1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-17!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 18, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    லக்ஷ்மி அம்மா மல்லிகாவிற்கு தூரத்து சொந்தம். சித்த மருத்துவம் கற்றுவிட்டு வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் தனக்கு கற்றுக்கொடுத்த மருத்துவருக்கு கீழேயே வேலையும் பார்த்தார். அந்த மருத்துவரின் கடைசி காலம் வரை அவரோடு கூடவே மருத்துவ சேவை புரிந்தவர், பிறகு தன் சொந்த கிராமத்துக்கே வந்துவிட்டார்.

    விமலனும் அந்த நேரம் தான் தன் மனைவியின் முழு கதையையும் கூறி அவரை வேலைக்கு அழைத்தான்.

    எதற்கும் ஒரு நாள் பொறுத்து முடிவை சொல்லுவதாய் தான் கூறினார். ஆனால் அவரே எதிர்ப்பாராத நபர் தனக்காகவேனும் இந்த உதவியை செய்யுமாறு கூற, லக்ஷ்மி அம்மா அதற்கு மேல் யோசிக்கவில்லை. தான் கற்றுக்கொண்டதோடு மட்டும் அல்லாமல் வைத்தியமும் பார்த்த அனுபவம் இருந்ததால், அவரும் பொறுப்பை தைரியமாய் ஏற்றுக்கொண்டார்.தனக்கு தேவையான பச்சிலைகளையும் எடுத்துக்கொண்டு அவனோடு கிளம்பினார்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரங்களிலும், அல்லது எல்லாரும் அசந்திருக்கும் சமயங்களிலும் வானதிக்கு மனரீதியான வைத்தியம் பார்க்க தொடங்கினார்.

    சித்த மருத்துவம் உணவிலேயே சிகிச்சை அளிப்பது என்பதால் லக்ஷ்மி அம்மா தானே வானதிக்கு வைத்தியம் பார்ப்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

    வானதியின் உடை தலைமுடி அலங்காரம் என்று அவளை பழைய வானதியாகவே மாற்றினார். அதுவும் கூட அவளுக்கு நினைவை அதிகரிக்கும் என்பது அவர் கணக்கு. அவளின் மொத்த அறையும் இப்போது மாறியிருந்தது யாரும் கவனிக்காத அளவில்.

    பழைய சம்பவங்களை அவளோடு பேசுவது, அவள் பார்வையில் படும் படியாக குடும்ப புகைப்படம் மாட்டி வைத்தது இது எல்லாமே சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளின் நினைவு நரம்புகளைத் தூண்டிவிட்டது. தன்னுள்ளும் தன்னை சுற்றிலும் ஏற்பட்ட மாறுதல் வானதியை உயிர்ப்புடன் மாற்றியது.

    லக்ஷ்மி அம்மாவின் வேலையை சுலபமாக்கும் பொருட்டோ என்னவோ அடுத்த நாள் தானும் அலுவலகம் வருவதாய் முகில் அடம்பிடித்தாள். விமலன் மறுத்து கூற வாய் எடுத்தான்.. ஆனால் லக்ஷ்மி அம்மா தான்..

    " தம்பி, பாவம் அந்த பெண்ணும் இந்த வீட்டில் பொழுது போவதற்கு எதுவும் இல்லாமல் என்ன தான் பண்ணும்!! நானோ வயதான கிழவி, வானதியும் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளி. எங்களிடமும் எவ்வளவு நேரம் என்ன பெரிதாய் பேசி விட முடியும்? நீங்கள் கூட்டிக்கொண்டு போனால், அவங்களுக்கும் ஒரு மாற்றம் இருக்கும் தம்பி.." என்று அவனை அழைத்துக்கொண்டு போக தூண்டினார்.

    விமலன் அதற்கு மேல் வாதாடவில்லை. ஒருவேளை கிட்ட இருந்து பழகினால், அவளுக்கும் தன் மேல் இருக்கும் ஈர்ப்பு குறையலாம் என்றெண்ணி அழைத்துக்கொண்டு போனான். இருவரையும் சேர்ந்து பார்த்த பரவசத்தில் ராமு முகம் மலர்ந்தார். இதற்காக தானே இத்தனை நாள் அவரும் காத்திருந்தார்.

    விமலன் அன்று முழுவதும் அவள் செய்ய கூடிய வேலைகளை மட்டும் கற்று தந்தான். வேளையில் கவனமாய் இருக்கும் போது அவன் சிந்தனை வேறெங்கும் சிதறாதது கண்டு அவளும் எதுவும் அனாவசிய பேச்சுக்கள் பேசவில்லை. சாப்பிடும் போது அவனுக்கு பரிமாறிக்கொண்டே தானும் சாப்பிட்டாள்.

