1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-12!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 10, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    விமலன் வானதியோடு அத்தனை நெருக்கமாய் பழகவில்லை. அது ஏன் என்று அவனுக்குமே கூட புரியவில்லை. வான்முகிலின் குணத்தை வெகு அருகில் இருந்து இத்தனை நாள் பார்த்துவிட்டதாலோ என்னமோ.... இவளின் குணம் அவனுக்கு பிடிப்படவில்லை. இவன் நெருங்கினால்,அவள் விலகினாள். போகிறது என்று இவன் விலகினால், அவள் எகிறினாள்...

    "ஆமாமாம், உங்களுக்கு என்னை எல்லாம் பிடிக்குமா... என்னதான் இருந்தாலும், முகில் அக்காவைத் தான் எல்லாருக்கும் பிடிக்கிறது. என்னை எல்லாம் யாருக்கு பிடிக்க போகிறது.." என்பாள்.

    அவனுக்கு சில சமயம் எப்போதடா இங்கிருந்து போய் சிவாவையும் முகிலையும் பார்க்கலாம் என்றிருக்கும். ஆனால் பாக்கியத்தின் அன்பில் அவன் அடிமையாகி இருந்தான். இவனுக்காகவே பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்துக் கொடுத்தாள்.இவன் வந்து தங்க போவதை அறிந்ததுமே, செல்வராஜ் வீட்டிற்கு ஃபேன் வாங்கி வந்து மாட்டினார். இவனுக்கென்றே தனியறை ஏற்பாடு பண்ணி கொடுத்தார்.

    மல்லிகா கூட கேட்டாள்..."அண்ணா, தனியறை எதுக்கு? அவனும் நம் கூடவே படுக்கட்டுமே.."

    ஆனால் செல்வராஜ் மறுத்துவிட்டார்..." மல்லிகா, நீ நம் வீட்டு பெண். உனக்கு தரையில் எல்லாம் படுத்து பழக்கம் இருக்கிறது. தம்பி அப்படியா? வசதியாய் இருந்தவர். விடம்மா, இன்னும் ஒரு வாரம் தானே? என்றும் வராத பிள்ளை வந்திருக்கிறது. தாய் மாமனாய் நான் இன்னும் என்னவெல்லாமோ செய்திருக்க வேண்டும். ஆனால் என் வசதிக்கு இது தானம்மா முடிந்தது."

    மல்லிகாவும் வற்புறுத்தாமல் அத்தோடு விட்டு விட்டாள். சும்மாவென்றால் வாதாடியிருப்பாள். ஆனால் இங்கு வயதிற்கு வந்த பெண்ணொருத்தி இருக்கும் போது எல்லாரும் ஒரே அறையில் படுப்பது சரியல்ல என்று தான் பேச்சை முடித்தாள்.

    அன்றிரவு எல்லாரும் படுக்க சென்ற பின்பு செல்வராஜ் கிணற்றடியில் தனியாக அமர்ந்திருந்தார். வெகு நேரமாகியும் அண்ணன் தூங்க வரவில்லையே என்று மல்லிகாவும் அங்கேயே சென்று பார்த்தாள். இது தன் அண்ணன்தானா என்றே அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அத்தனை சோகம் அவரின் முகத்தில் தெரிந்தது.

    சின்ன வயதிலிருந்தே பால்ராஜ் பொறுப்பாக குடும்பத்தை நடத்தினார். தாய் தந்தை இல்லாத தனக்கும் தன் சின்ன அண்ணனுக்கும் எந்த குறையும் வைத்தாரில்லை. குடும்பத்தில் மூத்தவர் என்பதால் தானாக அந்த பொறுப்புணர்ச்சி வந்தது. தன் தேவைக்கு மிஞ்சிய பணத்தை சேர்த்து வைப்பார். ஆனால் செல்வராஜ் அப்படியல்ல... அன்றைய தேவைக்கு பணம் இருந்தாலே போதும், நாளைய வயிற்றுக்கு இறைவன் நமக்கென்று ஏதாவது வைத்திருப்பார் என்று வேதாந்தம் பேசிக்கொண்டே சேமிப்பு என்று எதையும் வைத்துக் கொள்ள மாட்டார்.

    அப்படிப்பட்ட அண்ணனுக்கு இன்று என்ன வந்தது. கண்டிப்பாக அது பண பிரச்சினை அல்ல என்பது உறுதி.மெல்ல சென்று அவரின் அருகில் உட்கார்ந்தாள்.இவள் வந்த அரவம் கேட்டு செல்வராஜ் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார்.

    'கண்ணீரா? அதுவும் அண்ணனின் கண்களிலா?'

