1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-2!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Sep 26, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சூரியன் ஜன்னலை தாண்டி வந்து படுக்கையறையின் இருளை மறைத்துக் கொண்டிருந்தான். வானதி படுக்கையில் இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.

    விமலன் சமையலறையில் வெகு மும்முரமாக ஓவல் கலந்துக் கொண்டிருந்தான். வானதிக்கு காலை எழுந்தவுடன் ஓவல் வேண்டும். டீ, காபி எல்லாம் பித்தம் என்பாள். சரி வெறும் பாலாவது காய்ச்சி குடி என்றாலோ அதுவும் மூளைக்கு மந்தம் என்று சொல்லி ஓவல் தான் கேட்பாள். அதுவும் அவளே போய் கலந்துக் கொள்ளும் பழக்கம் இல்லை.இவன் தான் கொண்டு வந்து கொடுத்து எழுப்ப வேண்டும்.அவனுக்கு காலை எழுந்து முகம் கழுவி விட்டு வந்ததும் காபி குடித்தால் தான் அன்றைய வேலையே தொடங்கும்.ஆனால் காபி, ஓவல் இரண்டும் ஆளுக்கு ஒவ்வொன்று கலக்க சோம்பலாய் இருந்தது. எனவே அவனும் இப்போது ஓவலுக்கு மாறி விட்டான்.

    ஓவலுடன் வந்து அவளை தட்டி எழுப்பினான். தட்டி என்பது கூட சரியில்லை..மெதுவாக தொட்டு எழுப்பினான். அவள் எழுந்திரிக்க அதுவே போதும் என்பது போல உடனே எழுந்துக் கொண்டாள்.
    "குட் மார்னிங் விமல், குளிச்சியா?" கேட்டவாறே கையில் ஓவலை வாங்கினாள்.

    அவளுக்கு எப்போதும் இப்படித் தான் ஒரு நல்ல பழக்கம்,சிறு வயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறாள். அவள் எப்போதும் பல் துலக்காமலே குடிப்பாள்.அதை பற்றி யாரும் கேட்க கூடாது, ஆனால் கலந்து எடுத்து வருபவர்கள் யாராய் இருந்தாலும் குளித்து சுத்தமாய் தான் வர வேண்டும். இல்லாவிட்டால் அவள் அதை கேட்பாள்.

    "குளிக்காமல் வருவேனாடா செல்லம், உனக்கு தான் உன்னை விட மற்றவர்கள் சுத்தமாக இருப்பதில் மிகுந்த அக்கறையாயிற்றே..."

    "ஹேய்... என்ன நக்கலா?"

    சிரித்துக் கொண்டே அவள் தலைக் கோதி விட்டான். "சரி.. ஆறிவிடும் முன் குடித்து விடு."

    அவள் குடிக்கும் நேரத்தில் இவன் சென்று ஹீட்டர் போட்டு விட்டு வந்தான்.குடித்ததும் அவள் சென்று குளித்து விட்டு வந்தாள்.நேராக சமையலறையில் தான் நுழைந்தாள்.அவனும் அவளும் சேர்ந்து காலை உணவு சமைப்பது தான் வழக்கம்.

    காரணம் அவளுக்கு சமைக்க தெரியாது.அவன் தான் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தான். முதலில் இருவரை வேலைக்கு வைத்தான் சமையலுக்கென்றே... ஆனால் வானதிக்கு ஏனோ பிடிக்கவில்லை. தானே சமைக்க கற்று கொள்வதாய் சொல்லி விட்டாள்.காலை,இரவு உணவின் போது அவனும் கூட இருப்பான்.மதியத்துக்கு சாதம் வைத்து விட்டு போவான். இவள் ஏதேனும் பொடியினை வைத்துக் கொண்டு உண்பாள்.இல்லாவிட்டால் ஆசையாக ஏதேனும் சாப்பிட தோன்றுவதை அவனுக்கு போனில் சொல்லி விடுவாள்.அவன் வாங்கி இராமநாதன் மூலம் கொடுத்தனுப்புவான்.

    ராமுவை வானதிக்கு சுத்தமாக பிடிக்காது.ஏதோ இவள் வந்து தான் அவன் குடிக்கெட்டது போல பார்ப்பான்.அவளும் இரண்டொரு தடவை விமலனிடம் அது தொடர்பாக பேசி பார்த்தாள்.

    "விமல், நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். வேலைக்காரனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.ஆனால் நீங்கள்?"
    "வானு..ப்ளீஸ், அவரைப் பற்றி மட்டும் வேண்டாம்...பேசாதே."

    "என்ன விமல், அப்போது நான் சொல்வதில் உனக்கு அக்கறை இல்லையா? அவன் எதோ நான் வந்துதான் உன்னை உன் குடும்பத்தை விட்டு பிரித்தது போலவே பார்க்கிறானே?"

    விமலனுக்கு இராமநாதனின் பார்வைக்கும் செயலுக்கும் அர்த்தம் புரியாமல் இல்லை. ஆனால் அதை வானதிக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. எனவே அமைதியாகி விடுவான்.
    "ஆமாம், ஏதாவது கேட்டால் உடனே அமைதியாகி விடுவாயே?" கோபமாய் பார்ப்பாள்.
    அத்தோடு அது முடிந்து விடும்.

