1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-1!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Sep 25, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    விமலன் அவசர அவசரமாக அலுவலக கோப்பைகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான். பார்வையாளர்கள் நேரம் மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை தான். மணி இப்போதே 4:30. இப்போது புறப்பட்டாலும் சென்று சேருவதற்கே மணி 5:30 ஆகிவிடும்.

    கொஞ்சம் நேரமாவது இருந்து விட்டு வந்தால் தான் அவனால் அன்று இரவு நன்றாக உறங்க முடியும். இல்லாவிட்டால் இரவு முழுவதும் அதே சிந்தனையாக தான் இருப்பான்.

    மீதியிருந்த கோப்பைகளை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று அதை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு அறையை பூட்டினான். வெளியே ப்யூன் ராமநாதன் உட்கார்ந்திருந்தவர் இவன் வருவதை பார்த்து எழுந்து நின்றார்.

    "அண்ணே.. வேலை எல்லாம் ஓரளவு முடித்துவிட்டேன். இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.நாளை கொஞ்சம் நேரத்தில் வந்து விடுங்கள்.நாளை வேலை இன்றே நிலுவையில் உள்ளது.சீக்கிரம் வந்தால், முடிப்பது எளிதாய் இருக்கும்."

    "சரி தம்பி"

    "அப்போது சென்று வருகிறேன்." சொல்லிவிட்டு பதிலுக்காக கூட நில்லாமல் ஓட்டமாய் ஓடி சென்று காரில் ஏறும் சின்ன முதலாளியைப் பார்க்க ராமுவிற்கு கண்ணோரங்களில் கண்ணீர் வந்தது.

    அவனுடைய சின்ன வயதிலிருந்தே அவர் அங்கு தான் வேலை செய்கிறார். பெரிய முதலாளிக்கு விசுவாசமாய் இருந்த பயன், இன்றும் அவர் மகன் தன்னை குடும்பத்தில் ஒருவனாகவே நடத்துகிறான்.தன்னை அண்ணா என்று உரிமையோடு அழைப்பதற்காகவே அவனுக்காய் என்ன வேண்டுமானாலும் செய்ய தோன்றும். வசதியிலும் எளிமையாகவே இருப்பான். ஆனால் அவனுக்கென்று வந்தாளே ஒரு ராட்சஷி... என்னதான் தன் மதிப்பிற்குரிய முதலாளி மகனின் மனைவி என்றாலும், அவள் மேல் மதிப்பு வர மறுத்தது. அவளால் தானே இன்று இவன் நாயாய் அலைந்துக் கொண்டிருக்கிறான். எப்படி இருந்தவன்!!!

    ஆனால் காரில் சென்றுக் கொண்டிருந்த விமலனுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை. இரண்டு நாட்களாக அலுவலக வேலை முடியவே மணி ஏழு ஆகிவிடும். ஊழியர்களே அவனுக்காக, அவன் அலுவலக நலனுக்காக நேரம் முடிந்தும் வேலை செய்யும் போது தான் மட்டும் நேரத்திற்கு செல்ல அவனுக்கு மனம் இல்லை.
    இன்று தான் கொஞ்சம் இளைப்பாறல் கிடைத்தது... அது தான் கிளம்பிவிட்டான்.

    மருத்துவ வளாகத்தில் வந்து கார் நின்றது. காரை நிறுத்தும் வரை இருந்த வேகம் குறையாது உள்ளே நடந்தான். பார்வையாளர் அட்டையைக் காண்பித்து மருத்துவமனை உள்ளே சென்றான். அட்டை இல்லாமலே கூட அவன் சென்றாலும் யாரும் கேட்க போவதில்லை. அவன் தான் இரண்டு வருடங்களாக வந்துக் கொண்டிருக்கிறானே....

    நேரம் முடிவதற்குள் முதலில் சென்று அவளைப் பார்த்து விட வேண்டும்...பிறகு வந்துக் கூட டாக்டரை பார்த்து பேசி செல்லலாம். இரண்டு நாட்களுக்கு பின் செல்வதால் ஆவலாய் உள்ளே போனான். தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
    குழந்தையாய் தூங்கும் அவள் முகம் பார்த்து, இத்தனை நேரம் அனுபவித்த களைப்பு நீங்கி புத்துணர்வு பெறுவது போல மாறியது மனம்.இதற்காக தானே அவன் எத்துனை தூரம் இருந்தாலும் சிரமம் பாராமல் தினமும் வந்து இவளைப் பார்க்கிறான். அவள் பேசா விட்டாலும் பரவாயில்லை.. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் அவனுக்கு.

    அவன் கிளம்பும் வரை அவள் விழிக்கவே இல்லை. அவனும் அவளை எழுப்பாது லேசாய் அவள் தலையை நீவி கன்னத்தில் முத்தமொன்று கொடுத்து விட்டு வெளியில் வந்தான்.

