1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசம் புதிது

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Apr 21, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    எனக்கு கதை எழுதணும்னு ரொம்ப ஆசை ஆனா சின்ன கதை எல்லாம் வராது அதனால பாகம் பாகமா பிருச்சு தினமும் எழுதலாம்னு நினைகிறேன்!!!!
    இந்த கதையோட தலைப்பு "நேசம் புதிது"( கொஞ்சம் ரமணி சந்திரன் சாயல்ல இருக்கும் ஏன்னா நான் அவங்களோட தீவிர ரசிகை இருந்தாலும் சத்தியமா என் கதை தான்)

    குழந்தை தன் விழிகளை பாதி மூடியும் மூடாமலும் உறங்கும் அந்த அழகிய காட்சியை போல் அந்த காலை பொழுதும் விடிந்தும் விடியாமலும் அழகாய் புலர்ந்தது!!
    " ரஞ்சினி டேபிள் மேல காபி வெச்சுருக்கேன் பாரும்மா ஆறி போகறதுக்கு முன்னாடி எடுத்து குடி டா"
    எப்பவும் கேட்கும் அம்மாவின் குரல்!
    எழுந்து தன் உள்ளங்கையை தேய்த்து வலக்கையை பார்த்து நிமிர்ந்தவளுக்கு ஏனோ ஓர் வெறுமை படர்வதாய்!
    எழுந்து சென்று திரை சீலையை விலக்கி வெளியே பார்வையை செலுத்தினாள்!! இன்னும் விடியாத காரணத்தால் போக்குவரத்து குறைவாய் தெரிந்தது!!

    இதோ தன் சொந்த மண்ணான இந்தியாவை விட்டு வந்து முழுவதுமாய் 5 ஆண்டுகள் கடந்து விட்டது அனால் இன்னும் சிறுபிள்ளை போல் அம்மாவின் நினைவு!!!
    திடீர் என நேரம் பார்த்தவள் பதறிவிட்டாள்! அலுவலகத்திற்கு கிளம்பும் நேரம் ஆகி விட்டதே!! அவசரமாக குளியலறை புகுந்தால்!

    இதோ ரஞ்சினி குளித்து முடிப்பதற்குள் அவளை பற்றிய சின்ன அறிமுகம்!
    பார்த்தவுடன் ஆளை அசரவைக்கும் பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் எப்பொழுதும் பார்க்கும் நம் பக்கத்து வீட்டு பெண் போல் அழகிய மகாலட்சுமி போல் காட்சி அளிக்கும் குடும்பபாங்கான பெண்!

    மற்றவர் மனம் நோக பேச தெரியாது! புடவையில் அழகே உருவாய் காட்சி அளிப்பாள்!

    அச்சோ! ரஞ்சினி குளிச்சுட்டு அலுவலுக்கு கிளம்பிவிட்டாள் மீதி நாளை!!!!:thumbsup
     
    Arthi123456 and Caide like this.
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    kathayoda aarambam nalla irukku aanaa. chinna ithulaye thodarum pottutta. innum koncham nerayaa eluthittu thodarum podu.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    interval indha indha idaththula vittadhaan nalla iurukkum innum konjam post pannalum nalla irukkadhu illa innum konjam longah pogum adhaan!!!!!
    anyways thanks for the feedback!!!!
     
    Last edited: Apr 21, 2010
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    dai venggaayam enakku theriyum eppaa eppa interval vidanumnu nee adangunu solrayaa
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    aaamaa aamaa got it correctly!!
    aana novels laam padicha theriyum pa if we love reading that even more pages seem to be little i know i am too faster to give intervel but next part pudhusa start pandra madhiru irukanum so only thanks for your suggestion oru vagaila i am happy that you are eager to read more!!!
    :cheers
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்று அலுவலுக்கு கிளம்பும் போதே ஏனோ மனம் சந்தோஷத்தில் லயித்திருப்பதாய் உணரமுடிந்தது அவளால்! அது என்ன என்று அறியமுடியாவிட்டாலும் அந்த இனிமையை ரசித்தவாறே அலுவலுக்கு கிளம்பி சென்றாள்!!
    அலுவலகத்தில் கால் எடுத்து வைத்தவுடன் அவள் மேல் பூமாரியாய் பொழிந்தது!!!
    ஒரு நிமிடம் கண்மூடி ரசித்தவள் கண் திறந்து பார்க்கும் போது எதிரே புன்னகையுடன் தென்பட்டான் பாலா!!!
    மெல்லிய முறுவலுடன்! "என்ன பாலா இதெல்லாம் உங்க வேலை தானா?? என்ன திடீர்னு இதெல்லாம்????"
    "அடி பாவி!! எல்லாரும் எதேதோ மறப்பாங்க நீ உன் பிறந்த நாளையே மறந்துட்டீயா??"
    "ஓ!
    ஆமாம் இன்னைக்கு என் பிறந்த நாள் கொஞ்சம் கூட ஞாபகமே இல்ல! ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் நான் இது வரை உங்க கிட்ட சொன்னதில்லையே!
    "ஆமா இது பெரிய கம்பசூத்திரம் நாங்கலாம் கண்டுபுடிக்க முடியாதது எதுவுமே இல்ல!"
    "விளையாடினது போதும் பாலா சொல்லுங்க!"
    சரி! சரி! சொல்றேன் நேத்து உங்க அம்மா போன்ல பேசினாங்க அவங்க தான் இன்னைக்கு அவங்களோட ஆருயிர் பெண்ணுக்கு பிறந்தநாள் அவள இந்த வருஷமாவது கூட்டிட்டு வாங்கனு கெஞ்சினாங்க நானும் சரின்னு வாக்கு குடுத்துட்டேன்!"
    தாய் தந்தையை பார்க்க போகிறோம் என்று சொன்னதும் அவள் முகம் பூவாய் மலர்வதை எதிர்பார்த்தவன் அங்கு நேர்மாறாய் வாடுவதை கண்டதும் ஒன்றும் புரியாமல் விழித்தான்!
    பாலா ரஞ்சினியின் உயிர் தோழன் இங்கு அனைவரிடமும் ஓர் ஒதுக்கத்துடன் பழகும் ரஞ்சினிக்கு பாலாவின் மேல் மட்டும் ஓர் பற்று! அவனை உயிர் தோழனாய் ஏற்று கொண்டாள் எப்போதும் அவளுடைய தாய் தந்தையை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை பரிமாறும் ஒரே ஆருயிர் தோழன்!
    இன்று அந்த கனவு நனவாக போகிறது என்று தெரிந்தும் ஏன் இவளிடம் இந்த வாட்டம் என்றுஅரியாமல் யோசித்திருந்தவனின் யோசனையை கலைக்க வெளி வந்தது ரஞ்சினியின் வார்த்தைகள்!

