1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-4!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Sep 28, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தினமும் மாலையில் விமலன் அலுவலகம் முடிந்து வர மணி ஏழு ஆகிவிடும். வாசலில் இவனுக்காக வானதி என்றும் காத்திருந்ததில்லை.ஆனால் புதிதாய் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் அலங்காரம் பண்ணிக் கொள்வாள்.அதுவே போதுமாய் இருக்கும் இவனுக்கு. எத்தனை மனைவியர் கணவன் களைப்பாய் இருப்பான் என்பதுக் கூட இல்லாமல் அவன் வந்த உடனே தங்கள் புலம்பலை ஆரம்பித்து விடுகின்றனர்.ஆனால் வானதி ஒருநாளும் அப்படி இல்லையே.

    இவன் வந்ததும் போய் முகம் கழுவி,கை கால் சுத்தம் செய்து விட்டு வர வேண்டும்.. இல்லாவிட்டால் நெருங்க மாட்டாள்.
    அப்படி வந்ததும் தான் ஒயிலாய் பின்பக்கம் இருந்து அணைத்துக் கொண்டு கொஞ்சி பேசுவாள்.... "விமல்..போய் உனக்கு தேவையானதைக் கலக்கி கொண்டு வா.. அப்படியே எனக்கும் ஒரு டம்ளர் ராகி மால்ட்... குடித்துக் கொண்டே பேசுவோம்."

    விளையாட்டாய் சொல்வான்.."ஆமாம், ஊரில் எல்லோர் வீட்டிலும் க
    ளைத்து போய் வரும் கணவனுக்கு மனைவி தான் காபி கலந்து கொடுத்து உபசரிப்பாள். ம்கும்.. இங்கே அப்படியே தலைக்கீழ்."

    அவளும் சொல்வாள்..."என்ன விமல்,இப்படி சொல்லி விட்டாய்? உன் நல்லதிற்காக தான் பார்க்கிறேன். உன் உயிருக்கு எந்த சேதமும் வர விடாமல் காப்பது என் கடமை... ஆனால் நீயே இப்படி சொல்லும் போது? சரி விடு, இன்று நானே சமைத்து என் கையால் உனக்கு பரிமாறுகிறேன்."

    "ஐயையோ.. இத்தனை நாள் உடம்பில் உயிர் ஒன்றாவது மிச்சம் இருந்தது... அதையும் பறித்து விடாதே தாயே.. பிழைத்துப் போகிறான் சிறுவன் என்று நான் சொன்னதை மறந்து மன்னித்து விடு."

    கேலியும் கிண்டலுமாய் அவளுக்கு விட்டு கொடுத்து விடுவான் எதிலும்... அவள் அவனுக்கு மனைவியாய் இருந்தாள் என்பதை விட குழந்தையாய் இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்...


    "என்ன யோசனை? அதுவும் சாப்பிடும் போது?" பரிமாறிக் கொண்டே வான்முகில் கேட்டாள்.

    மூவரும் ஒன்றாய் அமர்ந்து தான் சாப்பிட்டனர். ராமுவும் குடும்பத்தில் ஒருவன் என்று சொல்லி அவனையும் தனக்கு சமமாய் உட்கார வைத்து தான் உண்பான். அது தான் அவனின் பழக்கம்.

    "இல்லை முகில்... சும்மா தான் வானு ஞாபகம் வந்து விட்டது."

    இவளுக்கும் இப்போது சுருக்கென்று கோபம் வந்துவிட்டது. "சாப்பிடும் போது வேறு நினைவு வந்தால், சமையல் ருசிக்கவில்லை என்று பொருள்.மன்னிக்கவும், என் சமையலின் ருசி உங்களுக்கு பிடிக்காது தான்."

    ராமுவிற்கே கூட கொஞ்சம் வருத்தம் தான்... இத்தனை தாங்க தகுதியில்லாத ஒருத்திக்காக இவள் மனதையும் புண்படுத்துகிறாரே என்று.

    சிறிது இடைவெளி விட்டு விமலன் சொன்னான்." உண்மையில் என் அம்மா இறந்த பின்பு இந்த ஆறு வருடத்தில் இன்று தான் இவ்வளவு ருசியாக சாப்பிடுகிறேன் முகில்... உனக்கு தான் தெரியுமே, வானதிக்கு இத்தனை அற்புதமாய் சமைக்க தெரியாது என்று." பெருமூச்சு விட்டான்.

    அவன் சொன்ன கடைசி வரியில் அவள் மனமும் குளிர்ந்தது.கூடவே பரிதாபமும் வந்தது.

    'அவளைப் பற்றி தான் ஊருக்கே தெரியுமே. என்றைக்கு பெண்ணாய் நடந்துக் கொண்டாள். எந்நேரமும் தன் சுகம் தான் முக்கியம் அவளுக்கு.. 'ஆனால் கணவனிடமே மனைவியைப் பற்றி குறை சொல்ல கூடாமல் வான்முகில் அமைதியாயிருந்தாள்.