    "வா மல்லி, என்னம்மா, கட்டாந்தரையில் படுத்து, தூக்கம் வரவில்லையா? அது சரி, நீயும் கிட்டத்தட்ட இருபது இருபத்தி மூன்று வருடங்களாக மெத்தையில் அல்லாவா படுத்து பழக்கப் பட்டிருப்பாய்? "

    "அண்ணா, நான் அதற்கு முன் இருபது ஆண்டுகள் வெறும் தரையில் படுத்து உறங்கியவள் என்பதை மறந்து விட்டாயா? அது கிடக்கட்டும், நான் வரும் முன்பு அழுதுக்கொண்டிருந்தாயே, ஏன் அண்ணா?"

    செல்வராஜ் எதையோ மறைப்பது போல அவளைப் பார்த்தார்...."நானா? என்ன மல்லி, கனவு கண்டாயா? இதுவரை நான் எதற்கும் கலங்கியவன் இல்லை என்பது உனக்கு தெரியாதா தாயி?" லேசாக புன்னைகைத்தார்.

    "அதனால் தான் கேட்கிறேன்... இதுவரை நீ அழுது பார்த்திருந்தால், சரி இதுவும் எதோ பத்தோடு பதினொன்று என்று விட்டிருக்கலாம். ஆனால், எதற்குமே கலங்காத நீயே கண்ணில் நீர் வரும் வரை யோசிக்கிறாய் என்றால்? சொல் அண்ணா, ஒருவேளை நான் வேறு வீட்டு பெண் என்று நினைத்து என்னிடம் மறைக்கிறாயா?"

    செல்வராஜ் தவிப்பாய் பார்த்தார்... "இல்லை மல்லி, நீ இந்த வீட்டு பெண் என்பதால் தான் யோசிக்கிறேன்."
    மல்லிகா ஆச்சர்யமாய் அவரை நோக்கினாள்....."அண்ணா, புரியவில்லையே?"

    "மல்லி, உன் மேல் எனக்கிருக்கும் பாசம் உனக்கு சொல்லி தெரிய வேண்டியதல்ல.. அப்படிப்பட்ட நானே உன்னை எப்படி வீட்டை விட்டு வெளியில் போ என்று சொல்வேனம்மா?" சொன்னவர் துக்கம் தாளாமல் முகத்தை கைகளுக்குள் அடக்கி வெளிப்படையாகவே அழ ஆரம்பித்தார்.

    மல்லிகாவின் கண்களிலோ அதிர்ச்சி... "அண்ணா, என்னை வீட்டைவிட்டு போக சொல்வதா? ஏன்? நான் என்ன பண்ணினேன்? அல்லது, என் மகன் ஏதாயினும் தவறாக நடந்தானா? என்ன அண்ணா? எதற்கு என்று சொல்லிவிடேன்.. ஐயோ.. எனக்கு ஒன்றுமே புரியவில்லையே..."

    தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு செல்வராஜ் பேச தொடங்கினார்..."உன் மேலோ அல்லது தம்பியின் மேலோ எந்த தவறும் இல்லை மல்லிகா... நீங்கள் இங்கு வந்தது தான் தவறு... அதுவும் மாப்பிள்ளையை கூட்டிக் கொண்டு இங்கு வந்தாயே அது தான் தவறு."

    மல்லிகா கோபமாய் கத்தினாள்... "அண்ணா, உனக்கு புரியும்படியாக பேசவே தெரியாதா?"

    "மல்லி, உன் அண்ணியை பற்றி உனக்கு நன்றாக தெரியும். அவள் தனக்கு ஆதாயம் இல்லாவிட்டால் யாருக்கும் எதுவும் செய்கிறவள் இல்லை. இத்தனை நாள் உன்னை வீட்டுக்கு அழைக்காதவள் இந்த முறை அழைத்து ஏன் என்று கூடவா உனக்கு புரியவில்லை?"

    'அவளுக்கா புரியாது? வந்த முதல் நாளே சரியாக கணித்தவள் ஆயிற்றே.. ஆனாலும் எதற்கும் அண்ணன் வாயிலிருந்தே வரட்டும் என்று மௌனம் காத்தாள்'.

    அவரே தொடர்ந்து எரிச்சலாய் சொன்னார்..."அவளுக்கு எப்படியாவது தன் மகளை உன் மகனுக்கு கட்டி வைத்துவிட வேண்டும். அதற்கு தான் எப்போதும் இல்லாமல் இப்போது இந்த நல்லவள் வேஷம் எல்லாம்.விமலனின் கவனம் முகிலின் பக்கம் திரும்பி விடக் கூடாது என்று தான் உங்களை விருந்துக்கே அழைத்திருப்பாள். பார்க்கிறாய் அல்லவா, வினாடி விடாமல் தன் மகளின் புராணத்தை பாடிக்கொண்டிருப்பதை?"

    'அண்ணன் அப்பாவியாய் இருந்தாலும் தன் மனைவியை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாரே...ஆனாலும் மல்லிகாவிற்கு இன்னும் ஓர் சந்தேகம். அதை மறையாமல் கேட்டும் விட்டாள்.."ஏன் அண்ணா, அண்ணி அப்படி நினைப்பதாகவே இருக்கட்டும், வானதி உன் மகளும் தானே? ஏன் உனக்கு அவளை என் மகனுக்கு மனம் செய்துக் கொடுக்க விருப்பமில்லையா?"

