1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-18!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 20, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    விமலனின் கண்மணிகள் அவனின் கண்மணி கைப்பிடித்த இடத்தை சிறை பிடித்தபடியே அசையாது நின்றன. உணர்ந்தது மெய்தானா என்று அவளின் கருவிழியோடு மௌன மொழி பேசின. தன் இணை அவள் சுயநிலை அடைந்துவிட்ட மெய்யறிந்த உடனே சுதாரித்துக்கொண்டான்.

    லக்ஷ்மி அம்மாவை அழைத்து டாக்டருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க சொன்னான். ஆனால் அவரும் சிறிதும் அசையாது தயங்குவது கண்டு புருவம் நெளித்து என்னவென்று கேட்டான்.

    "தம்பி, நான் சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம். ஆனால் தயவுசெய்து இப்போது யாருக்கும் சொல்ல வேண்டாம் தம்பி."

    அவன் பார்வை ஆச்சர்யம் காட்டின...." என்ன அம்மா.. புரிந்து தான் சொல்கிறீர்களா? வா..வானதி.. என் மனைவி வானதி இரண்டு வருடங்களுக்கு பின்பு சுய உணர்வோடு என்னை தொட்டிருக்கிறாள். நீங்கள்? நீங்கள் என்னவென்றால்?" மனைவியின் திடீர் மாற்றம் அவனின் பேசும் திறனை சற்றே தாமதப் படுத்தியது.

    லக்ஷ்மி அம்மாவுக்கும் இதற்கு மேல் வெளிப்படையாக சொல்லுவதில் தயக்கம் இருந்தது.அவர் சொல்லி அவன் நம்ப வேண்டுமே... அப்படியே அவன் தன் வயதிற்கும் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து நம்பினாலும், சொல்லும் உரிமை தனக்கில்லையே.. தனக்கு இடப்பட்ட வேலையை மட்டும் செய்வது தான் இப்போதைக்கு நல்லது.

    "தம்பி, நான் இந்த மாதிரி எத்தனையோ பேருக்கு வைத்தியம் பார்த்தவள். அந்த அனுபவத்தில் தான் சொல்கிறேன். ஆரம்பத்தில் இப்படி எத்தனையோ பேர் கை காலை அசைக்க தான் செய்வார்கள். ஆனால் பிறகு எந்த முன்னேற்றமும் இருக்காது. அதனால், வானதி அம்மாவிற்கு முழுமையாக குணமாகும் சாத்தியம் உண்டா என்று முதலில் பார்ப்போம். அதற்கு இன்னும் சில நாட்கள் பிடிக்கும். பிறகு எல்லாருக்கும் சொல்லலாம்.அதுவரை நீங்கள் அவசரப்படாமல் இருங்கள் என்று தான் சொல்கிறேன்.வீணாக மற்றவர்கள் மனதிலும் ஆசையை வளர்ப்பானேன்?"

    விமலனுக்கும் அது சரி என்று தான் தோன்றியது. இத்தனை நாள் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தவளை அவளின் சூழ்நிலையை மாற்றி இந்த அளவுக்கு கொண்டு வந்ததில் அவருக்கும் பங்கு இருப்பதை அவனும் உணர்ந்தே இருந்தான். அவர் வந்து வானதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து தான் அவனே கொஞ்சம் நிம்மதியாய் சுவாசிக்க தொடங்கியிருக்கிறான். அது எல்லாம் சரி தான், ஆனால் வானதியை யாரும் அறியாமல் பரிசோதிப்பது எப்படி? அதுவும் முகிலும் தங்களோடு தங்கியிருக்கும் போது அது சாத்தியம் இல்லையே... நினைத்ததை அவன் கேட்டும் விட்டான்.

    இது தான் சரியான தருணம் என்று லக்ஷ்மி அம்மா தானும் வானதியும் மட்டும் தனியாக கொஞ்ச நாட்கள் தங்கியிருக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

    அவன் யோசனையை பார்த்தான்..."அது எப்படி முடியும் லக்ஷ்மி அம்மா? முகில் கேட்டால் என்ன பதில் சொல்வது?"

    "அதையெல்லாம் பார்த்தால் நமக்கு வேலை நடக்காது தம்பி... எதையாவது சொல்லி சாமாளிக்க வேண்டும்."

    இருவரும் வெகு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி அடுத்த நாள் முகில் தன் கூடவே அலுவலகத்துக்கு வந்த பின்பு லக்ஷ்மி அம்மாவும் வானதியும் வேறொரு ட்ராவல் ஏஜென்சி காரில் பெங்களூரில் உள்ள தன் அலுவலக விருந்தினர் மாளிகைக்கு செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தான்.

    முகிலின் பார்வையில் இருந்து வெளியேறினால்,தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிடலாம் என்று தான் இப்படி ஒரு ஏற்பாடு.மாலையில் வந்தவள் கேட்ட போது அவன் அத்தனை சிரமப்படவில்லை. தனக்கு தெரிந்த வேறொரு மருத்துவமனையில் லக்ஷ்மி அம்மாவின் துணையோடு அனுமதித்திருப்பதாய் சொல்லிவிட்டான்.

