1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-9!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 5, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பால்ராஜ் தன் மகனிடம் சொல்லியிருந்தார். "சிவா, விமல் தம்பி எங்கு போனாலும் கூடவே துணைக்கு நீயும் போ.. தேவையான நேரத்தில் உதவியாய் இரு.. சரியா?"

    "இதெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டுமா அப்பா? நான் பார்த்துக் கொள்கிறேன். அதை பற்றிய கவலையே வேண்டாம் உங்களுக்கு."

    விமலனுக்கு தன் தாய் பிறந்து வளர்ந்த மண்ணை பார்த்த பரவசம்... போலியான முகத்திரை இல்லாமல், மனம் நினைப்பதை முகத்தில் காட்டி, உடலில் அழுக்கு படிந்தாலும் உள்ளத்தில் அப்பழுக்கில்லாத இந்த கிராமத்து மனிதர்கள் அவனின் உள்ளம் கவர்ந்தனர். அதிலும் சிவக்குமாரை அவனுக்கு மிகவும் பிடித்தது.

    பார்க்கவும் பேசவும் முரடனாய் இருந்தாலும், பழக பலா சுளை போல இனிமையானவன். குழந்தையின் கைப்பிடித்து நடத்தி செல்லும் தாயினைப் போல பார்த்து பார்த்து கவனித்தான்.

    தோட்டத்து மரத்தில் கல் கொண்டு காய் அடிக்க, கிணற்றுக்குள் நீச்சல், காற்றடித்த டயரை கம்பொன்று வைத்து மண்தரையில் ஓட்ட... இப்படி அனைத்தையும் கற்று தந்தான். இதெல்லாம் அவன் கற்று தந்த போது, தேவையா என்று தான் விமலனுக்கு தோன்றியது. ஆனால் ஒவ்வொன்றிலும் அதினதில் வெற்றி பெற ஒரு சூட்சமம் இருந்தது. அதை அவன் தெளிவுற அறிந்துக் கொண்ட பின், உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்கும் இந்த விளையாட்டுக்கள் அவனுக்கும் மிகவும் பிடித்து போயிற்று.

    தாங்கள் இருவரும் வளர்ந்துவிட்ட வாலிபர்கள் என்பதை எல்லாம் இருவரும் மறந்திருந்தனர்.விமலனுக்கு தான் இதுவரை வாழவே இல்லையோ என்றே தோன்றியது. இப்போது இந்த நிமிடம் தான் தன் வாழ்வின் பொன்னான நேரங்கள் என்று எண்ணினான்.

    சிவாவிடம் கேட்டான்..."ஏன் சிவிலி, இது போல விளையாட்டுகள் இங்கு ஏராளம் போலவே? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி விளையாட்டுக்கள் உண்டா? பெண்கள் விளையாடும் விளையாட்டும் இது போல தானா?" இப்போது சிவாவை,சிவிலி என்று சுருக்கி கூப்பிட பழகியிருந்தான்.

    ஆரம்பத்தில் அத்தான் உறவு சொல்லித்தான் முகிலும் சிவாவும் விமலனை அழைத்தனர். முகில் என்ன சொன்னாலும் மாறப்போவதில்லை என்பது விமலனுக்கு நிச்சயம். வந்த ஓரிரு நாட்களிலேயே அவன் அவளைப் பற்றி நன்கு அறிந்திருந்தான்.

    எனவே சிவாவிடம் மட்டும் சொன்னான்..."சிவா, எனக்கு உறவுகள் தேவை தான். ஆனால் அதை விட எனக்கு உற்ற நண்பன் ஒருவன் அவசியம். நான் உன்னை நண்பனாக தான் பார்க்க விரும்புகிறேன். ஆக, இனி உறவு முறை சொல்லி அழைக்காமல், பெயர் சொல்லியே கூப்பிடு. நானும் உன் பெயரை சுருக்கி சிவிலி என்று தான் அழைக்க போகிறேன்."

