1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-15!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 13, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    காரியம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. விஷயம் கேள்விப்பட்டு வந்த விமலின் தாத்தா அதற்குமேல் அவனை அங்கு இருக்க விடவில்லை. ஒரே நேரத்தில் மகனையும் மருமகளையும் பரிக்கொடுத்த பேரிழப்பில் இருந்து அவர் மீளவில்லை.

    பேரனைக் கூட்டிக்கொண்டு கிளம்புகையில் சிவாவையும் வான்முகிலையும் தங்களோடு வந்து விடுமாறு அழைக்க தான் செய்தார். ஆனால், அதில் சிவாவுக்கு விருப்பமில்லை. தன் தந்தையின் சொந்த பூமி இருக்கும் இடத்தில் தான் தங்களுக்கும் எதிர்காலம் என்று சொல்லி அதை மறுத்துவிட்டான்.

    வானதியையோ அவர் அழைக்கவேயில்லை. சொந்த தங்கையே அந்த குடும்பத்தோடு அவ்வளவு ஒற்றுதலாய் இருக்கவில்லை என்பது அவருக்கும் தெரிந்தது தான். அப்படிப்பட்ட குடுமபத்தில் இருந்து ஒருத்தியை அழைத்து போவது இந்த நேரத்தில் சரி வராது என்று விட்டுவிட்டார். அத்தோடு அவர் மனதில் வேறு சில கணக்குகளும் இருந்தது.

    தான் வந்த காரிலேயே பேரனோடு கிளம்பினார். காருக்கு போகும் முன் விமல் தனிமையில் சிவாவோடு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

    "சிவா, தாத்தா சொல்வது போல இனியாவது நீ எங்களுடன் வந்து தங்கக்கூடாதா? அங்கேயானால், நம் அலுவலகத்திலேயே நீ வேலை பார்த்து அதிக சம்பளத்தோடு முன்னேறலாம் இல்லையா?"

    "விமல், எனக்கு இனிதான் இங்கு கூடுதல் பொறுப்பு காத்திருக்கிறது. தாயில்லாத நாங்கள் இப்போது தகப்பனையும் இழந்து நிற்கிறோம். வான்முகிலுக்கு என்னை விட்டால் யாருமில்லை. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டு தான் நான் இந்த ஊரை விட்டே கிளம்புவேன். அதுவரை நாங்கள் இதுவரை வாழ்ந்த இந்த மண் தான் எங்கள் இருவருக்குமே பாதுகாப்பு."

    இவனும் தலையாட்டினான்...."அதுவும் சரிதான். வானதி? இனி அவளை யார் பார்த்துக்கொள்வது? பாவம், அவள் ஒரே சமயத்தில் தாய் தந்தை இருவரையும் அல்லவா இழந்து நிற்கிறாள்? தாத்தா அதை பற்றிய பேச்சையே எடுக்க மாட்டேன் என்கிறார். இந்த நேரத்தில் அவரை மீறும் துணிவும் எனக்கில்லை. நீ இரு பெண்களையும் உன் பொறுப்பில் பார்த்துக்கொள்வது என்றால், அது சிரமம் ஆயிற்றே?"

    "அவளைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை விமல், அவளின் தாய் மாமா இருக்கிறார், அவரே இவளை தன்னோடு கூட்டிக்கொண்டு போய்விடுவார். என்ன, முன்பு இருந்த மாதிரி அவளால் சுதந்திரமாய் இருக்க முடியாது. அவ்வளவு தான்..."

    ஆனாலும் விமலனின் உள்ளம் அவளுக்காக தான் அதிகமாய் இரங்கியது. அன்று ஊரை விட்டு வந்தவன் அதற்கு பின்பு ஒரே ஒரு முறை தான் ஊருக்கு போனான்.ஆனால் திரும்பி வரும் போது வானதியை மனைவியாக்கிக்கொண்டு வந்தான்.

    தன்னிடம் கூட ஒரு வார்த்தை கூறாமல், அதுவும் தன் விருப்பம் என்ன என்பதை அறிந்திருந்தும், தன் பேரன் வானதியை திருமணம் செய்துக்கொண்டு வந்தது, அவனின் தாத்தா சிவனேசனுக்கு பிடிக்கவில்லை. எத்தனையோ முறை தன் மறுப்பை மறைமுகமாயும் நேரடியாகவும் தெரிவித்தும் விமலன் ஒத்துக்கொள்வதாய் இல்லை எனவும், அவரும் எதுவுமே சொல்லாமல் அந்த வீட்டை விமலுக்கே கொடுத்துவிட்டு தன் சொந்த பண்ணைக்கு போய் அங்கேயே தங்கிவிட்டார்.

    விமலனுக்கு தாத்தா போனது வருத்தம் தான் என்றாலும், வானதியோடு தன் பிரிவை அவன் எண்ணி பார்த்ததே இல்லை.

    அவனுக்கும் நன்கு தெரியும் தான், தன் திருமணத்தில் வானதியை தவிர வேறு யாருக்கும் மகிழ்ச்சியில்லை என்று. ஆனால் அதை பற்றி அவன் வருத்தப்படவும் இல்லை.

    "தம்பி... தம்பி... தம்பி...." லக்ஷ்மி அம்மா தட்டி எழுப்பவும் தான், சுய உணர்வுக்கு வந்தான்.. ஒரு நிமிடம் அத்தனையும் உண்மை போலவே தோன்றியதே... ஏனோ தன் தாய் மல்லிகாவின் நினைவு வந்தது. அவளின் வார்த்தையை மீறியதால், தன் வாழ்க்கையே தடம் மாறிப்போனதாய் உணர்ந்தான்.