    செல்வராஜின் முகம் இந்த கேள்வியில் கருத்து போனது. எதுவும் பேசாமல் சில வினாடிகள் தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவர், தன் பாரம் இறங்கட்டும் என்று பேச தொடங்கினார்... "மல்லிகா, வானதி எனக்கும் மகள் தான். அவள் முகிலை போல இருந்திருந்தால் நானே உன்னிடம் சம்மந்தம் பேசியிருப்பேன்.ஆனால் அவள் குணத்தில் அவள் அம்மா போல... உண்மையை சொல்வதானால், அவள் அம்மா இவளைக் காட்டிலும் எவ்வளவோ பராவாயில்லை."

    "ஏன்?"

    "வானதியின் மனம் முழுவதும் பொறாமை நிறைந்திருக்கிறது அம்மா. தன்னை விட மற்றவர் மீது தான் அவளுக்கு அதிக அக்கறை. அதிலும் முகில்!!! அந்த தாயில்லாத பெண் எது வாங்கினாலும் சரி, அடுத்த நாளே சென்று தனக்கென்று கேட்டு வாங்கி வந்துவிடுவாள். அதையும் அவள் உபயோகிக்க மாட்டாள். அது எங்கோ குப்பையில் கிடக்கும்.ஒருநாள் நான் வருவதைக் கவனிக்காமல் தாயிடம் சொல்கிறாள்....அதுவும் என்னவென்று? 'அம்மா நம் நிலை தாழ்ந்து இருப்பதால் தான் அந்த முகிலுக்கு அத்தனை திமிர். என்னவோ எனக்கு பிச்சைக் கொடுப்பது போல தாராளமாய் காட்டிக் கொள்கிறாள். நீ வேண்டுமானால் பார், நான் வாழாத வாழ்வை அவளும் வாழ விட மாட்டேன் என்று.' இப்போது புரிகிறதா? தனக்கு கிடைக்காததை அவளும் அனுபவிக்க கூடாதென்று தான் அவளிடமிருந்து பிடுங்கி வருகிறாள்....இவளுக்கு போய் உன் மகனை தா என்று எப்படியம்மா கேட்பேன்?"

    என்னதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாலும் தன் மகள் ஆயிற்றே... அதன் வருத்தம் அவர் கண்களில் நன்றாகவே தெரிந்தது. "அதற்கு தான் மல்லிகா சொல்கிறேன், உன் மகனை அழைத்துக் கொண்டு இங்கிருந்து நாளையே சென்று விடு."

    மல்லிகா எல்லாவற்றையும் கேட்டு யோசனையில் இருந்தாள். அவளுக்கும் இங்கிருந்து கிளம்பி விடுவதே மேல் என்று தோன்றியது.

    அந்த இரவின் வெளிச்சத்தில் காற்றோடு இவர்களின் பேச்சும் கரைந்து விட்டதாய் தான் அண்ணனும் தங்கையும் நினைத்திருப்பார்கள்.

    ஆனால் விமலனும் அவர்களின் அத்தனை நேர உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் என்பதும், பின்னாளில் வானதியை அவன் திருமணம் செய்வதற்கு தன் மாமனின் இந்த பேச்சுதான் காரணம் என்பதும் அவர்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே இதுவரை தெரியாது.
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hey ivan ena loose ah??? avala pathi therinchum kalyanam pannan ah??? :bonk
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya.. Vimalan rombavum kulapuraane.. ivan charactere puriya matendhe..:spin
     
  4. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    enama...pudhu pudhu suspense-a vaikura? vimalan Y apdi ivlo therinjum avalai marj panran? Onumey puriyalai...Story nalla kondu pora deva :)
     
  5. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    ithu enna ippadi oru twist! vimalan enna ippadi irukan. ivan enna vanmugil life a vanathi kitta irunthu kaapathrana illa vanathi ya thirutha porana?
    hey glad you posted an episode today. innikum yemathidiviyonu ninaichen.
     
  6. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Vimalan vaanmugilku nalathu seiya nenaikurana? :spin:spin
     
  7. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Vimalanuku paithiyama enna :rant:rant Velila pora onaana ethuku iluthukanum..
    Suspense ku ore alavu illaya:crazy
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Yen Yen Yen Vimalanukku enna aachu??? :rantEllam therinjuma Vanathiya kalyanam pannikitaan. Adutha suspenseaaaaa?????

    Nice narration da. :)
     
  9. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Ena priya,

    Hero konjam nut loose ana case o???:hide:

    Aana Selvaraj, unga nermai enaku pidichiruku:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Avanukku unna mathiri arivu avlo illa vaishu...:rotfl
     

Share This Page