1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-20!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 25, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தங்கள் தந்தை இறந்ததிலிருந்தே முகிலுக்கு சிவா தான், அந்த ஸ்தானத்தில் இருந்து அனைத்தையும் பார்த்தான்.முகிலோ அவனுக்கும் தாயாய் மாறிப் போனாள். இதுவரை இருந்த கொஞ்ச நஞ்சம் சிறுபிள்ளைத்தனமும் முழுவதும் போய் பொறுப்பாய் நடக்க தொடங்கினாள்.

    தாயும் இல்லாது தகப்பனையும் இழந்துவிட்ட அந்த பெண், எது கேட்டாலும் அவனால் மறுக்க முடியாது. தன் பெற்றவர்கள் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பார்களே என்ற குறையின்றி அவர்கள் இருந்திருந்தால் கூட இவ்வளவு அருமையாக செய்திருக்க மாட்டார்கள் என்று அவள் உணரும் படி நல்லபடியாகவே நடந்தான்.

    அதை நன்கு உணர்ந்து கொண்ட முகில் தனக்கு அண்ணி வேண்டும் என்று அடம்பிடிக்க தொடங்கினாள். ஆனால் சிவா அதற்கு சம்மதிக்கவில்லை. சிவா ஒன்றும் பிரம்மச்சாரியாய் இருந்துவிட போவதில்லை தான். ஆனால் வரபோகிறவள் தன் தங்கைக்கும் தனக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு. அப்படி நடக்கவே நடக்காது என்று முகில் அடித்து சொன்னாள்.

    "அண்ணா..நீ உன் தங்கை மேல் இவ்வளவு பாசமாய் இருக்கும் போது யார் வந்தால் தான் என்ன? நம்மை பிரிக்கவே முடியாது. நீயும் அப்படி எல்லாம் மனைவி சொல்லே மந்திரம் என்று தலையாட்டுகிறவன் இல்லையே.."

    சிவா சிரித்துக்கொண்டே சொன்னான்.."முகில், உனக்கு எப்படி நான் ஒருத்தன் தான் ஆதரவோ, அதே போல வரப்போகிறவளும் இங்கு என்னை நம்பி தான் காலடி எடுத்து வைக்க போகிறாள்..அவள் குணம் எப்படி பட்டதாய் இருந்தாலும் அவள் நான் கைபிடித்தவள். அவளின் வார்த்தைக்கும் நான் மதிப்பு கொடுத்து தான் ஆக வேண்டும்.இப்போது போல உன்னை கருத்தில் கொண்டு மட்டும் முடிவு எடுக்க முடியாமல் போகும். கணவன் மனைவியின் இடையில் நீ வேறாகி போய்விடுவாய் அம்மா.. ஒரு மனிதனின் வாழ்வில் அவன் மனைவிக்கு தான் முதலிடம் இருக்க வேண்டும். அதன் பிறகு தான் மற்றவர்கள்... இல்லாவிட்டால் குடும்ப அமைப்பு கெட்டுவிடும். அதனால் தான் உனக்கு செய்யவேண்டிய கடமையை முடித்துவிட்டு நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்கிறேன்."

    அத்தோடு அந்த பேச்சை அவள் விட்டுவிட்டாள்... ஆனால் அதற்கு மேல் தான் சிவா அதை பற்றி தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தான். தனக்கென்று வருகிறவள் தன் தங்கையையும் நல்ல விதமாய் கவனிப்பவளாய் இருக்க வேண்டும் என்று..

    திருமணத்தோடு தங்கை உறவு அறுந்து போவதில்லை. இன்னும் பல விசேஷங்கள் வரும். அது எல்லாம் தாய் வீட்டில் தான் நடக்கும். அதுக்கு அவளுக்கு தாய் வீடு நல்ல விதமாய் இருக்க வேண்டுமே.. அப்போது தான் அவள் புகுந்த வீட்டில் மதிப்பாய் இருக்கும்.. இதையெல்லாம் தாய் அன்போடு செய்ய தன் மனைவி நல்ல அண்ணியாகவும் இருக்க வேண்டும்.

    அவனுக்கு மாலதி நினைவு தான் வந்தது..

    மாலதி லக்ஷ்மி அம்மாவின் வளர்ப்பு மகள்.சேவை செய்வதற்காகவே திருமணம் செய்து கொள்ளாத அவர், மாலதியை அவளின் சிறு வயதிலேயே தத்தெடுத்து கொண்டார். லக்ஷ்மி மல்லிகாவின் தோழி என்பதால் அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஆனால் மல்லிகா திருமணத்திற்கு பிறகு அவருக்கும் ஓய்வு இல்லாத வேலை. வருவது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து அடியோடு நின்று விட்டது.

    பால்ராஜ் மட்டும் எப்பவாவது சென்று பார்த்து வருவார். அவருக்கு அவளும் ஒரு தங்கை தான்.அப்படி ஒரு சமயத்தில் லக்ஷ்மி அம்மாவே மாலதியின் திருமண பேச்சை எடுத்தார். தன் மகனுக்கே அவளைக் கட்டி வைப்பதாய் பேசியிருந்தார். அதை பற்றி சிவாவிடமும் சொல்லியிருந்தார்.

