1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-14!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 12, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வரும் போது மல்லிகா கணவர் காரை ஒட்டிக்கொண்டு வந்ததால், இப்போது செல்வராஜ் ஓட்டினார். அவருக்கும் ஸ்டாண்டில் சில சமயம் கார் ஓட்டின பழக்கம் இருந்தது. அவருக்கு பக்கத்தில் விஜயேந்திரன் அமர்ந்திருந்தார். குடும்பம் முழுவதும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு விஜயேந்திரனின் காரில் வந்துக்கொண்டிருக்க, மல்லிகா மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

    "அண்ணி, விமலுக்கு திருமணம் முடித்துவிடலாம் என்றிருக்கிறோம். பெண் வேறு யாருமில்லை. நம் முகில் தான். விமலனுக்கும் முகிலுக்கும் பூப்போட்டு பார்க்க தான் கோவிலுக்கு வந்ததே.. முடிவு சுபமாய் வந்தால் மட்டும் உங்கள் அனைவரிடமும் சொல்லலாம் என்று நினைத்தேன். இப்போது நாம் சந்தோஷப்படும் படியாகவே முடிவு இருக்கிறது. அவர்கள் இருவருக்கும் பத்தில் எட்டு பொருத்தம் பிரமாதமாய் இருக்கிறதாம். அடுத்த முஹுர்த்ததிலேயே திருமணத்தை நடத்தி விடலாம் என்றிருக்கிறோம்."

    இத்தனை நேரம் கேட்டுக்கொண்டிருந்த பாக்கியம், பொங்கி எழுவாள் என்று எதிர்ப்பார்த்ததுக்கு மாறாக எதுவுமே பேசாமல் அமைதியாய் இருந்தாள்.செல்வராஜும் மனைவியை ஓரக்கண்ணில் பார்த்தார்.

    அவருக்குமே இது வேதனை தான். முகிலை அவர் வேறொருத்தியாய் பார்த்ததில்லை. தன் சொந்த மகளாய் தான் பாசம் காட்டுகிறார். ஆனால் தனக்கு பிறந்த பெண் முகிலைப் போல இல்லையே என்ற ஆதங்கம் அவருக்கும் இருந்தது. பாக்கியத்தின் நிலையும் அவருக்கு புரிந்தது.

    என்னதான் இருந்தாலும் பெற்ற தாய் ஆயிற்றே வருத்தம் இல்லாமல் இருக்குமா... அதிலும் அவளுக்கு இது ஏமாற்றம் வேறு. அதற்காக என்ன செய்து விட முடியும்... தன் சொந்த தங்கையின் குடும்பம் சீரழிந்தாலும் பரவாயில்லை என்று விட்டு விடவா முடியும்.

    மல்லிகாவுக்கு சங்கடமாய் இருந்தது. அண்ணி எதிர்த்து ஏதாவது பேசியிருந்தால் கூட சமாளிக்கலாம். ஆனால் இவளோ மெளனமாக அல்லவா இருக்கிறாள்.

    "அண்ணி, என்ன உங்கள் விருப்பத்தை சொல்லவே இல்லையே?"

    பாக்கியம் விரக்தியாய் சொன்னாள்.. "என்ன சொல்வது மல்லி? எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள். நீங்கள் என் பெண்ணை தான் மருமகளாக்கி கொள்ள வேண்டும் என்று நான் சொல்ல முடியாது தான். சொல்ல எனக்கு உரிமையும் இல்லை. ஆனால், என்னிடமும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? ஒருவேளை நானே முகிலின் திருமணம் நடக்க இயலாமல் செய்து விடுவேனோ என்று பயந்து விட்டீர்கள் போல... நம் வீட்டுக்கு வந்த போது நான் என் மகளைப் பற்றியே பேசி உன்னை அதிகமாய் பயப்படுத்தி விட்டேனோ.. அப்படியிருந்தால் மன்னித்துக்கொள் மல்லிகா.

    பார் மல்லி, நான் முகிலுக்கு எதுவும் நல்லது செய்ததில்லை தான். ஆனால் தானாய் அமைந்த வரனைக் கெடுக்கும் அளவு நான் மோசமும் செய்தது இல்லை. எந்த தாயும் தன் மகள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பாள். நானும் அது போல நினைத்து தான் என் மகளை உன் மகனுக்கு கேட்க எண்ணினேன். வானதிக்கு உங்கள் வீட்டில் மணம் முடித்தால் நீ பார்த்துக்கொள்வாய், வேறொரு இடம் என்றால் அவள் குணத்திற்கு ஒரேயடியாய் விலக்கி விடுவார்களே என்று பயந்தேன். உங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அல்ல.

    அது சரி, என்ன தான் இருந்தாலும், என் மகள் முகில் அளவுக்கு குணவதி இல்லையே. அதனால் நீ தயங்குவதிலும் நியாயம் இருக்கிறது. நீயும் தாய் தானே, உன் மகனின் நலமும் பார்க்க தான் செய்வாய் என்பது என் அறிவுக்கு எட்டவில்லை..

