1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-6!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Sep 30, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வெளியிலிருந்து புதிதாக வந்து வானதியின் சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவர் காலையில் அவனை மட்டும் தனியாக வர சொல்லியிருந்தார்.அதற்காகத் தான் இன்று கொஞ்சம் நேரத்திலேயே புறப்பட்டு விட்டான்.அவனின் காலை உணவு ஒரு ஆப்பிள், பிரட்டுடன் முட்டை, ஒரு டம்ளர் பால் அவ்வளவு தான்.அதுவும் எதோ ஆரோக்கியத்திற்காக அல்ல...செய்வதற்கு இத்தனை நாள் அதுவே எளிமையாக இருந்தது,அத்தோடு அவனுக்கு பணிகளை சோர்வில்லாமல் செய்ய அந்த உணவும் அவசியம் என்பதால்.

    இத்தனை நாள் பழக்கதிற்கேற்ப, லக்ஷ்மி அம்மாவும் அதையே எடுத்து வைத்தாள்.சாப்பிட்டுவிட்டு போகும்போது அவளிடம் மட்டும் விஷயம் சொல்லிவிட்டு போனான்.ராமுவை அலுவலகத்தில் இறக்கிவிட்டு தான் மட்டும் மருத்துவமனை வந்தடைந்தான்.

    அவன் நேரத்தில் வந்தாலும்,மருத்துவர் சரியாக அவரின் வேலை நேரத்திற்கு தான் வந்தார்.வந்ததும் இதுவரை அவன் காத்திருந்த நேரத்தை ஈடு செய்யும் விதமாய் உடனே அழைத்தார்.

    "சொல்லுங்கள் டாக்டர், என்ன விஷயமாய் என்னை மட்டும் பார்க்க வேண்டும் என்றீர்கள்? வானதி தொடர்பாய் ஏதேனும் தெரிய வேண்டுமா?"

    "ஆமாம், மிஸ்டர் விமலன்,உங்கள் மனைவிக்கு எதனால் இந்த நிலை? எப்படி ஏற்ப்பட்டது என்பது தொடர்பாய் எனக்கு சில தகவல்கள் வேண்டும். நீங்கள் சொல்லிக் கொண்டே வந்தால் நான் குறிப்பெடுத்துக் கொள்வேன்."

    அவனும் சொல்ல தொடங்கினான்... இடையிலேயே அவர் அவனை நிறுத்தினார்.

    "விமலன், வானதிக்கு ஒரு விபத்தில் ஏற்ப்பட்ட மனநிலை பாதிப்பு என்பது ஏற்கனவே என்னிடம் தெரிவிக்கப்பட்ட தகவல் தான். நான் கேட்பது அதுவல்ல..அதற்கு முன்னும் பின்னுமாய் அதனோடு தொடர்புடைய வேறு தகவல்கள். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்... இது உங்களின் தனிப்பட்ட விஷயமாக கூட இருக்கலாம். ஆனால் மேற்கொண்டு நான் சிகிச்சைத் தொடங்க அதன் தகவல்கள் எனக்கு தேவை. தயங்காமல் சொல்லுங்கள், என்னை உங்கள் நண்பனாய் நினைத்து.. "

    விமலன் ஆரம்பிக்கும் முன் கொஞ்சம் தயங்கத்தான் செய்தான். ஆனால் அவனே எதிர்ப்பார்க்கவில்லை... அத்தனை விவரங்களும் சொன்னான்.


    "விமலன், உங்களை இத்தனை நாட்கள் இந்த பாரம் அழுத்தியதிலிருந்து உங்களுக்கு இன்று விடுதலை. யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிரீர்கள் என்று தெரிகிறது. இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். உங்கள் புதிய நண்பனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.ஆனால் வெளியில் சொல்ல வேண்டாம். ஒரு மனநல மருத்துவர் உங்களுக்கு நண்பர் என்றால், கேட்பவர்கள் உங்களை தவறாக எண்ணுவார்கள்." என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

    விமலனும் புன்னகை புரிந்தான்...."மிக்க நன்றி டாக்டர்.."

    "உங்களை நினைக்கும் போது நெஞ்சில் ஒரு நெகிழ்வு தோன்றுகிறது விமல். எப்படி உங்களால் இன்னும் உங்கள் மனைவியை நேசிக்க முடிகிறது? எத்தனை உயர்ந்த உள்ளம் கொண்டவனும் மன்னிக்கவே முடியாத தவறு... ஆனால் நீங்கள்? இதுவரை உங்கள் மனைவிக்காக சிகிச்சை செய்தேன். இனி உங்களுக்காகவே உங்கள் மனைவியை நிச்சயமாக குணப்படுத்துவேன்."

