1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-19!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 22, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கதவைத் திறந்த வான்முகில் கால்கள் வேரோடி போயிருந்தாள் என்றால், உள்ளே இருந்த விமலன் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தான்.

    அதற்குள் வந்த டாக்ஸிக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு லக்ஷ்மி அம்மாவும் கதவுக்கு அருகில் வந்தார்."தம்பி, நேற்றைக்கு நீங்க வருவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன்... ஆனா மாசம் ஒண்ணாகியும் எந்த தகவலும் இல்லை. அது தான் நானே அழைச்சுட்டு வந்துட்டேன்.."

    விமலனும் முகிலும் தங்கள் பார்வையை பரிமாறிக்கொண்டனர்... அதற்குள் லக்ஷ்மி அம்மா வானதியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார்.. வானதியின் முகத்தையே விமலன் பார்த்துக்கொண்டிருந்தான்... 'எத்தனை பெண்கள் வந்தாலும், மனைவி என்பவள் தனி தான்' என்று அவனுக்கு தோன்றியது. அவனறியாமலே ஒரு பரவசம் அவனுக்குள் இழையோடியது.ஆனால் வானதி அமைதியாக இருந்தாள்.

    விமலன் வருத்தமாய் சொன்னான்.."வந்திருக்க வேண்டும் தான் அம்மா... ஆனால் எனக்கு அலுவலகத்தை விட்டு வெளியில் வர முடியாத அளவு வேலை இந்த நான்கு வாரங்களாக... அது தான் வரவில்லை. அது போகட்டும், எப்படி திடீரென்று இந்த மாற்றம்?" வானதியைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

    "இப்போதைக்கு வானதி அம்மாக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.. அவங்க தூங்கி எழும்பட்டும்...நாம் பேசலாம்.." லக்ஷ்மி முகிலைத் துணைக்கு வைத்துக்கொண்டு வானதிக்கு அறை ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார். அவள் படுக்க செல்லும்முன் லக்ஷ்மி அம்மா கொண்டு வந்து தந்த பாலை மட்டும் குடித்துவிட்டு படுத்தாள்.

    வெளியில் விமலன், இவர்கள் இருவரும் வந்ததும் யோசனையில் இருந்து விடுப்பட்டு லக்ஷ்மி அம்மா சொல்ல போகும் தகவலுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

    முகில் தன் அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்..'எப்படி அவள் குணமானாலும் தான் என்ன.. குணம் அடைந்துவிட்டாளே.. அதுவும் இந்த நேரத்தில் தானா இப்படி நடக்க வேண்டும்? இன்னும் சிறிது நாட்கள் பொறுத்து இவள் வந்திருந்தால் கூட அவளை அனுப்புவது எளிது. ஆனால் இப்போது விமலன் அல்லவா முடிவு எடுக்க வேண்டும்? நேற்று நடந்ததைக் கருத்தில் கொண்டு முடிவு எடுப்பானா? அல்லது ??'

    முகிலின் மனம் தன் கற்பனை சிறகுகளைக் கொண்டு சுற்றி வருவதற்குள் லக்ஷ்மி எல்லாவற்றையும் விமலிடம் சொன்னார்.." இது தான் தம்பி நடந்தது. நான் தனியாக கொடுத்த மூலிகை மருந்துகள் நினைவுகளை தூண்டி விட்டு நரம்புகளை உயிர்ப்பித்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு வானதி அன்று தடுமாறி விழுந்ததில் முழுமையாக நினைவு வந்தேவிட்டது. ஆனால் தலையில் வெளி சதை உரிந்து ரத்தம் வந்ததால், அதுவும் சரியான பிறகு இங்கு அழைத்து வந்தேன்.."

    விமலன் எதுவும் இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டான்.. லக்ஷ்மி அம்மா தொடர்ந்தார். " தம்பி, நான் எதற்காக வந்தேனோ அந்த கடமை முடிந்து விட்டது. சொன்ன சொல் காப்பாற்றிவிட்டேன். இனி எனக்கு இங்கு வேலை இல்லை. நான் இன்றே ஊருக்கு கிளம்பலாம் என்றிருக்கிறேன்.. வானதிக்கு படுக்க போகையில் மட்டும் ஏதாவது ஒரு பானத்தில் நான் கொடுக்கும் பொடியைக் கலந்து கொடுங்கள். அது போதும்... நாளடைவில் சோர்வும் நீங்கி பழைய வானதியாய் மாறிவிடுவார். பிறந்த குழந்தை உலகத்தில் காலடி எடுத்து வைக்கும் போது அதற்கு இருக்கும் புரியாத நிலை அவர்களுக்கு இப்போது...போக போக தானாக பேசுவார்கள்.. அதுவரை நீங்கள் தான் பொறுமையாக இருக்க வேண்டும் தம்பி."