    சிவாவிற்கு மிகுந்த சந்தோஷம். விமலன் பணம் படைத்தவன். ஆதலால், எளிதாக அனைவரோடும் கலந்து பேச விரும்ப மாட்டான் என்றே இவன் இதுவரை நினைத்திருந்தான். ஆனால் அவனின் இலகுத் தன்மை கண்டு சிவாவே ஆச்சர்யப்பட்டான்.எனவே அவன் சொல்லியதை இவனும் ஏற்றுக்கொண்டான்.

    விமல் கேட்ட கேள்விக்கு சிவா உற்சாகமாய் பதில் சொன்னான்.

    " விமல், ராணுவத்தில் ஒரு பயிற்சி கொடுப்பர். வீரர்கள் அனைவரும் அவர்களின் தலைமை வீரன் சொல்லும் வரை ஒரே பாதையில் நேராய் நடந்துக் கொண்டே இருக்க வேண்டும்.அதற்கு பரேட் என்று சொல்வர். தலைமை வீரன் வலப்பக்கம் சொல்லும் போது வலப்பக்கமும் , இடப்பக்கம் சொல்லும் போது இடதுப்புறமும் சென்று கொண்டே இருக்க வேண்டும். அப்படி நடக்கையில் எதிரில் ஒரு பிணம் இருந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் நடக்க வேண்டும். அந்த பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் ஒரே சமயத்தில் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.அது போலத்தான் நமது கிராமப்புற விளையாட்டுக்களும். எல்லா விளையாட்டுகளிலும் மனதோடு உடலுக்கும் பயிற்சி கிடைக்கும்.

    நாம் கூட பள்ளி நாட்களில் வகுப்புக்கு ஓ.பி அடிப்பது என்று சொல்லுவோமே? அது எதனால் தெரியுமா? ராணுவத்தில் பரேடுக்கு வராமல் இருந்தால் out of parade என்று சொல்வர். அதன் சுருக்கம் தான் O.P என்பது."

    நம்பவே இயலாமல் விமலன் கேட்டான்... "சிவிலி, உனக்கு இத்தனை விஷயங்கள் தெரியுமா? எப்படி சிவிலி? நீ எதுவரை படித்திருக்கிறாய்?"

    சிரித்துக் கொண்டே சிவா சொன்னான், "விமல், இது எல்லாம் கேள்வி அறிவு தான். மற்றபடி படிப்பறிவு மிகவும் குறைவு. நானும் என் தங்கையும் பன்னிரண்டாவதோடு நின்றுவிட்டோம்.அதற்கு மேல் படிக்க வசதியில்லை."

    "படித்திருந்தால் கண்டிப்பாய் நல்ல ஒரு தொழிலில் கைநிறைய சம்பாதித்திருப்பாய் சிவா."

    "ஹா..ஹா.. விமல், என் வயிறு நிறைவதற்கு தேவையான அளவு நான் சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதும். கையெல்லாம் நிறைய வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. சரி... நேரமாயிற்று, வீட்டுக்கு செல்லலாம் வா. இல்லாவிட்டால் அப்பா என்னை தான் சத்தம் போடுவார்."

    விமலனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. கடவுள் தனக்கு எதற்காகவோ பயிற்சி கொடுக்கிறார். அதற்கான பயிற்சிகாலம் தான்...தன்னுடைய இந்த கிராம வருகை,என்று.
     
    Loading...

  2. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Wow...kalakkura pa...ovoru episode-ilum un kadhai ezhudhum skills increase aaitey pogudhu...Superb...

    vimal ku edharkaaga indha payirchi endru therivadharku nanum aavalaga kaathirukiren
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya super da.. meendum meendum vaa la nee explore pannatha general topics laam idhula nalla alasara.. super writer aayita pa.. :thumbsup keep it up..
     
  4. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Priya,

    Vara vara un kadhai la shining kooditae pogudhae..:thumbsup
    Good:cheers.
     
  5. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Romance storyla generala soldrathu kuda menmaya iruku. Very nice..:thumbsup
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you Ishu.. :) Athu ippathuku theriyathu.. paravaliya?:hide:
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you so much ramya...:) Exam la thaan eluthurathuku onnume therriya mattenguthu....:spin:spin
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thinamum polish podren raba.. Athu thaan..:) thank you..:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Naan menmayanaval...:rotfl Thank you priyaraman..:)
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Very nice deva may god bless you
     

Share This Page