1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-3!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Sep 27, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வாசலில் கார் வந்து நின்றதும், இராமநாதன் முன்னால் இறங்கி கதவைத் திறக்க வந்தார். அப்போது தான் அங்கு நின்றிருந்தவளை கவனித்தார். உடனேயே அவரின் முகம் மலர்ந்தது.

    "அம்மா..உங்களுக்கு நூறு ஆயுசு..இப்போது தான் உங்களைப் பற்றி சொல்லிக் கொண்டு வந்தேன்,அய்யாவிடம். நல்லாருக்கிங்களா?"

    "எனக்கென்ன.. எப்போதும் போல இருக்கிறேன் ராமு, நீங்கள் நலமா? எதற்கு என்னை பற்றிய பேச்சு வந்தது?"

    அதற்குள் காரை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு வந்த விமலன் அதற்கு பதில் சொன்னான். "அது ஒன்றுமில்லை முகில், இன்று டாக்டர் வானுவை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளலாமே என்றார். துணைக்கு உன்னை அழைப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்... அவ்வளவுதான்." மேல பேச வேண்டாம் என்பது போல ராமுவை ஒரு பார்வை பார்த்தான்.

    வான்முகிலின் முகம் சற்று வாடினது போல இருந்தது. ஆக இப்போதும் அவள் பொருட்டு தான் தன் நினைவு வந்திருக்கிறது என்ற உண்மை மனதைக் குத்தியது. ராமுவின் கண்கள் அதைக் குறிப்பெடுத்தது.அதை கண்டும் காணாதது போல விமலன் அவன் கையிலிருந்த சாவியை வாங்கி கதவைத் திறந்தான்.

    "உள்ளே வா முகில்...வீட்டில் எல்லோரும் சௌக்கியமா?"

    "ம்..சௌக்கியம் தான்"

    அந்த வீட்டுக்குள் இதுவரை அவள் வந்ததே இல்லை.இது தான் முதல் முறை.இப்போதும் அவளாக வரவில்லை.முக்கியமான ஒருவரின் பேச்சைத் தட்ட முடியாமல் தான் வந்தாள்.எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்வதே இல்லை என்று முடிவெடுத்து வருடங்கள் ஆகியும் இன்று இவனின் ஒரே சொல்லில் மனம் வாடுகிறதே... அவள் ஒன்றும் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் வர்க்கமல்ல. அவளுக்கும் நன்றாகவே தெரியும், தன் மனம் இப்போது இருக்கும் இடம் தன்னுடையது அல்ல என்று.ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் இத்தனை நாள் வேஷம் போட்டவளுக்கு இன்று ஏனோ அது முடியவில்லை.

    "சொல்லு முகில், என்ன சாப்பிடுகிறாய்? இனிதான் போய் செய்ய வேண்டும்.தோசை வார்க்கட்டுமா? அது ஒன்று தான் எளிதில் முடிந்து விடும் வேலை.நீ வேறு ரொம்ப களைப்பாய் தெரிகிறாய். சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு பிறகு பேசலாம்...சொல்"

    அவளுக்கு புரிந்தது தன்னை இருட்டிவிடும் முன் இங்கிருந்து வெளியே அனுப்ப பார்க்கிறான் என்று.இப்போது சாப்பிட்டு விட்டால் பிறகு பேசி முடித்தவுடன் கிளப்பி விடலாம்.சாப்பிட கூட சொல்லாமல் போனோமே என்ற கவலையும் மிச்சம்.ஒருபக்கம் அவளுக்கு கோபம் வந்தது. அப்படி என்ன செய்து விடுவாள்... தன்னைத் திருமணம் செய்து கொள்ள சொல்லி நச்சரிப்பாள் என்று நினைக்கிறானோ?

    "நன்றாக இருக்கிறது நீங்கள் பேசுவது...பெண் நான் இங்கு சும்மா உட்கார்ந்துக் கொண்டு உங்களை சமைக்க விடுவது சரியா? நீங்கள் இருங்கள்.. நான் போய் சமைத்துக் கொண்டு வருகிறேன்."

    சொன்னதோடல்லாமல் சமையலறை நோக்கி சென்றாள்.விமலனும் தோளைக் குலுக்கி விட்டு வழி விட்டான். அவள் சென்ற பிறகு உதவிக்காக ராமுவையும் போக சொன்னான். புது இடத்தில் பொருள்கள் தேட சிரமமாய் இருக்குமே என்று.

    ஓய்வாக சோபாவில் அமர்ந்து கண்மூடி அதில் சாய்ந்தான்.வான்முகில் சொன்னதை நினைத்து பார்த்தான்... ஒரு நாள் கூட வானதி இப்படி சொல்லியதே இல்லை.வெகு சாதாரணமாய் அவன் சமைக்க அவள் உட்கார்ந்து சாப்பிடுவாள். அப்போது அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இன்று தான் முதன்முதலாக நினைக்கிறான்.