    அவனும் இரண்டு மூன்று முறை அங்கு சென்று லக்ஷ்மி அம்மாவையும் மாலதியையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறான். முகிலின் கல்யாண பேச்சு துவங்குவதற்கு முன்பே இது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் எதிர்பாராத பாராத விதமாய் தன் தந்தையும் இறந்துவிட, மாலதி பற்றிய நினைவே அவனுக்கு மறந்து போனது.

    இப்போது தன் குடும்பத்துக்கு மூத்தவர் என்ற முறையில், விமலனின் தாத்தாவுடன் தான் சிவா இதை பற்றி அபிப்ராயம் கேட்டான்...

    இறந்து போவதற்கு முதல் நாள் இரவு தன் மருமகள் ஃபோனில் முகிலை பற்றி சொல்லியதும், விமலனின் திருமணம் குறித்து பேசியதும் என்று அவருக்கும் மற்ற சில விவரங்கள் தேவைப்பட்ட சமயம் அது. தானே நேரில் வருவதாய் சொல்லியிருந்தார்.

    அவர் வந்து சொல்லிய விஷயங்கள் அனைத்தும் இவர்களை வானில் பறக்க வைத்தது.

    மல்லிகாவின் விருப்பத்தையும், குடும்பமே அன்று எதற்காக குல தெய்வ கோவிலுக்கு சென்றது என்பதையும் அவர் வந்து சொன்ன பிறகு தான் முகிலும் சிவாவும் அறிந்தனர்..அவர்கள் இருவருக்கும் கேட்ட அந்த நிமிடம் முதல் மனதில் ஆயிரம் கற்பனைகள்.

    ஆனால் அவர்கள் யாரும் அறியாத ஒன்று இருந்தது. தன் தாயின் விருப்பமோ, அவள் இதையெல்லாம் தன் தாத்தாவிடம் சொன்னதோ, அவர் இவனிடம் கலந்தாலோசிக்காமலே சிவா முகில் வரை இந்த விஷயத்தை கொண்டு வந்ததோ.... இதில் எதுவுமே விமலனுக்கு தெரியாது என்பது தான் அது.

    முடிவானதும் தங்கையிடம் சொல்லலாம் என்றெண்ணி, சிவா தாத்தாவை மட்டும் லக்ஷ்மி அம்மாவின் வீட்டுக்கு அழைத்து போனான். லக்ஷ்மி அம்மாவை அவர் முதன்முதலில் அங்கு தான் சந்தித்தார். லக்ஷ்மி சித்த மருத்துவம் பயின்றவர் என்பதும் அவருக்கு அப்போது தான் தெரியும்.
     
    Loading...

  2. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    viru viru nu poguthu pa. appo lakshmi amma va anupichathu thaathava. appo vanmugil? waiting for more...

    ithu super:
    .."முகில், உனக்கு எப்படி நான் ஒருத்தன் தான் ஆதரவோ, அதே போல வரப்போகிறவளும் இங்கு என்னை நம்பி தான் காலடி எடுத்து வைக்க போகிறாள்..அவள் குணம் எப்படி பட்டதாய் இருந்தாலும் அவள் நான் கைபிடித்தவள். அவளின் வார்த்தைக்கும் நான் மதிப்பு கொடுத்து தான் ஆக வேண்டும்.இப்போது போல உன்னை கருத்தில் கொண்டு மட்டும் முடிவு எடுக்க முடியாமல் போகும். கணவன் மனைவியின் இடையில் நீ வேறாகி போய்விடுவாய் அம்மா.. ஒரு மனிதனின் வாழ்வில் அவன் மனைவிக்கு தான் முதலிடம் இருக்க வேண்டும். அதன் பிறகு தான் மற்றவர்கள்... இல்லாவிட்டால் குடும்ப அமைப்பு கெட்டுவிடும்.
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Ohh Vimalanukku theriyaathathu naala than avan Vanathiya kalyanam pannidaraana???

    Thangai-Annan pasam, Kanavan-Manai vi Uravu patri romba nalla sollirka deva :)
     
  4. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Super priya,

    Thatha dan 2 side la yum support panraro oru velai??

    Suspense kooditae pogudhu
     
  5. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Super. Suspense pakathula poita polaruke..:thumbsup
     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya naan neraya tharam sonnathu thaan un writing innum romba matured a irukku.. I m admiring u.. :)
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Nice brother... Keep going...
     
  8. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    siva balancing the relations.. Good approach :thumbsup:thumbsup
     
  9. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female

    Good lines deva...But fulla- accept pana mudiyalai...manaiviyaiyum matra kudumbathaaraiyum balance panuvadhil dhaan vetri adaiya mudiyum enbadhu en karuthu...verum manaiviku matum mudhal idam kuduthaal, kudumbathil thevai illaadha kulapangal dhaan minjum...JMO

    Story going good dear...ipovey next episode padika poren
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    sister kaga romba yosichurukkaru siva...good...

    so antha x siva vo????:spin
     

Share This Page