    "சரி அம்மா.. இதுவரை பொறுத்தவன் இப்போது அவசரப்படுவேனா என்ன? இத்தனை தூரம் உங்கள் உதவி இல்லாவிட்டால் அவள் குணமாகியிருக்கவே முடியாது. என் அன்னை ஸ்தானத்தில் தான் இப்போது நீங்கள் என் கண்களுக்கு தெரிகிறீர்கள். இன்னும் சிறிது நாட்கள் இங்கேயே தங்கியிருங்கள் என்று சொல்லத்தான் எனக்கும் ஆசை. ஆனால் உங்களால் இன்னும் எத்தனையோ பேர் குணம் ஆவதற்கு கிராமத்தில் உங்கள் வரவை எதிர்ப்பார்த்து கொண்டிருப்பர்... அதனால் தான் நீங்கள் போக சம்மதிக்கிறேன். நேரம் இருக்குமானால் இங்கு அடிக்கடி வந்துவிட்டு செல்லுங்கள்.."

    வானதியோடு இருந்த இத்தனை நாட்களும் தன் சொந்த மகளைப் போலவே அவளைக் கவனித்துக்கொண்ட லக்ஷ்மி அம்மாவுக்கு அவளைத் தனியாக விட்டு போவது தான் கொஞ்சம் மனதுக்கு சரியாக இல்லை. ஆனாலும் செல்ல வேண்டுமே... மதிய உணவை முடித்துக்கொண்டு வானதியிடம் சொல்லிவிட்டு போவதற்கு அவள் அறைக்குள் வந்தவர், இன்னும் அவள் விழிக்காததுக் கண்டு அவளிடம் சொல்வதாய் நினைத்து தனக்குள் சொல்லிக்கொண்டார்...

    'வானதி, இத்தனை நாள் உன்னை சுற்றி நடந்தது எதுவுமே உனக்கு தெரியாமல் கஷ்டப்பட்டாய்... இனி உன்னை சுற்றி நடக்க போவதைப் பார்த்து துன்ப படுவாய்.... மனிதர்கள் உன்னை கைவிட்டாலும் அந்த கடவுள் உனக்கு துணையிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் அம்மா..'

    பேருந்தில் ஏறின மறு நிமிடம் தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டார்.... "நான் வந்துட்டேன்... இப்போது அவங்க மட்டும் தான் அங்க இருக்காங்க.. நீங்க போக இது தான் சரியான நேரம் ஐயா.."

    "....................."

    விமலன் வானதியின் அருகிலேயே இருந்தான். முகிலிடம் கூட பேச்சைக் குறைத்துக்கொண்டான்... அன்று ஒரு நாள் மட்டும் தான் அவனுக்கு அது சங்கடமாய் இருந்தது. அடுத்த நாள் அவனைக் காப்பாற்ற ஆள் வந்தது.

    " உன் பழைய காதல் ஞாபகத்தில்
    உன்னை தேடி வந்திருந்தால்
    என் கண்கள் சந்திக்க போவது ஏமாற்றமே.."
     
    Last edited: Oct 23, 2010
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya 19 episodes aanalum innum suspense micham irukke.. :) nicely narrated..
     
  3. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hey pa super a poguthu...
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    DEva romba alagaai kathai poguuthu.vimalanin kathaapaathiram romba nalla kondu pora.kavithayum nalla irukku
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Hey yaar antha X??? Epa than solluva???
     
  6. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Suspensea correct a maintain pandrenga..:thumbsup
     
  7. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Aduthu vara porathu X than.. correct ha?
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    inum ethathanai episode ipadi suspenseaave kondu poga pora:rant yaaru antha X..avar thaan aduthatha releaseaaa????

    Nalla poguthu da :)
     
  9. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Super deva..

    Vanadhi pesaradhukaga wait pantrukaen..

    :cheers
     
  10. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Vanadhi character kaga than waiting..:)
     

Share This Page