    " என்ன மன்னிச்சுடுங்க பாலா நான் வரல!"
    " ஹே! என்ன விளையாடுறீயா?? உன்ன கூட்டிட்டு வரேன்னு உங்க அம்மாக்கு வாக்கு குடுத்துட்டேன் ஏன் வர மாட்டேன்னு சொல்ற?"
    "ப்ளீஸ் பாலா! என்கிட்டே எதுவும் கேக்காதீங்க நான் வரல அவ்வளவு தான்"!
    பாலாக்கு ரஞ்சினியை பற்றி நன்றாக தெரியும் அவளிடம் பிடிவாதம் எப்போதுமே செல்லுபடி ஆகாது!
    எனவே வேறு வகையில் தான் அவளை ஒத்து கொள்ள செய்ய வேண்டும் என்று.
    " ரஞ்சினி சரிம்மா நீ எதுக்கு வரமாடேங்கறனு எனக்கு தெரியாது ஆனா உங்க அப்பா அம்மாவை நினைச்சு பாரு உனக்கே இங்க அவங்க இல்லாம இவ்வளவு தவிப்பு! அப்ப அவங்க கதிய கொஞ்சம் நினைச்சு பாத்தியா?
    உனக்கு என்ன பிடிவாதமா இருந்தாலும் உன்ன பெத்தவங்களுக்க்காகவாவது அத தூக்கி எறிஞ்சுட்டு ஒரு தடவ வந்து அவங்கள பாத்துட்டு வந்துடேன் ப்ளீஸ்!"
    ஒரு முறை கண்களை மூடிய ரஞ்சினியின் இமைகளுக்கும் தாய் தந்தையின் தவித்த முகங்கள்!
    உண்மை தானே இந்த வயதில் அவர்கள் விருப்பத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை குறைந்த பட்சமாய் இந்த சிறு ஆசையை ஆவது நிறைவேற்றினால் என்ன? மனம் சண்டித்தனம் செய்ய ஒருவழியாய் ஓர் முடிவுக்கு வந்தாள்"
    "சரி பாலா! நான் வரேன்!"
    " அப்பாடா ஒரு வழியா வாய் திறந்து தேவி வரம் அருளியதர்க்கு மிக்க நன்றி!!"
    "ஆனா ஒரு கண்டீஷன்!"
    " என்னமா? உன்ன உப்பு மூட்ட தூக்கிட்டு போணுமா??"
    " விளையாட்டு இருக்கட்டும்! அங்க நான் ஒரு வாரம் தான் தங்குவேன் அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்"
    "சரி ம்மா! உன் இஷ்டம் இதுவர நீ இறங்கி வந்ததே பெருசு!"
    "சரி இருங்க லீவ் சொல்லிட்டு வந்துடறேன்!"
    "அதெல்லா, சொல்லியாச்சு! நீ போய் மொதல்ல கிளம்பு!!"
    அன்று துணி மணியெல்லாம் அடுக்கி தான்வாழும் அந்த பெரிய அப்பார்ட்மெண்டை விட்டு இறங்குகையில் ரஞ்சினிக்கு ஏனோ நெஞ்சை அடைத்து கொண்டு வந்தது!
    காரில் ஏறியதும் அந்த கட்டடத்தை ஒரு முறை திரும்பி பார்த்தால்!
    பாவம் இனிமேல் அங்கு தான் வர போவதில்லை என்று அறியா அந்த பேதை இதயம் சொல்லமுடியா துயரில் தவித்து போனது!
     
    Caide likes this.
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nice yams ye avalukku marriage aayirumaa
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    idho paaru da avasaraththa meedhi tomorrow!!!!:thumbsup
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    unakku kathai elutha varaathunu poi vera solra lines ellam etho 1000 kathai eluthittu 1001 aavathu kathaikku wait panra maathiri irukku sollu nee yaaru unnoda back ground enna sollu sollu
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks for the paaraatu!!!:bowdown
     

Share This Page