1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-7!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Oct 1, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    விமலனுக்கு சிறு வயதிலிருந்தே எதையும் கேட்டு பழக்கமில்லை. எல்லாம் தானாகவே கிடைக்கும்.அதற்காக அளவுக்கு மீறின உபயோகத்துக்கு என்றும் சொல்ல முடியாது.

    விமலனின் தாய் மல்லிகாவை அவன் தந்தை விஜயேந்திரன் காதலித்து திருமணம் புரிந்தார்.அவளோ ஏழை குடும்பத்திலிருந்து வந்தவள். சிக்கனமாய் இருப்பதெப்படி என்று நன்கு கற்றிருந்தாள். கற்றதோடு நில்லாமல் அதை நடைமுறையிலும் கொண்டு வந்தாள். மருமகளின் குணம் அறிந்த மாமனார் குடும்ப பொறுப்பு அத்தனையும் அவளை நம்பி ஒப்படைத்தார்.பணம் இருக்கிறது என்ற காரணத்தினால் அதை கண்டபடி செலவு செய்யும் பழக்கம் விமலனுக்கு வராததற்கு அவளின் அம்மாவும் ஒரு காரணம்...

    மல்லிகா அவனுக்கு வாழ்வியல் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தாள்.ஆனால் அதிலும் ஒரு சிறு தவறு நேரத்தான் செய்தது.நல்லதை மட்டுமே பார்த்துக்கொண்டும் பழகிக்கொண்டும் இருந்த விமலனுக்கு
    கெட்டதை பகுத்தறிந்து பார்க்க தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட அதற்கு அவனுக்கு அதுவரை அவசியம் ஏற்படவில்லை.

    விஜயேந்திரனுக்கு தன் மனைவி மேல் இருந்த ஒட்டுதல் அவள் குடும்பத்தின் மேல் இல்லை.எனவே அவருக்கு அவ்வளவாக அதைப் பற்றி அக்கறையில்லை.ஊர் விஷேஷங்களுக்கு மட்டும் மனைவியோடு சென்று எட்டிப் பார்த்துவிட்டு வருவார்.

    விமலன் ஊர்ப்பக்கம் இதுவரை போனதில்லை. படிப்பு,அது முடிந்து தொழில் என்று அவன் கவனம் அதிலேயே இருந்தது. ஓரிருமுறை அதிசயமாய் வரும் தன் மாமன்களையும் அவர்களோடு வரும் சிவக்குமாரையும் பார்த்ததுண்டு. வெவ்வேறு நிலையில் மாறுப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் இருத்தரப்பினருக்கும் பேசவும் எதுவும் இருக்காது. இப்போது தான் ஏனோ மல்லிகாவிற்கு தோன்றியது, இந்த முறை அனைவரும் ஊருக்கு குடும்பமாய் போக வேண்டும் என்று. பயணம் போகும் போது இருந்த அவள், திரும்பி வரும்போது இருக்கவில்லை.
    ...............................................................................................................................................................................
    மல்லிகாவிற்கு இரண்டு அண்ணன்கள்.. அதில் பால்ராஜ் தன் சொந்த உழைப்பிலேயே நிலம் வாங்கி அதில் வரும் வருமானத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார். இன்னொரு அண்ணன் செல்வராஜ் மற்றொரு நிலத்தில் கூலிக்கு வேலை செய்தார்.அவருக்கும் தினப்படி வருமானம் அன்றைய செலவுக்கு சரியாக போதுமானதாக இருந்தது. இரண்டு அண்ணன்களுக்குமே ஆளுக்கு ஒரு மகள்.. பால்ராஜுக்கு வான்முகிலோடு சேர்ந்து ஒரு மகன்,சிவக்குமார். செல்வராஜுக்கு ஒரே ஒரு ஆசை மகள் வானதி மட்டும் தான்.

    இரு குடும்பங்களுக்கும் சிறியவள் என்பதால் வானதிக்கு செல்லம் அதிகம். அவள் தன் ஆசைக்குட்பட்டு நினைத்தது அனைத்தையும் வாங்கி விடுவாள். அப்படியே வாங்க பணம் இல்லாவிட்டாலும் முகிலிடமோ அல்லது பெரியப்பாவிடமோ கேட்டால் கிடைத்துவிடும். வான்முகிலின் அம்மா அவளைப் பிரசவித்த மறு நிமிடமே இறந்துவிட, அவள் சின்ன வயதிலிருந்தே பொறுப்பை தன் தலையில் ஏற்றுக் கொண்டாள்.

