரு மனிதனின் வாழ்வில் நுழைந்துவிட்டால், தன் துணைக்காக அவன் எதுவும் செய்வான். இதில் பணம், போலி கௌரவம், பேராசை இது எதற்கும் இடம் இல்லை."

    "அளவிட முடியாத காதல் முன்பு
    அலைக்கடலின் ஆழமும் தோற்று போகும்,
    முடிவே இல்லாத காதல் முன்பு
    வெண்மேக வானமும் சுருங்கி தோன்றும்..."


    'உண்மை தான்... நேற்றுவரை யாரென்றே அறிந்திராத இவரிடம் இன்று புதிதாய் தோன்றியிருக்கும் பாசம் எதனால்? ஒளிவு மறைவில்லாமல் எதை பற்றியும் பகிர்ந்து கொள்ள தோன்றுகிறதே எதனால்? இதற்கு காரணம் விமல் மேல் கொண்ட காதல் தானே? அவன் சுற்றம் இனி தனக்கும் சொந்தம் என்ற உரிமை தானே?' விமலனைப் பற்றி நினைத்தவுடனே, நான் சிவக்க இதுவே போதும் என்று அவள் கன்னம் சிவந்தது.

    "என்ன கண்ணம்மா, கன்னம் சிவக்கிறதே? உன் காதல் நினைவா?" சிரித்துக்கொண்டே கேட்டார் பெரியவர்...

    பிறகு வாஞ்சையாய் அவள் தலைமுடி தடவி கொடுத்தார்.. "அம்மா முகில், உன்னை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் உன் அத்தை இறந்து போவதற்கு ஒரு நாள் முன்பு இரவு என்னிடம் பேசினாள்... விமலனின் புதிய மாற்றம், அவன் கண்ணில் தோன்றும் புதிய வெளிச்சம், உன்னை அவனுக்கு பிடித்து போனது குறித்து, உங்கள் திருமணம் குறித்து என் சம்மதம்..என எல்லாமே பேசினாள்.. ஆனால் இப்போது சின்னவர்களிடம் சொல்ல வேண்டாம் மாமா, பூ போட்டு பார்த்ததும் சொல்லிக்கொள்ளலாம் என்றாள்.ஆனால் அதற்குள்?" அவரின் குரல் கண்ணீரின் அறிகுறியாய் சோர்ந்து வந்தது.

    அவரே தொடர்ந்தார்... " ஆனாலும் மணம் கேட்காமல் நான் விமலனுக்கு அழைத்து பேசினேன்.. நேரடியாய் கேட்கவில்லை. ஆனால் அவனின் குரலில் தெரிந்த உற்சாகமே அவன் காதல் வயப்பட்டிருப்பதை சொல்லியது. நீ கொடுத்து வைத்தவள் கண்ணம்மா... வெறும் உபச்சாரமாய் இதை சொல்லவில்லை. உண்மை தான். விமலனின் குணம் அப்படி. நீயும் கூட பண்பில் சிறந்தவள் தான் மல்லிகா போல... அவள் சொன்னபோது கூட எனக்கு இவ்வளவு திருப்தி இல்லை, ஆனால் உன்னை பார்த்த பின்போ, நான் முடிவே பண்ணிவிட்டேன் நீ தான் என் பேரனின் மனைவி."

    தான் செய்துக் கொண்டிருப்பது என்ன என்றே தெரியாமல், அந்த பேதை மனதில் தன் பேரனைக் குறித்த காதலை வளர்த்தார் அவர். அங்கு அவர் தங்கிய ஒரு வாரத்தில் சிவா, முகில் மற்றும் அவரும் கூட மனம் நெகிழ்வாய் உணர்ந்தனர். அவரவர் அவர்தன் கற்பனையில் சிறகு விரித்து பறந்தனர்.

    பேரனுடன் பெண் கேட்க வருவதாய் சொல்லிவிட்டு ஊருக்கு சென்றவர் பேரன் வீட்டில் இல்லாதது கண்டு பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. தொழில் என்று வந்துவிட்டால் தான் அவனுக்கு அவனையே மறந்து போகுமே.. அவனே அழைத்து பேசுவான் என்று நினைத்தார். நினைத்ததை போலவே அவனும் இரண்டு நாட்களில் வருவதாய் சொன்னான்.

    வந்தவன் தான் மட்டும் வராமல் வானதியை மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.

    "காதலில் உன்னை
    சிறை வைத்தேன்,
    கடனுக்காய் அவளை
    கரம் பிடித்தேன்,
    முதலில் என் இல்லம் வந்தாள்
    ஆனால்
    முடிவாய் என் மனதில் நின்றாள்"
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    rendu kavithai superb da...

    keep rocking da...:2thumbsup:
     
  3. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Superb da...azhaga kondu pora story...kavidhai as usual very nice...waiting for next episode :)
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya 2 kutti kavithaiyum romba nalla irunthathu.. this episode was also narrated well.. :thumbsup
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    appada oru valiya vanthu sernthutten.....kathaiku..:)

    vimal..yen vanthi ya kalyanam senjukittan apdingrathuku oru reason irukkanume ...atha eppa ma solla pora?????

    cha ivlo neram suspense illama padichutu irunthen ippa paaru ...suspence...:rant

    naan enna nenaikkaren na....marupadiyum konja naal escape aayidalaama nu...:rotfl:rotfl:rotfl
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Episode iyalba narrate pannirka deva...Two kavithai rocks too gud :)
     
  7. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    hai deva,
    thodarnthu unga kathaiyai padikkiraen. aarpaatamillatha neerOdai pOla theliva, amaithiya romba arumaiya pOguthu kathai.
     
  8. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Priya,,,nerthiyana varigal....kavidhaigalum arumai....
     
  9. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Kavithaigal were excellent and awesome...:thumbsup:thumbsup
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you vaishu...:)
     

Share This Page