    மீனாட்சி நின்றிருந்தாள். "வாங்க தம்பி, என்ன இரண்டு நாளாக ஆளைக் காணவில்லை இந்த பக்கம்?"
    "கொஞ்சம் வேலை இருந்தது மீனாக்கா.. அவளுக்கு இப்போது பரவாயில்லையா?"
    அவளின் பதில் என்னவென்று இவனுக்கு நன்றாகவே தெரியும்.ஆனாலும் நப்பாசை தான். நல்ல பதில் வந்து விடாதா என்று.
    அவளுக்கும் இவனின் மனம் புரிந்தது. சோகமாய் புன்னகைத்தாள்.அவனும் அதே போல ஒரு புன்னகை செய்து விடைப்பெற்றான். ஏனோ இன்று டாக்டரை சென்று பார்க்க பிடிக்கவில்லை. அவரும் இப்படி தான் பரிதாபமாய்ப் பார்க்க போகிறார். புதிதாய் எதுவும் இருக்க போவதில்லை. எனவே கிளம்பி காரில் ஏறி புறப்பட்டான்.

    வீடு வந்த பொழுது மணி ஏழே கால்.வெறுமையாய் இருந்தது என்றும் போல மற்றவருக்கு எல்லாம் தன்மேல் ஒரு பரிதாபம் என்பதை அவனும் அறிவான். அந்த அளவுக்கு இழுத்துக் கொண்டவனும் அவன் தான். மகிழ்ச்சியாக இருக்கிறான் என்றும் சொல்ல முடியாது. ஆனால் அதற்காக இன்றுவரை அவன் வருந்தவே இல்லை.

    அவன் மேல் அன்பை தவமாய் செலுத்திய ஒருவள், பிறகு அவனின் காதல் முழுவதையும் சொந்தம் கொண்டாட ஒருவள் என்று இருந்த வாழ்க்கை... இன்று மட்டும் அவன் துன்பத்தில் பங்கெடுக்க யாரையும் கொடுக்கவில்லை.

    இந்த வீட்டில் ஒரு காலத்தில் அவன் வாழ்ந்த வாழ்க்கை கண்முன் தெரிந்தது இப்போது. தன்னை சின்ன பையனாய் நினைத்து வளர்த்தவர்கள் முன் தான் பெரியவன் என்று காட்டிக் கொண்ட முதல் நிமிடம்... அன்றிலிருந்து தான் அவனின்வாழ்க்கை திசை மாறி பறந்தது.ஆம்.. பறந்தது என்று தான் சொல்ல வேண்டும், நீண்ட இரு ஆண்டுகள் போனதே தெரியவில்லை.அந்த அளவு வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினான். அது தன் துன்பத்தை மறைத்துக் கொள்ள மட்டுமல்ல, அவன் செய்ய வேண்டிய பிராயச்சித்தமும் கூட. இப்போது தன்னிடம் ஒரு முதிர்ச்சி தெரிவதை அவனே உணர்ந்தான்.

    நினைவுகள் ஒருபுறம் சுழன்றாலும், சாப்பிட்டு விட்டு வந்து படுக்கையில் விழுந்தான். நாளைய பொழுது செய்ய வேண்டிய வேலைகளை மனதுக்குள்ளேயே திட்டம் போட்டு கொண்டான்.

    எப்போதும் போல மாலையில் பார்க்க செல்ல வேண்டும் அவளை, மனநல மருத்துவமனையில். அவள்.... அந்த ராட்சஷி.
     
    Last edited: Sep 26, 2010
    2 people like this.
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேவா
    முள் மேல் ரோஜா....தலைப்பே ஒரு தவிப்பைக் கொடுக்கிறதே.
    உன் பதியனில் பூத்திருக்கும் இரண்டாவது மலர் .
    கதையின் ஆரம்பம்
    ஆரவாரம் இல்லாமல் அமைதியாய் அரங்கேற்றம்.
    காத்திருக்கிறேன்
    கை படாமல் உன் கை வண்ணத்தில்
    நீ வெளிக் கொணரப் போகும்
    உன் கதை வனத்தின் அந்த ரோஜா மலரை.....
    வாழ்த்துக்கள். [​IMG]
     
    Last edited: Sep 25, 2010
  3. shrikala

    shrikala Senior IL'ite

    Messages:
    281
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi deva, good start and nice title... i am happy you started another story.
    vaazhthukkal.
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hey Priya.. Nalla start pa.. :thumbsup enga un kutti kavithai??
     
  5. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    romba nalla aarambam... adutha adhiyaayathukkaaga kaathukkondirukkum..
     
  6. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Nalla aarambam deva.. All the very best.. First storykum ithukume difference nalla theriyuthu... Romba matured writing:thumbsup
     
  7. priyaraman06

    priyaraman06 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    ithum paduchen.Good start :thumbsup
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Saroj,

    Thank you so much
     
    Last edited: Sep 26, 2010
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
  10. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Deva,

    Un title romba nalla irukku. Very good start!!
     

Share This Page