    "ஏதோ பழைய நினைவுகள் லக்ஷ்மி அம்மா... அப்படியே உறங்கிவிட்டேன். ஆமாம், வானு சாப்பிட்டு விட்டாளா? மாத்திரை எல்லாம் கொடுத்து விட்டீர்களா? "

    "இல்லை தம்பி, மாத்திரை சாப்பிட மாட்டேன்னு பிடிவாதமா வாயை மூடிக்கொண்டிருக்குது. அது தான் உங்களை அழைச்சுட்டு போகலாம்ன்னு வந்தேன்."

    அவனும் அந்த அம்மாவோடு கூடவே சென்று அவளுக்கு ஊட்டிவிட்டு மாத்திரை மருந்து எல்லாமும் கொடுத்துவிட்டு அவள் தலையை வருடிக் கொடுத்தவாறே அமர்ந்திருந்தான்.... தாங்கள் சிறக்கடிக்கும் பறவைகளாய் சந்தோஷ வானில் பறந்தது ஞாபகம் வந்தது.

    எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந்துக் கொண்டிருப்பது வானதிக்கு பிடிக்காது.எங்காவது சுற்றிக்கொண்டே இருப்பாள். அப்படிப்பட்டவள் இன்று ஒரே இடத்தில், இரண்டு வருடமாய்...

    விளக்கை அணைத்துவிட்டு வந்து வானு அருகில் அவளை லேசாக அணைத்தவாறே படுத்தான். மேலே ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. அந்த சத்தம் அவர்களின் தனிமையை அவனுக்கு ஞாபக படுத்தியது.

    "விமல், இப்போதே எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்..." ஓடிக்கொண்டிருந்த ஃபேனை பார்த்துக்கொண்டே படுத்திருந்த விமலனின் அருகில் வானதி கோப மூச்சுக்களோடு வந்து நின்றாள்.

    "என்ன வானு? ஏன் இவ்வளவு கோபம்?" பேசிக்கொண்டே அவளை இழுத்து தன்னருகில் அமர்த்தி, அவள் தோளில் கைப்போட்டுக் கொண்டான்.

    அவள் அந்த கையை தட்டிவிட்டுக் கொண்டே சொன்னாள்..."எடு டா கையை, இத்தனை நேரம் அந்த உஷாவை சைட் அடித்து விட்டு இப்போது மட்டும் என்ன கொஞ்சல்?"

    விமலனுக்கு ஒன்றுமே புரியவில்லை... தடுமாறி போய் கேட்டான்...
    "எ... என்ன வானு? உஷா யாரு? நா.. நான் அப்படி யாரையும்..."

    அவன் முடிப்பதற்குள்ளாகவே அவள் சிரித்தாள்....மேலே உஷா ஃபேனை சைகையால் காண்பித்தாள்... "அதை தான் சொன்னேன்.. பயந்து விட்டாயா? ஐயோ, பாவம்..." கலகலவென்று அவள் சிரிப்பதை கண் கொட்டாமல் பார்த்தான். அதற்கு மேல் அவள் சிரிக்கவில்லை. அவன் அவள் உதடுகளை தன்வசம் சிறைப்பிடித்து வைத்திருந்தான்.

    திடீரென்று தன் மார்பில் எதுவோ தண்ணீர் போல விழவும் தொட்டு பார்த்தான்... அவனது கண்ணீர் தான்.. இது ஒன்றும் அவனுக்கு புதிதில்லை. இரண்டு வருடமாய் தான் ஆண்பிள்ளை என்ற ஒரே காரணத்தால், யாரும் பார்க்காத தனிமையில் மட்டும் அழுதுக்கொள்வான்.

    கைகள் தானாய் உறங்கி கொண்டிருந்த வானதியை இறுக்கி அணைத்தன... இந்த இரண்டு வருட போராட்டத்தில் அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், அவளை தொட்டு பார்க்கவாவது முடிகிறதே என்பது தான்..

    "கதறும் என் நெஞ்சத்திடம்
    சொல்லி இருக்கிறேன்!!
    காத்திரு இதயமே, வருவாள்
    என் வஞ்சிக்கொடி
    வதங்கி நிற்கும் என் காதல்
    வேருக்கு தன் முத்தங்களால்
    உயிர் குடுக்க....
    அதுவரை அவள் விட்டு சென்ற
    காலடி சுவடுகளில்
    கண் விதைத்து பார்த்திரு.."
     
    Loading...

  2. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Wow...evlo arumaiya character andha vimalan...so nice da...kavidhai as usual super :)
     
  3. mshanj

    mshanj Senior IL'ite

    Messages:
    71
    Likes Received:
    17
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Good going...beautiful poems :)
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya I feel very proud da.. very nicely written esp the kutti kavithai.. awesome.. :thumbsup
     
  5. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi ,
    Ur Story is going good.. Eagerly expecting for next episodes...

    Keep Rocking :thumbsup
    Kutti kutti kavithaikal remba super .... :clap :clap :clap

    Regards,
    Uma
     
  6. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hey priya, So sweet of vimalan:cheers
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Etha vechu ishu vimalan arumai nu sonninga?:spin Thank you...:)
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thanks for your fb mshanj...:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotflthanks rammy...
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you uma... thodarnthu padinga...:)
     

Share This Page