    "ம்ம்...டாக்டர், அவள் குணமடைந்தால் தான் பல கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கும்."

    "உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் தலையிடுவதாக எண்ண வேண்டாம் விமல், நான்..."

    "அதில் எந்த தவறும் இல்லை, தயக்கமும் வேண்டாம்... நீங்கள் நண்பன் என்ற முறையில் என்னிடம் எதுவும் கேட்கும் உரிமை உங்களுக்கு உண்டு."

    "ம்ம்.. விமல், நன்றாக யோசித்து சொல்லுங்கள். இப்போதுக் கூட உங்களுக்கு எந்த தடையும் இல்லை... இனி உங்கள் மனைவியே நினைத்தாலும் தடுக்க முடியாது... அப்படி இருக்கையில் உங்களையே நினைத்துக் கொண்டு காத்திருக்கும் வான்முகிலை நீங்கள் ஏன் மறுமணம் செய்துக் கொள்ள கூடாது?"

    விமலன் அதிர்ந்துப் போய் பார்த்தான்..."டாக்டர், நீங்கள்.."

    "இதில் தவறென்ன விமல்? உங்கள் பேச்சில் கவனித்தேன். வான்முகிலை பற்றி பேசும் போதெல்லாம் உங்கள் கண்களில் தோன்றிய வெளிச்சமே போதுமே.. இன்றும் நீங்கள் அவர்களை"

    "டாக்டர் ப்ளீஸ்.. தவறாக எண்ண வேண்டாம்.இதைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டாம். வரும் நாட்களில் சொல்கிறேன். இப்போது வானதிக்கு எந்த மாதிரி சிகிச்சைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்."

    தன் மனதைத் தானே சோதித்து உண்மை அறிய விமலனிடம் தயக்கம் இருப்பதை அவரும் உணர்ந்தார். எனவே அந்த பேச்சை விடுத்து அவன் கேள்விக்கு உரிய பதில் சொன்னார்.

    பின்வரும் நாட்களில் அவர் எத்தனையோ முறை அவனை சந்தித்து பேசினார்... அவன் வீட்டிற்கே வந்தார்... அந்த ஒவ்வொரு நொடியும் ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாய் இருந்தார்... அது.. " எப்படியாவது வான்முகிலை அவனுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று."

    மாலையில் வீட்டிற்கு வந்தவன் நேராக தன் அறைக்கு சென்றான்...அங்கே முகில் வானதியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்... இவனைக் கண்டதும் எழுந்தாள்.

    இருவருக்குமே மௌனம் மட்டுமே மொழியாய் இருந்தது.முகில் கேட்டாள்.."ஏன் விமல்? ஏன் என்னிடம் எதையும் கூறாமல் மறைத்தீர்கள்? மகிழ்ச்சியில் தான் நான் ஞாபகம் வரவில்லை, உங்கள் துன்பத்திலுமா? அப்போதேனும் என்னைத் தொடர்புக் கொண்டிருக்கலாமே? வேறு ஒருவர் மூலமாக தான் எனக்கு எல்லா செய்திகளும் காதில் எட்டியது.அத்தனை தூரம் அன்னியமாய் நினைத்து ஒதுக்க நான் எந்த தவறும் செய்யவில்லையே?"

    "இல்லை முகில்,உன்னிடம் எல்லாவற்றையும் கூறி மறுபடியும் உன் மனதில் நம்பிக்கையை விதைக்க எனக்கு விருப்பமில்லை. நீயாவது வேறு ஒரு நல்ல வாழ்க்கையை..."

    விரக்தியாய் சிரித்தாள் அவள்..."வேறு வாழ்க்கை என்பதே கிடையாது என்று தான் இத்தனை வருடங்கள் சும்மா இருந்தேன்.. ஆனால் இன்று ஒரு முடிவெடுத்து விட்டேன்."

    புரியாமல் பார்த்தான்..."என்ன?"

    "இனி என் வாழ்வு இந்த வீட்டில் தான்.. அதுவும் உங்களோடு தான்."

    அதிர்ந்தான்..."முகில்....."