    சாப்பிடும் போது இயல்பாக கிராமத்து கதைகளைப் பேசிக்கொண்டே இருவரும் உண்டு முடித்தனர். வான்முகிலுக்கு மனம் நிம்மதியாய் இருந்தது. அந்த நிம்மதி கொடுத்த வேகத்தில் அவனிடம் கேட்டாள்..

    " ஏன் அத்தான், இந்த மாதிரி இந்த இரண்டு வருடங்களில் என்றாவது நீங்கள் சிரித்ததுண்டா? அவளால் நாம் யாருமே அமைதியாய் இருக்க முடியவில்லையே... நான் நீங்கள் சிவா.. யார் தான் நன்றாக இருந்தோம் இத்தனை நாட்களில்? ஏன் உங்கள் தாத்தா? அவர் என்ன அத்தான் செய்தார்? அவரையும் இவளுக்காக தனிமையில் எங்கோ வாட வைத்து விட்டீர்களே? அவருக்கு உங்களை விட்டால் யார் இருக்கிறார்? அவரையாவது இங்கேயே தங்க வைத்திருக்க கூடாதா?"

    விமலன் அமைதியாய் இருந்தான், பிறகு சொன்னான்..."முகில், இது என் விஷயம். இதைப் பற்றி கேட்கும் உரிமை உனக்கு இல்லை." எழுந்து கை கழுவ சென்றான்.

    அவளுக்கு ஆத்திரம் வந்தது... எத்தனை சாதாரணமாய் தன்னை வேறொருத்தியாய் பிரித்து விட்டான்.. அதுவும் தான் ஒரு காலத்தில் விரும்பியவனே அவ்வாறு தன்னை விலக்குவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் சண்டை போட இது தருணம் அல்ல என்று விட்டுவிட்டாள்.

    நாட்கள் நகர்ந்துக்கொண்டே தான் இருந்தது. ஆனால் வான்முகில் விமலனின் மனதை நெருங்க எடுத்த எந்த முயற்சியும் பலனில்லாமலே சென்றது.

    அதற்கு நேர்மாறாய் இப்போது எல்லாம் வானதி சுற்றியுள்ளதை உணரும் அளவு தேறியிருந்தாள். விமலன் அவளை ஒரே அறைக்குள் அடைக்காமல் தன்னுடன் தோட்டத்துக்கு அல்லது பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு என்று வீல் சேரில் அழைத்து போவான்.

    எல்லாவற்றுக்கும் முடிவாக ஒரு நாள் வானதி தன் விரல் நுனியை விமலனின் கரத்தில் தொட்டு தன் முதல் அசைவை ஏற்படுத்தினாள்.

    உற்றார் இழந்து
    சுற்றமும் துறந்து
    கைப்பிடித்தேன்
    நீயே கதியென்று!!
    பிடித்த பிடி தவறி
    பிறவி இழந்தேன் அன்று!!
    விட்ட பிடியை
    விடாது பிடிக்க
    மீண்டு வந்தேன் மறுமுறை இன்று!!
     
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Romba nalla irukku Priya intha episode.. how Vanathi is reviving back nu nalla sollirukka.. :thumbsup
     
  3. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    hey...very nice pa...vanathi seekiram normal aaganum nu dhaan nanum virumburen :)
     
  4. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    :wowNee inum 2 or 3 episodes pannuva nu nenacha ore episode la guna makita..
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Varamatta Vanathinu nenaichitu irunathathu poga ninaivu mella varuthey....Intha episode romba arumai da. Aduthu enna?? Yaar velila poga pora? :)
     
  6. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Vanathi ninaivu varathu explain paniruntha vitham was nice. lovely part
     
  7. sangichandru

    sangichandru Bronze IL'ite

    Messages:
    33
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    hi Devapriya,

    கதை நன்றாக செல்கிறது. விமலன் வானதிக்கு என்ன தண்டனை தர போகிறான் என்று தெரிய ஆவலாக உள்ளது, விரைவாக அடுத்த பாகம் எதிர்பார்கிறேன்.
     
  8. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Paravalla priya,

    Vanadhi adutha episode la complete a seri agiduvala??:cheers
     
  9. priyasaki

    priyasaki Gold IL'ite

    Messages:
    712
    Likes Received:
    386
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hi priya,

    I read all the parts at a stretch today...
    the story is going on well...

    continue ur great work...
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    super... ava vantha sudu pidikum la...
    ask her to get up soon...
     

Share This Page