    "விமல், இன்னும் எத்தனை நேரம் தான் என்னை காத்திருக்க வைப்பாய்? எனக்கு பசி உயிர் போகிறது... சமைத்தால் மட்டும் போதுமா? வந்து எடுத்து வை." முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவள் கோபமாய் அப்படி சொல்வதைக் கேட்பதற்காகவே அவனும் சில சமயம் வேண்டுமென்றே அவளை சீண்டுவான்.

    வானதிக்கு எதையும் தனியாக அவளே செய்து பழக்கமில்லை. எதற்கும் இவனின் துணை வேண்டும்.
    "விமல், குளியலறையில் ஷவரில் சரியாக தண்ணீர் வரவில்லை. தலைக்கு குளிக்கையில் கஷ்டமாக இருக்கிறது.கொஞ்சம் அதை சரி செய்து விடு.."

    "விமல், இன்று...போன மாதம் எனக்கொரு ஆரஞ்சு சுடிதார் எடுத்துக் கொடுத்தாயே! அதை தான் அணிய போகிறேன். கொஞ்சம் இஸ்திரி போட்டு கொடு.."

    "விமல், நீ அலுவலகம் சென்ற பின் எனக்கு வெளியில் போக வேண்டுமென்றால், டாக்சி பிடித்து தான் போக வேண்டும். இந்த மாதம் எனக்கென்று தனி உபயோகத்திற்கு ஒரு கார் வாங்கி கொடு..."

    "விமல், நேற்று அந்த women world இல் புதிதாக ஒரு சுடி டிசைன் பார்த்தேன்... பணம் தயாராக எடுத்து போகவில்லை. இன்று நீயும் வா.. எடுத்து வந்து விடலாம்."

    இப்படி எல்லாமே கட்டளை தான். முடியுமா முடியாதா என்ற கேள்வியை இதுவரை அவளும் இவனிடம் கேட்டதில்லை... முடியாது என்று இவனும் ஒருமுறை கூட அவளிடம் சொல்லியதே இல்லை. ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறையாவது இவன் பெயரை அவள் சொல்லி விடுவாள் என்றால், இவன் அதற்கு மேலே.. இருநூறு முறையாவது அவளை நினைத்து விடுவான்.

    இவனின் துணை இல்லாமல் அவள் செய்த காரியம் ஒன்றே ஒன்று தான். அது அவள் உயிரையே காவு வாங்கும் அளவு சென்றும் விட்டது.

    "ஐயா.. ஐயா..." தட்டி எழுப்பியதில் நினைவோடு உறக்கமும் கலைந்தது.

    "என்னங்க தம்பி, தூங்கிட்டிங்களா?"

    "ஆ..ஆமாம் ராமு..அப்படியே அசதியில் தூங்கி விட்டேன்...சமையல் முடிந்ததா?"

    "சமையல் முடிந்தது, சாப்பிட உங்களை எழுப்பி வர சொன்னார்கள் சின்னம்மா...அது தான் வந்தேன்... வாங்கய்யா."

    "ம்ம்..இதோ வருகிறேன்.. உடை மாற்றி விட்டு முகம் அலம்பிவிட்டு வருகிறேன்." தன் அறை நோக்கி சென்றான்.

    செல்லும் முன் திரும்பி, ஒரு நொடி தயக்கத்திற்கு பின் ராமுவை அழைத்தான்.. " ராமு..."

    "என்ன தம்பி?"

    "இன்றும் இந்த வீட்டில் சின்னம்மா என்றால் வானதி தான்... இனி திருத்திக் கொள்."

    அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு சமையலறைக்கு அந்த பக்கம் நின்றுக் கொண்டிருந்த வான்முகிலை சங்கடமாய் பார்த்தார் இராமநாதன்.
     
    Loading...

  2. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    deva continue pannunga..... very interesting!!
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hey ipadi oru wife ah... paavam da vimal...:|
     
  4. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    athu eppadi unga kathaila mattum ivolo nallavangala irukaanga!!!!
     
  5. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    kalakureenga deva...you are really a gifted writer...ipovey orey stretch-a full novel padikanum nu aasaiya iruku :)
     
  6. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    :wowIpdi oru husband kedacha jolly than life.. Unga characters padikurapa apdiye namma valanum pol irku
     
  7. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    irunga.. nalaikku enga veettukkaararyum indha kadhaya padikka vachu, vela vaangurenna illayaannu paarunga... :)

    kadhai arumayaa pogudhu... evening padichen.. ippodhan comment adikka time kedachudhu... :)
     
  8. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    ivlo nalla hubby varathuku kuduthu vechurukanum ava.. but kuruku vali la kedachatho?:spin
     
  9. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Priya,

    Enga veetukararai idhai padikka sonna indha madri kadhai eillam padikadha nu sonnalum solliduvar:rotfl
    Super a kondu pora priya
    You can increase the length of an episode, considering the readers like us:cheers
     
    Last edited: Sep 28, 2010
  10. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    super flow deva..:thumbsup
     

Share This Page