    "ஆமாம் விமல், இதோ இவளுக்காக அன்று நான் செய்த முட்டாள்தனம் போதும், உங்களை அதனால் எத்தனை துன்பப்பட வைத்துவிட்டேன் என்று நினைக்கையில் நான் செய்த பாவத்தின் அளவு புரிகிறது எனக்கு.இனியும் இது தொடர கூடாது.இவள் சிகிச்சை முடிந்த அடுத்த கணமே உங்கள் மனைவியாக நான் இருப்பேன். ஒருவேளை அது முடியாவிட்டால்,இவளை கவனித்துக் கொண்டு உங்களுக்கும்
    மனைவியாய் இங்கேயே இருக்க போகிறேன். இது என் இறுதி முடிவு." சொல்லிவிட்டு அவனின் பதில் தேவையற்றது என்பது போல வெளியேறிவிட்டாள்.

    விமலன் செய்வதறியாது திகைத்தான்.

    படுக்கையில் உறங்கும் முன் சிறிது நேரம் வானதி அவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு அன்றைய கதை முழுவதும் ஒப்பிப்பது வழக்கம்.என்றேனும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தால், சொல்வாள்..."விமல்,நீ எனக்கு கிடைக்க நான் என்ன தவம் செய்தேன் என்றே தெரியவில்லை,ஆனால் இப்போதெல்லாம் நான் தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்வது என்ன தெரியுமா?
    தெய்வமே,நான் செய்த எந்த புண்ணியத்திற்காக இவனை எனக்கு
    கணவனாய்க் கொடுத்தாயோ தெரியவில்லை, ஆனால் நான் செய்த எந்த பாவத்திற்காகவும் இவனை என்னிடமிருந்து பிரித்து விடாதே என்பது தான்."

    அப்போதெல்லாம் விமலன் சிரித்துக் கொள்வான்..."ஹேய்... தெரியும்டி, இப்படியே ஏழேழு ஜென்மத்துக்கும் என்னை வைத்தே சமையல் தெரியாமல், வீட்டு வேலையும் எதுவும் தெரியாமல் ஒப்பேத்திவிடலாம் என்று பார்க்கிறாயா? நடக்காதுடி, அது மட்டும் நடக்காது. கூடியே சீக்கிரம் நீ இந்த வீட்டு பொறுப்பை எடுத்துக் கொள்ளாவிட்டால்,நான் வேறு ஒரு அழகியை தேடி பறந்து விடுவேன்...ஜாக்கிரதை."

    போலியாக மிரட்டுவான். அவளுக்கும் தெரியும் அது.. எனவே அவளும் தலையணையை எடுத்து அவன் முதுகில் இரண்டு போட்டுகொண்டே சொல்வாள்.."உன் கழுதை மூஞ்சிக்கு நான் கிடைத்ததே நீ எப்பவோ தெரியாமல் செய்த புண்ணியம் தாண்டா..."

    "
    எல்லாரும்தான் ஒரே பிரார்த்தனைக்காக
    இறைவனிடம்
    வேண்டுகிறார்கள்
    ஆனால்
    இறைவன் காண்பதோ,
    எத்தனை பேர் வேண்டினார்கள்
    என்ற கணக்கல்ல,
    வேண்டிய அத்தனை பேருக்குள்ளும்
    அதில் இருக்கும் உறுதியைத்தான்...."
     
    Last edited: Oct 1, 2010
    Loading...

  2. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya innum suspense starting kooda solla matendra.. :rant

    Mugil is still waiting for Vimal.. Vanathi enna thaan adavadiya eduvum pannirukaa naalum I think she loves Vimal... :hide:

    Kutti Kavithai was very good..
     
  4. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    enaku enamo vanadhi char pavama iruku (ipodhaiku) :hide:

    orey suspense-a kondu pora...very nice...keep it up :cheers
     
  5. Rajarani

    Rajarani New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi Priya,
    unga story superaahh poguthu. nalla suspense maintain pannureenga. vanathikku enna thaan nadathathunu irukku.

    Vaanmukillum vimalum lovers ahhh? appo eppadi vanathiya kalyanam pannunaan?

    many questions?
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பிரியா நேற்று தான் இந்த கதையை பார்த்தேன்.படித்தேன் .ரசித்தேன்.தொடரட்டும் மர்மகதை
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    mugil than nanathil ullathai vimal kitta sollitale...good...
    vimal nalla mudivai eduparaa..
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    kathaya solla porenu ninaichen... paatha onum solala...
    mugil kitta sonathu doctor ah num puriyala...:confused2:
    aana pala naala kadathita nu matum puriyuthu...:biglaugh

    Hmm nadathu nadathu... unaku ini suspense raani nu per vaika poren...
     
  9. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Dear Priya,

    Parava illayae, Suthi valaikama sattunu soltalae Mugil.

    Paaraatraen:cheers
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Intha sirippuku yenna artham surya.. thappa theriyuthe...:rotfl
     

Share This Page