    வானதியின் அம்மா பாக்கியம் தான் முகிலுக்கு வீட்டு வேலை அத்தனையும் கற்றுக் கொடுத்து அவளே செய்ய வைத்தாள். அப்போது தான் தன்னிடம் வந்து எதற்கும் நிற்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில். அவள் நினைத்ததென்னவோ தன்னலம் கருதிதான். ஆனால் முகில் உண்மையிலேயே அவளிடம் எதற்காகவும் போய் நிற்க வேண்டி வரவில்லை,வானதியைப் போல.ஏனென்றால் அவளுக்கு ஆசைகள் குறைவு.

    தன் தங்கையிடம் முகில் ரொம்பவும் பிரியமாகவே இருப்பாள். வானதியும் அப்படித்தான். அவளுக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும்,அவள் கேட்டு எதுவுமே இவள் மறுக்காததால்.

    வான்முகிலைக் காட்டிலும் வானதி அதிகம் படித்தவள். முகிலுக்கு பன்னிரண்டாவதோடு படிப்பை நிறுத்தி விட்டனர். வானதி ஆங்கில கல்லூரியில் படிக்கிறாள் என்று அண்டை அயலாரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவள் அம்மா
    தன் கணவனிடம் வற்புறுத்தி வானதியைக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள்.

    ஆனால் வானதியின் பழக்கவழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற துவங்கியது அங்கிருந்து தான். தான் ஏழை என்று சொல்லிக் கொள்ள அவளுக்கு அவமானமாக இருந்தது. எனவே அறிந்தவர் யாரும் அங்கு இல்லாத காரணத்தால் தைரியமாக பொய் சொன்னாள். தன் நிலைக்கு மீறி ஆடைகள் வாங்கியணிந்தாள்... தன் பெரியப்பாவிடம் கொஞ்சி குளாவி இருசக்கர மோட்டார் வாகனமும் வாங்கினாள்.

    அந்த கிராமத்திலேயே இவள் ஒருத்தி தான் அவ்வளவு தூரம் சென்று படிக்கிறாள் என்பதால், இவளின் உண்மை அறிந்தவர் கல்லூரியில் ஒருவருமில்லை.

    தனக்கு தெரிந்த கல்வியை வீணாக்காமல் முகிலும் மாலை நேரம் முடிந்த வரை ஏழைக் குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்றுக் கொடுப்பாள்.

    வாழ்க்கை வானதிக்கு சில பாடங்கள் கற்றுக்கொடுக்க காத்திருந்தது. அந்த காலம் அவளின் இருபத்தி ஒன்றாம் வயதில் வந்தது.அவளின் போதாத நேரம், காலம் தன்னுடன் விமலனையும் துணைக்கு அழைத்து வந்தது.

    "துணையாக நீயிருந்தாய் என்னுள்,எனவே
    துன்பத்திலும் நான் துவளவில்லை;
    துவண்டு போகையில் மட்டுமே,
    தூணாய் உன்னை பிடிக்க நினைத்தேன்..
    தூக்கியெறியாமல் பாதுகாத்து,
    துன்பம் மறைகையில் அதனோடு
    சேர்ந்து நீயும் மறைந்ததென்ன??"

     
    Last edited: Oct 1, 2010
    Loading...

  2. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    ore family, maaman magals, paavam vimal ku nallathu ethu kettathu ethunu pirichi paaka therla, vanathi kitta maatikitan. paavama iruku. ana unga story la thaan ellarume nallavangala irupaangale :thumbsup, vanathi kooda nallavala thaan irupa.
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    mm idhu thaan Vanathi and Mugilan meet panna situationa?? Vimalan paavam nallathu mattume paarthu Vanathi oda peraasai gal mathavangala thevainaa use pannikira gunam nu edhaiyume therinchukka mudiala pola..
     
  4. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Priya,perlam enga irundhu select panrada.....I like the name Vanathi....Kalki's character...your way of writing is good....:)
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    mama ponnungala... oru suspense over...
    nice kavithai da...
    keep it up... :2thumbsup:
     
  6. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Super flashback deva.
     
  7. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    yaara soldrathu paavam nu vimalanaya illa vanadhiya...:spinmaama ponnungala.. super thaa appo
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    flashback scene pramadham .............. deva.
     
  9. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Ending poem was amesome. flashback ah inimel good.:thumbsup
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    flashback super appu:rotfl:rotfl
     

Share This Page