    இப்போது விமலன் இதையெல்லாம் நினைத்துக் கொண்டே மருத்துவ மனைக்குள் நுழைந்தான்.இன்று கூடவே இராமநாதனையும் அழைத்து வந்திருந்தான். முதலாளி தனியாகவே இருக்கிறாரே என்று ராமு சில சமயம் கூட வந்து இரவில் தங்குவது வழக்கம்.அந்த நாட்களில் எல்லாம் மருத்துவமனைக்கு அவனும் வருவான். அப்படியே இருவரும் வீட்டிற்கு செல்வார்கள்.

    அறைக்குள் விமலன் மட்டும் தான் போவான். இன்று வரை அவளைப் பார்க்க ராமுவிற்கு விருப்பமில்லை,சென்றதுமில்லை.சகோதரியின் வாழ்க்கையையே அழித்து வாழ வந்தவள் அவ்வளவு நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா என்ன... அவளைப் பார்த்தாலே இவனுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்து விடும். எத்தனை சமார்த்தியமாக நடித்து ஏமாற்றினாள் விமலனை...

    இன்றும் அப்படியே. விமலன் மட்டும் தான் உள்ளே சென்றான்.இன்று அவள் விழித்திருந்தாள்.கொஞ்ச நேரம் அருகில் உட்கார்ந்து அவள் முகம் பார்த்தான். நிர்ச்சலனமாய் இருந்தது.இதே போல தானே அன்றும் இவள் முகம் பார்த்து காதல் கொண்டான்.ஆனால் பிறகு தான் எல்லாமே பொய்யாகி போனது. அன்றிலிருந்து தான் பிறரின் கண் சொல்லும் மொழி கூட பொய்மொழி ஆகி போகும் என்ற உண்மை அவனுக்கு புரிந்தது.

    இன்று சென்று டாக்டரை சந்தித்தான்.

    "மிஸ்டர் விமலன், உங்கள் மனைவி குணமாக தொண்ணூறு சதவிகிதம் வாய்ப்பில்லை. அந்த மீதி பத்தும் ஆண்டவன் நினைத்தால் தான் முடியும்.இது உங்களுக்கு ஒன்றும் புதிய செய்தி அல்ல.. ஆனால் ஏன் இன்னும் அவர்களை இங்கேயே தங்க வைத்து காசை வீணாக்க வேண்டும்? உங்கள் வீட்டிலேயே ஒரு ஆள் வைத்து பார்த்துக்கொள்ளலாமே?"

    "டாக்டர், காசைப் பற்றி எனக்கு கவலையில்லை.ஆனால் அவள் இப்போது வீட்டில் இருக்க வசதிப்படாது.அது தான் இங்கேயே உங்கள் கண்காணிப்பில் பார்த்துக் கொள்ள சொல்கிறேன்."

    "சரி விமலன், நாளை எப்போதும் போல வெளியிலிருந்து மருத்துவர் வந்து பரிசோதித்து பார்க்கும் நாள்.ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விடுங்கள்."

    "சரி டாக்டர், நாளை பார்க்கலாம்."

    வீட்டிற்கு வரும் வழியில் ராமு பேச்சை தொடங்கினான்.... "ஐயா, நம்ம வானு அம்மாவை வீட்டுக்கு வர சொல்லலாமுங்களா... ஒத்தாசைக்கு?"

    ஆச்சர்யமாய் இருந்தது விமலனுக்கு...என்றுமே தன மனைவி மேல் அக்கறை இல்லாதவருக்கு இன்று என்ன புது பாசம்?

    "யாரு... நம்ம வான்முகில் தானே? அண்ணே, நானும் அதை யோசித்தேன், ஆனால் அவள் நர்ஸ் வேலைக்கெல்லாம் படிக்கவில்லையே?"

    "அட போங்க தம்பி, நான் ஒண்ணும் உங்கள் சம்சாரத்துக்கு பணிவிடை செய்ய அழைத்து வர சொல்லவில்லை.. உங்களுக்கு..."

    "போதும் அண்ணே, விட்டு விடுங்கள்.திரும்பவும் அதை தொடங்க வேண்டாம்."
     
    Last edited: Sep 26, 2010
    Loading...

  2. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    you are doing it again deva - making us eagerly wait for the next episode.
    and wow what a great husband. oval in bed and teaching cooking also.
     
  3. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    vaanu nu rendu pera? Kathai ippave soodu piduchachu.. super
     
  4. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    2 paeruku orae nick name vachi confuse panrya priya. Idhula edhavadhu Knot iruko???:hide:
     
  5. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Name confusion la maathi marriage aayiducha..:spin Nice..
     
  6. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Twist start paniyaacha..:spin:spinnadakkatum
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ootha palloda kudika pora oval suthama varanuma...
    super... :biglaugh :biglaugh
    who is that vaanmugil?
     
  8. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    ippadi oru husband kidaika unmaiyile kuduthu dhaan vachurukanum...nice da :)
     
  9. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Vanathi edho drama panni Vaanmugil and Vimalan a pirichitaa?? Super a iruke suspense.. neat narration Priya.. :thumbsup
     
  10. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    romba alaga solreenga kadhai... unga thamizhum pisagu illaaama nalla irukku.. :)
     

Share This Page