    சாப்பிட்டு முடித்ததும் அவளே தானாய் விஷயத்துக்கு வருவாள் என்று எதிர்ப்பார்த்தான்.ஆனால் அவளோ சாப்பிட்ட பாத்திரங்களைச் சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.அவள் அந்த வேலையை முடிக்கும் வரை அவனும் காத்திருந்தான்.


    ராமு வெளியில் உள்ள தனி அறையில் சென்று படுத்துக் கொண்டான்.


    பிறகு விமல் கேட்டான்... "அப்பறம் சொல் முகில், என்ன விஷயமாக இங்கு வந்தாய்?"

    "ஏன் விஷயம் இருந்தால் தான் வர வேண்டுமா?"

    "புரியவில்லை..?" உண்மையிலேயே அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.திடீரென்று வந்தவள், அதுவும் இரண்டு வருடமாக தொடர்பே இல்லாமல் இருந்தவள் இன்று வந்து இப்படி ஒரு கேள்வி கேட்பானேன்?

    அவளே நேரடியாய் அதற்கு பதிலும் சொன்னாள்.."இத்தனை வருடமாக நானாக உங்களை சந்திக்க முயன்றதில்லை.. இப்போதும் ஒருவர் சொல்லி, அவர் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தான் வந்தேன்.. வந்ததோடு முடியவில்லை. இனி நான் இங்கேயே தான் தங்க போகிறேன்."

    அதிர்ச்சியில் அவன் கொஞ்ச நேரம் எதுவுமே பேச முடியாமல் திகைத்தான். 'இவள் என்ன புரிந்து தான் பேசுகிறாளா?'

    "விளையாடாதே முகில், இது ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல..இங்கு நான் மட்டும் தான் இரு.. இங்கு போய்.. இல்லை முடியாது.. "

    "இதோ பாருங்கள், உங்களிடம் நான் முதலிலேயே சொல்லி விட்டேன்.. நானாக ஆசைப்பட்டு இங்கு வரவில்லை என்று.."

    அவன் பொறுமை இழந்தான்.. "அப்படி என் வீட்டில் தங்க உனக்கு உரிமைக் கொடுத்தது யார் என்று தான் சொல்லேன்."

    அவளும் சொன்னாள்...அவள் சொன்ன பதில் கேட்டு அவன் தான் எதுவும் சொல்ல முடியாமல் போனது.



    மறுநாள் காலையில் ஒரு மணி நேரம் முன்னதாகவே மருத்துவமனை சென்றான். பரிசோதனை முடிந்தது என்றனர்.தலைமை மருத்துவரை சந்திக்க சென்றான்.அவர் இவனை புதிதாய் வெளி மருத்துவமனையிலிருந்து வந்து பரிசோதித்த டாக்டரிடம் அழைத்து சென்றார்.


    அவர்.."மிஸ்டர்.விமலன்,இனியும் உங்கள் மனைவியை இங்கேயே வைத்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை.நீங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வது தான் நல்லது." என்றார்.


    "இல்லை டாக்டர்..அவளைப் பார்த்துக் கொள்ள வீட்டில் யாரும்..."


    "விமலன்,உங்களிடம் நான் சொல்ல வருவதே வேறு...உங்கள் மனைவிக்கான சிகிச்சை முறையை நான் மாற்றியுள்ளேன். மருத்துவமனை சூழல்,தனக்கு வேண்டியவர்கள் யாரும் இல்லாத தனிமை...இவை கூட அவர்கள் குணமாக தடையாய் அமைய வாய்ப்பிருக்கிறது.அவர்கள் தொடர்ந்து இங்கேயே இருப்பதால், எங்களுக்கு தொடர்ந்து மருத்துவமனை வருவாய் கிடைக்கும் ஆனால் உங்களுக்கு?யோசித்துப் பாருங்கள்.. பிறகு முடிவெடுங்கள்.வேண்டுமென்றால்,துணைக்கு ஒரு ஆள் வைத்து கொள்ளலாம்."


    விமலனும் யோசித்தான்..பிறகு ஒரு தெளிவுடன் சொன்னான்."சரி டாக்டர்,அப்படியே ஆகட்டும்.இன்று மாலையே அவளை நான் அழைத்து போகிறேன்."
     
    Last edited: Sep 28, 2010
    Loading...

  2. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    romba nalla kondu pora deva...kalakku :cheers ivlo super-a ezhudhina thigatta thigatta paraataama ena dha seiyardhu? :rotfl
     
  3. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    nalla kondu porenga story ya..
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya apo Mugil thaan paarthukka poraala?? paavam thaan ava..
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Priya,you are going too fast...enaku padika time kedaikala....so time irukumbodhu reply panren....ungalukku ramanichandran pidikuma....
     
    Last edited: Sep 29, 2010
  6. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Hey priya,

    Kadasila Mugila nurse aka poryatsk

    super a kondu pora ne:cheers
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    wow nice moves quite interesting.Super aha iruku deva continue..........:thumbsup
     
  8. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Aiyayo kadaisila mugila paathuka pora? paavam..ithukaagava kashtapatu vantha.. Super deva.
     
  9. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    differenta iruku devapriya.:thumbsup
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    very nice... but who s d reason for mugil's arrival???
     

Share This Page