    ஆனால் இப்போது புரிகிறது, என் மகளுக்கு அவ்வளவு குடுப்பினை இல்லை. செய்யும் வினைகளுக்கு அவள் அனுபவித்து தானே ஆக வேண்டும். முகிலுக்கு அவள் குணம் அறிந்து பல வரன்கள் அமையும். இவர் நாலு காசு சேமித்தாவது வைத்திருந்தால், நான் ஏன் தனியாளாக இப்படி கஷ்டப்பட்டிருக்க போகிறேன்?அவள் விதிப்படி நடக்கட்டும், பெற்றவளாய் என் கடமை இனி எதுவும் இல்லை." கண்ணோரத்தில் லேசாய் வழிந்த கண்ணீரையும் சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.

    காரில் இருந்த யாருமே சிறிது நேரம் எதுவுமே பேச இயலாமல் இருந்தார்கள். மல்லிகாவுக்கும் மணம் கனத்தது. பால்ராஜ் எதுவும் பேச திராணியில்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தார்.

    பாக்கியத்தின் மனதில் இத்தனை நாள் இவ்வளவு வேதனை இருக்கும் என்று செல்வராஜே எதிர்ப்பார்க்கவில்லை. தானும் தவறு செய்ததாய் இப்போது தான் உணர்ந்தார்.

    'தான் மட்டுமாய் இருந்த வரை தான் சேமிக்க தோன்றவில்லை. ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகாவது சேர்த்திருக்க வேண்டுமோ? பாவம் பாக்கியம் எத்தனை சுமைகளை யாருக்கும் தெரியாமல் சுமந்திருக்கிறாள்? நான் என் மகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுக்கும் அளவு என் நிலையை உயர்த்தியிருந்தால், என் மகளும் மற்றவரை பார்த்து பொறாமையில் வெந்திருக்க மாட்டாளோ?'

    யோசித்துக்கொண்டே காரை ஓட்டியவர், அந்த சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார் எதிரில் வரும் லாரி கூட கவனத்தை கலைக்காதவாறு.. அவர் கண்ணில் அந்த லாரி பட்ட வினாடி, காலம் கடந்திருந்தது. என்ன முயற்சித்தும் பலனில்லாமல், அந்த ஐந்து பேரைத் தாங்கிய கார், மாத்திரைக்கும் குறைவான வினாடிகளில் சாலையின் எதிர்ப்புறமாக தூக்கியெறியப் பட்டது.

    முன் பக்கம் உட்கார்ந்திருந்தவர்கள் நொடிப்பொழுதில் மரணத்தை தழுவி விட, பின் பக்கம் அமர்ந்திருந்த பாக்கியமும் மல்லிகாவும் மூச்சுக்கு திணறினர். பால்ராஜ் தான் எறியப்பட்ட வேகத்துக்கு சிரமம் இல்லாமலே உயிரை விட்டார். மல்லிகாவின் மூச்சு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது.

    அந்த கடைசி நொடியிலும், பாக்கியம் தன் மகளை யாருமற்ற அனாதையாய் விட்டு போவதைத் எண்ணி கலங்கினார். தன் வாழ்வின் கடைசி கோரிக்கையாய் அந்த தாயுள்ளம் தன் மகளின் நித்திய வாழ்வுக்காய் கடவுளை வேண்டிக்கொண்டே, தன்னுடல் விட்டு பிரிந்தது.

    "பத்து மாசம் சுமக்கும் போது
    சுகமாய் உணர வைக்கும்
    பெண் குழந்தை,
    கர்ப்பம் தாண்டி
    வெளி வந்தவுடன் மட்டும்,
    தாய்க்கு
    நெருப்பாய் கனப்பது ஏன்??

    கர்ப்பத்தில் இருக்கும் வரை
    சுகமாய் உணரும்

    பெண் குழந்தை,
    கர்ப்பம்
    தாண்டி
    வெளி வந்தவுடன் மட்டும்,
    தானே ஒரு
    சுமைக்கல்லாய் ஆவது ஏன்??

    இது,
    பிறப்பிலேயே எழுதப்பட்ட விதியா?
    இல்லை,
    பெண்ணுக்கு எக்காலமும்
    இதுவேதான் கதியா?"
     
    1 person likes this.
    Loading...

  2. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    :clap:clap:clap Awesome episode deva...You made me very emotional...

    Kadaisi la kavidhai was extra-ordinary...Superb da..No words to express :bowdown
     
  3. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Extraordinary poem.. Superb thought ma.. As usual good episode...:thumbsup
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Superb part da idu...liked it so much. Very sentimental.

    As usual kavithai rocks.:)
     
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya awesome narration da.. kavithai super.. :thumbsup
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பிரியா பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை.வாழ்த்துக்கள்.
    உன் கவிதையில் நீ கேட்ட கேள்விக்கு பதில் என் முதல் கவிதை சுமைதாங்கியில் உள்ளது.
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    emotional episode da...
    kavithai super...
     
  8. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Romba emotional episode a irukae priya..


    super a kondu pora kadhaya
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thanks Ishu for your first fb..:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thanks Morni...:)
     

Share This Page