    முகிலும் எதையும் கிளறவில்லை. அவளுக்கு இத்தனை விரிவாக இவர்களின் திட்டம் தெரியாததால் மனதுக்குள் நிம்மதி தான். இனி வானதியின் நினைவு விமலுக்கு குறைய தானே செய்யும்....இனி அவன் மனதுக்குள் தான் நுழைவதும் சுலபமாயிற்றே!!!

    வானதி அந்த வீட்டை விட்டு சென்று ஒரு மாதம் 20 நாட்கள் ஆகியிருந்தன. அன்று மாலை முகில் விமலனின் வரவுக்காக காத்திருந்தாள். இன்று அலுவலகம் செல்லாமல் அவள் வீட்டிலேயே தங்கிவிட்டாள்..விமலனும் வற்புறுத்தவில்லை.
    அவன் வந்ததும் குடிக்க கலந்து கொடுப்பதில் இருந்து இரவு உணவு வரை அவள் கவனித்த விதம் ஏனோ இன்று வேறு விதமாய் இவன் மனதை தொட்டது.

    முகிலும் அதை நன்றாக பயன்படுத்த திட்டம் வகுத்து கொண்டாள்.. அவளுக்கே இந்த யோசனை நேற்று இரவு தான் தோன்றியது. வானதியின் வாசனை இத்தனை நாள் படாதவரை விமலன் கட்டுக்கோப்பாய் இருந்தது வேறு.. ஆனால் இப்போது அவளின் அருகாமைக்கு பிறகு... இனி அவனால் அது முடியாதே..

    அதாவது பட்டினி இருந்து பசி மரத்து போனவனுக்கு ஒரு சின்ன ரொட்டித் துண்டு கொடுத்து பசியை அதிகம் பண்ணும் யுக்தி இது..அதை தான் வான்முகிலும் செய்து கொண்டிருக்கிறாள்..

    அவன் இரவு உணவு முடிந்து ஒரு இலகு தன்மையில் இருந்தான் இன்று.. ஏனோ வானதியின் ஞாபகம் வந்தது. திருமணம் முடிந்து மூன்று நான்கு மாதங்கள் தான் அவர்களின் மகிழ்ச்சி எல்லாம்... பிறகு அத்தனையும் காணாமல் போய்விட்டது.வாழ்க்கை வெறுமையாக போய்விட்டதோ என்று அவனுக்குள் சிறு ஏமாற்றம் இருக்கவே செய்யும். இன்று அதை அதிகமாக உணர்ந்தான்.மெல்லிய கதவொலியில் திரும்பி பார்த்தவன் பிரமித்து போனான்...

    இவள் முகில் தானா.. அல்லது விண்ணுக்கு கடந்து போன தேவதை தான் பூமியில் தங்கிவிட்டாளா??

    பார்த்துக்கொண்டே செய்வதறியாது நின்றவனின் அருகில் அந்த தேவதை நிதானமாக தன் இடையொடிய நடந்து வந்தது... அவனுக்கோ கண் இமையை கூட சிறிதும் அசைக்க முடியாத அளவு மந்தகாசம்..

    அந்த தேவதை அவனின் தோளில் சாய்ந்துக்கொண்டே தன் செவ்விதழ் திறந்து கொஞ்சும் மொழியில் காதல் பேசியது... அவர்களின் அந்தரங்கத்தில் நுழைய வெட்கப்பட்டு இரவும் கண் உறங்கியது...

    அடுத்த நாள் காலை கண் விழித்த விமலனுக்கோ சிறிது நேரம் ஒன்றுமே புரியவில்லை. இரவு நடந்தது கனவு போல தோன்றியது. ஆனால் அவனின் சிவந்த விழிகள் ஒன்று போதாதா நடந்ததை கூற!!!

    வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, சட்டென்று உணர்வுக்கு வந்தான்.. அறையிலிருந்து வெளியில் அவன் வர, அவளும் வந்தாள் கதவை திறக்க.. ஒரு மணித்துளி பார்வை பரிமாற்றத்துக்கு பிறகு வெளியில் சென்று கதவை திறந்தவள் உறைந்து போய் நின்றுவிட்டாள்.
     
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya Vanathi thaana velila nikkarathu?? Vimalan ipadi pannuvaan naan ninaikave illai.. too bad.. ivlo naal epadi irunthaano adhu edukkum arthame illaama pochu.. Mugil worse than Vanathi pola.. :rant
     
  3. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    hate mukil character...andha vimalanum ipdiya seiyvaan :rant
     
  4. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Priya

    Enaku therinji pochi,
    vanadhi
    illana Mugil pesara X
    ilana Laxmi ma pesara Y

    idhu 3 paer la yaro oruthar dana vandhirukaradhu??


    Romba nalla kadhai ezhudara priya.. Super girl:thumbsup:thumbsup
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Nalla kondu poirka da deva.:) ..Aanalum Mugil ipadiya pannuva didnt expect this from her and vimalan.....Vanthathu yaaru Vanathiyaaaa????

    Aama yen intha situationku kavithai podalai?????????????
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    yaar vantha vanathiya??? ila antha X ah???
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    naanumey urainthu ponen karainthu ponen abi
     
  8. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Vimalan ipdi patavana..Cha..i hate him. But loved your story.:)
     
  9. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Ipdi irukra vimalanai ethuka ini vanadhi than yosikanum.
     
  10. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Vimalan yaar kuda sera poraan finala?:spin
     

Share This Page